ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 12, டிசம்பர் 2010 (21:8 IST) இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். நேற்று மாலை, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கினர். மேலும், சுமார் 50 படகுகளை சேதப்படுத்தினர். அத்துடன், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். பல மீனவர்களின் செல்போன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இத்தாக்…
-
- 3 replies
- 763 views
-
-
http://www.canadatyo.org/ நேரம்: இன்று வியாழன் மாலை 6.00 (க.கி.க) தகவல் மூலம்: முகநூல்
-
- 3 replies
- 904 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன. இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார். கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வர்த்தகப…
-
- 28 replies
- 3.3k views
-
-
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் இன்றிரவு தாக்கப்பட்டு படுகாயம் 35 வயதான மாணிக்கபோடி சசிகுமார் என்பவரே தாக்கப்பட்டவர் ஆவார். இன்றிரவு 7.30 மணியளவில் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள அவரின் வீட்டிற்குச் சென்ற 3 பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை வீட்டிலிருந்து வெளியே வருமாறு அழைத்து தாக்குதல் நடத்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சசிகுமார் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது தாக்குதலாளிகள் ஒருவர் தன்னை யாரென்று தெரியவில்லையா எனக் கேட்டார். அதற்கு தெரியவில்லை என சசிகுமார் பதிலளித்தபோது மற்றொருவர் தாக்கத் தொடங்கினார். என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான சசிகுமார் தலையிலும் கையிலும் தையலிடப்பட்ட நிலைய…
-
- 3 replies
- 559 views
-
-
இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே. இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான கல்வியைக் கோருகிறார். தானில்லாது போனால் தனது மகளை காப்பாற்றுங்கள் எனக்கெஞ்சுகிறாள். இந்தத்தாய் போல் பல்லாயிரம் தாய்கள் தங்கள் காணாமற்போன பிள்ளைகளையும…
-
- 5 replies
- 1.8k views
-
-
வன்னி இறுதிப் போரில் வெளிவராத சங்கதிகளை வெளியிடுமா விக்கிலீக்ஸ் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 16:04 உலகெங்கும் அடித்துக் கொண்டிருக்கும் “விக்கிலீக்ஸ்' அலையில் இருந்து இலங்கையும் தப்பிக் கொள்ளவில்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட சுமார் 3000 ற்கும் அதிகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ்' கைப்பற்றியுள்ளது. இவற்றில் சிலவே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துக்கள், போர்க்குற்ற விசாரணைகள் பற்றி அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள், லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையில் காலூன்ற முனைவது பற்றிய வி…
-
- 0 replies
- 722 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தன் மீது பொய்யாக போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் தமிழர் குரல் வானொலிக்கு அளித்த செவ்வி.
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் 12 டிசம்பர் 2010 இலங்கையில் தங்கியிருந்த போது மக்கள் நள்ளிரவிலும் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாக.. இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்வதாக இந்திய வெளிவிவகாரச் செயலளார் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம் சரியான திசை நோக்கி நகர்ந்து செயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு அரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மக்களும் சமாதானத்தின் நலன்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இலங்கையில் தங்கியிர…
-
- 5 replies
- 1k views
-
-
போர்க்குற்ற ஆதாரங்களைக் காட்டி இலங்கையை மிரட்டும் புதுடில்லி ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இந்த ஆதாரங்கள் சீர்குலைத்து…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கை…
-
- 5 replies
- 2k views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்திய நாடுகளுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்படும்-எச்சரிக்கும் இலங்கை ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:53 அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்பு வெளிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலியான குற்றச் சாட்டுக்களை சுமத்திய சில நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சில நாடுகள் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ம…
-
- 1 reply
- 968 views
-
-
சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், சிறீலங்கா அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாகி கலகே கைது செய்யப்படும் நிலையில் இருந்து சில மணிநேரங்களில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: டிசம்பர் 3 ஆம் நாள் பிரித்தானியாவின் முன்னாள் உள்த்துறை அமைச்சர் ஜோன் ரையன் என்பவர் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் வெஸ்ற்மினிஸ்ரர் மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சாகி கலகே மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உலகத் தமிழர் பேரவையின் சார்பில் குயின்…
-
- 1 reply
- 1.6k views
-
-
இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் இராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தமிழக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை நாளை முன்னிட்டு சென்னையில் “7 தமிழர்கள் விடுதலை மாநாடு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய அந்நிகழ்வின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக படங்களுக்கு>> http://meenakam.com/2010/12/12/16049.html
-
- 0 replies
- 698 views
-
-
தமிழ்வாணியின் சத்திய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தது – திவயின கூறுகிறது‐ 07 December 10 02:06 am (BST) தமிழ்வாணி என்ற பெண்ணின் சத்திய கடிதத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமையதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவை கைதுசெய்வதற்காக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்வாணி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டிருந்துடன் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் க…
-
- 80 replies
- 6.1k views
-
-
கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : 12 டிசம்பர் 2010 ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் .. கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள அமர்வுகளில் கருணா சாட்சியமளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் கருணா கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் மாறுபட்ட பங்களிப்புக்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் கருணா தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 1 reply
- 643 views
-
-
இன்றைய ஹிட்லர் மகிந்த இராஜபக்சே – குமுதம் தலையங்கம் ஈழத்தில் போர் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை இங்கிலாந்து தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி பின்னால் கைகளைக் கட்டி பின்னந்தலையில் சுட்டுக் கொல்லுகிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படும் காட்சியும் இருக்கிறது. இவற்றை ஒரு கொடூர சிங்களவன் படம் பிடிக்கிறான். ஈவு இரக்கமில்லா அரக்க கொடுமை. இந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போன ஐ.நா. அமைப்பு, இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தியிருக்கும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
எதற்கும் தயார் http://www.yarl.com/forum3/uploads/monthly_12_2010/post-6561-0-73914700-1292155582_thumb.jpg
-
- 0 replies
- 755 views
-
-
போர்க் குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியம் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர் * Sunday, December 12, 2010, 6:26 இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு மூலகாரணமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளடங்கலாக மிக முக்கிய நபர்கள் என்பதை அமெரிக்க ராஜதந்திரிகள் அறிந்துவைத்துள்ளதாக கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையம் தகவல்…
-
- 0 replies
- 515 views
-
-
தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது! - பேரா.கீத பொன்கலன் வலம்புரிக்கு விசேட செவ்வி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:49:47| யாழ்ப்பாணம்] keethaponkalannதமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு தேவையற்றது. அவர்கள் தோல்வியடைந்த மனோ பாவத்தில் உள்ளதால் சில நேரங்களில் குறைந்தளவான தீர்வி னையும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என கொழும்புப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஐ.கீத பொன்கலன் தெரிவித்தார். அவர் வலம்புரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வி இங்கு பிரசுரமாகிறது, கேள்வி:- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடி யும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? …
-
- 0 replies
- 916 views
-
-
தமிழராய்ச்சி குழுவில் வந்த மின்னஞ்சல்: from Raj Suthan <suthan777@yahoo.com> to tamil_araichchi@yahoogroups.com, subject புலத்து தமிழ் ஊடகங்கள் ஏன் சீமான் விடுதலை பற்றி செய்தி வெளியிடவில்லை ? பாய்ந்து பாய்த்து யாரை பற்றியாவது ஏதாவது பிழை கண்டுபிடித்து கட்டு கதை என்றால் உடனடியாக பெரிதாக்கி , ஊகங்களை மட்டுமே வைத்து புலம்புவதில் பெயர் போனவை எங்கள் புலத்து தமிழர்களின் இனைய தளங்களும் ஊடகங்களுமே. அந்நாள் செந்தமிழன் சீமான் விடுதலை ஆன பொது மட்டும் இவர்களின் இணையங்களில் ஒன்றையும் காணோம் ! தமிழரின் தாகம் தமிழீழ தாயக என்பதற்கு முன்பாக நாங்கள் உரத்து கூற வேண்டியது முதலில் "ஒன்றுபடுவோம் தலை நிமிர்வோம் , கொள்கை தமிழீழம் என்றால் பிரிவு எமக்குள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இசைப் பிரியாவைக் கொன்று விடுமாறு உத்தரவிட்ட இராணுவ உயரதிகாரி யார்? ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 04:21 தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணி புரிந்த இசைப் பிரியாவை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவுதான் கொன்றது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே நாம் இந்தக் கொலையுடன்; தெடர்பட்ட 53 ஆவது படைப் பிரிவின் மீது குற்றஞ் சாட்டியிருந்தோம். ஆனால், இராணுவ பதவி நிலையை ஆராய்ந்து, கிரிமினல் குற்றத்துக்கு இராணுவத்தினர்;தான் பொறுப்பா என்பது போன்ற தகவல்களைக் குற்ற விசாரணையில் தான் வெளிக் கொண்டுவர முடியும். ஏன மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் பி.பி.ஸிக்குத் தெரிவித்துள்ளார். இசைப் ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களுக்கு இன்று தேவை அரசியல் ஞானி (Statesman) தமிழ் மக்களிடையே அரசியல்வாதிகள் நிறையவே இருந்துள்ளனர். தற்போதும் இருந்து வருகின்றனர். ஆனால் Statesman என்று அதாவது அரசியல் ஞானி அல்லது அரசியல் இராஜதந்திரியை தமிழினம் கொண்டிருக்கவில்லை. அதாவது தூர நோக்கில் சிந்தித்து தமிழினத்தை வழிநடத்தக் கூடிய அரசியல் ஞானியை தமிழினம் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத் தமிழினத்தைக் காலத்துக்குக் காலம் வழி நடத்தியவர்கள் தாம் விட்ட தவறுகளை உணர்ந்த போது ஒன்றில் அவர்களால் அந்தத் தவறினைத் திருத்திக் கொண்டு தமிழினத்தை வழி நடத்த முடியவில்லை. அல்லது கால அவகாசம் போதாத நிலையில் இருந்துள்ளனர். அல்லது இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர். அல்லது வயது மூப்பினால் அமைதியாகி விட்டுள்ளனர். இவ…
-
- 2 replies
- 662 views
-
-
ராஜபக்சேவை இந்தியா போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டின், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக புதிய வீடு கட்டித்தர ரூ.1000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அடிக்கல் நாட்டப்பட்டதால் பணிகளும் தாமதமாகி வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து வருகிறது. இந்திய அரசும் அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=45012
-
- 1 reply
- 657 views
-
-
இந்த தமிழீழ காவல்துறை அதிகாரி இப்போ எங்கே ..? இறுதி யுத்த தாக்குதல் முள்ளி வாய்க்கள் பகுதியை நெருங்கி கொண்டிருந்த போது விழுப்புண் அடைந்த நிலையில் சிங்கள படைகளினால் தோளில் வைத்து தூக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தாமிழீழ காவல்துறை கான்ஸ்டபிள் அதிகாரி என சிங்கள படைகளினால் கூறபட்ட இவர் தற்போது எங்கே..? துன்னாலை சவுத் நெல்லியடி 23 வயது குணராசா நர்மலன்,என்ற இந்த நபர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி ராமநாத புரம் பகுதியில் வகித்து வந்தார் பின்னர் புலிகளின் காவல்துறையில் இணைந்தார் . இவரை கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் வைத்து சிங்கள படைகளினால் கைது செய்ய பட்டார் . தற்போது இவர் எங்கே ....? இவரை அறிந்தவர்கள் தகவல் தெரிந்தால் தெரிவியுங்கள் 11 Dec 2010…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாத…
-
- 3 replies
- 1.6k views
-