ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யாழ். மக்களுக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்! யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். இன்றும் …
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்! வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் தெற்காகப் பயணித்து மன்னார் வளைகுடாவின் தெற்காக, அதன்பின்னர் குமரி கடல் பிராந்தியத்தின் தெற்காக சென்று அரபிக் கடல் பிராந்தியத்திற்குள் நுழையும். இதன் காரணத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் அதி…
-
- 0 replies
- 276 views
-
-
வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு! adminDecember 17, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்கின்ற சிறிய மழையிலும் மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் இவ்வாறான பின்னணியில் நேற்று மதிய வேளையில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை ஒட்டுசுட…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
கார்த்திகைப் பூ விவகாரம் : யாழில் ஒருவர் உயிரிழப்பு! கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில், சுகவீனம் அடைந்துள்ளார். அதனையடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1363384
-
- 3 replies
- 603 views
-
-
இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி : வடக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள்? வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் தெற்காகப் பயணித்து மன்னார் வளைகுடாவின் தெற்காக, அதன்பின்னர் குமரி கடல் பிராந்தியத்தின் தெற்காக சென்று அரபிக் கடல் பிராந்தியத்திற்குள் நுழையும். இதன் காரணத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் அதிகளவு மழை பெய்யும். இதேபோன்று …
-
- 0 replies
- 334 views
-
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்! 2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9 ஆயிரத்து 941 ரூபாவை VAT வரியாக செலுத்தி வருகின்றது. இதன்படி, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய VAT வரித் தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மறைமுக வரி வருமானம…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
16 DEC, 2023 | 09:41 PM (நா.தனுஜா) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கல்வி மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
Sri Lanka ArmyRanil Wickremesinghe 2 மணி நேரம் முன் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய அதிபர், இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் தியத்தலாவ சிறிலங்கா இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில்…
-
- 5 replies
- 995 views
- 2 followers
-
-
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை. வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும். …
-
- 4 replies
- 461 views
- 1 follower
-
-
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில். இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வை…
-
- 4 replies
- 482 views
-
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது! எழிலன். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம் அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது. இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச்சென்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு தி…
-
- 0 replies
- 281 views
-
-
பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது. adminDecember 15, 2023 மன்னாரில் நேற்றைய தினம் (14) மதியம் முதல் இன்று (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது . அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவ…
-
- 0 replies
- 660 views
-
-
Published By: DIGITAL DESK 3 16 DEC, 2023 | 10:08 AM மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு பிரதேசத்துக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை நேற்று வெள்ளிக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரட்ண தேரர் சிலருடன் சென்று வம்பு இழுத்து கலகம் ஏற்படுத்த முயற்சித்த நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. குறித்த மேச்சல் தரைப்பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் தினம் தினம் சட்டவிரோதமாக குடியேறி பயிர் செய்கை செய்துவரும் சிங்களவர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெங்காய வெடிவைத்தும் வாளால் வெட்டியும் கொன்றுவருகின்றனர். இந்நிலையில்,…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது தொடர்பான தகவல்களை துவாரகா தொடர்பு கொண்ட போது தன்னிடம் தெரிவித்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது அனைவரிடத்திலும் பேசுபொருளாக மாறியிருப்பது, நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தில் துவாராகா என்று கூறி உரையாற்றிய பெண் தொடர்பிலும் அதனுடனான சர்ச்சைகள் தொடர்பிலும் தான். 2009ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரோடு பல்வேறுபட்ட தொடர்புகள் அவர்களது முக்கிய விவகாரங்களில் ப…
-
- 4 replies
- 843 views
-
-
15 DEC, 2023 | 01:51 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய அமைப்பை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 DEC, 2023 | 04:31 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார். https://www.virakesari.lk/article/171785
-
- 3 replies
- 387 views
- 1 follower
-
-
இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்தியா. அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத…
-
- 25 replies
- 1.4k views
- 1 follower
-
-
பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் ! கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா …
-
- 3 replies
- 562 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 07:13 PM (நா.தனுஜா) உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள 'இமயமலை பிரகடனத்தில்' தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு, அதனை வெளியிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமல…
-
- 7 replies
- 814 views
- 1 follower
-
-
15 DEC, 2023 | 09:11 AM இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள் பதிவான சம்பவங்களில் 81 யானைகள் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/171738
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
பௌத்த சிங்கள நாடு தனித் தமிழ் நாடு என்ற சிந்தனை மாற வேண்டும் sachinthaDecember 15, 2023 தேரர்களிடமும், உலகதமிழர் பேரவையிடமும் மனோ MP தெரிவிப்பு இலங்கை எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பிலேயே, மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார். ப…
-
- 1 reply
- 382 views
-
-
Published By: VISHNU 14 DEC, 2023 | 07:07 PM (நா.தனுஜா) அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித்திடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார். இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மி…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் : மனித உரிமைகள் ஆணைக்குழு ! kugenDecember 15, 2023 இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது. மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது. மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் இடைக்கால அறிக்…
-
- 0 replies
- 199 views
-
-
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பமானது! ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று (14) மாலை 06 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நேற்று ஆரம்பித்து…
-
- 0 replies
- 619 views
-
-
”நிராகரிக்கபட்ட விடயங்களை அரசாங்கம் செய்ய முயல்கின்றது” புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர…
-
- 1 reply
- 470 views
-