Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கட்கிழமை, 7, பிப்ரவரி 2011 (11:50 IST) விடுதலைபுலிகள் மீது பழி சுமத்த சதி நடக்கிறது; சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக மீனவர்கள் இதுவரை 540க்கும் மேற்பட்டோர் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் எங்கும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அரசு தனது வெளியுறவு செயலர் நிருபமாராவ் கண்துடைப்பாக உடனே இலங்கைக்கு அனுப்பியது. தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடை பெற்று வரும் மீனவர் படுகொலைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் என்பதே கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் காட்டாது கள்ள மவுனம் காத்த மத்திய அரசு இப்போது புதி…

  2. யாழில் மீண்டும் மக்களைப் பதிவு செய்கிறது இராணுவம் – ஒளிப்படத்துடன் குடும்பப் பதிவு கெடு பிடி அதிகரிப்பு * Monday, February 7, 2011, 3:55 யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் மக்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒவ்வொரு வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்பப் பங்கீட்டு அட்டையைப் பார்த்து பதிவதுடன் குடும்பத்தினரின் விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதன்போது குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தும் குடும்ப அடையாள அட்டைகளையும் பார்வையிட்டுச் செல்கின்றனர். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர். வெளிநாட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர் மற்றும் வாகனங்கள் உள்ளனவா என்பது தொடர்பான கேள்விகளை இராணுவத்தினர் மக்களிடம் கேட்டு பதிவுகளை மேற்கொண…

  3. உடு துணியை காயப் போடவும் கொழும்பில்தடை உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ள ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் இருப்பவர்கள் துணிகளைக் காயப்போடுவதற்கு கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்த மைதானத்தில் உலகக் கிண்ண ஆட்டங்கள் 7 நடைபெற உள்ளன. இதனை அடுத்தே மைதானத்தைச் சுற்றி உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள் துவைத்த துணிகளை பல்கனிகளில் காயப் போட்டு அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரிகள் இந்த வாரம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வெளியே தெரியுமாறு துணிகளைக் காயவைக்கக்கூடாது என்றும் வீதியோரங்களில் குப்பைகளைப் போடக்கூடாது என்றும் அதிகாரிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளனர். ஆர்.பிரேமதாஸ மைதானத்திலேயே அரையிறுதி ஆட்டம் ஒ…

    • 1 reply
    • 1.8k views
  4. இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு : 07 பெப்ரவரி 2011 இலங்கையில் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் (06) வரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கனமழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இரண்டு பேர் காணாமல் போயிருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.பி. வேரகம தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களில் 63 ஆயிரத்து 594 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 36 ஆயிரத்து 953 பேர் இடம்பெயர்ந்து 653 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்…

  5. மீண்டும் பனை மரம் ஏறிய வேதாளம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல். [Monday, 2011-02-07 04:20:35] தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைத் துன்புறுத்தியதுடன் கடலில் தள்ளி விட்டு படகிலிருந்த பொருட்களையும் கடலில் வீசினர் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அல்பேர்ட், அந்தனி என்ற இரு மீனவர்களே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம…

  6. யாழ்ப்பாணத்தில் 7 வருடங்களின் பின்பு உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான பரீட்சை நடைபெற்றுள்ளது. கடந்த வியாழன் தொடங்கி சனி வரையுமான 3 நாட்கள் நடைபெற்ற இப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் பரீட்சார்திகளாகக் கலந்து கொண்டார்கள் . செய்முறைப் பரீட்சை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலும், எழுத்துப் பரீட்சை யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி முன் மண்டபத்திலும் நடைபெற்றன. இந்தப் பரீட்சைக்கு வடமாகாணத்தில் 103 பேர் விண்ணப்பித்ததுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 86 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.xx thx http://www.newjaffna.com/ இப் பரீட்சை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்…

    • 4 replies
    • 1.1k views
  7. இலங்கையின் பணவீக்கம் இவ்வாண்டு உயரும் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும். எனினும் பணவீக்கம் 8 வீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு துறை, அன்னியச் செலாவணி ஒதுக்கு மற்றும் நாணயமாற்று வீதம் நிலையான தன்மையைப் பெற்று வருகின்றது. இப்போதுதான் இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது என ஐ.எம்.எவ் ன் இலங்கைக்கான தூதுவர் கொசி மாதே தெரிவித்துள்ளார். கடனளிப்புக்காக இலங்கைப் பொருளாதாரம் 5வது தடவையாக ஐ.எம்.எப் ஆல் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவுகளை சமர்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் பொருளாதார போக்கு திருப்த…

    • 1 reply
    • 1.8k views
  8. விடுதலைப் புலிகளுக்கு கொழும்பில் நிதி சேகரிப்பு: முஸ்லிம்கள் இருவர் கைது! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:53 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கொழும்பில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்கிற சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் ஹெட்டியாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களின் உடைமையில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், 188240 ரூபாய் பெறுமதி உடைய ரொக்கப்பணம் ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. இவர்கள் கொழும்பில் வர்த்தக பிரமுகர்களிடம் இருந்து புலிகள் இயக்கத்துக்காக இவற்றை எல்லாம் கப்பமாக பெற்று இருந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அற்வித்து உள்ளது. இவர்கள் இன்று நீத…

    • 4 replies
    • 1.4k views
  9. யாழ்ப்பாணத்தில் அதிசய பறவை! வெள்ளி, 04 பெப்ரவரி 2011 09:21 யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிசயமான பறவை ஒன்று மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் நீர்வேலிப் பிரதேசத்தில் இப்பறவை விழுந்து இருக்கின்றது. இப்பகுதி மக்கள் பறவையைக் காப்பாற்றி கூண்டிலில் அடைத்து வைத்து உள்ளார்கள். இதன் தோற்றம், குணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இது ஒரு வகையான ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்றும் பருவ கால மாற்றத்தால் வெளிநாடு ஒன்றில் இருந்து பறந்து வந்து இருக்கின்றது என்றும் ஊகிக்கப்படுகின்றது. இப்பறவையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். tamilcnn.com

  10. சீமானின் சீற்றமும் சிவாஜிலிங்கத்தின் காட்டமும்: அமைச்சர் டக்ளசுக்கு ஆதரவும் இல்லை! ஆளுங் கட்சிக்குத் தாவலும் இல்லை!! [sunday, 2011-02-06 17:22:32] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவளிப்பதோ அல்லது ஆளுங்கட்சியுடன் தான் சேர்ந்து கொள்ளப் போவதோ நடக்காத காரியங்கள் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர்; இயக்கத் தலைவரான சீமான் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணையவுள்ளமை தொடர்பில் பரவலாகப் பேசப்பட்…

  11. சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள் – டேவிட் பெரியார் ஞாயிற்றுக்கிழமை, 06 பிப்ரவரி 2011 16:38 சிங்கள மடம் தாக்கப்பட்டது என்பது வருத்ததிற்குரிய செய்தியல்ல மகிழ்ச்சியான செய்தியே. காலம் காலமாக சிங்களவர்களால் கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் 538 பேரை இழந்த பிறகு இப்பொழுதுதான் முதல் முறையாக திருப்பி அடித்திருக்கிறார்கள். சென்னை சிறையில் இருக்கும் சிங்கள மீனவர்களின் கழிவறையை கூட சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தான் சுத்தம் செய்கிறார்கள். இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட காலணிகளை சிங்கள மீனவர்கள் அணிந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இலங்கை இந்தியாவிற்கு கொடுக்கும் மரியாதையா?. சிங்கள மீனவர…

  12. சன் சீ கப்பலில் சென்ற தமிழ்நாதம் செய்தியாளர் விடுதலை [ பிரசுரித்த திகதி : 2011-02-06 02:28:41 PM GMT ] சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 492 பேரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழநாதம் செய்திதாளில் பணியாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், கனடிய நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நெசனல் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியாளரின் பெயர் வெளியிடப்படாத நிலையில் அவருடைய குறியீட்டு இலக்கமாக பி188 என்ற இலக்கமே அவரை அடையாளம் காண்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது இந்தநிலையில் முழு கிளிநொச்சியுமே தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது குறித்த ஊடகவியலாளருக்கு சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத…

  13. இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன – சுவிட்சர்லாந்து : 06 பெப்ரவரி 2011 இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்று வந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 4500 புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தைத் …

  14. இலங்கை சென்ற நிருபாமா ராவ் அவர்களுக்கும் இலங்கை அதிபர் இராஜபக்‌ஷவிற்கும் இடையே நடந்த மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தனக்கு திருப்தியாக இருந்ததாக கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டு நிருபாமா ராவ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கருணா நிதியினை சந்தித்து பேசினர் இதன் போதே கலைஞர் மேற்கண்டவாரு கூறியுள்ளார். ஈழ நாதம்

  15. தண்ணீர்முறிப்புக் குடியேற்றமும் சிங்களமயமாகும் முல்லைத்தீவும்! இதிகாச காலம் தொட்டு தமிழருக்கான வரலாற்று அடையாளத்தைக் கொண்ட இடங்களில் வன்னியும், வன்னியைச் சார்ந்த முல்லைத்தீவுப் பிரதேசமும் பிரதானமானதாகும். குறிப்பாக முல்லைத்தீவுப் பிரதேசம் வடகிழக்கு இணைப்பின் தொடுவாயாகும். வடகிழக்கு இணைப்பால் ஈழத்தமிழரின் பாரம்பரியம், புரான கால ஆட்சி அதிகாரம்பற்றிய ஆவணங்கள் வெளிப்பட்டு விடலாம் என்ற அச்சம் சிங்களத்திற்கு ஏற்பட்டது இன்று நேற்றல்ல. தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் தமிழரின் பண்பாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதால் தமிழர் அடையாளங்களைச் சிதைக்கலாம் என்றும், அதனால் சிங்களத்தின் மேலாதிக்கக் கொடியின்கீழ் ஈழத்தில் தமிழர்களை சதாகாலமும் ஏதிலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் வைத…

    • 1 reply
    • 1.2k views
  16. மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 40 கோடி இந்திய ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ.30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்…

    • 0 replies
    • 1.5k views
  17. ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது: 15 வயதுடைய குறித்த பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்தேகநபர் இவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார் என்றும் பளைப் பகுதியில் வைத்து பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த சந்தேகநபரை…

    • 0 replies
    • 1.7k views
  18. ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமம் இன்று அதிகாலை வெள்ள நீரினால் முற்று முழுதாக மூழ்கியுள்ளது. தென்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு தேங்கியிருந்த வெள்ள நீர் அருவியாற்றின் மூலம் தம்பனைக்குளம் கிராமத்தை வந்தடைந்துள்ளது. இதனால் குறித்த கிராமத்தின் சுமார் 330 குடும்பங்களைச் சேர்ந்த 2704 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.தம்பனைக்குளம் பிரதான …

  19. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைக் காலூன்ற விடமாட்டோம் - கூட்டமைப்பு சரவணபவன் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பியும், உதயன், சுடரொளி பத்திரிக்கைகளின் நிர்வாக அதிகாரியுமான திரு.சரவண்பவன் அவர்களை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் வானொலித் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டியின் விபரங்கள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசுக்குமிடையிலான சந்திப்புபற்றிச் சொல்லும்போது, திருப்திகரம் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்கள்.தடுப்புமுகாம்களில் இன்னுமிருக்கும் இளைஞர்கள் பற்றிய பெயர் விபரங்களை அவரது உறவினர்கள் பார்வைக்கு வவுனியாவி…

    • 6 replies
    • 1.4k views
  20. 200 றாத்தல் பாணை நிவாரணமாகக் கொடுப்பதற்கு ஐந்து லெட்சம் செலவு செய்த பிரதி அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌ;ளத்தினால் மூழ்கியுள்ள வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் அவர்கள் இன்று உலங்கு வானூர்தி மூலமாக பாண் வழங்கினார். இவர் வழங்கிய பாண் 200 றாத்தலுக்கும் ரூபா ஒன்பதாயிரம் மட்டுமே செலவாகும் ஆனால் இவற்றை வினியோகம் செய்வதற்கான செலவு ரூபா ஐந்து லெட்சம் ஏனெனில் இந்த பாண் உலங்கு வானூர்தி மூலமாகவேதான் வழங்கப்பட்டது. இதே பாணை எந்திர படகு மூலமாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினால் ஆக இரண்டாயிரம் ரூபா மாத்திரமே செலவாகி இருக்கும். எனவே இவ்வாறு வீணாக செலவாகும்…

  21. காதல் கடிதம் கொடுத்தல் மற்றும் சேஷ்டைகள் செய்தல் போன்றவற்றுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை 2011-02-05 02:13:32 பாடசாலை மாணவிகளுக்கு வீதியிலும் பெண்கள் பாடசாலைகளுக்கு அருகிலும் கேலி, கிண்டல் செய்து சேஷ்டை புரிந்து, காதல் கடிதங்களை கொடுக்கும் இளைஞர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதென்று பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த நடைமுறை கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் இது விடயத்தில் பொலிஸார் அந்தளவிற்கு கவனம் செலுத்தாதிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் பெற்றோர் செய்த பலதரப்பட்ட புகார்களை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்பாவி மாணவிகள் மீது காதல்களை வீசி அவர்களை அநாவசியமாக பிரச்சினைகளுக்கு உட்படுத்தும் இளைஞர்களின் தொல்லையிலிருந்த…

  22. சூடான் போன்று பிரிந்து செல்லும் உரிமைக்காக ஈழத்தமிழ் மக்களின் மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்துமா என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் Act Now ( http://www.act-now.info/Site1/Home.html ) அமைப்பின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பான் கீ மூன் 'மனித உரிமைகளைப் பாதுகாத்தலும், 21ஆம் நூற்றாண்டில் ஐக்கிய நாடுகள் சபையும் என்ற தலைப்பில் இவ்வாரம் உரையாற்றி இருந்தார். இவரின் உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே பான் கீ மூனிடம் இக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் உரையாற்றிய போது, சிறிலங்க…

    • 4 replies
    • 1.4k views
  23. இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர். ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம். ‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிரு…

    • 1 reply
    • 1.4k views
  24. இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னாபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என அரசாங்கத்தை சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. உள்ளூராட்சி தேர்தலில் வலி. மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பண்டத்தரிப்பில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியுடன் வட்டுக்கோட்டை தேர்த…

  25. இலங்கையைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகள் 73 பேர் பிரிட்டனில்! சனி, 05 பெப்ரவரி 2011 16:02 இலங்கையைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள் என்று பிரித்தானிய எல்லைக் காப்புப் படையின் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாளும் விசேட பிரிவு அறிவித்து உள்ளது. இப்போர்க் குற்றவாளிகளின் பெயர்கள், விபரங்கள் போன்றன ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இக்குற்றவாளிகளில் இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்களா? என்பதும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படவில்லை. ஆனால் இனப்படுகொலை, சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் ஆகியவற்றில் கடந்த ஐந்து வருட காலப் பகுதிக்குள் இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.