ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு ஆஸி நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது. சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன்(வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை இன்று Sydney's Downing Centre District Court இல் ஒப்புக் கொண்டார். இவர் நீதிபதி Robyn Tupman இன் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதிஆஸி வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து …
-
- 0 replies
- 831 views
-
-
Hi All, Please sign this petition and circulate it as widely as you can http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is கையொப்பம் இடுபவர்களின் கூற்றுகளை படிக்கவும் (thepetitionsite.com). உலக மக்களை முதலில் பேச வைக்கவேண்டும். பிறகு தலைவர்களும், பத்திரிக்கைகளும் மற்றும் தொலைக்காட்சிகளும் தானாக பேசுவார்கள். அதுவரை மறைக்கத்தான் முயற்சி செய்வார்கள். http://www.thepetitionsite.com/1/srilanka-if-this-isnt-genocide-war-crime-then-what-on-earth-is/ http://www.ipetitions.com/petition/srilankagenocidewarcriminalchemicalrajapakse/ http://www.indianvoice.org/grisly-photos-reveal-genocide-by-sri-petitio…
-
- 0 replies
- 595 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மில்லியன் கணக்கான டொலரை உதவியாக வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், கோடீஸ்வர வர்த்தகருமான புலம்பெயர் தமிழர் இராஜ் இராஜரட்ணத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரது தந்தை ஜேசுதாஸன் இராஜரட்ணமும் இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்து 24 தமிழர்கள் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அமைப்புக்களில் ஒன்றான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இராஜ் இராஜரட்ணம் இப்பெருந்தொகையை நிதியை வழங்கி இருக்கின்றார் என்றும்…
-
- 1 reply
- 877 views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010 இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று இலங்கையர்களை கடத்தில் அதில் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமான நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரில் நின்ற வாகமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மற்றுமொரு இலங்கையர் கால் உடைந்த நிலையில் வாகனத்தில் இருந்தாகவும், மேலும் ஒருவரை கடத்தல்காரர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்…
-
- 4 replies
- 890 views
-
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தைத் தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டுகின்றமைக்காக குறிகாட்டுவான் பகுதியில் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளது. அந்த அறிவித்தல்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உள்ளன. ஆனால் அதில் தமிழைக் காணவில்லை. ஆலயத்தைச் தரிசிக்கச் செல்வோரில் 98 சதவீதமானோர் தமிழர்கள். உரியவர்கள் பிழையைத் திருத்த நடவடிக்கை எடுப்பார்களா? http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9556:2010-09-02-08-51-05&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675
-
- 0 replies
- 992 views
-
-
யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள். இந்தியாவில் இருந்து வந்த சங்கமித்தை இப்பகுதியில்தான் வந்து இறங்கினார் என்று அவர்கள் கூறுகின்றனர். இம்மக்களின் வருகையோடு இங்கு பெரியதூபி ஒன்றும் புத்தர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன. சம்பில் துறைக்கு சென்ற வருடம் ஜனாதிபதி மகிந்தராஐபக்ஸவின் பாரியாரும், அப்போது பிரதமராக இருந்த பிரதமர் ரட்ணஸ்ரீவிக்கரமநாயக்கவின் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இதனை அடுத்து இப்பகுதியை அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயமாக படையினர் அறிவித்து விட்டனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9513:2010-09-01-21-12-06&am…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் இன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்தலைமைக் காரியாலயம் இது வரை காலமும் புத்தளத்தில் இருந்து வந்த நிலையில் இப்புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கவின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் இங்கு வந்து புதிய தலைமைக் காரியாலயத்தைப் பார்வையிட்டு திறந்து வைத்தார். இந்த இட மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வமத குருமார் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலரும் வைபவத்தில் …
-
- 0 replies
- 505 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 2, 2010 வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணியே எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரு…
-
- 0 replies
- 603 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 2, 2010 ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைச்சேர்ந்த சசிதரன், கோனேஸ்வரன், விஜிகணேந்திரா ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆக கூடியது 10 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என ஜேர்மன் செய்திகள் தெரிவிக்கின்றன. 2007 தொடக்கம் 2009 வரை மூன்று மில்லியப் வரையான நிதிகள் சேகரித்து விடுதலைப்புலிகளுக்கு அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டபட்டுள்ளனர். Eelanatham.net
-
- 0 replies
- 594 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 2, 2010 வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றுவதற்காகக் கொண்டுசென்ற மக்களை இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் நிலங்களை இராணு வத் தேவைகளுக்காக அபகரிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருப்பதை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டும். இதற் கான அழுத்தத்தை இந்திய அரசு இலங்கைக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு இந்தியத் தூதுவர் இல்லத்தில் நேற்று இரவு 7 மணியளவில் நடை பெற்ற சந்திப்பின்போது இந்தியவெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சந்திப்பில் இடம்பெற்ற விடயங் கள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித் தவை வரு…
-
- 0 replies
- 328 views
-
-
கடந்த 13 ஆம் திகதி வன்கூவரை அடைந்துள்ள எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கான விசாரணையை கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தினர் தமக்கு செய்த சித்திரவதைகளை வெளித்தெரிவித்துள்ளார். தமது கணவரை இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர் எனத் தெரிவித்த அவர், தமது மார்பில் இலங்கை இராணுவத்தினர் சிகரெட்டுகளால் சூடு வைத்தனர் எனத் தெரிவித்தார். இப்பெண்மணியின் கணவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இச்சித்திரவதைகள் எப்போது நடந்தன என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை. இப்பெண்மணி சார்பில் மாலினி டயொனிசியஸ் என்ற சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். குறித்த பெண்மணி தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறியபோது, ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள். இந்தியாவில் இருந்து வந்த சங்கமித்தை இப்பகுதியில்தான் வந்து இறங்கினார் என்று அவர்கள் கூறுகின்றனர். இம்மக்களின் வருகையோடு இங்கு பெரியதூபி ஒன்றும் புத்தர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன. சம்பில் துறைக்கு சென்ற வருடம் ஜனாதிபதி மகிந்தராஐபக்ஸவின் பாரியாரும், அப்போது பிரதமராக இருந்த பிரதமர் ரட்ணஸ்ரீவிக்கரமநாயக்கவின் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இதனை அடுத்து இப்பகுதியை அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயமாக படையினர் அறிவித்து விட்டனர் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9513:2010-09-01-21-12-06&catid=54:2009…
-
- 1 reply
- 789 views
-
-
கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள் கொழும்பு: மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து, கஷ்டப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என கேபி எனப்படும் குமரன் பத்மநாபன் தமிழக தலைவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். மலேசியாவில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக பேட்டிகள் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி: தற்போது இலங்கை தமிழர்களுக்கு சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும், …
-
- 28 replies
- 2.6k views
-
-
அரசியலமைப்பு திருத்தம் தொடாபாக மக்களிடம் கருத்து கோர வேண்டியத் தேவையில்லை – சிறீலங்கா சட்ட மா அதிபர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களிடம் கருத்து கோர வேண்டிய அவசியமில்லையென சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடாக மக்களின் விருப்பு வெறுப்புக்களை மேம்படுத்துவதே உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள சர்ஜன வாக்குரிமையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு திருத்தங்கள் தற்போதைய அரசியல் அமைப்புக்கு உட்பட்ட வகையில் காணப்படுகின்றதா என உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் கலந்து கொண்டு அவர…
-
- 1 reply
- 513 views
-
-
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். வழமையாக இந்திய அதிகாரிகள் இலங்கை வரும்போது சீன குழுவும் இலங்கையில் இருக்கும் இந்த முறை சீனர்களை காணவில்லையே என்றால் நேற்றைய தினம் ஒன்று இரண்டு அல்ல 200 பேர் வந்து இறங்கி விட்டார்கள். சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.…
-
- 4 replies
- 872 views
-
-
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம் பெருமையாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது நாம் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும் 'கிங் மேக்கர்" நாம்தான் என்று அவர் சொல்வார். உண்மைதான்! அந்தக் காலத்தில் ஹக்கீம் கிங் மேக்கராக இருந்துள்ளார்தான். இ.தொ.கா. தம்மை கிங்மேக்கர்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. கிங்மேக்கர்களாக இருந்த இந்தக் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிப்பவராக இன்று மகிந்த ராஜபக்ஷவே உள்ளார்! இதனை ராவூப் ஹக்கீமின் கட்சிக்கு கடந்த வாரம் நடந்த நிகழ்வு உதாரணமாக உள்ளது. ஹக்கீமின் கட்சி மட்டுமல்ல. மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கும் இதுதான் நடந்துள்ளது. அர…
-
- 1 reply
- 575 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் சீனக்குடாப் பகுதியில் பத்து வயதுச் சிறுமி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்கள். சிறுமியின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டின்பேரில் அம்மூவரில் ஒருவரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளார்கள். ஏனைய இருவரும் தலைமறைவாகி விட்டனர். பொலிஸார் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9492:-10-&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 1 reply
- 1.1k views
-
-
சீன கடனுதவியில் ஏ9 நெடுஞ்சாலை திருத்த பணி ஆரம்பம். புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010 332 கிமீ நீளமான A9 வீதியினை சீன அரசாங்கம் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது. 355 மில்லியன் டொலர்கள் செலவுடனான இந்த திட்டத்தினை சீன அரசாங்கம் கடனாக கொடுக்கின்றது. சீனாவின் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த சீன தொழிலாளர்கள் ஈடுபடுவர் கூடவே சீன இயந்திரங்களே பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சீன தொழிலாளர் தங்குவதற்கான இடவசதிகளை A9 வீதியோரங்களில் உள்ள கைவிடப்பட்ட படைமுகாம்களை பயன்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை படையினரின் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 1 reply
- 689 views
-
-
மூன்று வயது மகனைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் யாழ். மேல் நீதிமன்றத்தால் இன்று குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் ஒருவர் அந்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் யாழ். நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை வல்லிபுரக் கோயிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார்( வயது37) என்பவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் ஆவார். இவருக்கு எதிராக யாழ்.மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடிக் கட்டிடத்தில் இரு வழக்குகள் இடம்பெற்று இன்று தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டு ம…
-
- 1 reply
- 981 views
-
-
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இவர்களை பணிகளுக்கு அமர்த்தியிருந்தவர், கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இரண்டு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர்.இவர்கள் சைப்பிரஸ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும், உரிய இருப்பிடங்கள் இல்லாமல் வீதிகளிலேயே இரவு நேரத்தை கழிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/09/32.html
-
- 0 replies
- 766 views
-
-
எம்.வி. சன் சீ கப்பல் மாலுமிகள் உட்பட 36 பேர் புலிகள் என சந்தேகம்;தனியாக தடுத்து வைப்பு புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010 ஈழ நாதம் சன் சீ கப்பலின் மாலுமிகள் 24 பேர் உட்பட 36 பேர் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கனேடிய இரகசிய பொலிஸ் கண்டு பிடித்துள்ளதாகவும் ஆகவே இவர்களை தனியாக அடைத்து வைத்துள்ளதாகவும் சீ நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த 36 பேரில் கப்டன் வினோத் அவர்களும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 1 reply
- 1.2k views
-
-
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம். ஆண்கள் 120, வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரி பெண்கள் 45 பேருக்கு வளங்கப்பட்டது . DONATED BY: VAVUNIYA ASSIT. DIRECTOR OF EDUCATION, (CORDINATER FOR O/L STUDENTS) AT NERDO OFFICE IN VAVUNIYA. MR.THEVATHAS SANTHIYAPILLAI http://www.nerdo.lk/?p=622 முகாம் உறவுகளுக்கு துரோகம் செய்யாதீர்…….. இந்த அமைப்பின் நோக்கத்தையும், இது உருவான காரணங்களையும் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அமைப்பை தொடங்கிய போதே சொல்லியிருக்கிறோம். ஆனாலும்கூட, உதவும் காரியங்களை உள்ளத்தால்கூட விரும்பாத ஒருசிலபேர் உண்மைகளை திசைதிருப்பி இந்த சமூகநல அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஈடுபட்டிருப்பது எமது மக்களுக்…
-
- 18 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த விமானப்பாகங்கள் எறியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இலகுரக விமானத்துக்கு பயன்படுத்தப்படும் குறித்த பாகங்கள் இறுதி நேர யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது. http://www.tharavu.com/2010/09/blog-post_7540.html
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திபோது இடம்பெற்ற போர்க் குற்றங்களின் சூத்திரதாரி என்கிற வகையில் அவரை ஏன் கைது செய்ய முடியாது? என்று வினவி உள்ளது. போர்க்குற்றம் புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பலரை அமெரிக்கா முன்னைய நாட்களில் கைது செய்து உள்ளது. நாஸிகள் பலரையும் குற்றங்கள் இடம்பெற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் கூட அமெரிக்கா கைது செய்திருந்தது, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விட…
-
- 10 replies
- 1.3k views
-
-
அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்ப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது‐ 01 September 10 07:32 am (BST) இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 ம் திகதி பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சற்று முன் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொதவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தீர்மாணம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிபடுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மாட்ட குழுவின் தீர்மாணத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப…
-
- 1 reply
- 465 views
-