ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார். அதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால் சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. அதற்கிணங்க, குறித்த விநியோகஸ்தரிடமிருந்து விரைவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 08:04 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையையுடன் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணிக்கும் யோசனை நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் பிற நாட்டுகளுடன் இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணித்தால் இலங்கை ஒரு தீவு நாடு என்ற நிலையில் இருந்து நீக்கப்படும். ஆகவே இவ்விடயம் குறித்து சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 376 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 08:14 PM ( எம்.எம்.சில்வெஸ்டர்) நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் 10 வைத்திய முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது. EY Global Delivery Service வழங்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் …
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 08:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சார சபை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் மின்சக்தி நிலையத்துடன் இணைந்து பங்களிப்புடன் செயலாற்றியதுடன், 2019 ஆம் ஆண்டில் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செயலாற்றியதற்கு அமைவாக ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் பல்வேறு அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. அதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய புரி…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 AUG, 2023 | 09:54 AM மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பஸ் விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 02:41 PM (எம்.மனோசித்ரா) மூலோபாய சுற்றுப்புற ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் , பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் கடற்படைய தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுடனான சந்திப்பின் போது, குறித்த இந்திய தூதுக்குழுவின் ஏனைய செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 01:06 PM அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலனை நான் வரவேற்று கௌரவித்தேன். இவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பராவார். இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கடுமையாக உழைத்தவர். இந்த வாரம், செனட்டர் கிறிஸ் வன் ஹோலனும் நானும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம். அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப்…
-
- 9 replies
- 717 views
- 1 follower
-
-
யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் மாவா போதை பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/270840
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 12:26 PM அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போ…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்த முறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார். ஒருமுறை ஜன…
-
- 22 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 11:27 AM யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர். யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:43 AM 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய எஸ்டிடி - எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதே கால…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:31 AM நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரி உள்ளிட்ட ஏனைய மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இந்த மரணத்திற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தா…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 09:16 AM ( எம்.வை.எம்.சியாம்) நாட்டின் சுகாதார துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளது. இதே வேளை இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் முன்வைக்கவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து தட்ட…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்! ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் சிக்கல் ColomboTrincomaleeSri LankaIndia 5 மணி நேரம் முன் Dhayani in சமூகம் திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 35,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம் கொழும்பு மாவட்டத்தினை போன்ற ஒரு பிரதேசத்தினையே இவ்வாறு …
-
- 1 reply
- 377 views
-
-
”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது” மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Published By: VISHNU 28 AUG, 2023 | 07:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பு நாடாகிய இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ள நாடு என்றவகையில் இலங்கை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்வதென்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர…
-
- 0 replies
- 238 views
-
-
இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு
-
- 10 replies
- 1k views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:33 PM யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை திங்கட்கிழமை (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து இரு இடங்களில் கொள்ளையிடப்பட்ட 28 பவுண் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, வாள் ஒன்று மற்றும் நான்கு கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் அருட்தந்தையை கத்தி …
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:41 PM தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையை அண்டியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளையும், குடியிருப்புக்காணிகளையும் வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளன. இந் நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்குமாறும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அந்தவகையில் மக்கள் பிரதிநிதிகள், அரசஅதிகாரிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தண்ணிமுறிப்புப் பகுதிக்கு (28)இன்று விஜயம் மேற்கொண்டு காணிப் பிணக்குத் தொடர்பில் ஆ…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:46 PM பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் : சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார். ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்றே நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முருகதாஸ் திலக்சன் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந…
-
- 0 replies
- 497 views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 12:58 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை திங்கட்கிழமை (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளை தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட செயலாளரினால் அறி…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாதக் கைக்குழந்தையின் துயர மரணத்தைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் நோய் சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் காலி சிறைச்சாலையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. மூளைக்காய்ச்சல் நோய் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சிசு, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது. காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணம் நேரிட்டதா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த மரணம் மூளைக்காய்ச்சல் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார ச…
-
- 15 replies
- 915 views
- 1 follower
-