ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியா சென்றுள்ள இலங்கை விளையாட்டு ரசிகர்கள் அந்நாட்டு மைதானங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(29.10.2023) இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. கடும் வாக்குவாதம் இந்நிலையில் குறித்த போட்டியை பார்வையிடவந்த இலங்கை விளையாட்டு ரசிகர்கள் கொண்டு வந்த தேசியக் கொடிகளை மைதானத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு மைதானத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. போட்டியை காண ரசிகர்கள் இலங்…
-
- 0 replies
- 153 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம். ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செ…
-
- 8 replies
- 852 views
-
-
குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு பு.கஜிந்தன் குறிகட்டுவான் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை (29) மேற்கொண்டிருந்தார். குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிக்கட்டுவான் இறங்கு…
-
- 0 replies
- 568 views
-
-
அம்பிட்டிய தேரர், சாணக்கியன் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்கு கனகராசா சரவணன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள், கால் நடை பண்ணையாளர்கள், அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வெள்ள…
-
- 0 replies
- 356 views
-
-
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது. முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின் டிரைவ் பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1356120
-
- 0 replies
- 740 views
-
-
29 OCT, 2023 | 10:05 AM இலங்கை - யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர், கைதான அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/167978
-
- 2 replies
- 476 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 05:50 PM ஆர்.ராம் ‘வடமாகாண அபிவிருத்திக்கான புத்தாக்கம்’ எனும் தலைப்பில் வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கான யோசனையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் முன்வைக்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கான திட்ட முன்மொழிவை வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா கையளித்துள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாண அபிவிருத்தி என்ற தலைப்பில் அதிகாரிகளிடம் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணையாக வடமாகாணத்திலும் பாரிய அபிவிருத்தியொன்று இடம்பெற வேண்டுமென நம்புகின்றேன். யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் ப…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
29 OCT, 2023 | 10:11 AM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, கைதான இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 02:02 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும் நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அத…
-
- 3 replies
- 421 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 03:45 PM (எம்.மனோசித்ரா) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர். இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்…
-
- 5 replies
- 754 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 02:28 PM தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்ட விரோத விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி கூறி, காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/167952
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் தரங்கெட்ட செயற்பாடுகள் தொடர்பில் பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்! kugen தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தரம் கெட்ட வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை (28) கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "துரதிஸ்டவசமாக இந்ந…
-
- 1 reply
- 265 views
-
-
தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழில் ஏன் இந்த நிலைமை? யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழில் வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து உள்ளமையால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுது்து வருகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சுமார் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் சுமார் 10 …
-
- 2 replies
- 417 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது! SayanolipavanOctober 28, 2023 வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன் அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்…
-
- 3 replies
- 349 views
-
-
சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி இலங்கையின் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் தன்னை இனவாதியாக சித்தரிக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளும் கிழக்கின் முன்னாள் ஆளுநரும் தனக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்வைப்பதாக கூறிய அவர், இனவாத கருத்துக்களை முன்வைக்கும் அம்பிட்டிய சுமன ரத்தின தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இன்று(27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாரதூரமான செய்தி அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கிலே வாழும் ஒவ்வொ…
-
- 1 reply
- 316 views
-
-
பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்! adminOctober 28, 2023 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவு…
-
- 0 replies
- 232 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 10:18 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட…
-
- 0 replies
- 622 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 28 OCT, 2023 | 09:36 AM காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்குஇலங்கை ஆதரவளித்துள்ளது. ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களை பாதுகாத்தல் சட்ட மற்றும் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்றுதல் என்ற இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்துள்ளன-12 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன. இந்தியா அவுஸ்திரேலியா கனடா ஜேர்மனி உக்ரைன் உட்பட 45 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்து வாக்…
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
27 OCT, 2023 | 09:41 PM ( எம்.நியூட்டன்) யாழ் மாவட்டத்தில் எத்தனை மதுபான சாலைகள் உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்தார். மதுவரி திணைக்களத்தின் செயற்பாடுகள் செயலற்று இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஞன் இராமதாதன் உடுப்பிட்டியில் சட்டவிரோதமாக வீடு ஒன்றில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 09:58 AM யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்தார். விசாரணைகளை முன்னைடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது. உணவகத்தில் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்ய அறிவுத்தல் வழங்கப்ப…
-
- 3 replies
- 558 views
- 1 follower
-
-
சம்பந்தன் வளர்த்த கடா அவர் மார்பில் பாய்ந்து விட்டது என அவருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரந் குறித்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் அப்படியே வருமாறு:- நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரனின் தன்னிச் சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து, கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்பு களைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவ…
-
- 4 replies
- 962 views
-
-
27 OCT, 2023 | 09:25 PM கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி அதனை பற்றவைக்கும் போதே தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/167912
-
- 1 reply
- 614 views
- 1 follower
-
-
அவர் மேற்படி பேட்டியில் தமிழரசுக்கட்சி தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திருமலையில் கட்சி இரண்டு பிரிவுகளாக செயற்படுகிறது சம்பந்தன் திருமலைக்கு செல்லமுடியாததால் திரு குகதாசன் தனக்கு வேண்டியவர்களை கட்சி கிளைகளை புனரமைத்து நியமித்து வருவதாகவும் சம்பந்தன் தரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு தனக்கும் அந்த ஐயம் இருப்பதாகவும் தெரிவித்த சிவஞானம் கட்சி தேய்வடைந்து வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். முக்கியமான பகுதியும் முழுமையான பேட்டியும் உங்கள் பார்வைக்காக தொடர்புடைய முன்னைய செய்திகள் சம்பந்தன் …
-
- 2 replies
- 661 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ள…
-
- 0 replies
- 368 views
-
-
27 OCT, 2023 | 06:12 PM மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவர் ஆவார். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது : கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சி…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-