Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கங்குவேலி கிராமத்தில் தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிப்பு‐GTN செய்தியாளர் 06 May 10 02:12 pm (BST) திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கங்குவேலி கிராமத்தில் தமிழ் மக்களின் வயல் நிலங்கள் பெரும்பான்மையினரால் கபளீகரம் செய்யப்படுகின்றது. சுமார் 500 ஏக்கர் வயல்கள் இவ்வாறு பறிபோயுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவிக்கின்றார். புதிதாக வாய்க்கால்கள் கனரக இயந்திரங்கள் கொண்டு வெட்டப்பட்டு பாய்ச்சல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருpக்னறது. இங்கு வேலை செய்வோர் மண்வெட்டிகளுடன் கத்திகளும் வைத்திருப்பதால் இப்பகுதிக்கு செல்வதற்கு கிராமவாசிகள் அச்சம் கொள்கின்றனர். இவ்விடயம் சம்பந்தமாக கமநல சே…

  2. இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் போட்டி இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சந்தை வாய்பினை பயன்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருகின்றது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசந்துறை துறை முகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் தனது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை வடக்கில் ஏற்படுத்த இந்தியா முயல்கின்றது. இதேவேளை 25 பேர் ண்ட பாகிஸ்தானிய வர்த்தக சம்மேனள பிரதிநிதிகள் குழு நேற்று இலங்கையை சென்றடைந்துள்ளது. அவர்களும் வடக்கினை மையப்படுத்திய வாத்தக நடவடிக்கைகளில் ஈட…

    • 7 replies
    • 614 views
  3. எவ்வாறு நான் முகம் கொடுப்பேன்? ‐ தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் பல தசாப்தங்களாக நீடித்த போரின் விளைவாக இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மெல்ல மெல்ல தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அயலவர்களாக தமிழர்களுடன் நட்பை ஏற்படுத்துவதிலும், தமது கடந்த காலத்;தில் தமக்கேற்பட்ட அவலமான சம்பவங்களின் எஞ்சிய நினைவுகளிலிருந்து மீள்வதிலும் அவர்கள் சவாலை எதிர் கொள்கிறார்கள். வடக்கின் மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் சில பாகங்களிலிருந்தும் 1990 ஒக்ரோபரில் வெளியேற்றப்பட்ட 75000 முஸ்லிம்கள், கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்த பிற்பாடு திரும்பி வர ஆரம்பித்திருக்…

    • 29 replies
    • 2.6k views
  4. பாலிவுட்டின் விருது விவகாரத்தில் நாம் எவ்வாறு தோற்கடிக்கப்படுகிறோம்? நாம் செய்ய வேண்டியது என்ன? சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் IIFA விழாவிற்கான எதிர்வினைகள் சற்று நம்பிக்கையை அளித்தாலும், இத்தகைய போராட்டத்தில் நம் நோக்கத்தின் ஆழத்தையும், போராட்டத்தின் தேவையையும் சரிவர புரிந்து கொள்ளாமலேயே நாம் அனைவரும் இருப்பதாகத் தோன்றுகிறது. மே17 இயக்கத்தில், இந்த விழாவினைப் பற்றிய கட்டுரையை முடித்த பிறகு நடந்த விவாதத்தில் IIFA விழாவை இலங்கையிலிருந்து மாற்றுவதற்கான கட்டாயத்தை பல்வேறு அமைப்புகளிடத்தில் எடுத்துச்செல்வதன் மூலமாக, அவர்களையும் பங்கேற்கச் செய்வது காலத்தின் அவசியம் என முடிவெடுத்தோம். இவ்விழாவிற்கான எதிர்ப்புப் போராட்டத்தை மே17 இயக்கம் மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளாமல்,…

  5. தமிழீழத்துக்கு மருந்து கடத்தியதாக கைதான முத்துக்குமார் பிணையில் விடுதலை தாயகத்தில் தமிழீழ மக்களை சிறீலங்கா பயங்கரவாத அரசு கொன்ற வேளையில் மக்களை காப்பாற்ற மருந்துப்பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். more photos: http://meenakam.com/?p=15535

  6. மே 12 முதல் 18 வரை வலி சுமந்த வாரம் அனுசரிப்பு – புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது மே 12 முதல் 18 வரை வலி சுமந்த வாரம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது கடந்த ஆண்டு மே மாதம் 1முதல் 18 வரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பேர் ஈவு இரக்கமற்ற வகையில் கொத்து குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் நாள் முக்கிய தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி …

  7. மடு பகுதியில் மீள்குடியேற்றம் மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இடம்பெயர்ந்த சிலர் நாளை குடியமர்த்தப்படவுள்ளார்கள். இந்த பிரதேசத்தை சோ்ந்த 441 குடும்பங்களை சோ்ந்த 1531 போ் நாளை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்னிப்பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்போதிலும் அங்கு குடியேறிய மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://meenakam.com/?p=15528

  8. புதிய காற்று எம் தலைவன் – கண்மணி கடந்த காலங்களைப் போல் அல்லாமல், நிகழ்காலங்கள் பல்வேறு மாற்றங்களோடு ஒளிர்கிறது. பழைய மரபுகள் உடைத்தெறியப்பட்டு புதிய புனல் தாவிப்பாய்கிறது. அகராதிகள் உடைக்கப்படுகின்றன. அங்கே புதிது புதிதான சிந்தனைகள், படைப்புகள் தமது பரிவாரத்தை செலுத்துகிறது. அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆணவத்தை உடைத்தெறியும் அணிகலனுமாய் புதிய நிகழ்வுகள் தமது புரவியின்மீது புறப்பட்டு, வாள் வீசிக் கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்டவைகளே, நிகழ்காலத்தில் இந்நிலைகளை அடைய காரணமாக இருந்தது. அவை அடங்கிக்கிடக்கும் ஆத்மாவை நெருப்பால் தீயிட்டுக் கொளுத்தியது. கிளர்ச்சிகாரனாய் தம்மை அடையாளப்படுத்தியது. அழிவுக்கான ஆரம்பம் என அடைமொழியால் பழையவர்கள் இதை பழ…

  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கியவர்களே தண்டனைகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒட்டுக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானின் கட்டளைக்கு அமைய கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழைச் சேனையைச் சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்கள் கட்டுமுறிவு, வாக…

  10. மே 20 இல் பீரிஸ் அணி ஜி.எஸ்பி பெற பிரசல்ஸ் வருகை, புலம்பெயர் மக்கள் தயாரா? மலேசிய நிருபர் வியாழக்கிழமை, மே 6, 2010 மே 20 இல் வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தலைமையில் ஒரு பெரும் அணி ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தை செய்ய பிறசல்ஸ் வருகின்றது. ஜி.எஸ்.பி வரிசலுகையினை பெறுவதற்கே இந்த அணி வருகின்றது என எதிர்பார்க்கபடுகின்றது. ஆகவே புலம்பெயர் மக்கள் குழாம் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டா? சந்தர்ப்பம் இல்லையேல் பிறசல்ஸில் அந்த நாளில் ஐரோப்பிய அலுவலகம் முன்பாக ஏதாவது ஏற்பாட்டையாவது செய்ய முடியுமா? http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%87-20-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%…

    • 2 replies
    • 719 views
  11. பிரபாகரன் வாழ்ந்த வீடு உரிமை கோரப்பட்டுள்ளது : இராணுவம் தகவல் _ வீரகேசரி இணையம் 5/6/2010 10:39:22 AM விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இறப்பதற்கு முன் வாழ்ந்த வீட்டை ஒருவர் உரிமை கோரியுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரே இவ்வீட்டின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எட்டு வருடங்களுக்கு முன் அவ்விட்டை விடுதலைப்புலிகள் இவரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வீடு ஒரு ஏக்கர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் இவ்வீடு அமைந்திருந்த பகுதி விடுதலைப் புலிகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • 1 reply
    • 915 views
  12. இராணுவ வெற்றியினை உணர்வு பூர்வமாக கொண்டாடுமாறு கூட்டமைப்பு மஹிந்த அரசுக்கு ஆலோசனை வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மே 6, 2010 மே 12- 18 வரை சிங்கள படையினருக்காக கொண்டாடப்படும் இராணுவ வெற்றியை வெற்றிக்களிப்பாகக் கொண்டாடாமல் உணர்வுபூர்வமாகவும் அடுத்தவரின் மனதைப் புண்படுத்தாமலும் நினைவுகூரும் விதத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தேசிய பட்டியல் புத்திஜீவி சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதாக்குறைக்கு மஹிந்த அமைக்க போகும் தேசிய நல்லிணக்க சபையினையும் வரவேற்று பேசியதுடன் இது போன்ற சபை தென்னாபிரிக்காவிலும் அமைக்கப்பட்டதாகவும் ஒப்பீடு செய்து வாழ்த்தி பேசியுள்ளார் இந்த புத்திஜீவி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த சிங்களம் தனது விழாவை கொண்டாடுவ…

    • 4 replies
    • 1k views
  13. தகுதி வாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்ற போர்வையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடித்துக் காற்றில் பறக்க விடுவதற்கு சில நாசகார சக்திகள் எடுத்த முயற்சிகள் புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய உணர்வாளர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகக் கொண்டு நகரும் ஒரு மாபெரும் ‘அசைவியக்கம்‘. இந்த மாபெரும் அசைவியக்கத்தின் இயங்குசக்தியாக விளங்குவது ‘பிரபாகரன்‘ என்ற ‘அடிநாதம்‘. ‘பிரபாகரன்‘ என்ற இந்த அடிநாதத்தை மறுதலித்து, மறைத்து, தமிழீழ தேசி…

    • 13 replies
    • 2k views
  14. எனது கணவரை கொன்ற குற்றவாளிகள் இன்று சிம்மாசனத்தில் இருக்கின்றார்கள்: விஜயகலா மகேஸ்வரன் பா.உ. கொலைகளை மேற்கொண்டவர்கள் இன்று சிம்மாசனத்தில் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தனது கன்னி உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய விஜயகலா, எனது கணவரான தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இருபத்தெட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகள் யார் என்பதை இனங்காட்டியபோதிலும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. கொலைகளை மேற்கொண்டவர்கள்…

    • 2 replies
    • 720 views
  15. வியாழக்கிழமை, 6, மே 2010 (15:16 IST) யாழ்ப்பாண சிறையில் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் கடந்த 30ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமக்களின் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் தகவலை அனுப்பியுள்ளார். இதையடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விஷயம் தொடர்பாக விளக்கத்தை கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இதுபோன்ற சம்பவம் இடம்பெ…

    • 1 reply
    • 683 views
  16. அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீறியே செயற்படுகின்றன - கூட்டமைப்பு வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மே 6, 2010 அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் இலகுபடுத்தப்பட்டதாகக் கூறி வெளிவிவகார அமைச்சர் 12 விடயங்ள் பற்றி குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின்போதே ஒழுங்குவிதிகள் திருத்தம் பற்றி பேசுகின்றோம். திருத்தங்கள் நடைமுறை சாத்தியமானதல்ல, போதுமானதல்ல. 1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளில் சில மட்டும் தளர்த்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கென 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விசேட பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய நிலைமையில் சரணடையும் ஒருவரது வாக்குமூலம் மட்டுமே அவ…

    • 0 replies
    • 511 views
  17. முள்ளிவைக்கால் நிலபரம் (மே 1 -5,2009) பட்டினி சாவின் உச்சத்தில் முள்ளிவாய்கால் மலேசிய நிருபர் வியாழக்கிழமை, மே 6, 2010 may5th மே மாதம் முதலாம், இரண்டாம் நாட்களும் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலை , குடிசைகள் மீது ஆட்லறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. ஆனால் விமான தாக்குதல்கள் முன்னையதை விட இன்று குறைவாக இருந்தது. இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராட்சியம் ஆகியன பாதுகாப்பு சபையில் பேசும் போது இலங்கை வாக்குறுதிகளை மதித்து நடக்க பழகவேண்டும் என கூறி இருந்தன. http://www.flickr.com/photos/eelanatham/ இந்த இரு நாடுகளின் செயற்பாடு இந்த பேச்சுடன் முடிவடைந்ததாகவே இருந்தது. அனால் சிங்கள அரசு பேச்சளவில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என கூ…

    • 0 replies
    • 730 views
  18. இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு இலங்கையில் இருந்துவரும் அவசரகால சட்டத்தை நீட்டிப்பதற்கான மசோதா புதனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்; 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவசரநிலை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்ததாகத் தெரிகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100505_emergencyextension.shtml

    • 12 replies
    • 566 views
  19. அவசரகால சட்டம் எனும் பித்தலாட்டம்; புலம்பெயர் மக்கள் என்ன செய்யவேண்டும். மலேசிய நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 இலங்கை அரசாங்கம் தனது புதிய சிங்கள பாராளுமன்றத்தினை நேற்று கூட்டி அவசரகால சட்டம் தொடர்வதனை நியாயப்படுத்தியது. அதற்கு இலங்கை பிரதமர் கூறிய காரணம் ஒன்று புலிகளின் இராணுவ பிரிவு ஒன்று இன்னமும் இயங்குவதாக கூறியமை. அடுத்ததாக வெளி நாட்மைச்சர் கூறிய காரணம் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புக்கள் இயங்குவது என்பதே ஆகும். இந்த இரண்டு நொண்டி சாட்டுக்களை கூறினால் சர்வதேசம் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் என்பதனாலா அல்லது எதிரணிகள் இந்த கருத்திற்கு எதிராக பேசமாட்டார்கள் என்பதனாலா? அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினை ஓர் இன ஒடுக்கல் கருவியாகவே பாவிக்கின்றது…

    • 1 reply
    • 436 views
  20. கடத்தப்பட்ட மாணவி தப்பி வந்தார் - மட்டக்களப்பில் சம்பவம் திகதி: 05.05.2010 // தமிழீழம் இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பிவந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் பா.நிரஞ்சலா என்ற மாணவியை பாடசாலை முன்றலில் கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர். அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார். பாடசாலை அதிபர் அந்த மாணவியு…

  21. இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் இலங்கையின் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களாக நால்வரும், துணை அமைச்சர்களாக 6 பேரும் பதவியேற்றுள்ளனர். புதனன்று இந்தப் புதிய அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல - ஊடக மற்றும் தகவல் துறை ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி எஸ்.பி.திஸாநாயக்க - உயர் கல்வித் துறை திஸ்ஸ விதாரண - தொழில்நுட்பம் மற்றும் மீளாய்வு புதிய துணை அமைச்சர்கள் டாக்டர். சரத் அமுனுகம - நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மெர்வின் சில்வா - நெடுஞ்சாலைகள் துறை மஹிந்தான…

    • 4 replies
    • 563 views
  22. கோடிக்கணக்கான நிதியினை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கையாடல் ! வடக்கிற்கான தொடரூந்து பாதை அமைப்பிற்கென பொதுமக்களிடம் இருந்த திரட்டப்பட்ட கோடிக்கணக்கான நிதியினை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கையாடல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என்றும் அந்த நிதி தொடர்பான எந்த விபரங்களும் அமைச்சு அலுவலகத்தில் காணப்படவில்லை என்றும் சுட்டிக்hட்டப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெருமா அந்த நிதியினை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை போக்குவரத்து அமைச்சின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை டலஸ் அழக…

  23. தென்மராட்சியின் விடத்தல்பளை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்‐ தென்மராட்சியின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான விடத்தல்பளை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாக சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதான இன்பராசா தர்சிகன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார். இவரது தாய் தந்தையர் கடந்த கால யுத்தகால நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்து பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில் வசித்து வருகின்றனர். விடத்தல்பளை கமலாசினி வித்தியாலய மாணவனான இவர் அங்குள்ள தனது பேரனுடன் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். 9ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவன் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார். இவரது பேரனால் இவர…

  24. கொக்கிளாய் பறவைகள் சரணாலயப் பகுதியை அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக கடந்த திங்களன்று பறவைகள் சரணாலயத்தின் ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலம் அழிக்கப்பட்டு பெற்றோல் வீசிறப்பட்டு தீவைக்கபட்டுள்ளது. இதன்காரணமாக 2000 தொடக்கம் 3000 வரையிலான தூக்கணாங்குருவிக் கூடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் 1000 ஏக்கர் பகுதியே அழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அவர்கள் இந்த அழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அரசியல்வாதிகளின் பின்புலத்துடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளபட்டதால் காவல்துறையினர…

  25. அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சி‐ யாழில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 05 May 10 06:25 pm (BST) அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமா…

    • 4 replies
    • 906 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.