ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை திகதி: 28.02.2010 // தமிழீழம் சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு சிறிலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளது. எதுவிதப்பட்டாயினும் தமிழீழத்தில் தேசிய எழுச்சி மீண்டும் தோன்றாமல் தடுப்பது அரசின் அண்மைக்காலத் திட்டமாக இருக்கிறது. இதற்க்காக அது பெருமளவு பணத்ததை புலானாய்வுத்துறைக்கு வழங்கி ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சிறிலங்கா புலனாய்வுத்துறை வகுத்துள்ள செயற் திட்டங்களை மூன்று தலைப்பின் கீழ் கொண்டு வரலாம் - 1) தமிழீழத் தா…
-
- 7 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன் கசே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன். இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்த…
-
- 10 replies
- 1.1k views
-
-
எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்…
-
- 17 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தப்பி வந்த பெண் ஒருவர் இதுதொடர்பாக தகவல் வழங்கியுள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக விசாரணைகளை செய்யும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. பெண்களை ஒன்று திரட்டி தொழில் பெற்றுத்தருவதாக கூறி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு இந்த குழுக்கள் பெண்களை கீழத்தரமான முறையில் நடத்துவதாகவும், இவ்வாறான துன்பு…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன, மொழி, கலாசார ஒற்றுமையாலும் அயல்நாடு என்ற வகையிலும், ஒரு காலத்தில் இந்தியாவை மிகவும் நேசித்த ஈழத் தமிழ் மக்கள் மனத்தில் இன்று அழிவுகளும், சிதைவுகளும் மட்டுமே எஞ்சியுள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாகிவிட்டனர். வியந்து போற்றியவர்கள் செல்லாக்காசாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை மறந்து, சீனர்களை நம்ப துணிந்து விட்டனர். மிக நீண்ட காலமாக இன வன்முறை - ஒடுக்கல்களுக்கு ஆளாகி வந்த தமிழர், தமக்கு நிம்மதியான தீர்வுக்கு இந்தியாவை நம்பியிருந்தனர். ஆனால், 1987 - 1990 காலத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் 50% ஆன தமிழரை உளமார பாதித்தது. தொடர்ந்து இந்திய அரசு தனது நலனை மட்டும் முன்னிறுத்தியது மட்டுமல்லாது, ஈழத்தமிழனின் அழிப்புக்கும் துணை போனது. அமைதி ப…
-
- 29 replies
- 3.3k views
-
-
அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மீது மிகக்காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்த…
-
- 14 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மிகவும் அபாயகரமான இந்த முன…
-
- 25 replies
- 2.5k views
-
-
20 ஆண்டுகளின் பின்னர் ரயில் கொள்கலன்கள் சேவை கடந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைக் கூறினார். வடபகுதியிலுள்ள படையினருக்கான விநியோகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். தற்போது இரண்டு ரயில் கொள்கலன்கள் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த வாரமளவில் ரயில் கொள்கலன்கள் சேவை 3ஆக அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறினார். 300 ரயில் கொள்கலன்கள் ரயில் மூலம் கடந்த சில நாட்களில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, தாண்டிக்குளம் ரயில் நிலையத்தைச் சென்றடைந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். http://www.tamil.da…
-
- 4 replies
- 1k views
-
-
இந்தியக் கனவு கலைந்து சீனாவை நோக்கி..அரசியல் சமூக ஆய்வு: தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில், இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில், இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
98.2% டென்மார்க் தமிழர்கள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வாக்களித்துள்ளனர் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய மீள் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 4147 தமிழ் மக்களில் 98,2 வீதமானவர்கள் ஆம் என வாக்களித்துள்ளதாக வாக்கெடுப்பை நடாத்திய பிரபல்ய டென்மார்க் நிறுவனமான TNS Gallup தனது தற்காலிக பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. டென்மார்க்கில் தமிழ் பேசும் மக்கள் என ஒரு ஆவண பதிவு இல்லாததால் இலங்கைத்தீவை சேர்ந்தவர்கள் என்ற பதிவையே வாக்கெடுப்பின் மூலமாக வாக்கெடுப்பை நடாத்திய நிறுவனம் பாவனை செய்திருந்தது. ஆனால் இலங்கை தீவை சேர்ந்த சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. டென்மார்க…
-
- 3 replies
- 661 views
-
-
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த மாதம் 21 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தலைவர் என்ற வகையில் ராஜினாமாக் கடிதத்தை எனக்கு சமர்ப்பித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் ச…
-
- 0 replies
- 836 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா இலங்கை கடற்படையினருக்கும்,தமிழக மீனவர்களுக்கும் இடையில் நட்புறவுப்பாலமாக அமைந்துள்ளது என கடற்படை ஊடகப்பேச்சாளர் காப்டன் அதுல செனரத் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார். இம்முறை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 3000 பக்தர்கள் கச்சதீவு திருவ்ழாவில் கலந்துகொண்டனர்.இவர்கள் 114 படகுகளில் வந்துசேர்ந்தனர். இலங்கையின் சர்வதேச கடற்பரப்பு எல்லையில் எமது கடற்படையினர் அவர்களை பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றும் காப்டன் செனரத் மேலும் கூறினார். கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது. தமிழகத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் இவ்வாறான பிரசாரங்களை ம…
-
- 0 replies
- 554 views
-
-
ஆவணப்படப் போட்டி பிபிசி உலக சேவையின் இணையதளத்தில் உங்கள் குறும்படம் இடம்பெற வேண்டுமா? புதிய ஆவணப்படப் போட்டி ஒன்றை பிபிசி உலகசேவை அறிவித்திருக்கிறது. குறும்படம் தயாரிப்பதில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தால், உங்களுக்கு இந்தப்போட்டி ஒரு அரிய வாய்ப்பு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி உங்கள் பார்வை என்ன? நீங்கள் பார்க்கும் அதே கோணத்தில் உலகை மற்றவர்கள் பார்ப்பதில்லை. உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்து அதை எங்களுக்கு அனுப்புங்கள். எங்களை உங்கள் உலகுடன் இணையுங்கள். இணையத்தின் சக்தியைப் பற்றி பிபிசி ஒரு நிகழ்ச்சித்தொடர் மூலமாக ஆராயத்தொடங்கும் நிலையில், ஒரு குறு ஆவணப் படப் போட்டியை பிபிசி அறி…
-
- 0 replies
- 731 views
-
-
சிறீலங்கா அரசின் ஆதரவுக் கட்சியான தேசிய சுதந்திர முன்னனியின் ஏற்பாட்டில் பெருமளவான அரச ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். மக்ந்த அரசின் ஆதரவுடன் இயங்கும் அதன் துணை கட்சியான விமல் வீரவன்சா தலைமையிலான தேசிய சுதந்திர முன்னனி இன்று காலை பிரித்தானியா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (24) பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளர்கள் பிரித்தான…
-
- 0 replies
- 781 views
-
-
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திகதி: 28.02.2010 // தமிழீழம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் மகாநாடு இன்று மாலை 5.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண் அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர் சின்னத்துரை வரதராஐன் அவர்களது தலைமையி…
-
- 7 replies
- 843 views
-
-
''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார் சட்டத்தரணி வி.ருத்திரகுமார் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார். இந்த வழக்கின் நோக்கங்கள் க…
-
- 22 replies
- 2k views
-
-
பொதுத் தேர்தல் காலத்தில் கட்டவிழும் போக்குகள் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை ஒட்டி, தமிழர் கள் சம்பந்தமாகக் கட்டவிழும் இரண்டு விடயங்கள் இங்கு நோக்கற்பாலவையாக உள்ளன. முதலாவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் கொள்கைப் போக்கையும் பெயரையும் சுவீகரித்துச் செயற்படும் சில தமிழர் தரப்புகளின் போக்குப் பற்றியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாகவும், வலு வாகவும் இருந்த காலத்தில் ஒரு விடயம் பல தரப்பினா லும் கவனிக்கப்பட்டு வந்தது. அது விடுதலைப் புலிகள் இயக்கம், அதனுடன் தொடர்புபடுபவர்கள் யாராக இருந் தாலும் அவர் அரசுத் தரப்பாக இருந்தாலும், சர்வதேசத் தரப்பாக இருந்தாலும் தமிழர் தரப்பாக இருந்தாலும் அந்த நபர்களையும் தரப்புகளையும் புலிகள் இயக்கம் வசமாகவும், வாய…
-
- 0 replies
- 795 views
-
-
. யாழில் அட்டகாசம் ஆரம்பம்: பிபிசி யாழ் செய்தியாளர் தடுத்துவைப்பு பி.பி.சி தமிழோசையின் யாழ்.குடாநாட்டிற்கான ஊடகவியலாளரான என். பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். நேற்றுக்காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் சிறீலங்கா மக்கள் கட்சியின் அமைப்பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். அரச தலைவரினதும் அரச தலைவர் பாரியாரினதும் நெருங்கிய ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும் - மே 17 இயக்கம் - தமிழ்நாடு 2010 ஜனவரி 6ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த இன அழித்தலிற்குப் பிறகு கூடும் இரணடாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் - ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது. இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தி "அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23ஆம் தேதி…
-
- 0 replies
- 609 views
-
-
27ம் திகதி சனிக்கிழமை பி.பகல் 15.00 மணிக்கு பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்லின மக்களும், அரசஅரசசார்பற்ற அமைப்புக்களும் ஒன்றிணைந்து காலனித்துவ ஆட்சிக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், ஒன்றுகூடலும் இடம்பெற்றிருந்தது. பிரபல்யமான Place de la Bourse என்னும் இடத்தில் ஒன்றுகூடல் என்று அறிவித்த போதும் இறுதி நேரத்தில் கிடைத்த காவல்துறை அனுமதியின் பிரகாரம் அவ்விடத்தில் ஒன்றுகூடிய பல்லின மக்கள் பின்னர் ஊர்வலமாக பிரான்சின் பிரதான வழியாகவும், பிரான்சின் பிரசித்தம் பெற்ற வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகைதரும் கண்காட்சியகம் (Louvre Museum, rue de Richelieu , place André Malraux , pont du Caroussel , Rue des Saint Pères...) பல்கலைக்கழகம் அமைந்துள்ள…
-
- 0 replies
- 421 views
-
-
எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவு…
-
- 0 replies
- 888 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று அறிவித்துள்ளது. டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இதனைக் கூறினார். டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் தமது கட்சி நேரடிப் போட்டியில் களமிறங்கிறது எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனு பத்திரத்தை கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். முதற் தடவையாக தமது கட்சி கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா சுட்டிக்…
-
- 8 replies
- 877 views
-
-
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கு கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பு – UTHR கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை பயங்கரத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. படுகொலையாளிகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் கீழேயே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை தமக்கு கிடைத்த தகவல்கள் உறுதியாகத் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. தமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களை இன்னொரு சுயாதீனமான தகவல் மூலத்தின் மூலம் தாம் உறுதிப்படுத்திய…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்த் தேசியம் சிதைப்பா? தற்போதைய அரசமைப்பின் கீழ் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இனி சுமார் ஆறு வார காலம் பொதுத் தேர்தல் பிரசா ரம்களை கட்டப் போகின்றது. ஏப்ரல் 8 ஆம் திகதி வாக் களிப்புடன் தேர்தல் திருவிழா உச்சம்பெறும். வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், தமிழர் தாயகத்தில், புதிய சூழலில் நடைபெறும் பொதுத் தேர்தல் இது என்பது மறுக்கப்பட முடியாத விடய மாகும். தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போராட்டம் நடத்தி மிகப் பலமான சக்தியாக விஸ்வரூபம் எடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், வேரோ டும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை ஆட்சித் தலைமை மார்தட்டிப் …
-
- 6 replies
- 853 views
-
-
இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத…
-
- 22 replies
- 1.9k views
-