ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
சீனக்கடன்களை மீளச்செலுத்துவதற்கே அமெரிக்க நிதியுதவியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் : அதனை தமது மக்கள் விரும்பமாட்டார்கள் என்கிறார் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் 30 AUG, 2023 | 09:03 PM (நா.தனுஜா) இலங்கையுடனான கடன்மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் தெரிவிக்காமை பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென், எனவே இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கும் பட்சத்தில், அந்த நிதியை சீனாவின் கடன்களை மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்தவேண்டியிருக்கும் என்றும் அதனை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்ற…
-
- 0 replies
- 176 views
-
-
30 AUG, 2023 | 01:22 PM வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு சபை அமைக்கப்பட்டு, அது அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 'யாழ் முயற்சியாளர் –2023' விற்பனைக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த சுற்றாடலிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. …
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு காலை திருவிழாவும், 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 26ஆம் திகதி காலை 8:00 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 29ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 30ஆம் திகதி காலை 8:00 மணிக்கு தேர்த் திருவிழாவும், 31ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம் பெறவுள்ளன. பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உற்சவகாலங்களில் ஆ…
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்து வந்துள்ளனர். அவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்திருந்தது. இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான…
-
- 0 replies
- 307 views
-
-
27 AUG, 2023 | 02:31 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவு…
-
- 5 replies
- 374 views
- 1 follower
-
-
மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார். அதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால் சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. அதற்கிணங்க, குறித்த விநியோகஸ்தரிடமிருந்து விரைவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 08:14 PM ( எம்.எம்.சில்வெஸ்டர்) நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் 10 வைத்திய முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது. EY Global Delivery Service வழங்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் …
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 08:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சார சபை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் மின்சக்தி நிலையத்துடன் இணைந்து பங்களிப்புடன் செயலாற்றியதுடன், 2019 ஆம் ஆண்டில் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செயலாற்றியதற்கு அமைவாக ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் பல்வேறு அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. அதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய புரி…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2023 | 12:31 PM தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது. அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும், தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/artic…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 AUG, 2023 | 09:54 AM மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பஸ் விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:46 PM பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 02:41 PM (எம்.மனோசித்ரா) மூலோபாய சுற்றுப்புற ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் , பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் கடற்படைய தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுடனான சந்திப்பின் போது, குறித்த இந்திய தூதுக்குழுவின் ஏனைய செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் மாவா போதை பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/270840
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 12:26 PM அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போ…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திரக்கூடாது என்று அதற்கெதிராக முழு முனைப்போடு சோனகர்கள் ஆர்ப்பட்டங்களை அவ்வப்போது முன்னெடுப்பது கண்கூடு. அப்படித்தான், தமிழர்களுக்கான 13 ம் திருத்தச்சட்டம் என்னும் மாயமான் மூலம் கிடைக்கப்பெறும் அதிகார பகிர்வுக்கு எதிராக முஸ்லிம்கள் இன்று கல்குடாவில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் போது பேசிய சோனகர் ஒருவர், 13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கிழக்கு மாகாணத்திற்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கக்கூடாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும் முழக்கமிட்டார். மேல…
-
- 10 replies
- 961 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 AUG, 2023 | 11:27 AM யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர். யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:43 AM 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தேசிய எஸ்டிடி - எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதே கால…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 10:31 AM நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரி உள்ளிட்ட ஏனைய மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இந்த மரணத்திற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தா…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
29 AUG, 2023 | 09:16 AM ( எம்.வை.எம்.சியாம்) நாட்டின் சுகாதார துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளது. இதே வேளை இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் முன்வைக்கவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து தட்ட…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
திருகோணமலையில் இந்தியா வசமாகும் பல நூறு ஏக்கர் காணிகள்! ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் சிக்கல் ColomboTrincomaleeSri LankaIndia 5 மணி நேரம் முன் Dhayani in சமூகம் திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 35,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம் கொழும்பு மாவட்டத்தினை போன்ற ஒரு பிரதேசத்தினையே இவ்வாறு …
-
- 1 reply
- 376 views
-
-
”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது” மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Published By: VISHNU 28 AUG, 2023 | 07:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பு நாடாகிய இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ள நாடு என்றவகையில் இலங்கை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்வதென்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள 70,000 குடும்பங்கள் அத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தாளையடி பிரதேசத்தில் புதிய திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 24 replies
- 1.5k views
- 2 followers
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:33 PM யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை திங்கட்கிழமை (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து இரு இடங்களில் கொள்ளையிடப்பட்ட 28 பவுண் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, வாள் ஒன்று மற்றும் நான்கு கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் அருட்தந்தையை கத்தி …
-
- 0 replies
- 295 views
- 1 follower
-