ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
போரின் இறுதிக்கட்டத்தில் வெளிநாட்டு அழுத்தத்தை தடுத்து நிறுத்திய இந்தியா - இந்து தகவல் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் அதிகரித்த மக்கள் படுகொலைக்கெதிராக எழுந்த வெளிநாட்டு அழுத்தத்தை இந்தியா தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாவித்து தடுத்து நிறுத்தியதுடன், இலங்கை தனது கொடூரப் போரில் தடையின்றித் தொடர்ந்து செல்வதற்கும் உதவியதாக விக்கிலீக்கின் தகவல்களை ஆதாரம் காட்டி இந்துவில் நிருபமா சுப்ரமணியன் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டதாம், ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியினால் அது போரை நிறுத்துவதை விரும்பவில்லையாம். http://www.thehindu.com/opinion/lead/article1544202.ece?sms_ss=facebook&at_xt=…
-
- 3 replies
- 1.4k views
-
-
( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…
-
- 1 reply
- 1.6k views
-
-
Mar 18, 2011 / பகுதி: செய்தி / தமிழ் தாலிக்கு எதிரான வழக்கை மீளப்பெற்றுக்கொண்டது கனடா கனடாவில் அடைக்கலத்தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் பெண் அணிந்திருந்த தமிழ்த் தாலி தொடர்பில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த கனடா அரசு தற்போது அதனை கைவிட்டு அவரை விடுதலை செய்யுமாறு பணித்துள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பின் இருந்த நபரை அது நேற்று (17) நாடுகடத்தியுள்ளதாக கனடா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கனடா அரசால் நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபர் இவராகும். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்த சன் சீ என்ற கப்பலில் 492 ஈழத்தமிழர்கள் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 2 replies
- 1.4k views
-
-
இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்ற மேற்கத்தேய நாடுகள் முயன்றன-விக்கிலீக்ஸ் சனிக்கிழமை, 19 மார்ச் 2011 02:21 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் ஷெல் வீ்ச்சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்ற போது, இரு தரப்புகளுக்கும் இடையிலான பகைமை தவிர்ப்பு முயற்சியொன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் முன்னெடுத்திர…
-
- 1 reply
- 1.7k views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. 17 மார்ச் 2011 முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசுக் கட்சி - வெற்றி உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. - ஒரே பார்வையில் களுத்துறை மாவட்டம் ஹொரண நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் கண்டி மாவட்டம் கங்க இஹல கோரளை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் மொணராகலை மாவட்டம் கதிர்காமம் பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசுக்கெதிராக பிரிட்டன் கடும் தொனியில் அறிக்கை! Posted by admin On March 19th, 2011 at 9:56 am வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது அரச படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் இல்பேர்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான லீ ஸ்கோர்ட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இப் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதே சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இப் போர்க்குற்…
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகளை நடத்த பான் கீ மூன் குழு பணிந்துரை [Friday, 2011-03-18 12:35:20] இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப புலிகளுக்கும் இடையிலான மோதல்களின்போது இருதரப்பினாலும் சர்வதேச மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்து போதுமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரிப்பதற்காக உரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் தற்போது களத்தில் இல்லாத நிலையில், இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகள் நடத்தப்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள போர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாதவாறு சர்வதேச மட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கோத்தபாய இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: இந்த நாட்டில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகள் மீண் டும் தலைதூக்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கட்டாய கடமை. யுத்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்ததுபோல் புலிகள் மீண்டும் எழாமல் இருப்பதற்கும் மக்கள் பங்களிப்புச் செய்யவேண்டும்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதிலும…
-
- 1 reply
- 1.3k views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையுடன் சமரசத்துக்காக முழந்தாளிட்டு நிற்கும் இலங்கை அரசு [saturday, 2011-03-19 03:13:17] விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வரும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடன் சமரசம் செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக கொண்டுள்ள கரிசனைகள் தொடர்பாக கலந்துரையாட வருமாறு அரசாங்கம் அனைத்துலக மன்னிப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் மக் டொனால்ட்டுக்கு இதுதொடர்பான அழைப்பை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அனுப்பியுள்ளார். நல்லிணக்கம், மீள்கட்டுமானம், க…
-
- 0 replies
- 959 views
-
-
Friday, March 18th, 2011 | Posted by thaynilam புலிகளின்குரல் ஒலிபரப்புக் கோபுரத்தில் இருந்து அரசின் தொலைக்காட்சி புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பாகிவந்த கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து அரசசார்பு தனியார் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. போர் மூலம் கொக்காவில்ப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர், 270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் அரசினால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெலபிட்ட உறுதிப்படுத்தியிருக்கின்றார். 172 மீற்றர் நீளமான கொக்காவில் தொலைதொடர்பு கோபுரம் இலங்கையின் மிக உயரமான தொலைதொடர்பு கோபுரமாகக் கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயுதக்கடத்தல் குற்றச்சாட்டு, நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பத்து வருட சிறைத்தண்டனை... வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 12:42 ஆயுதக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த 2007ம் ஆண்டில் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ஆயுதங்களைக் கடத்தி வந்த போது இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின் அவர்கள் வந்த படகை சோதனையிட்ட போது அதிலிருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. அவர்களுடன் இருந்த இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன…
-
- 2 replies
- 870 views
-
-
மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். கோலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய விஜயங்களை நாடு கடந்த அரசு தொடர்பாக மேற்கொண்ட போதே இந்த நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் பிரதமர் பேசுகையில், நாடு கடந்த அரசின் உடணடியான பணிகளாக மூன்று முக்கிய பணிகளைக் குறிப்பிட்டார். 1. இன அழிப்பு, மனித இன…
-
- 22 replies
- 2.6k views
-
-
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்திக்காக 'வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் கூட, வடக்கின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை என்பதை கொழும்பிலிருந்து கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவினரால் நேரில் காணக்கூடியதாக இருந்தது. சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்ட இந்த விஜயத்தின்போது வடக்கின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடிய சந்திப்புக்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடக்கில் காணப்படும் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கில் எ…
-
- 1 reply
- 1.8k views
-
-
உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு நேற்று வந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கட்டடத்தைக் கொளுத்தப் போவதாக ஊழியர்களை மிரட்டினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். பணியில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டார். அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த செட்டி என்று அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்கிற பொலிஸ் கொன்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் உதயன் அலுவலகத்துக்கு வந்த பிரதீபன், கையில் ஒரு "லைற்றரை" வைத்துக் கொண்டு அலுவலகத்தைக் கொளுத்தப்போகிறேன் என்று ஊழியர்களை மிரட்டினார். கடந்த 5ஆம் திகதிய உதயனில் வெளியான "பார்த்தீர்களா கேட்டீர்களா" என்ற பத்தியில், மாணவர் ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்த கைச்சங்கிலியை பாடசாலை அதிபர் த…
-
- 4 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் 8 - ஆக்கம்: நிராஜ் டேவிட் உளவியல் யுத்தம் அல்லது உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற முக்கியமான ஒரு விடயம் பற்றü இந்தத் தொடரில் சற்று விரிவாக ஆராயந்துகொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உளவியல் யுத்தங்கள் பற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சர்வதேசப் போரியல் அரங்குகளில் முக்கியத்துவம் பெற்ற சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி முதலில் நாம் பார்த்து வருகின்றோம். அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா இராணுவத்தினர், இந்தியப் படைகள் போன்றன ஈழக் களங்களில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் சில பற்றியும் விரிவாக ஆராய இருக்கின்றோம். …
-
- 2 replies
- 685 views
-
-
எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் என்றும் கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் தடை உள்ளது. இந்நிலையில் குறித்த பெண் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தினத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 1.1k views
-
-
மகிந்த மீண்டும் கடாபிக்கு தைரியம் வழங்கியுள்ளார் லிபியத் தெலைக்காட்சி படத்துடன் சற்றுமுன் செய்தி வெளியிட்டது 40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுகளை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, தொலைபேசியில் கடாபியை தொடர்புக்கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரியமான தலைவர் என்பதை …
-
- 8 replies
- 1.9k views
-
-
எத்தனை காலந்தான் முகாமில் வாழ்வது? எம்மை உடனடியாக மீளக்குடியமர்த்துங்கள்: கெஞ்சி நிற்கும் இராமா இடைத்தங்கல் முகாம் அகதிகள் [Friday, 2011-03-18 03:21:20] யாழ். இராமாவில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வட மராட்சி கிழக்கு பகுதி மக்கள் தம்மை உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய பதில் தருவதாகத் தெரிவித்திருந்தும் இன்று வரையும் சாதகமான முடிவுகள் எதனையும் தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் தாம் முகாம்களிலேயே வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கில் பல பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்…
-
- 0 replies
- 698 views
-
-
சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு : 18 மார்ச் 2011 எம்.வீ சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், போராட்டங்களில் ஈடுபடவில்லை எனவும் குறித்த நபர் தெரிவி;த்துள்ளார். எனினும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கம் வகித்த காரணத்தினால் குறி;த்த நபரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளரின் சட்…
-
- 0 replies
- 723 views
-
-
சாதாரண தரப் பெறுபேறுகளில் வேம்படி, யாழ்.இந்து முன்னிலை ஜீ.சி.ஈ சாதாரணப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. நேற்றைய தினமே பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப் பட்டன. யாழ்.மாவட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகளில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளது. வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 11 மாணவிகள் 9 ஏ சித்தியும், 40 மாணவிகள் 8 ஏ சித்தியும், 26 மாணவிகள் 7 ஏ சித்தியும், 30 மாணவிகள் 6 ஏ சித்தியும் பெற்றுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 ஏ சித்தியும், 28 மாணவர்கள் 8 ஏ சித்தியும் 23 மாணவர்கள் 7 ஏ…
-
- 0 replies
- 975 views
-
-
யார் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் சிறிதரனுடன் ஒரு நேர்காணல் - மர்மங்கள் துலங்குகின்றன குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- 01. அண்மையில் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குறிப்பிடுங்கள்? அன்று என்ன நடந்து? 02. இந்த தாக்குதலை யார் எதற்காக நடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 03. இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இம்பெற்ற விவாதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.? முக்கியமாக விமல்வீரவன்ச எழுப்பிய கேள்வியை பற்றிச் சொல்லுங்கள். 04. போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பொழது உங்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது? 05. மக்களின் இன்ற…
-
- 0 replies
- 975 views
-
-
இதுவரை வெளிவந்த 97 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரம் 162 உள்ளுராட்சி சபைகளில் 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி கம்பளை நகர சபை, பண்டாரவளை மாநகர சபை, குளியாப்பிட்டி நகர சபை, சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபை…
-
- 0 replies
- 819 views
-
-
தென்பகுதியில் இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம்! இருவர் பலி! (இரண்டாம் இணைப்பு) Posted by admin On March 17th, 2011 at 8:09 pm / அஹங்கம – திக்கும்பர பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரின் கட்டளையை மதிக்காது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். மோட்டார் சைக்கிளில் பயணம் இருவரில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றையவர் கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் காயமடைந்தவர் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 801 views
-
-
Thursday, 17 March 2011 13:31 ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுந்தான் தான் எனக்கு அரசியல் - சீமான் ஈழத்தமிழர் பிரச்சினை தான் எனக்கென்று ஒரு அரசியல் இல்லையென்பதை எனக்கு உணர்த்தியது எனவும் தமிழர் தேசிய இன விடுதலையைத் தவிர எமது இனத்திற்கு வேறு ஒரு அரசியல் இருக்க முடியாது எனவும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் அவர்கள் இந்திய வார இதழொன்று வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைக்கெதிராக ஈழத்தின் இறுதிப் போரின் போது செயற்பட்ட தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு வாக்குக் கேட்பதில் தவறில்லை என்று திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்தாலும் இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க அணி பிளவுபட்டுப் போயுள்ளது. 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட விஜயகாந்தின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இயற்கைப் பேரழிவின் விளைவு - சிறிலங்காவுக்கான உதவிகளை ஜப்பான் மீளாய்வு? ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய புவியதிர்வு மற்றும், ஆழிப்பேரலையும் அதையடுத்து அணுஉலைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளும் பாரிய பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சிறிலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகளை ஜப்பான் மீளாய்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிடம் இருந்து அதிகளவு நிதியுதவிகளைப் பெறும் முக்கியமான நாடாக சிறிலங்கா இருப்பதால், இத்தகைய முடிவினால் பெரிதும் பாதிக்கப்படும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதரகத்தில் உள்ள பொருளாதார கூட்டுறவுப் பிரிவின் மூத்த பேச்சாளர…
-
- 1 reply
- 1.6k views
-