ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றது: ஆளுநர் செந்தில் தொண்டமான் சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பிடிக்க முயற்சி அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்…
-
- 2 replies
- 399 views
- 1 follower
-
-
அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதித் தேர்தலையும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும், 2025ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்துள்ளார் . “அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்படும்” என சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமர்வில் உரையாற்றிய அவர், இந்தத் தேர்தலுக்குத் தயாராகுமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியின் அரசியலமைப்பிலும் கட…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 31 லட்சம் ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா? கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத…
-
- 0 replies
- 137 views
-
-
பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுத் தலைவர்களின் பட்டறையில் பங்கேற்க இவர்கள் இருவரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என இராஜதந்திர ரீதியில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் அவர்கள் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 185 views
-
-
16 OCT, 2023 | 09:23 PM “ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17, லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரு மாணவிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா். சம்பவ இடத்திற்கு விரைந்த கிளி…
-
- 18 replies
- 1.7k views
- 2 followers
-
-
உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கையர்களும் உள்ளடக்கம். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப்படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 22 அறிவியல் துறைகள…
-
- 2 replies
- 598 views
- 1 follower
-
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது - துரைராசா ரவிகரன் 21 OCT, 2023 | 05:35 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று சனிக்கிழமை (21) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்ப…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
20 OCT, 2023 | 08:40 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காஸாவில் நடக்கும் மோதல் நிலைமையால் துன்பப்படும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பாதி…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 OCT, 2023 | 02:40 PM மூன்று புதிய இராஜதந்திரிகளை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இரண்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர் ஒருவரும் நியமிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவிற்கான இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுப் பெற்ற அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேபாளத்துக்கான இலங்கை தூதுவராக ஓய்வு பெற்றஎயார் சீஃப் மார்ஷல் சுதர்சன் கரகொட பத்திரன நியமிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 01:24 PM (எம்.நியூட்டன்) இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை (21) காலையில் நடைபெற்றது. யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருகின்ற வகையில் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது உயிர்நீத்த உறவுகளின் திருவருவ ப…
-
- 1 reply
- 981 views
- 1 follower
-
-
வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த நேரத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40க்கு காங்கேசன்துறையிலிருந்து – கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் நாளை முதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. https://thinakkural.lk/article/277958
-
- 1 reply
- 436 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 04:04 PM பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 43 replies
- 2.9k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 OCT, 2023 | 11:01 AM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா மற்றும் கொழும்பு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவருதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய விமான நிலையத்தில் விமானம் ஊடாக வருபவர்கவளை அழைத்து வர செல்பவர்கள் காத்திருப்பதற்கான இடம் மர நிழலேயாகும். மரங்களுக்கு கீழே கல்லாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாரி காலத்தில…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 06:21 AM நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். வானிலை குறித்த மேலும் கூறுகையில், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பா…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருகோணமலை - மூதூரில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து நடைபவனியாக வந்து மூதூர் பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலஸ்தீனத்திற்கு ஆதரவான சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது பலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. …
-
- 1 reply
- 387 views
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 03:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல்,பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, …
-
- 2 replies
- 331 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1354900
-
- 4 replies
- 757 views
-
-
காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும், குறித்த நம்பிக்கையுடனேயே ஜனநாயக நீரோட்டதில் இணைந்து கொண்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அரசாங்கத்தில் சிரேஸ்ட அமைச்சர்களுள் ஒருவராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவில் இடம்பெற்ற கடலசார் ஒத்துழைப்பிற்கான …
-
- 0 replies
- 254 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பூங்காவில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை அமைவாக மாவட்ட அரச அதிபர் குறித்த இடத்தை இன்று வெள்ளிக்கிழமை (20) சென்று பார்வையிட்டுள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்டோரால் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பூங்காவில் தொடர்ச்சியாக சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பாக வயது குறைந்த சிறுமிகளை அழைத்து வந்து பல்வேறு குற்ற செயல்கள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனை அடுத்து குறி…
-
- 0 replies
- 289 views
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 03:37 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மக்களின் உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இஸ்ரேல் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும். அத்துடன் காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேல், பலஸ்த…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
18 OCT, 2023 | 10:38 AM மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார். பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையம…
-
- 3 replies
- 507 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 OCT, 2023 | 11:32 AM யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். தெல்லிப்பளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.புறநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். வீட்டில் இருந்த உறவினரான சிறுவன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். …
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
கோட்டாவின் அறையில் இருந்த 17.85 மில்லியன் பணத்திற்கு சாட்சி இல்லையாம் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எனவே இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி…
-
- 0 replies
- 411 views
-
-
16 OCT, 2023 | 03:03 PM இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பாலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவு தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பாலஸ்தீன தூதுவரை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகெங்கும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் போர் அதற்கு தீர்வு அல்ல என்றும் பாலஸ்தீன் தூதருடனான கலந்துரையாடலில் மஹிந்த கூறினார். இலங்கையின் போர் தொடர்பான அனுபவங்களில் இருந்து சமாதானத்தின் அவசியத்தை பாலஸ்தீன தூதருக்கு எடுத்துக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அமைதியை நிலைநாட்டுவது இருநாடுகளுக்கும் இடையிலான செழிப்ப…
-
- 11 replies
- 664 views
- 1 follower
-