Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 28 SEP, 2023 | 06:50 AM பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில் புதன்கிழமை (27-09- 2023) இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவருடைய உரையில் குறிப்பிட்டதாவ…

  2. Published By: VISHNU 26 SEP, 2023 | 07:19 PM (எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் வகையில் முகாமைத்துவத்திலும், சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். இம்மூன்று திணைக்களங்க…

  3. Published By: VISHNU 26 SEP, 2023 | 08:01 PM இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒ…

  4. கேட்டும் கிடையாததால் வீட்டே செல்கிறார்..! Vhg செப்டம்பர் 27, 2023 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27-09-2023) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார். மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார். இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சி…

  5. சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகைமொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் என்னும் தொனிப்பொருளில், இன்றைய சர்வதேச சைகைமொழி தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமானதுடன், மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்று அங்கு விசேட நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பேரணியில் இலங்கையின் 10 மாவட்டங்…

  6. இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதே வேளையில், நான்கு வயதை எட்டும் அனைத்து குழந்தைகளுக்கும் சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் சார்பில் அரசு தலையிட்டு, தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப பாடசாலைகளில் குழந்தை பருவ வளர்ச்சி மையங்களை நடத்தலாம். மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நாட்டில் குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியே கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி ப…

  7. Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 10:40 AM கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார். …

  8. யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று புதன்கிழமை (27) விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட …

  9. (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரக…

  10. Published By: DIGITAL DESK 3 27 SEP, 2023 | 08:38 AM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்நாட்டு உணவு கலாசாரம் இன்னும் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தாதவரை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அத்துடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எமது மனநிலை மாறவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சுற்றுலா இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டுக்கு அதிகம் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையே சுற…

  11. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம் தாமதிக்கின்றது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தமாதம் அமெரிக்காசெல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத்வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யுஎஸ்எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்களிற்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள் உள்ளன …

  12. Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 02:47 PM இலங்கையில் பேச்சுசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்து சுதந்திரம் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் குறித்த தனது கரிசனையை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து அன்ரூபட்ரிக் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இணையவழி பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயம் பேச்சுசுதந்திரம…

  13. துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம் இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …

  14. Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:23 PM (நா.தனுஜா) விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூல வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளது. மேற்குறிப்பிட்டவாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் வரைபு கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி உங்களது அமைச்சினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டவரைபைத் தயாரிப்பதற்கான முயற்சிகள…

  15. சாந்தனை மீட்டு தருமாறு கோருகிநார் தாய்! adminSeptember 25, 2023 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையில் பின்னர் இலங்கைக்கு மீள செல்வதற்கான உரிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தால் விடுதலை செய்ய…

  16. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. https://thinakkural.lk/article/274562

  17. இந்தியா – கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு : மொராகொட இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். https://athavanne…

  18. 24 SEP, 2023 | 03:02 PM இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்துள்ள நிலையில், அவரை ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் 'யாழ் கானம்' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளமை குறிப்பிடத…

  19. Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:04 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர்…

  20. இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்க…

  21. Published By: VISHNU 26 SEP, 2023 | 05:10 PM ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. ஆனால், அரசதரப்பு எத்தகைய தீவிரங்காட்டினாலும் போரில் உயிரிழந்த அனைவருக்கம் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்குப் பேரினவாதம் உயிரோடிருக்கும்…

  22. இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இலங்கையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் புகலிடக்கோரிக்கையை கோரியவேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார். புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சந…

  23. தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்! தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=255795

  24. இந்த ஆண்டில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.20 மணியளவில் மொனராகலை புத்தல பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவானது. நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/274606

  25. காணி அபகரிப்புக்கு எதிராக மயிலத்தமடுவில் போராட்டம்! மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் 11 ஆவது நாளாக தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றார்கள். அவர்களின் போரட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக பங்குபற்றிய போது. வருகின்ற ஜனாதிபதி விஜயத்தின் போது பாரிய அகிம்சா வழி போராட்டம் ஒன்றினை மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.