Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை. இணைந்த வடக்கு கிழக்கு மாகணத்தின் முதலமையச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசாங்கத்தின் பங்காளிகளான கருணா, பிள்ளையான் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மூலமாக அதனை நிர்வகிப்பதற்கும் இலங்கை அரசாங்கதிற்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா கருதுகின்றது. அதேசமயம் புலம் பெயர் நாடுகளில் …

    • 2 replies
    • 1.1k views
  2. ஏற்றுமதி வரிச் சலுகை கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேச்சு நடத்த சிறிலங்கா வர்த்தக சமூகம் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் வர்த்தக சலுகைகளை [GSP+] மீண்டும் பெறுவதற்காக சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பேச்சு வார்த்தை நடத்த சிறிலங்கா வர்த்தக சமூகம் முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து இழந்த சிறப்புச் சலுகைகளை மீண்டும் பெற போராடும் என சிறிலங்கா தேசிய வணிக அமைப்பின் [sri Lanka National Chamber of Commerce] தலைவர் லால் டி அல்விஸ் [Lal De Alwis] அரசால் நடத்தப்படும் சிறிலங்கா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது சிறிலங்கா வர்ததக சமூகத்தினர…

    • 2 replies
    • 532 views
  3. இன்றைய தினம் தலதா மாளிகையில் நடத்தப்படவிருந்த பூசை பொலிசாரால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பூஜை வழிபாடுகளை வீதியிலேயே நடத்தியிருப்பதாக சாரதர்ம இளைஞர் சமாஜம் என்ற அமைபபு தெரிவித்துள்ளது. சாரதர்ம இளைஞர் சமாஜத்தினால் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண்டி தலதா பூஜை நிகழ்வொன்று இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பூசை ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அனுமதி பெறாத காரணத்தினால் இந்தப் பூசையை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியதைத் தொடர்ந்து விகாரையில் வழிபாடு நடத்துவதற்கு எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை என ஏற்பட்டாளர்கள் வாதிட்டனர். எனினும் தமக்கு உயர் மட்டத்திலிருந்து இந்த உத்தரவு வந்திருப்பதாகவும் எக்காரணம் கொண்டு…

  4. இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்கவை யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் இன்றைய தினம் சந்தித்துள்ளார். யாழ் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார் http://www.eelamweb.com

    • 7 replies
    • 770 views
  5. தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது. இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் …

    • 1 reply
    • 995 views
  6. இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கு தீர்க்கமான நேரம் வந்துவிட்டது என்கிறது அமெரிக்க ஏட்டின் இந்திய வெளியீடு "உங்களது சர்வாதிகார ஆட்சியாளரை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை தான் மக்களாட்சி முறைமை" என முன்பொரு காலத்தில் யாரோ ஒருவர் கூறியிருந்தார். இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரியின் இறுதிப் பகுதியில் நடந்து முடிந்திருக்கும் குடியரசு அதிபர் தேர்தலும் இது போன்றதொரு குழப்பகரமான தடுமாற்ற நிலையையே தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. தங்களது தாயகப் பூமியில் கொடூரத் தனமான ஒரு போர் அரங்கேறுவதற்குக் கட்டளையிட்டவர் யாரோ அவருக்கு வாக்களிப்பதா அல்லது அந்தப் போரில் களமுனையில் முனைப்புடன் படைகளை நடாத்திய ஜெனரலுக்கு வாக்களிப்பதா? ஈற்றி…

  7. சிறீலங்கா அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பேர்னாட் சவேஜ் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வாரஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொண்டது. அதனை நாம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறி…

    • 0 replies
    • 843 views
  8. நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் – உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் [/size] 75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது. முதற்கட்ட போர் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம். நான்காவது போரும் ஆயூதப்போராட்டமாக அமையலாம். ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்” என்று காசி ஆனந்தன் தெரிவித்தார். தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்…

    • 5 replies
    • 1.4k views
  9. தமிழ் மக்களை இந்தியா பலிவாங்கியது – த.தே.கூட்டமைப்பு அதற்கு துணைபோனது : சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்…

    • 2 replies
    • 1.1k views
  10. அமெரிக்க உச்ச நீதிமன்றில் வாதாட உள்ளார் உருத்திரகுமாரன் [size="7"] விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் முதல் தடவையாக தமிழ் சட்டவாளர் ஒருவர் அமெரிக்க உச்ச நீதிமன்றில் தோன்றி வாதாட இருக்கிறார். நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரனே அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை [23-02-10] வாதாட உள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக அவர் வாதாடுவார். மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்தலுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி நிற்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியயான்று உருவாக்குவதற் குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலை மையில் தமிழ்த் தேசியக் க…

  12. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் எதுவும் இடம்பெறவில்லை - சித்தார்த்தன் அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் முயற்சிகள் நடைபெறவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்ப டையிலேயே தேர்தலை நோக்கிய தாகவே அனைத்து கட்சிகளும…

    • 0 replies
    • 577 views
  13. மகிந்தரின் வாரிசு அரசியல் ஆசியாவின் புத்தம் புதிய அரச பரம்பரையின் ஒரு பிரிவாக முளைத்திருக்கும், சிறிலங்கா குடியரசு அதிபரின் 24 வயதேயான மகன் நாமல் ராஜபக்சவைப் பொறுத்த அளவில் தன்னடக்கம் என்பது ஒரு உறுதியான பண்பாகத் தோன்றவில்லை. “அதிரடியான, ஆர்ப்பாட்டமான இளம் நாமல் ராஜபக்சவைப் பார்க்கின்ற போது நற்பண்புகளை உடைய நட்பார்ந்த எதிர்காலத் தலைவர் ஒருவரே உங்கள் சிந்தனையில் தோன்றுவார்” என அவரது இணையத் தளம் கூறுகின்றது. இந்த ‘ரக்பி’ விளையாட்டு வீரர் கடந்த செப்டெம்பர் மாதத்தில் தான் லண்டனின் சிட்டி பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இப்போது அவரது தந்தையின் காலடித் தடங்களைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். அவ…

    • 0 replies
    • 801 views
  14. இன்று ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் பி.எம்.முர்ஷிதீன் பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நன்பகல் இரண்டு மணிக்கு மாதம்பிட்டிய மயானத்தில் இடம்பெறவுள்ளன. பிரபல நாடகக்கலைஞரும்,ஓவியரும்,கவிஞருமான ஸ்ரீதர் பிச்சையப்பா நேற்றுக்காலை சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். கலை,இலக்கியத்துறைகளின் வாயிலாக இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அன்பை வென்று,பெரும் பங்காற்றிய ஸ்ரீதர் பிச்சையப்பா குண்டு வெடிப்புச்சம்பவமொன்றின் போது பாதிக்கப்பட்டு,உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது. tamil.dailymirror

    • 10 replies
    • 1.8k views
  15. http://www.infotamil.ch/ எப்படியோ சில இரகசியங்கள் தானாகவோ அல்லது சிலரின் தேவை கருதியோ வெளியாகி விடுகின்றன. தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குப் புது டில்லியில் ஒரு அலுவலகம் என்ற சேதி இதில் எந்த வகையைச் சேர்ந்தது என இப்போதைக்கு கண்டிறிவது இயலாதுள்ளது. செய்தியின் மூல நாயகன் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்பதும் முன்னாள் விடுதலைப் போராளி இயக்கத்தின் தலைவர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை. அவர் இந்தச் சேதி பற்றித் தெரிவித்த தகவல்கள் துணிச்சலும் உண்மையும் நிறைந்து காணப் படுகின்றன. தம்மால் வெளி வந்த செய்தியைப் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டதோடு அப்படியான ஒரு பணி மனைக்கு நெடுநாட்களாகவே கோரிக்கை த.தே.கூ. தர…

  16. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இராஜபாதையாக விளங்கும் வீதியின் ஒரு பகுதியில் தொழிலாளர் குழுவினர் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் இணைக்கும் ஏ9 வீதியில் கனகராயன் குளம்வழியாக வீதி திருத்தப்பணி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.வெளிநாட்டு உதவி அதிகளவில் வந்துள்ளது. கிளர்ச்சியின் பின்னர் கொழும்பின் நிர்வாக வரை படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களில் கனகராயன் குளம் பகுதியும் ஒன்றாகும்.இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.இரு வாரங்களுக்கு ஒரு தடவை இங்குள்ள குடும்பங்களுக்கு 3 கிலோ அரிசியும் மாவும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படுகின்றது.கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. 400 பிள்ளைகளுடன் ஒரேயொ…

  17. ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆட்டம் போட நாம் தயாரில்லை - பிரதமர் ரட்ணசிறி விக்கிர ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆட்டம் போட நாம் தயாரில்லை. அத்தோடு எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். அதற்கு "சீருடை' விதிவிலக்காகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் அதற்கு சீருடை விதிவிலக்காகாது. அதற்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது. அணியும் சீருடை முக்கியமானதல்ல. சட்டத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமானவர்கள். சட்டம் நிறைவேற்றப்படாத இடம் பா…

    • 2 replies
    • 1.1k views
  18. தமிழீழ தேசத்தின் விடிவிற்காக தங்கள் உயரிய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட மாவீரர்கள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் வைத்து வணங்கப்படவேண்டியவர்கள். இன்று சிறீலங்கா தனது கோர முகத்தைக் காட்டி இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அழித்தபோதும் தமிழ் மனங்களில் இருந்தும் வரலாற்றின் பதிவுகளில் இருந்தும் மாவீரச் செல்வங்களை என்றுமே அழித்துவிடமுடியாது. அழித்துவிட முடியாத அந்த மாவீரர்களின் வரலாறுகளை, நினைவுகளை ஒரு பெரும் வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில் சங்கதி இணையத்தளம் இறங்கியுள்ளது. அந்தப் பெரும் பணிக்கும் வாசகர்களிடம் இருந்து உதவியைக் கோருகின்றோம். மாவீரர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆக்கங்கள், அவர்களின் நிழற்படங்கள், தரவுகள் எதுவாக இருந்தாலும் (முக்கியமாக அவர்களின…

    • 1 reply
    • 1.3k views
  19. எமது அமைப்பினர் இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர். முதலில் இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களின் நிதி தேவையினை பூர்த்தி செய்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்பு இலக்கம் : +447551449606 புகைப்படங்களை பார்க்க பின்வரும் இணைப்பினை அழுத்தவும் : http://tamilstu.blogspot.com/

  20. 17 சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களுக்கு இம்முறை சீட்டு இல்லை. கவலையில் வெளி நாடு செல்ல திட்டம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010 SLFP சிறிலங்கா சுதந்திர கட்சியில் இம்முறைபுதிய முகங்களை மஹிந்த அறிமுகப்படுத்துவதனால் முக்கிய , மூத்த உறுப்பினர்களுக்கு இம்முறை சீட்டு கிழிக்கப்படுகின்றது. 17 தொடக்கம் 20 வரையான சிறிலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கே இவ்வாறு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. மஹிந்த குடும்பமும் அவருக்கு நெருக்கமானவர்களும் இன்னும் 10 வருடத்தில் மஹிந்த குடும்பத்தின் வாரிசான நமல் இராசபக்‌ஷ அவர்களின் தலைமைத்துவத்தினை ஏற்று கொள்ளக்கூடியவாறு புதிய உறுப்பினர்களை கொண்டுவருவதாக இந்த மூத்த அமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே…

  21. இன்னமும் வேட்பாளர் தெரிவில் முடிவு இல்லை கூட்டமைப்பிற்குள் குழப்பம் கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 20, 2010 sampanthan polll கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிக்குள் கொள்கை தொடர்பாகவும், வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் குளப்பங்கள் தொடர்கின்றன. நேற்று இரவு நடந்த கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யாழ்ப்பாணம் வன்னி ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நடைபெற்றதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன், செயலர் மாவை, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தியாவின் சொற்படியே நடக்கவேண்டும் அவர்கள் ஆலோசனைபடியே அனைத்தையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உறுதியாக உள்ளனர். இந்தியா ஒரு வருடத்திற்குள் தீர்வ…

  22. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க புதிதாக சமுதாய கிராமங்கள் அமைக்கப்படும் என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. திறந்தவெளிச் சிறை போலவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கிராமங்களை விட்டு முன்னாள் புலிகள் அமைப்பினர் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இச்செய்தி குறித்து சிறீலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் சுதந்தா ரணசிங்கே நிருபர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில…

    • 10 replies
    • 777 views
  23. இரா.சம்பந்தன் வழங்கி பதிலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை! (நேர்காணல் ஒலி வடிவில்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கனேடியத் தமிழர் வானொலியில் நடைபெற்ற அரசியல் களம் நிகழ்வில் பங்கேற்று வழங்கிய நேர்காணலில் வழங்கிய பதிலையடுத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்பதியான கருத்துக்களும் ஒலி வடிவில் கேட்கலாம். http://www.pathivu.com/news/5620/54/.aspx நன்றி - பதிவு இணையம்

    • 23 replies
    • 2.5k views
  24. தமிழீழத்தைப் பெற முடியுமா? அன்புடையீர், நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமா…

  25. மனோ,ரவூப் ஹக்கீம் யானை சின்னத்தில் போட்டி கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 20, 2010 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் வடக்கு,கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிடத்தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டரங்கள் இன்று தெரிவித்தன. இதே வேளை மனோ கணேசனும் யானை சின்னத்தில் போட்டியிடுவது என்ற தீர்மானத்தில் உள்ளார். ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத்தினருடனான சந்திப்பில் முடிவுகள் சாதகமாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட வேண்டியதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருக்கு போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.