ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராக டைம்ஸ் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரிற்கு இப்பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. டைம் சஞ்சிகையினால் 'டைம்ஸ் 100' என்ற பெயரில் இவ்வாக்கெடுப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சோனியாகாந்தி உட்பட பல பிரபலங்களைப் பின் தள்ளி, இவர் இவ்விடத்தினைப் பிடித்துள்ளார். பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு, அதில் வெற்றி கண்ட தலைவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சியதிகாரத்துக்குத் தெரிவானவர் எனவும் டைம்ஸ் சஞ்சிகை இத் தெரிவின் போது, அவரைப் பாராட்டியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31004
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையும் மனித் உரிமை அமைப்புக்களும் பொது மக்களை உயிராபத்தில் இருந்து காப்பாற்ற தவறியுள்ளது எனவும் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகம் ஓர் முற்றுப்பெறாத அறிக்கையினையே 2009 இல் மனித உரிமை சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறை கூறியுள்ளது நிபுணர்கள் அறிக்கை. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பணியாளர்கள் யுத்த காலத்திலும் இறுதி நேரத்திலும் போரை நிறுத்தி சிவிலியன்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கையின் நகலின் ஒரு பகுதி உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சித்திரைப் புத்தாண்டையொட்டி புதிய ஆடை களை விற்பதாகக் கூறி பழைய ஆடைகளையும் கிழிந்த பழுதடைந்த உடைகளையுமே வியாபாரிகள் விற்பனை செய்துள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். மலிவு விற்பனை என்ற பெயரில் வீதியோரங்களில் உடுப்புக்களைப் பரப்பி விற்பனை செய்த வியாபாரிகளே இவ்வாறு மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சித்திரைப்புத்தாண்டையொட்டி நூற்றுக்கணக்கான தென்பகுதி வியாபாரிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று வீதியோரங்களில் உடு புடவைகளைக் குவித்து வைத்து விற்பனை செய்துள்ளனர். இவ்வாறான விற்பனையிலேயே மோசடி இடம்பெற்றிருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புத்தாண்டையொட்டி விற்பனை செய்யப்படுகின்ற பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் மோசடி இடம் பெற…
-
- 0 replies
- 1.6k views
-
-
போராளித் தளபதிகள் சித்ரவதை.. அதிரவைக்கும் அதிர்வு... புகைப்பட ஆதாரம்! ஈழ மண்ணில் இனப்படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த துயரத்தின் வலியும் ரணமும் இன்னும் நீங்கவில்லை! போரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் தாங்கமுடியாத துன்பம் ஒருபுறம் என்றால்... சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினரின் மன உளைச்சலோ சொல்லில் அடக்கமுடியாத சோகம்! இப்படி காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'மனித உரிமை கண்காணிப்பகம்’ எனும் அமைப்பு, புதிய ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. ஈழப் போர் முடிந்த கா…
-
- 0 replies
- 2.5k views
-
-
வல்லைவெளியில் நேற்று நடந்த கோர விபத்து Saturday, April 16, 2011, 4:48 வல்லைவெளியில் தலை தெறிக்கும் வேகத்தில் பறந்து சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இருவரும் படுகாயங்களுடன் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஒருவர் நேற்றிரவு மரணமானார். மற்றவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சண்டிலிப்பாய் வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த தே.தேவமகிந்தன் (வயது23) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.கரணவாய், நவிண்டிலைச் சேர்ந்த சோ.விஜயரட்ணம் (வயது 32) என்பவரே …
-
- 0 replies
- 1.3k views
-
-
Saturday, 16 April 2011 01:23 திருமலை அலஸ்தோட்டம் பகுதியில் சுனாமி எச்சரிக்கை நேற்று அறிவிப்பு:25 ஆம் திகதிக்குள் தாக்கும் வாய்ப்பு திருகோணமலை நகரில் இருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் அலஸ்தோட்டம் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை விடுக்கப்பட்ட அறிவிப்பில், எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் சுனாமி தாக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் உடனடியாக பாதுகாப்பாக இடம்பெயர்ந்து குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,சுனாமி அலை தாக்கப்போகிறது என்ற அச்சத்தில் நீர்கொழும்பு மற்றும் மாத்தறை கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தமது வீடுகள…
-
- 1 reply
- 426 views
-
-
அறிக்கை பொதுமக்களுக்கு சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும்: சனல் போர் Saturday, April 16, 2011, 5:07 சிறீலங்கா சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சில தினங்களில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் நேற்று (15) தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (12) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பத்து தினங்களில் வெளியிடப்படும் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றை அமைப்பதற்கு அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
Saturday, 16 April 2011 01:45 புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் மத்தியில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ஓர் அன்பு வேண்டுகோள் அன்புக்குரிய ஈழத்தமிழ் உறவுகளுக்கு சமீபகாலமாகஇ புலம்பெயர் தேசங்களிலே ஈழத்தமிழர்கள் மத்தியில் குழுவாதமும்இ வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்திருப்பதானது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயங்களில் ஒன்றாகும். பரந்துபட்ட ஜனநாயகத் தளத்தில் கருத்துக்களுடன் கருத்துக்கள் மோதுவதற்குப் பதிலாக, எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதனைப் பார்க்கும் போது, இதயத்திற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. இம்மாதிரியான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எங்கள் மக்களில் ஒரு மிகச் சிறிய பகு…
-
- 0 replies
- 592 views
-
-
Report of the UNSG’s panel of experts on accountability in SL http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23146
-
- 6 replies
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்ச துட்டகைமுனுவின் நவீன அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் - 16 ஏப்ரல் 2011 ஐநாவின் அறிக்கையில் என்ன உள்ளடங்கியிருக்கிறது என்பது முக்கியமல்ல. அது இலங்கையின் எல்லா மக்களுக்கும் உலகில் உள்ள மக்களுக்கும் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். 2009 மே மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்ற இறுதி மோதலின் இறுதி வாரங்களில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்தார். பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக்குழுவுக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வந்து குவிந்தன என்று தெரிய வருகிறது. அவற்றில் சில உண்மைகளைத் திரித்துக் கூற முற்பட்டன. இன்னும் சில ஐநாவின் ந…
-
- 0 replies
- 408 views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடுவோருக்கு ஒரு கோடி சன்மானம் வழங்க தயார் மஹிந்த இறஞ்சல்! Posted by admin On April 16th, 2011 at 9:55 am / No Comments ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடும் எதிர்க் கட்சியினருக்கு ஒரு கோடி வரையிலான நன்கொடை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. வன்னி இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 741 views
-
-
15.04.2011 கனடா ரொரொன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் முன் பக்கத்தில் வெளிவந்த ஜோசேப் பரரராசசிங்கத்தின் நாடு கடத்தல் விவகாரம் கொன்சவேற்றிவ் கட்சிக்கு எதிரான மறைமுகமான தேர்தல் பிரச்சாரமே. அதாவது திருமதி ஜோசப் பரராஜசிங்கம் திரு. ஹார்பருடன் சேர்ந்து எடுத்த போட்டோவும் வெளியிடப்பட்டிருந்தது. இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இது ஹார்பர் பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர் என்றும், திருமதி ஜோசெப் பரராஜசிங்கம் பயங்கரவாதி என்றும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே தமிழர்கள் பற்றி அவதூறாகச் செய்திகளை வெளியிடவேண்டும் என்று கொக்குப்போல இருக்கும் இந்தப்பத்திரிகைகள் என்றுமே செய்திகளை உள்ளதை உள்ளபடியாக வெளியிடுவதில்லை. தங்கள் நலன்களுக்கு எட்டியவிதத்தில் தங்கள் கொள்கைகளைச் சார்ந்து செய…
-
- 1 reply
- 578 views
-
-
Apr 16, 2011 / பகுதி: செய்தி / இஸ்ரேலில் இருந்து பொன்சேகாவுக்கு குண்டுதளைக்காத ஆடை: புலனாய்வுத் துறையினர் இஸ்ரேல் நாட்டில் இருந்து பொன்சேகாவுக்கு குண்டுதளைக்காத ஆடை ஒன்று பொதியில் வந்ததாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். மஹிந்த இராஜபக்சவிற்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் தேர்தல் போட்டி தீவரமடைந்திருந்த காலத்திலேயே இது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மஹந்த ராஜபக்ச தம்மீது குண்டுத்தாக்குதல் நடத்துவார் என்ற அச்சத்தின் காரணமாக பொன்சேக இஸ்ரேல் நாட்டின் உதவியை நாடியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. pathivu
-
- 0 replies
- 411 views
-
-
ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலையில்? 15 ஏப்ரல் 2011 ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதை நேற்று நடைபெற்ற சம்பவம் ஒன்றும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற புதுவருட சம்பிரதாய வைபவத்தில், ஜனாதிபதி இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரமே கலந்துக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அவரது குடும்பத்தினரோ இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை. ஏனைய வருடங்களில் ஜனாதிபதியுடன், இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளும், அவரது மூத்த சகோதரர் ஷமல் ராஜபக்ஷவும் நேற்றைய வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை. பசில் ராஜபக்ஷவை வெட்டும் மற்றுமொரு நடவடிக்கையாகவே, பாதுகாப…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிள்ளையானின் கட்சியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுவதற்காக சென்றிருந்த குழு ஒன்று பொதுமக்கள்வழங்கிய தகவல்களை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் சிங்களவர்கள் ஆவர். துஸாரா என்வரை தலைவராகக் கொண்ட குழுவே கைது செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பலுள்ள வர்த்தகர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள சகோதரர் ஒருவருக்கு அகதி அந்தஸ்து கோருவதற்காக் பிள்ளையான் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் அவர் காணாமல் போனதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலையிலுள்ள இவர்களைத் தொடர்பு கொண்டுள்ளர். அவர்கள் பிள்ளையானின் கட்சியின் கடித் தலைப்பில் குறித்த பண்டத்தரிப்பலுள்ள வர்த்தகரின் சகோதரர் தமது அமைப்பினால் அச்சுறுத்தலுக்கு உள்ளனதாக சி…
-
- 1 reply
- 885 views
-
-
-
- 5 replies
- 2.3k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு செய்மதி படங்கள் சான்று! அமெரிக்க இணையத்தளம் [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:58:44 PM GMT ] இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கைப்படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது. தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான …
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழுவின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை அருமையானதொன்று. அதனை இலங்கை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒபாமா நிர்வாகம் மஹிந்தவிற்கு செய்தி அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கமானது தனது நம்பிக்கை தன்மையினை காட்டுவதற்கும் பொறுப்பு கூறும் கடமையில் இருந்து வழுவாது இருப்பதற்கும் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டு அதன் படி செயற்படவேண்டும் என கூறியுள்ளது ஒபாமா நிர்வாகம். இது தொடர்பான செய்தி மஹிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். ஈழ நாதம்
-
- 2 replies
- 1.6k views
-
-
ஐ.நா அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடும் எதிர்க் கட்சியினருக்கு நன்கொடை வழங்க மகிந்தா உத்தரவு! ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. வன்னி இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்துள்ளதுடன், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இதன் பிரதியை ஒப்படைத்திருந்தது. இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாகக் …
-
- 0 replies
- 744 views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை வெளியிட முன்பாகவே தமக்கு காட்டுமாறும் அவ்வாறு காட்டினால் தாம் சில விடயங்களுக்கு ஒத்துப்போவது பற்றி பேசலாம் என இலங்கை தரப்பு ஐக்கிய நாடுகளை கேட்டுக்கொண்டது. இந்த இராஜீக வேலையினை பார்த்தவர் முன் நாள் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி ஒருவராவார். இவர் ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற பிரிவு அதிகாரி லியன் பாஸ்கோவிடம் கதைத்து கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. . இந்த வேளையில் அமெரிக்க தரப்பும், ஐக்கிய நாடுகளும் இரகசிய சந்திப்பு எந்தக்கட்டத்திலும் வெளிப்படுத்தபோவதில்லை என இலங்கைக்கு வாக்குறுதி வழங்கினார்களாம். ஆனால் கூட்டம் முடிந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபையும் , அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளும் …
-
- 1 reply
- 2.1k views
- 1 follower
-
-
வன்முறையாளர்களினால் தேசிய பணியாளர் தாக்குதல் -பிரான்சில் சம்பவம் April 15th, 2011 admin தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்பணித்து பிரான்சில் செயல் பட்ட தேசிய விடுதலை பணியாளர்கள் பதினேழு பேர் பிரான்ஸ் நாட்டு குற்ற தடுப்பு பிரிவினால் கைது செய்ய பட்டு பல மாதங்கள் சிறை வைக்க பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்ட நிலையில் தொடர்ந்தும் இவர்கள் தலைமை செயலகம் பகுதியில் விசுவாசிகளாக இருந்து வந்த தயாளன் என்ற நபர் மீது இதற்கு எதிராக தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வன்முறை கூட்டங்கள் காட்டு மிராண்டி தாக்குதலை நடத்தியுள்ளனர் . http://thaynilam.com/
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட தமிழரிடம் ஐம்பது இலட்சம் ரூபா கப்பக் கோரிக்கை? [Friday, 2011-04-15 07:15:24] பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன். வெள்ளைவான் காரர்களினால் கடத்தப்பட்ட இவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கேட்கப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ள ராஜ் என்று அழைக்கபடும்37 வயதான இந்தத் தமிழர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை சென்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அண்மையில் தேவை ஒன்றின் நிமித்தம் கொழும்புக்கு வந்திருந்த போது வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளதுடன் அவரை விடுவிப்பதாயின் ஐம்பது லட்சம் ரூபா கப்பம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி ஆத்திரம்- கொழும்பில் கேட்டவை:- 15 ஏப்ரல் 2011 Bookmark and Share ஜகாதிபதி ஆத்திரம் - கொழும்பில் கேட்டவை பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டடார் ... பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லங்காதீப பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் நேற்று காலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு புது வருட வாழ்த்தை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை தொடர்புக் கொண்ட குறித்த ஊடகவியலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரித்துள்ளார். இதனையடுத்து, கடும் ஆத்திரத்துடன் ஜனாதிபதி மேற்கண்டாறு கூறியுள்ளார். ஜனாதிபதியை தொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
நான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா? ஒரு தமிழ் அன்னையின் அழுகுரல். 15 ஏப்ரல் 2011 சர்வதேச உள்ளூர் ஊடகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் ஓர் வேண்டுகோள்.. நான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா? ஒரு தமிழ் அன்னையின் அழுகுரல். தனது கணவரும் உறவினர்களும் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளது தொடர்பாக உள்ளூர் சர்வதேச ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு தமிழ் அன்னை எழுதும் கண்ணீர் மடலிலேயே மேலுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மடலின் முழு விபரம் வருமாறு... நா.அமிர்தமலர் பெர்நாண்டோ இல : A48/2 அளுத்மாவத்தை வீதி கொழும்பு – 11.04.2011 சர்வதேச உள்ளூர் ஊடகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் ஓர் வேண்டுகோள்.. நாகேஸ்வரன் …
-
- 0 replies
- 767 views
-
-
யாழில் தற்கொலைகள் அதிகரிப்பு – உளநல சிகிச்சை பிரிவு! Posted by uknews On April 15th, 2011 at 12:19 pm யாழ். குடாநாட்டில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தற்கொலை செய்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை உளநல சிகிச்சைப் பிரிவு இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பரீட்சையில் சித்தியடையாமை, இளவயதில் ஏற்படும் காதல்த் தோல்விகள், அதிகரித்த குடும்ப வன்முறைகள், குடும்ப வறுமை, அநாதரவான நிலைமை போன்ற காரணிகளால் குடாநாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து உளநல மருத்துவ சிகிச்சையாளர்கள் வரவழைக்கப்பட்டு பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழ…
-
- 0 replies
- 738 views
-