Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும். அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக…

  2. வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்கள…

    • 8 replies
    • 1.2k views
  3. கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது தொடர்பான தகவல்களை துவாரகா தொடர்பு கொண்ட போது தன்னிடம் தெரிவித்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது அனைவரிடத்திலும் பேசுபொருளாக மாறியிருப்பது, நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தில் துவாராகா என்று கூறி உரையாற்றிய பெண் தொடர்பிலும் அதனுடனான சர்ச்சைகள் தொடர்பிலும் தான். 2009ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரோடு பல்வேறுபட்ட தொடர்புகள் அவர்களது முக்கிய விவகாரங்களில் ப…

    • 4 replies
    • 842 views
  4. கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது! எழிலன். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம் அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது. இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச்சென்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு தி…

  5. ”நிராகரிக்கபட்ட விடயங்களை அரசாங்கம் செய்ய முயல்கின்றது” புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர…

  6. பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது. adminDecember 15, 2023 மன்னாரில் நேற்றைய தினம் (14) மதியம் முதல் இன்று (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது . அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவ…

  7. பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் ! கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா …

  8. 15 DEC, 2023 | 01:51 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய அமைப்பை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவ…

  9. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:25 AM இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்ட இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் நெருக்கடி விடயத்தில் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சீனா க…

  10. பௌத்த சிங்கள நாடு தனித் தமிழ் நாடு என்ற சிந்தனை மாற வேண்டும் sachinthaDecember 15, 2023 தேரர்களிடமும், உலகதமிழர் பேரவையிடமும் மனோ MP தெரிவிப்பு இலங்கை எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பிலேயே, மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார். ப…

  11. 15 DEC, 2023 | 09:11 AM இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள் பதிவான சம்பவங்களில் 81 யானைகள் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/171738

  12. Published By: VISHNU 14 DEC, 2023 | 07:07 PM (நா.தனுஜா) அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித்திடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார். இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மி…

  13. இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் : மனித உரிமைகள் ஆணைக்குழு ! kugenDecember 15, 2023 இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது. மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது. மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் இடைக்கால அறிக்…

  14. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பமானது! ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று (14) மாலை 06 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நேற்று ஆரம்பித்து…

  15. Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 11:10 AM குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்வதற்கு 'மிது பியச' பிரிவில் 24 மணி நேரமும் செயற்படக் கூடியதான தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. 070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம தெரிவித்தார். https://www.virakesari.lk/article/171683

  16. வடக்கு பாடசாலைகளுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை adminDecember 15, 2023 வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். அத்துடன்…

  17. இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி! adminDecember 13, 2023 இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நி…

  18. இலகு ரயில் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொக…

    • 1 reply
    • 377 views
  19. ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன், சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில், திடீரென குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதாவது, “பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறின…

    • 2 replies
    • 414 views
  20. தமிழர் பிரதேசங்களில் குடியேறும் சிங்களவர் எவ்வாறு தமிழர்களின் நிலங்களை வன்வளைத்து அதற்குச் சிங்களப் பெயர்கள் சூட்டி வந்தனரோ அதே போல் முஸ்லிம்களும் தமது அட்டூழியங்களை முன்னேடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது கிளி/நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் எதுவெதை வன்வளைக்கப் போறாங்களோ தெரியவில்லை.

    • 6 replies
    • 813 views
  21. ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளுர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எத…

  22. வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலை 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையான கல்வி வரலாற்றிலே முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையினை நிலையாட்டியிருக்கிறார். பாடசாலையின் பெயரினை வெளியுலகிற்கு எடுத்துரைக்க காரணகர்த்தாவாக விளங்கிய அம்மாணவனுக்கான கௌரவிப்பு நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் முற்று முழுதான நிதியனுசரணையில் பாடசாலை முதல்வர் தணிகாசலம் தலைமையில் நேற்று (13) மிக சிறப்பாக இடம்பெற்றது. …

  23. நாட்டில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வறட்சி ஏற்படும் என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் குறித்த நிகழ்…

  24. இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. பைதான் 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. இதன்படி, பைதான் 3200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/284637

  25. Published By: NANTHINI 13 DEC, 2023 | 09:34 PM இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்று (13) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.