Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:00 AM எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள், அகில இலங்கை …

  2. Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 05:24 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள், இச்சட்டமூலத்தின் பெரும்பாலான சரத்துக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்து பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்குப் பின்பற்றப்படவேண்டிய சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்ட செயன்முறைக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப்…

  3. 19 OCT, 2023 | 08:01 PM இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், மீனவர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் அங்குள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், இந்த உண்டியல் குலுக்கும் வேலைத்திட்டமானது நேற்றைய தினம் (18) வடமராட்சி பகுதியில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான இன்றைய தினம் (19) மாதகல் பகுதியில் …

  4. 19 OCT, 2023 | 04:59 PM இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது. இப்பயிற்சிகளின் மூலமாக இலங்கை விமானப்படை விமானிகள் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர்களை கையாளும் வாய்ப்புகளுடன் துணை விமானி அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் இந்த பயிற்சி அணியினர் திட்டமிட்டுள்ளனர். அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த…

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த கூற்றானது, அரசியலமைப்பின் 06 ஆவது பிரிவின் திருத்தம், 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் ச…

  6. Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 04:14 PM இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றதோடு இதன் போதே சீன நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கட…

  7. Published By: VISHNU 19 OCT, 2023 | 03:01 PM புத்தர் சிலையை தான் பார்க்க வேண்டுமெனவும் அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த புத்தர் சிலை அங்கு இல்லையென செய்திகள் வெளியிாகி இருந்த நிலையில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் குறித்த இடத்திற்கு இன்று சென்றுள்ளார். ஆனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்பட்டதால் இராணுவத்தினர் மற்றும் பொலி…

  8. பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற…

  9. Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 08:15 PM குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு, குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்க…

  10. ”9543 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது” - சிறீதரன் வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 9543 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன்போது அவர் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையொன்றையும் சபாபீடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாது கிளிநொச்சி மா…

  11. காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை நிறுத்தம்! காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது, மேலும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23ஆம் திகதி தொடங்கும் என …

  12. 18 OCT, 2023 | 05:16 PM (எம்.வை.எம்.சியாம்) நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் உப தலைவர் சட்டத்தரணி எல்.எஸ்.என்.பெரேரா எழுதிய ஈழ மூடநம்பிக்கையின் வெளிக்கொணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  13. Published By: VISHNU 17 OCT, 2023 | 08:20 PM (நா.தனுஜா) இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக அனுப்பிவைப்பதற்கு உத்தேசித்துள்ள கடிதத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு அப்பால் அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கம், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல் போன்ற சம்பவங்கள் தமிழ்மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்க…

  14. இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. https://thinakkural.lk/article/277587

  15. Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 10:16 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர…

  16. Published By: DIGITAL DESK 3 18 OCT, 2023 | 03:17 PM நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை - ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர் வரை மக்கள் பேரணியாக வந்தனர். "மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் த…

  17. பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை கொடூரமான முறையில் கொலை செய்த முல்லைத்தீவுபெண்ணிற்கு 05 வருட கடூழியச் சிறைத்தண்டனை முல்லைத்தீவு மேல் நீதிமன்றம் நேற்று (17) விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் 06 மாத மேலதிக சிறைத்தண்டனையும் அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. தான் பெற்றெடுத்த ஒரு நாளே ஆன சிசுவை கொன்று, உடலை இரகசியமாக புதைத்ததாக, அவர் மீது பொலிஸார் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட…

  18. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் : நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை சந்திக்க முடியாது. எனவே நிறுவனத்தின் 49 வீதமான பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளோம். “நாங்கள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர…

  19. 18 OCT, 2023 | 10:47 AM பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/167140

  20. கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்களை கையளியுங்கள் adminOctober 17, 2023 யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் 33 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தற்க…

  21. தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம், தமிழ் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்…

    • 1 reply
    • 274 views
  22. Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 10:53 AM ஹமாசின் தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. காசாவில் அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம், காசாவிற்கு பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற…

  23. யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு! adminOctober 17, 2023 யாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட, செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள், தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் எதிர்வரும் வி…

  24. தற்போது சர்வதேச விமான நிலையமாக செயற்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (16) விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சென்னையிலிருந்து நாளாந்தம் 60 பயணிகளுடன் Alliance நிறுவனத்தின் விமானமொன்று பயண வசதிகளை வழங்கி வருவதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் IndiGo நிறுவனமும் சென்னை – பலாலி இடையே விமான சேவைகளை வழங்கவுள்ளது. இந்த சர்வதேச விமான சேவைகளுக்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து …

  25. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 03:32 PM இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் பிரதித் தலைவர் சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார். தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (17) பீஜிங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.