ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143316 topics in this forum
-
50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியினை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கயனோடையில் வைத்து பட்டிப்பளைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். மாடு வாங்க வந்த காங்கயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது குழந்தையை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி ஞாயிற்றுக்கிழமை விற்றுள்ளார். குறித்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதற்கான உடன்பாட்டில் நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உச்ச தாக்குதல் அணியாக உள்ள கரும்புலிகளின் நாளான இன்று தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வன்னி,யாழ்,மன்னார் பகுதிகளில் வழமைக்கு மாறாக இன்று வீதியோரங்கள் உட்பட பல பகுதிகளிலும் கணிசமான ராணுவத்தினரின் நடமாட்டத்தை காணக்கூடியதாகவுள்ளது. அத்தோடு ராணுவத்தினரின் நடமாட்டம் வீதியோரங்களில் கூடுதலாக உள்ளதால் இளைஞர் யுவதிகள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id
-
- 0 replies
- 472 views
-
-
[Tuesday, 2011-07-05 18:24:05] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இந்தியா உடந்தையாக இருந்துள்ளது என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர் இரா.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் இந்தியாவை துரோகம் இழைத்து விட்ட நாடாகவே பார்ப்பதாக அவர் "த வீக் கென்ட் லீடர்' எனும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: விடுதலைப்புலிகளுக்கு எதிரான கோபத்தை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கை தமிழருக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மலினப்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அரசியல் மற்றும் சமத்துவ உரிமைகள் கோரி நடத்தி வந்த போராட்டம் இ…
-
- 0 replies
- 751 views
-
-
சம்மாந்துறை பிரதேச பிரபல பாடசாலையைச் சேர்ந்த 75 மாணவர்கள் திடீரென சுகவீனம் [Tuesday, 2011-07-05 13:40:53] சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த சுமார் 75 மாணவர்கள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையிலுள்ள நீரைப் பருகியதை அடுத்தே மேற்படி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுமார் 150 மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பலர் பாடசாலையிலேயே முதலுதவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்மா…
-
- 0 replies
- 294 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் காற்றோட்டமில்லாத அறையில் பதினொரு மணி நேரம் சிக்கித் தவித்த பிரபல பொலிவூட் நடிகை செலீனா ஜேட்லி [Tuesday, 2011-07-05 14:09:52] விமானம் தாமதமானதால் கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதிய காற்றோட்டமில்லாத அறையொன்றில் 11 மணித்தியாலங்கள் தவிக்க வேண்டிய நிர்பந்தம் பிரபல பொலிவூட் நடிகை செலீனா ஜேட்லிக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமதி எனத் தலைப்பிடப்பட்ட ஹிந்தித் திரைப்படத்தின் படிப்பிடிப்புக்காக மாலைதீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே செலீனா ஜேட்லி இந்த சங்கடத்தை எதிர்கொண்டார். மாலைதீவிலிருந்து கொழும்பு வழியாக அவர் மும்பை திரும்புவதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கொழும்பிலிருந்து மும்பைக்குச் செல்லு…
-
- 0 replies
- 963 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 05:30 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை நடத்த வேண்டும் என்ற அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவில் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்தநிலையிலேயே சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக மீள்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கோரிக்கை விடுத்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய க…
-
- 2 replies
- 621 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறார் இல்லத்திலுள்ள 600 சிறார் களுக்கு உடன் உதவுங்கள்.உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதில் கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறார் இல்லம் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண் டுள்ளது. இந் நெருக்கடியை போக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் உறவுகள், பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன் வரவேண்டும். இவ்வாறு நவாலி ஹெமலதா செல்வராஜா ஞாபகார்த்த நிறுவன தலைவர் கேட்டுள்ளார். மகாதேவா சைவச்சிறார் ஆச்சிமத்திலுள்ள 266 சிறார்களின் நாளாந்த உணவு தேவைக்கு மட்டும் 40 ஆயிரம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. தற்போது வங்கி மேலதிகப் பற்று வசதியுடன் நிறுவன ஆச்சிரம சிற…
-
- 1 reply
- 973 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 08:01 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததையடுத்து இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியை இந்தியா தற்போது நாடியுள்ளது. மே 2009ல் சிறிலங்காவில் கடந்த முப்பதாண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்காவுடனான தனது செயற்பாடுகளை இந்தியா விரிவாக்கி வருகின்றது. இதன் ஓரங்கமாக, "இந்தோ சிறிலங்கா உறவைப் பலப்படுத்துவதனை நோக்காகக் கொண்ட பரிந்துரைகளை தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் முன்வைக்கலாம்" என இந்திய உயர் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங…
-
- 0 replies
- 679 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 01:04 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புகளைப் புறக்கணித்து அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘‘ ஆவணப்படத்தை நேற்று ஒளிபரப்பியுள்ளது. ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு கோணங்கள் என்ற புலனாய்வு நிகழ்ச்சியிலேயே இந்த ஆணவப்படம் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் மீண்டும் இன்றிரவு 11.35 மணியளவில் ஏபிசி தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசையில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஏபிசி நியூஸ் 24 அலைவரிசையிலும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. …
-
- 1 reply
- 809 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 05:47 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சார்பான தொலைக்காட்சி அலைவரிசையில் காண்பிக்கப்பட்ட, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான தமிழ் மொழியில் பேசப்படுகின்ற 'புதிய காணொலிக் காட்சிகள்' போலியானவை என புகலிட நாடுகளில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழு தெரிவித்துள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய காணொலியானது முதன் முதலில் 18 செப்ரெம்பர் 2009ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதென சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் குழு [Journalists for Democracy in Sri Lanka - JDS] தெரிவித்துள்ளது. இப்புதிய காணொலியை அனைத்துலக விசாரணைக்கா…
-
- 0 replies
- 686 views
-
-
[Tuesday, 2011-07-05 09:14:46] தற்போது தனித்தனியாக பிரிந்து செயற்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல.இந்தியா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளினாலும் ஒரு போதும் மீண்டும் இணைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள். தமிழ் மக்கள் இன்னும் ரி.என்.ஏ.யை (TNA) நம்பவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்குமட்டுமல்ல எமது நாட்டிற்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. நாம் கடந்த காலங்களில் அழிந்தது, இழந்தது போதும். பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை ஒற்றுமையோடும், சமாதானத்தோடும் மீளக்கட்டியெழுப்ப முன்வாருங்கள் என கிழக்கு மாகாண தமிழ் மக்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர…
-
- 0 replies
- 895 views
-
-
சனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி அவுஸ்ரேலியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்வில் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்ரும் முன் நாள் அதிபருமான கெவின் ரூட் அறிக்கை வெளியிட்டுள்ளார். . உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. . இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆத…
-
- 0 replies
- 735 views
-
-
செனல் 4 ஆவணப்படத்தை ஐரோப்பா முழுவதும் விநியோகிக்க 05 ஜூலை 2011 சுவிஸர்லாந்தில் உள்ள புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் திட்டம் - திவயின செனல் 4 ஆவணப்படத்தை ஐரோப்பா முழுவதும் விநியோகிக்க பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கைக்கு எதிரான போர் குற்ற காட்சிகள் அடங்கிய 5 இறுவட்டுக்களை அடுத்து வரும் தினங்களில் ஐரோப்பா முழுவதும் விநியோகிக்க சுவிஸர்லாந்தில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை ஒன்று சுவிஸர்லாந்தின் பேர்னி நகரில் உள்ள வீடடொன்றில் 4 தினங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகவும் அதில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்துக்கொண்டதாகவும…
-
- 2 replies
- 545 views
-
-
எதிர்வரும் 28ம் தேதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் 05 ஜூலை 2011 Bookmark and Share கோரி டில்லியில் உண்ணாவிரதம். எதிர்வரும் 28ம் தேதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பல் வேறு தரப்பினரும் மீண்டும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போராடுவதோடு டில்லிக்குச் சென்று போராடுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ள அவர்கள் பல் வேறு போராட்டங்களை டில்லியில் நடத்த தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: 2009 ம் ஆண்டில் இலங…
-
- 1 reply
- 410 views
-
-
இலங்கையர்களை வியர்க்க வைக்கும் செய்தி: மீண்டும் மின்வெட்டு அமுலுக்கு வருகிறது இன்று இறுதி முடிவாகிறது [Tuesday, 2011-07-05 10:38:32] மீண்டும் இலங்கையில் மின்வெட்டை அமுலுக்குக் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெச்சரிக்கை இன்றி சிலவேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சேவைகள் சங்க பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். மேலும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட குறைவின் காரணமாகவே நாடளாவிய ரீதியில் இவ்வாறான மின்வெட்டினை இலங்கை மின்சார சபை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எப்படியாயினும், கொள்கை ரீதியாக எதுவித மின்வெட்டு தீ…
-
- 0 replies
- 632 views
-
-
சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தீர்மானம் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இத்தகைய நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது எனவும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு இந்தியா அனுப்பும் எனவும் கூறியுள்ளார். இது இப்படியே தொடர முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் உறுதியான புரிந்துணர்வுக்கு நாம் வரவேண்டும் என எண்ணுகிறேன் என இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். 14 இந்திய மீனவர்களை கைதுசெய்ததாக வெளியான குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரித்ததாக செய்தி வெளி…
-
- 4 replies
- 955 views
-
-
அவுஸ்திரேலிய முன்னால் பிரதமரும் தற்போதய வெளிநாட்டு அமைச்சரை இலங்கையின் கொலைக்களம் பாதித்திருப்பதாக தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கின்றார் . http://twitter.com/#!/kruddmp
-
- 9 replies
- 1.5k views
-
-
பென்ரைவில் யுத்தக் காட்சிகளைச் சேமித்த வங்கி ஊழியர் இரு வருடங்களாகச் சிறையில்! news இறுதிக்கட்ட யுத்தக் காட்சிகளை அரச இணையதளங்களில் பார்வையிட்டு, அதனை டவுன்லோட் செய்து பென் ரைவ்வில் போட்டுக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் கைதுசெய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தையை வசிப்பிடமாகக்கொண்ட யோகராசா சுதர்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியின் கதை இது. இவரது வயது 28. (இவர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) யோகராசா சுதர்ஷன் வெள்ளவத்தையிலுள்ள வங்கிக் கிளை ஒன்றில் சேவையாற்றும் ஓர் ஊழியர். காலையில் வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் மாலை நெட்கப…
-
- 0 replies
- 871 views
-
-
மீளக் குடியேற்ற அழைத்துச் செல்லப்பட்டோர் நடுத்தெருவில் நிக்கும் பரிதாபநிலை! Tuesday, July 5, 2011, 8:28 சிறீலங்கா, தமிழீழம் வடமராட்சி கிழக்கில் மீள் குடியமர்வதற்குக் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அப்பகுதிப் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து அல்லாரை நலன்புரி முகாமில் 2 வருட காலமாக தங்கியிருந்தனர். இம்மக்களை மீள் குடியமர்வதற்கு சனிக்கிழமை நண்பகல் ஆயத்தமாக இருக்குமாறு இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டு அன்று நள்ளிரவு 1 மணியளவில் வாகனத்தில் ஏற்றி அதிகாலை 3, 4 மணிக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்திலு…
-
- 0 replies
- 401 views
-
-
யுத்தத்தின் பின்னர் வன்னியின் நிலையை ஒப்புக் கொள்ளும் சிறீலங்காக் காவற்றுறை அதிகாரி Tuesday, July 5, 2011, 8:38 சிறீலங்கா கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்ததிற்கு பின்னர் சமூகவிரோத மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதிக் காவற்றுறைமா அதிபர் நீல் தலுவத்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த சமூகப் பிரச்சனைகள் காணப்படுவதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்பப் பிரச்சினைகள், காணித் தகறாறுகள் எனப் பல பிரச்சினைகள் காணப்படுவதுடன் நாளுக்குநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் காவற்றுறை நிலையங்களில் பொதுமக்கள் அடிக்கடி பிரச்சினைகளுடன் வந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மக்க…
-
- 0 replies
- 484 views
-
-
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணப் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் தீர்மானித்துள்ளனராம். இந்த ஆர்ப்பாட்டம் வருகின்ற 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை லண்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிலையத்துக்கு எதிராக நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதை பிரித்தானியாவிலுள்ள இலங்கையர் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையர் என்ற சொல்லைப் பயன்படுத்தி சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வது போன்றதொரு மாயையும் ஏற்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையில் இவ்வார்ப்பாட்டத்தை அரசாங்கத்துக்குச் சார்பான சிங்களவர்களே முன்னெட…
-
- 3 replies
- 774 views
-
-
8 பெண்கள் உட்பட 552 முன்னாள் போராளிகள் விடுவிப்பு Tuesday, July 5, 2011, 8:43 சிறீலங்கா, தமிழீழம் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 8 பெண்கள் உட்பட 552 முன்னாள் போராளிகள் நேற்று அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதற்கான நிகழ்வு நேற்றுக் காலை வவுனியா கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க, புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க, அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார், வவுனியா மாவட்ட அரச அதிபர…
-
- 0 replies
- 338 views
-
-
உலகத் தமிழர் பேரவையானது (GTF) தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவுடன் (APPG-T) இணைந்து ஒரு நாடாளுமன்ற வரவேற்பு நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள போர்ட்கல்லிஸ் இல்லத்தின் அற்லி அறையில் (Attlee Suite of Portcullis House) 2011 சூலை 5ஆம் நாள், செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்றுவோரென உறுதிசெய்யப்பட்ட பேச்சாளர்களில் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாட்டு அலுவல்களுக்கான அரசத் துணைச் செயலரான அலிஸ்ரெயர் பேர்ட், நா.உ., நிழல் வெளியுறவுச் செயலரான டக்லஸ் அலெக்சான்டர, நா.உ. தொழில் உறவுத்துறை நுகர்வோர் மற்றும் அஞ்சல் துறைகளுக்கான அமைச்சரான எட் டேவி, நா.உ. ஆகியோர் அடங்குவர். மேலும் பல அமைச்சர்கள், மூன்று முதன்மைக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர் [ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 15:57 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] லண்டனில் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானிய சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் மைதானத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா- பிரித்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அனைத்துலக ஒருநாள் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் புகுந்தார். அவர் மைதானத்தில் புலிக்கொடியை அசைத்தபடி சில நிமிடங்கள் அங்குமிங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் உள்ள காரைநகர் நலன்புரிச்சங்கத்துக்கு நிதிசேர்க்கும் தொண்டு நடவடிக்கைக்காக ஈழத்தமிழ் பெண்ணான செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் நடைபெற்றது. இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்தனர். இதில் காரைநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டுள்ளார். செல்வி வர்ஷினி தியாகலிங்கம் இத் தொண்டு நீச்சல் மூலம் இதுவரை 5647 பவுன்ஸ்களை நிதி நன்கொடையாக ஈட்டியுள்ளார். இதனை இவர் …
-
- 5 replies
- 1k views
-