ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
14 JAN, 2024 | 12:47 PM கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று (13) இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார்.…
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதியளவு வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது. வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக் கூடாது என எத்தன…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
09 JAN, 2024 | 11:36 AM நாட்டில் வற் வரி அதிகரித்த நிலையில் பல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் சீனி, உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோதுமை மா, பருப்பு மற்றும் சில அரிசி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. இதன்படி , 300 ரூபாவாக இருந்த பருப்பு 1 கிலோ 350 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த சீனி 1 கிலோ 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. https://www.virakesari.lk/article/173486
-
- 3 replies
- 824 views
- 1 follower
-
-
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி வெளியீடு! Published By: VISHNU 14 JAN, 2024 | 11:31 AM வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சுகாதார அமைச்சுக்காக 21 டபிள் கெப் வாகனங்கள் இறக்…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 11:56 AM பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா…
-
- 1 reply
- 214 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 11:12 AM ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி முதல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு வருகைதரவுள்ளார். சுனிச்சி சுசுகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது" என சுசுகி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172530
-
- 6 replies
- 550 views
- 1 follower
-
-
13 JAN, 2024 | 09:30 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை இன்று சனிக்கிழமை (13) முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைத்துள்ள நிலையில் நீர்மின்னுற்பத்தியின் ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்கட்டணத்தை குறைப…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
14 JAN, 2024 | 06:42 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல் 13 JAN, 2024 | 11:03 AM ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அவர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று சனிக்கிழமை (13 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாறு என்பது அப்போராட்டத்திற்கு உந்து சக்தி…
-
- 1 reply
- 447 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 11:50 AM உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார். இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173851
-
- 1 reply
- 510 views
- 1 follower
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் நம் மரபில் உண்டு. உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவானே. கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் சூரியன் காலச் சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலத்தில் ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டை உத்தராயனம், தட்சிணாயனம் என இரண்…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 DEC, 2023 | 07:00 PM (நா.தனுஜா) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார். அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்…
-
- 10 replies
- 869 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களை…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 03:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும். ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) …
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
13 JAN, 2024 | 02:34 PM இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் பழைய எலுவாங்குளம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் புத்தளம் மன்னார் வீதியின் பழைய எலுவாங்குளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பழைய எலுவாங்குளம் பிராதன வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பெற்றுள்ளது. அத்துடன் பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அப்பகுதியிலுள்ள மக்கள…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்…
-
- 5 replies
- 332 views
- 1 follower
-
-
காஸாப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஒருநாட்டை நிறுவி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், இரண்டு நாடுகள் நிறுவப்பட்டு அந்த இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையால், காஸா முனையில் ஏற்பட்டுள்ள போர்நிலை தொடர்பிலும் அங்கு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பிலும் தற்காலத்தில் உலகெங்கும் விவாதங்கள் தீவிரம்பெற ஆரம்பித்திருக்கின்றன. இது எ…
-
- 1 reply
- 336 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 DEC, 2023 | 02:30 PM தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் அங்கு ஆஜராகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172505
-
- 4 replies
- 355 views
- 1 follower
-
-
ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா 12 JAN, 2024 | 07:43 PM ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC), இப்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் க…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு மக்கள் கடந்த முப்பது ஆண்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இடம்பெற்ற இனவழிப்புப் போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நீதியை வலியுறுத்தும் வாழ்வும் போராட்டமாக வடக்கு கிழக்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளுகின்ற போது தமது எதிர்பார்ப்புக்களை செவிசாய்க்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? ஏமாற்றத்தை அளித்ததா என்று இப் பத்தி ஆராய விளைகின்றது. நான்கு நாள் பயணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனவரி 04ஆம் திகத…
-
- 0 replies
- 290 views
-
-
வடக்கின் அடையாளமாக றீ(ச்)ஷா சுற்றுலாத்தலம் மாறிவருகிறது. இங்கு பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதோடு, வாழ்வை முன்னேற்றும் வகையிலான சிறுகைத்தொழில் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயக்கச்சியில் அமைந்திருக்கும் இந்த பண்ணையானது, இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளது. பல அனுபவங்களை கொடுக்கும் றீ(ச்)ஷாவில் பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் காளான் வளர்ப்பு போன்றவையும் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது. https://tamilwin.com/article/most-tourist-arri…
-
- 1 reply
- 493 views
- 1 follower
-
-
மாதவன். மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை உரியவாறு அப்புறப்படுத்துவதில்லை எனவும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த…
-
- 0 replies
- 281 views
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 04:22 PM மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களும் பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்…
-
- 0 replies
- 513 views
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 01:50 PM சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடாத்திவரப்பட்டது. இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை பராமரிப்பதற்கு போதிய பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக முடியுள்ளனர். தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் த…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த …
-
- 1 reply
- 621 views
- 1 follower
-