Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார். பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், க…

    • 1 reply
    • 271 views
  2. 17 NOV, 2023 | 10:59 AM யாழ்ப்பாண நகரில் நின்ற நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவது பாரிய அசம்பாவிதங்களை தவிர்க்கும். …

  3. மட்டக்களப்பில் பிரதான வீதி ஒன்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் கடற்றொழிலாளர் ஒருவர் மீன்களை பிடிக்கும் காணொளி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் ஒரு வினோதமானது என்பதை தாண்டி அரசாங்கத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. மழைக்காலங்களின் போது குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை மேற்கொள்கின்றனர். இதனை அவதானித்த கடற்றொழிலாளர் இது தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வித்தியாசமான செயற்பாட்டை செய்துள்ளார். https://tamilwin.com/article/street-in-batticaloa-damaged-1700153905

  4. போர் இல்லாத நேரத்தில் கூட படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா? இதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது Sayanolipavan 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுட் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் மீனவர்களுக்கு நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை கூட்டமைப்பு வரவேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் உள்நாட்டுப் போர் இல்லாத …

  5. 17 NOV, 2023 | 06:31 PM இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவராவார். கடந்த 31 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற…

  6. யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் தனது மகளை துன்புறுத்தும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் அச்சிறுமியும் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறி…

  7. (எம்.நியூட்டன்) மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்த தடைவிதிக்கக் கோரியே மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) …

  8. இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது இலங்கை அணுசக்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது இதேவேளை ஒட்டு வேலை (Welding) மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கொரிய…

  9. பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளை­யும் அழைக்­கின்­றார் ஜனா­தி­பதி பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளை­யும் அழைக்­கின்­றார் ஜனா­தி­பதி தமிழ், சிங்­கள புலம்­பெ­யர் இலங்­கை­யர்­கள் இந்­நாட்டு பிள்­ளை­க­ளின் கல்­விக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் புதிய பல்­க­லைக்­க­ழ­கங்­களை ஆரம்­பிக்கவேண்­டும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­துள்­ளார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மொழி அறிவை சிங்­க­ளம், தமிழ் மொழி­க­ளுக்கு மாத்­தி­ரம் மட்­டுப்­ப­டுத்த முடி­யாத…

  10. புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின! 2023ஆம் ஆண்டின் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளி விபரங்கள் http://www.samakalam.com/புலமைப்-பரிசில்-பெறுபேற-9/

  11. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று காலை இராணுவ புலனாய்வாளர்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றனர் - முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு பரபரப்பு தகவல் Published By: RAJEEBAN 16 NOV, 2023 | 02:55 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏபிசி தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயங்கரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி …

  12. Published By: VISHNU 16 NOV, 2023 | 07:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகை…

  13. Published By: VISHNU 16 NOV, 2023 | 07:50 PM (எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்) அத்தியாவசிய 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜயந்த சமரவீர எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஜயந்த சமரவீர எம்பி தமது கேள்வியின் போது, அமெரிக்க டொலரின் அதிகரிப்போடு நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் மூன்று மடங்கிலிருந்…

  14. Published By: VISHNU 16 NOV, 2023 | 05:06 PM பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து தான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் என்ன சொன்னாலும் அது நடந்துள்ளதால் இது தொடர்பில் சரியான தகவல்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (16) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த தரக்குறைவான எரிபொருள் நல்ல எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும், இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என…

  15. 16 NOV, 2023 | 03:31 PM யாழ். மாவட்ட பொலித்தீன் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த அலுவலக பிரதி பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் பொலித்தீன், பிளாஸ்டிக் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விழிப்பூட்டல் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத…

  16. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால இந்த வேண்டுகோளை முன்வைத்தார். நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அவர்களில் 3 இலட்சம் பேர் பார்வையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/281160

  17. வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்! “வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்” என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தா…

  18. சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது. அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.c…

  19. வடக்கு இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் adminNovember 15, 2023 வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டும் தீபாவளி தினைத்தினை முன்னிட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொது தேவைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். இளையோர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கங்களின் பங்களிப்புக்கள் அவசி…

  20. Published By: RAJEEBAN 05 NOV, 2023 | 11:55 AM பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் குறித்து வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் அவர்கள் அதில் தெரிவித்துள்ளதாவது நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார். நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்…

  21. யாழில் தொடரும் மழை – ஆலயம் ஒன்று சேதம் – 08 குடும்பங்கள் பாதிப்பு! adminNovember 15, 2023 யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.11.23) எட்டு குடும்பங்கள் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச…

  22. Published By: DIGITAL DESK 3 16 NOV, 2023 | 09:44 AM (எம்.மனோசித்ரா) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இதன்போது, கெப்டன் முகுந்தனின் புதிய நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.…

  23. 15 NOV, 2023 | 03:31 PM இலங்கையிலுள்ள எமது ஐந்தாவது American Space ஆகிய மட்டக்களப்பு iHub, கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதுடன் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களிடையே தொடர்புகளையும் வளர்க்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையத்தினை (iHub) இன்று மட்டக்களப்பில் திறந்து வைத்ததுடன் சிறப்பு விருந்தினராக இணைந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை வரவேற்றார். அமெரிக்க தூதரகம் மற்றும் ட்ரீம் ஸ்பேஸ் அகடமி ஆகியவற்றிற்கிடையிலான ஒரு கூட்டு முயற்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படும் இந்த iHub கிழக்கு மாக…

  24. காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ! காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில் கண்மூடித்தனமான தாக்குதல் என்பன சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 பேரின் கையொப்பத்துடன் ஐநா பொதுச்செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

    • 4 replies
    • 310 views
  25. ‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? - ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்க…

    • 5 replies
    • 776 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.