ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ளை அறிக்கை தயாரிக்கிறது கோமின் தயாசிறி தலைமையிலான குழு. [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011, 03:19 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முறியடிக்கும் வகையிலானதொரு நகர்வாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெள்ளை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரிலேயே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈழப்போர் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தலைமையிலான, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக…
-
- 1 reply
- 848 views
-
-
நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது – 25 ஏப்ரல் 2011 ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது. ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
http://news.lankasri.com/view.php?22GpXbc3BI34eM29303jQgdd3Qjl20X922e4cLLcb3pG02
-
- 1 reply
- 719 views
- 1 follower
-
-
யாழ். நகரில் மூன்றடி உயரமான தொழிலதிபர்! திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:19 ஒரு மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது உடல் வலிமையைவிட மனவலிமையும் முயற்சியுமே என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் யாழ் நகரில் இருக்கும் மூன்றடி உயரேமேயான தொழிலதிபர் ரவிதரன். இவருக்கு வயது 38 ஆனால் இவரின் உயரம் மூன்றடி மட்டுமே. உயரம் குறைந்த மனிதர்கள் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்தாலும் பலர் பிறரிடம் கையேந்தியும் பிறரை நம்பியும் வாழ்வதையே காணுகின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்றடி உயரமான ரவிதரன் அவரின் முயற்சியாலும் தன்னப்பிக்கையாலும் இன்று சொந்தக்காலில் நின்று வாழ்வதுடன் வயதான தனது தாய் தகப்பனையும் தானே பராமரிக்கிறார். அத்தோடு பலர் இவரிடம் தொழில் செய்கின்றனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: தமிழ்த்தரப்பு செய்யவேண்டியது என்ன? நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஐ.நா குழு அறிக்கை வெளிவந்துள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளிவர முன்னரே இலங்கையில் அது கசியவிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை அரசின் பதிலையும் இணைத்தே வெளிவர இருந்தது. பதிலளிக்கும் கடப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இலங்கை இதனை கசியவிட்டிருக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை அறிக்கையுடன் பதிலளிப்பும் இணைந்து வருவது சங்கடங்களைத் தருவதாக இருக்கும். இதனால் ஐ.நா உடன் இணையாது தனது நிராகரிப்பு அறிக்கைகளை தனித்து வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வமாக ஐ.நாவிற்கு இதனை அறிவித்ததாக தெரியவில்லை. ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்தி…
-
- 2 replies
- 489 views
-
-
நிலத்தை கொள்ளையடிக்கும் புத்தியோடு படையெடுக்கும் புத்தர்சிலைகள் 25 ஏப்ரல் 2011 காணிகளில் விகாரை கட்ட அனுமதித்தால் ஆறு லட்சம் ரூபாவை வீடமைக்க வழங்குவோம் என்று தமிழ் பௌத்த சங்கம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு தெரிவித்த கருத்து தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. நிலக்கொள்ளையில் இப்படி வெளிப்படையான அறிவிப்பை விடுத்திருக்கும் பௌத்த சங்கம் தமிழர்களின் நிலத்தின்மீது எதை விதைக்க விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. யுத்தத்தால் நொந்து போயிருக்கிற ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்றும் இப்படியும் அவர்களின் நிலத்தை கொள்ளையடிக்கலாம் என்றம் பௌத்த சங்கம் என்று உருவாகியுள்ள அமைப்பு நம்புகிற அளவில் ஈழத்து தமிழர்களின் நிலமை இருக்க…
-
- 2 replies
- 675 views
- 1 follower
-
-
ரணிலுக்கு ராஜபட்ச திடீர் அழைப்பு கொழும்பு, ஏப்.25- இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிபர் ராஜபட்ச திடீரென அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் அலுவலகம் சார்பில் ரணிலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, ரணில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்புகிறார். அதன் பின்னரே, ராஜபட்சவை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. ஐநா அறிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவருடன் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக இணை…
-
- 0 replies
- 905 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:29 இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்வ…
-
- 2 replies
- 800 views
-
-
திங்கட்கிழமை, 25, ஏப்ரல் 2011 (10:40 IST) ராஜபக்சேவின் கொடும்பாவியை அடித்து உதைத்து ஆர்ப்பாட்டம் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை அருகே மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சாலையில் போட்டு அடித்து உதைத்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பன்னாட்டு போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ரசூல் மைதீன், ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வ…
-
- 0 replies
- 679 views
-
-
இணங்கி வராவிட்டால் ஐ.நாவில் இலங்கையை கைவிடும் இந்தியா: நெருக்கடிக்குள் கொழும்பு [Monday, 2011-04-25 03:42:59] தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய…
-
- 1 reply
- 578 views
-
-
உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு மையமாக இலங்கை! Posted by uknews On April 25th, 2011 at 9:45 am / உலகில் புவியீர்ப்பு சக்தி மிகவும் குறைவாக காணப்படும் மையமாக அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளால் இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. உலகின் புவியீர்ப்பு சக்தி பிரிந்து செல்லும் பரம்பல் முறை குறித்து அண்மையில் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் போதே இலங்கையானது மிகவும் குறைந்த புவியீர்ப்பை கொண்ட மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையிலும் தென் மாகாணமும் அதன் கடலோரப் பகுதிகளுமே கூடுதலான அளவில் புவியீர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பிரதேசங்களாகும். அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியாமற் போயுள்ளது. பொதுவாக கடலோரப் பிரதேசங…
-
- 0 replies
- 527 views
-
-
நாம் எமதினம் பட்ட, படுகின்ற அவலங்களுக்கு ஒரு நீதி கிடைக்க கூடிய சந்தர்ப்பம் எம் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. வரப்போகும் அவலங்களை தடுத்து நிறுத்தவும் எமது மக்கள் சுதந்திரமாக வாழவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டிய நேரம் இது. எமது மாவீர செல்வங்களின் அர்ப்பணிப்புக்களை நனவாக்க வேண்டிய நேரம் இது. மக்களின் அழிவுகளுக்கு ஒரு ஆறுதல் தேடும் காலம் இது. நாம் ஒவ்வொருவரும் எம்மாலான செயல்பாடுகளை தனியாகவும் குழுக்களாகவும் சேர்ந்து செயல்பட வேண்டிய களத்தின் தேவை இன்று. உங்களால் முடிந்த பரப்புரைகளை மேற்கொள்ளுங்கள். சமூக வலைகளை பயன்படுத்துங்கள். A Historic Responsibility is in front of you ! You may have your differences but as Tamils it is time to Unite fo…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே கல்லில் எத்தனை காய்களை விழும்? தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் யாழ்ப்ப…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பான் கீ முன் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியமில்லை . ஐ.நா.: இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையானது "இந்த வாரம்' வெளியிடப்படும் என்று ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் அலுவலகம் திரும்பத் திரும்ப உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோதிலும் அதனை கைவிட்ட பான் கீ மூன் அதன் பின்னரான குறுகிய காலத்திலேயே "செயலாளர் நாயகமாக எனது பணியை தொடர்வதற்கு தங்களின் வலுவான ஆதரவையும் தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்' என்று ரஷ்யத் தலைவர் திமித்ரி மெத்வதேவிடம் பான் கீ மூன் கூறியதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன…
-
- 0 replies
- 1.6k views
-
-
ரொபேட் பிளேக்கை மஹிந்த சந்திப்பதில்லையென முடிவு இணைய-பதிப்பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 கொழும்பு வரவுள்ள ஆசிய விவகாரத்திற்கான அமெரிக்க இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக் அவர்களை மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பதில்லையென முடிவெடுத்துள்ளார். அமைச்சர் பீரிஸ் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஆகியோரையே சந்திக்க விடுவது எனவும் மஹிந்த முடிவெடுத்துள்ளாராம். அண்மையில் ரொபேட் பிளேக் இலங்கை தொடர்பாக விடுத்த அறிக்கைகள் அத்துடன் மஹிந்த இராஜபக்ஷவை குடும்ப ஆட்சி நடத்துவதாக அண்மையில் கூறியவையே இந்த கோபத்திற்கு காரணம் என தென் இலங்கை செய்திகள் கூறுகின்றன. இதே வேளை மஹிந்த இராஜபக்ஷவை குடும்ப ஆட்சி என விமர்சனம் செய்த பிளேக்கிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்குமாறும் மீன்பிடி அம…
-
- 1 reply
- 955 views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆலோசனை வழங்க சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு! ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அவ்வறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை வழங்குமாறு கோரியே இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக LAKBIMA எனும் கொழும்பு ஊடகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன…
-
- 4 replies
- 1k views
-
-
டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், கரு நா முரளிதர இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து…
-
- 10 replies
- 4.2k views
- 1 follower
-
-
திரு.நடேசன், திரு.புலித்தேவன் ஆகியோருடன் 300 சிவிலியன்களும் சரணடைந்துள்ளனர் இணைய-பதிப்பு மலேசிய நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் சரணடைதல் மற்றும் அவர்கள் சிங்களப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிபுணர் அறிக்கையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் பீடம் 300 பொதுமக்களுடன் நிபந்தனையற்ற முறையில் சரணடைய விடுப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த செய்தியினை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம் ஆகியோருக்கு தெரிவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை சரணடைதல் பற்றிய செய்தியினை இலங்கை அமைச்சர் பசில் இராஜபக்ஷ மற்றும் பாதுக…
-
- 0 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 வன்னி இறுதிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுமார் அறுநூறு அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். இந்தக் கூற்றைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஆதரித்துள்ளார். அவ்வாறெனில் இந்த 600; பொதுமக்களையும் விட உயிரிழந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கொன்றது இலங்கை அரச படைகளே என்பதனை இவர்கள் இருவரும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றே அர்த்தப்படுகிறது. மறுபுறம், இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியனும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற கருத்தையும் கனகரத்தினம் தெரிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
Sunday, 24 April 2011 12:36 விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைதலை கோத்தாபயவும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்: நிபுணர் குழு அறிக்கை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவது குறித்து பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் தலைமையில் சரணடையத் தயாராக இருப்பதாக சர்வதேச நாடுகள் மற்றும் முக்கிய அமைப்புகளுக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன அவற்றில் முக்கியமானவையாகும். பிரஸ்தாப சரணடைதல் விவகாரம் தொட…
-
- 3 replies
- 1.1k views
-
-
முழுப் பூசினிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முயற்சிப்பதான கிளிநொச்சி அரச அதிபரின் கூற்றுக்கு மக்கள் அமைப்புகள் கண்டனம் [sunday, 2011-04-24 15:37:09] கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் மாவட்டத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைவதாகவும் அரசாங்க் அதிபர் தெரிவித்திருப்பது தவறான கருத்தாகும் எனப் பச்சிலைப்பள்ளி மக்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன, ஆகவே, இவ்வாறான தவறான அறிக்கைகளை விடுவதனைத் தவிர்த்து உண்மை நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய இருப்பிடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
'பொதுமக்கள் அழிவை ஐநா தடுத்திருக்கலாம்' இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - 'விஜய் நம்பியார் புலிகளின் தலைவர்களை சரணடையச் செய்யும் பேச்சுக்களில் ஈடுபட்டார்'- கோர்டன் வைஸ் - விடுதலைப் புலிகளின் எஞ்சியிருந்த தலைவர்களை சரணடையுமாறு இலங்கை அரசாங்கத்திடமிருந்து தூண்டுதல் இருந்தது - கோர்டன் வைஸ் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐநா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வை…
-
- 1 reply
- 904 views
-
-
பெயர், புகழ் என்பவற்றை அடைவதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அந்த ஆசை எல்லை மீறுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகப் போகக் கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு. இப்படி எல்லோரிடமும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பது ஒருவனுடைய நீண்டகாலக் கனவு. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. என்ன செய்யலாம்? என்ற யோசனையோடு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பக்கத்து சீற்றில் ஒரு குழந்தை, அதன் தாய் ஊட்டிவிட்ட உணவை மறுதலித்து, எனக்கு வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.உடனேயே ஒரு சகபயணி அந்தத் தாய்க்கு உதவமுன்வந்தார்."பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமோ?'' அன்பு கலந்த அவரின் வார்த்தையைக…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
Wednesday, 20 April 2011 12:59 ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை விஜயம் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக தூதரக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எதிர்நடவடிக்கைகளை தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசிப்பார் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் ஐ.…
-
- 2 replies
- 577 views
-
-
பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்தாரா சீனத் தூதுவர்? - கொழும்பு விசாரணை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் Yang Xiuping கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பின் நிலைப்பாடு குறித்து சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த போதிலும், சீனத் தூதுவர் Yang Xiupin…
-
- 2 replies
- 1.6k views
-