Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [saturday, 2011-05-28 04:34:46] நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்க நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவிதுள்ளது.அதிக மழையுடனான காலநிலை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும் நிலமையை கட்டுப்படத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தலைவர் பிரதீப் கொடிபில்லி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அனர்த்த நிலைமைகளில் போது மக்களுக்கு உதவும் வகையில் கடற் படையினரும், விமான படையினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, காலி, கேகாலை, களுத்துறை மற்றும் இரத்தினபுரிய மாவட்டங்கள…

  2. [saturday, 2011-05-28 05:43:59] மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்குடா பிரதேச வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீ்ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபர் ஒருவரை வவுணதீவு பொலிஸாரும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்து ரீ-56 ரக ரவைகள் 41, ரீ 6 மெகஸீன் 2 மற்றும் வீதிப் பரிசோதனை உபகரணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். source:seithy.

  3. யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றா…

  4. கனடாவின் எதிர்க்கட்சியான என்.டீ.பீ யின் நிழல் அமைச்சரவைக்கு, முதன் முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழரான ராதிகா சிற்சபேசன் நியமிக்கப்பட்டார். நிழல் அமைச்சரவையில் உள்ளவர்களின் விபரங்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவிக் --கப்பட்டன அனுபவம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுன்ற உறுப்பினர்களும் நிழல் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். போல் டுவார் (Paul Dewar) வெளியுறவு விமர்சகராகவும், ஜக் ஹரிஸ் பாதுகாப்பு விமர்சகராகவும் தொடர்வார்கள். நிதித் துறை விமர்சகராகப் பணியாற்றிய தோமஸ் முள்கெயர், கட்சியின் அவைத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்பார். ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேச…

  5. முள்ளிவாய்க்காலின் அரசியல் உண்மை - ஒரு சிங்கள புத்திசீவியின் வேறுபட்ட பார்வை "ஆப்கானிஸ்த்தானிலும், ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் தமது ஆக்கிரமிப்புக்களை நியாயம் என்று மேற்குலகம் வாதிப்பது போலவே சிங்களமும் முள்ளிவாய்க்கால் படுகொலையைச் செய்தது, வாதித்தும் வருகிறது. தமிழர்கள் முள்ளிவாய்க்காலிலும், வான்னிக்காடுகளின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் நரபலி வேட்டையாடப்பட்டது இந்த மேற்குலகிற்கும் , ஐ.நா வுக்கும் நன்கே தெரிந்திருந்தது, ஆனாலும் தாம் விரும்பிய முடிவொன்று வரும்வரை காத்திருந்த அவர்கள் இப்போது போர்க்குற்றம் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் பேசுகிறார்கள்"....... டப்லின் நகரைச் சேர்ந்த சிங்கள கலாநிதியொருவர் தனது நாடும் இனமும் இன்னொரு சகோதர இனமான தமிழுக…

  6. போர்க்குற்றவாளிகள் என்று தானே பட்டியலிட்ட சிங்கள ராணுவத்தை "ஐ.நா சபையின் அமைத்திப்படைக்குச்" சேர்க்கிறது ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் குறியிருக்கின்ற போதும் கூட அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் தனது அமைப்பு நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கென சிங்கள போர்க்குற்ற ராணுவத்தை அது அமர்த்தியிருக்கிறது. இது அதன் அங்கத்துவ நாடுகளுக்கு பிழையான சமிக்ஞையை அனுப்புவதோடு போர்க்குற்றங்களுக்கேதிரான விசாரணைகளின் வீரியத்தையும் பெருமளவில் குறைப்பதற்கு வழிகோலப்போகிறது. UN wrongs the World by inducting SL Military for ‘peacekeeping’ [TamilNet, Friday, 27 May 2011, 11:35 GMT] …

  7. சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்துள்ள வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தகவல் கொடுத்த ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடகவியலாளர் பிரசன்ன கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகியதையடுத்து சுவிட்டசர்லாந்துக்குத் தப்பிச் சென்று அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவரே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவுக்கு முதன் முறையாகத் தகவலைக் கொடுததிருந்தார். வன்னி இறுதி யுத்தத்தின் போது கள நிலவரம் தொடர்பான தகவல்களை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்புவதற்காக இவர் இர…

    • 1 reply
    • 672 views
  8. ராஜபக்சே, ராஜபக்சேசகோதரர்கள் உலக நாடுகளால் தண்டிக்க படுவார்களா?

    • 3 replies
    • 890 views
  9. முதல்முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் ! குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது. யூன் 1ம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம் மாநாட்டில் போல் மேர்ஃபி (ஐரோ.நா.ம.உ) உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்…

  10. கொழும்பு, மே 27,2011 சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது: "பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு …

  11. அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் 27 மே 2011 பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில்.. அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் 16ம் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் அணி சேரா நாடுகள் உலக அரங்கில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அணி சேரா நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு வெளி…

  12. வெள்ளி, 27 மே 2011 08:04 ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை உள்ளிட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எகிப்து மற்றும் ருமேனியா ஆகிய இருநாடுகளுடன் இந்தோனேசியாவில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார். எனினும் நேற்றுவரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அராபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது. எகிப்து வெளிவிகார அமைச்சருடனான சந்திப…

  13. Published on May 27, 2011-9:10 pm · No Comments மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை ஏறாவூர் நகர சபை தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் இணைப்பாளருமான அலிசாகீர் மௌலானா மேற்கொண்டு வருகிறார். அண்மைக் காலமாக ஏறாவூர் தமிழ் முஸ்லீம் மக்களிடையே இன விரோத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் அலிசாகீர் மௌலானா இதுவரை தமிழர் பகுதியில் செயற்பட்டுவந்த இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சி தமிழ் மக்களை மூன்றாம் தரக் குடிமக்களாய் நடத்துகின்ற செயல் என்றும் தமிழ் கிராமங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஏறாவூர் 5ஆம் க…

  14. Published on May 27, 2011-8:51 pm · No Comments இலங்கையில் மழைவெள்ளம், மண்சரிவு காரணமாக இன்று 6பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 480 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மா ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக குருநாகல் நீர்கொழும்பு பிரதான பாதையின் கிரியுல்ல பிரதேசம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கிரியுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பாதையின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்…

  15. Posted by இரும்பொறை on 27/05/2011 in செய்தி | 0 Comment இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் நான். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இறுதியில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்களான தீபாலி விஜே சுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா 5ஆவது நாளாகவும் சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியவை வருமாறு:…

  16. தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்க் கூட்டமைப்பு உட்பட எவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லி இருக்கிறது அரசு. . "தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பலர் உள்ளனர். அவர்களில் யார் ஏக பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிப்பர்'' என்றார் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன.அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார். . அவர் மேலும் கூறியதாவது: ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் பதிலளிக்க மாட்டோம். ஆனால், அதில் அடங்கியுள்ள சில விடயங்களுக்கு விளக்கமளிப்போம். இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு நாம் விளக்கமளிக்கத் …

  17. Posted by சங்கீதா on 27/05/2011 in செய்தி | 0 Comment சிறீலங்காவில் தரையிறங்கிய பின்னர் நுளைவு அனுமதியை பெற்றுக்கொள்வது என்ற சட்டத்தை இந்திய பயணிகளுக்கும் நிறுத்துவதாக சிறீலங்கா அரசு நேற்று (26) அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் நேற்றில் இருந்து 80 நாட்களில் நடைமுறைக்கு வருவதால் அதன் பின்னர் சிறீலங்கா வரும் இந்திய மக்கள் முன்கூட்டியே நுளைவு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவுகள் தவிர்ந்த ஏனைய 78 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக சிறீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை ஆணையாளர் குலனந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து சிறீலங்கா செல்வோர் இணையத்தளம…

  18. கோடன் வைஸ் இவர் முன் நாள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் காரியாலையத்தின் பேச்சாளர். பதவியில் இருக்கும் போது சிங்கள அரசும் ஏன் ஐக்கிய நாடுகளும் கூட இவரது வாய்க்கு பூட்டு போட்டு வைத்திருந்தது. ஆனால் போரின் பின்னர் இவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கையில் நடந்த விடயங்கள் பற்றி பேசிவருகின்றார். இறுதியாக அண்மையில் புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார். அதுதான் இலங்கையில் போரும் புலிகளின் கடைசி நாட்களும் என்ர அந்த புத்தகத்திற்கு ”த கேஜ்” என பெயரிட்டுள்ளார். இது ஒரு பொருத்தமான பெயர்தான் என த எகொனொமிஸ் வர்ணித்துள்ளது. 384 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் சிங்கல அரசாங்கம் படுகொலைகளை கண்மூடித்தனமாக செய்து எப்படி போரை வென்ரது மட்டுமன்றி எவ்வாறு சர்வதேசத்தை ஏமா…

  19. பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 27 மே, 2011 வருகிற ஆனி மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது. இந் நிகழ்ச்சியில் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அறிவாயுதம் ஏந்துவோம் அனைவரும் வாரீர்! தொடர்புகொள்ள ம.சரண் கோவை 98428 44698 source:vannionline news.

  20. [Friday, 2011-05-27 16:23:43] நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்துவருவதன் காரணமாக கம்பஹா, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1299 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதகவும் மேலும் ஒருவர் காணமல் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தில் நான்கு பேரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். களுத்துறையில் உயிரிழந்தவர் மின்னல் தாக்க…

  21. [Friday, 2011-05-27 16:50:04] மன்னார் பிரதேசச்செயலகம் மற்றும் மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (27.5.2011) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலையில் \'நீரும் மனிதனும்\'எனும் தொனிப்பொருளில் தேசிய நீர்க் கலாசார கல்விக் கண்காட்சி நிகழ்வொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமை மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் ஒருவருக்கும்,ஏனைய அதிகாரிகள…

  22. கொழும்பு இராணுவ மாநாட்டுக்கு வரும் 25 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்? பிரசுரித்தவர்: Sukkran May 27, 2011Add a comment கொழும்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ள போர் ஒழிப்பு தொடர்பான இராணுவ மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 25 வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகப் பயங்கரவாதம், தீவிரவாத அமைப்புக்கள், அரசியல் மற்றும் இராணுவத் தீர்மானங்கள், தேசத்தைக் கட்டி எழுப்புதல், புனர்வாழ்வு உள்ளிட்ட சில தலைப்புக்களில் சொற் பொழிவுகளும் இதில் நிகழ்த் தப்படவுள்ளன.இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது, மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் மறை…

  23. தெரு நாய்களுக்காகவும், கொண்டாட்டங்களுக்கும் செலவு செய்யும் அரசு மீள் குடியேற்றப்பட்டவர்கள் பற்றி பாரா முகம் FRIDAY, 27 MAY 2011 06:13 SYDNEY HITS: 3 அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்…

  24. மனிக்பாம் முகாமில் இருக்கும் மக்களை கைவேலி, கோம்பாவில் பகுதிக்கு மாற்ற திட்டம் • Friday, May 27, 2011, 20:30 • சிறீலங்கா, தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள 9 கிராம சேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 1887 குடும்பங்களைச் சேர்ந்த 5930 பேரை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட கைவேலி மற்றும் கோம்பாவில் பகுதிகளில் தற்காலிகமாகக் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் குடும்பங்கள் தற்போது மனிக்பாம் முகாமில் இருக்கின்றன. இவர்களது பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்…

  25. ஐ.நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா, பிரித்தானியா போன்று அவுஸ்திரேலியாவும் வரவேற்க வேண்டும் என, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி டெனிஸ் ஜென்சன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.தனது தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் ஆற்றிய உரையின் சுருக்கம்: இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த போர் பற்றி ஐ.;நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பற்றி எனது தொகுதிலுள்ள தமிழ் மக்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். போரில் ஈடுபட்ட இரு தரப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.