ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
புலிகளின் தாக்குதல் பிரிவு மீண்டும் இலங்கைக்குள் எச்சரிக்கின்றது றோ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2010 07:06 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரி…
-
- 20 replies
- 1.5k views
-
-
பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : 29 டிசம்பர் 2010 மல்லாகம் பிரதேசத்தை நிரந்தரமான வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானுடன் நெருங்கமான.. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட காவற்துறை குழு நேற்று சந்தேக நபரை கைதுசெய்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள 47 வயதான இந்த நபர், யாழ்ப்பாணம் மல்…
-
- 1 reply
- 997 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 30 ஆம் திகதி இறுதி வேட்புமனுத் தாக்கல்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். My link
-
- 0 replies
- 592 views
-
-
புத்தளம் கற்பிட்டி புதுகுடியிருப்பு பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து கற்பிட்டி பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸாருக்கு நேற்று கிடைத்த இந்த முறைபாட்டை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். My link
-
- 0 replies
- 677 views
-
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய நாடுகள் சபையில் நாள…
-
- 0 replies
- 764 views
-
-
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது. வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்ப…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்த பாக். ஆளுநர் நெருக்கடியில் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:17:15| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு இரகசியமாக விஜயம் செய்த பாகிஸ்தான் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தாஸீரை பதவிநீக்கம் செய்யுமாறு லாகூர் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வெளிநாடு செல்வது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் நாட்டில் இல்லாதவேளை பதில் ஆளு நர் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாகவும் நெளசாப் கான் எனும் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாட்கள் ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்ததாகவும் அவர் இம்மனுவில் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி சல்மான் தாஸீர் பாகிஸ்தானிலிருந்து மர்மமாக காணாமல் போ…
-
- 1 reply
- 648 views
-
-
''அரை மணி நேரம் கழித்து பேசாவிட்டால், நான் உயிரோடு இல்லை!'' 'புலி' நடேசனின் கடைசி நிமிடங்களைச் சொல்லும் மகன்! 'மனித குலத்தையே குலை நடுங்கவைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. ரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித் தனியாகத் தொங்கத் தொங்க... ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க... எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள ராணுவம்.’ - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு! முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில…
-
- 3 replies
- 944 views
-
-
சூறையாடப்படும் தமிழீழ வளம் சிங்களர் கொள்ளையில் இந்தியா, சீனா பங்கு வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங் களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளைய டிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. கனிம வளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலமாக அதிகரித்திருக்கிறது. சுண்ணாம்புக்கல் வளம் இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுக…
-
- 2 replies
- 495 views
-
-
இலங்கை-இந்தியாவுக்கு இடையே பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:04:56| யாழ்ப்பாணம்] 20101227_p1இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தற்போது நடை முறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேலும் பலப் படுத்துவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக் கம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் இலங்கை வந்தார். இவர…
-
- 0 replies
- 425 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அநுராதபுர மாநகர சபையின் வருடாந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் வாக்களித்ததால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும் மற்றுமொரு அரசாங்க மாநகரசபை உறுப்பினரும் இந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13842-2010-12-28-13-29-44.html ================================================= தொடர்புபட்ட செய்தி மகரகம நகரசபை வரவு செலவு திடம் தோல்வி: மஹிந்த அணியினர் எதிரணிக்கு த…
-
- 1 reply
- 539 views
-
-
ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடம் டிச 29, 2010 ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையானது ஆட்கள் காணாமல் போகும் விடயத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கூட இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. அவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையானது இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருக்கும் என்ற…
-
- 0 replies
- 370 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெறுமனே ஆயுதமேந்திய போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை ஜனாதிபதி இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 225 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவருடைய கூற்று உண்மையிலே முற்றிலும் சரியானதாகும். அதேபோன்றே வடக்கு,கிழக்கிலுள்ள 18 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் 14 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். தென்பகுதியிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எந்த அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்களோ அதேயளவுக்கு வடக்கு,கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள் என்ற…
-
- 0 replies
- 415 views
-
-
வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை 2010-12-26 22:14:08 ]வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக திருடர்கள் என்ற ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை _ வீரகேசரி இணையம் யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவ…
-
- 0 replies
- 433 views
-
-
தொடர்ந்தும் மன நோயாளிகளால் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் - சிறிதரன் எம்.பி. காட்டம்[ காலத்திற்கு காலம் மனநோயாளிகளாலும் கசாவிற்காக துப்பாக்கி கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.ஆனால் இதற்கெல்லாம் எந்த விதமான நடவடிக்கைகளும்இன்றுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.நாளைக்கும் தொடரும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். உரும்பிராயில் சுட்டுக் கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக் கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆ…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி Wednesday, December 29, 2010, 2:10 நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: நெடுங்கேணி பிரதேச செய லகத்திற்கு உட்பட்ட தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயற்காணியை மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இணைப்பது தொடர்பாக கடந்த 26ஆம் திகதி நான் நெடுங் கேணிப் பிரதேசத்துக்கு நேரில் செ…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யா, இந்தியா உதவி Wednesday, December 29, 2010, 2:23 இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறியளவிலான அணு ஆலைகளை நிறுவுவதற்கு இந்தி யாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து உதவிகளை வழங்க உள்ளன என இந்திய ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீன ஆதிக்கத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் இலங்கை யில் அணு ஆலைகளை அமைப் பதற்கு இந்தியாவும் சீனாவும் முனைப்பு காட்டி வருகின்றனஎனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யப் பிரதமர் டிமெட்ரி மெட்டிடேவ் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தெற்காச…
-
- 0 replies
- 237 views
-
-
பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசம்:- 29 டிசம்பர் 2010 Bookmark and Share உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை தண்ணீர்pல் இறங்கும் முதலாவது விமான சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் புத்தளம் களப்பில் ஆரம்பிக்கப்படும். எதிர்காலத்தில் நுவரெலியா, கொக…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கான செயற்பாடு: இன்னர் சிற்றி பிரஸ் _ வீரகேசரி நாளேடு 12/29/2010 8:54:53 AM இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பின்னர…
-
- 0 replies
- 236 views
-
-
இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்…
-
- 32 replies
- 3.6k views
-
-
தியாக தீபன் சீமான் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் சீறுவோர் சீறும் சிறுத்தை புலியே சிறைக்கு அஞ்சா சீமானே வணக்கம். ஆட்சியைப் பிடிக்கும் அவசரம் வேண்டாம், காட்சியை மாற்றுவதில் கவனம் செல்க, “இரண்டு பகையை எதிர்த்திடல் இயலாது இரண்டில் ஒன்றை இன்துணையாய்க் கொள்க, இயம்பிடும் வள்ளுவம், ஏற்றுச் செயல்ப்பட இணைத்திடுவீர் ஈழ ஆதரவாளர் எல்லோரையும்! நாட்டைச் சூறையாட நரிகள் கூட்டனி சேர, நரிகளை வேட்டையாட, நல்லவர்கள் இணைவதில் தயக்கம் என்ன? தயைகூர்ந்து அனுசரிப்பீர். தந்தை வயது நெடுமாறனைத் தலைவராக ஏற்பதில் தவறொன்றும் இல்லையே, தனயன் வை.கோ.வின் தம்பியாய்ச் செயல்படுவதில் தன்மானம் குறையாது. மற்ற வீரர்களை மார்போடு அணைப்பதால் மங்காது புகழ் மாறாக பொங்கிப் பொலியும…
-
- 0 replies
- 414 views
-
-
ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா மற்றும் பாட்டி விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் இணைவு விடுதலைச்சிறுத்தைக்கட்சியினரால் 26.12.2010 அன்று நடத்தப்பட்ட தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர்க்கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நிகழ்வின்பொழுது ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா, பாட்டி மற்றும் சந்தனக்காடு வீரப்பனின் மகள் விசயலெட்சுமி ஆகியோர் விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். படங்களை காண>>> http://meenakam.com/
-
- 0 replies
- 429 views
-
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஜனவரி 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குப் பேராளர் பதிவுடன் ஆரம்பமாகும் இம்மாநாட்டில் ஆய்வரங்குகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பேராசிரியர் கா.சிவத்தம்பின் உரையுடன் ஆரம்பமாகவுள்ளது. முதல் நாளான 6ஆம் திகதியன்று காலை ஆரம்ப விழாவும் மாலை கணினி வலைப் பதிவு பற்றிய ஆய்வரங்கும் நடைபெறவுள்ளன. ஏனைய மூன்று தினங்களிலும் காலை 8.30 மணி முதல் ஆய்வரங்குகள் நடைபெறும். ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், நிகழ்த்து கலைகள், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ…
-
- 1 reply
- 599 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இலங்கையில் அணுசக்தி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதாக இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான காய் நகர்த்தல்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன. அணுசக்தி வர்த்தகத்தில் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ள இந்தியாவும், ரஷ்யாவும் சிறியளவிலான அணுசக்தி நிலையங்களை இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இந்திய ஆங்கிலத் தினசரி ஒன்று தெரிவித்திருக்கின்றது. ரஷ்யாவின் ஜனாதிபதி Medvedov அண்மையில் இந…
-
- 3 replies
- 997 views
-