Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள மக்களிடம் இனவாதத்தைத் தூண்டி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற மகிந்த அரசு முயற்சிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த வாரம் டில்லிக்கு விஜயம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை காட்டும் பிரமுகர்களை சந்தித்தோம். எனினும் இவ்விஜயம் குறித்து ஊடகங்களில் பல ஊகங்களுடனான செய்திகள் வெளி யிடப்பட்டன. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை டில்லிக்கு அழைத்த இந்தி…

  2. தங்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கோரி மேரக் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள். கடும் நோய்களால் சிறார்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு, மாபெரும் அவலத்தில் தவிக்கும் நிலையில் உலக சமுதாயம் ஒட்டுமொத்தமாக மெளனித்துக் கிடப்பதை உலகத் தமிழர்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் இனியும் வாழ முடியாது என்று முடிவெடுத்து சிறிய கப்பலில் ஆஸ்திரேலியா நோக்கி பயணித்த அந்தத் தமிழர்களை, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் உத்தரவுக்கிணங்க இந்தோனேசிய கடற்படையினர் கடந்த 11-10-2009 அன்று நடுக் கடலில் மடக்கி, மேரக் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர். அன்று முதல் இன்று வரை அந்த அப்பாவித் தமிழர்கள் கப்பலிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்க…

  3. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு பின்னடிப்பதாகத்தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கனகரத்தினம் ஆகியோர் முன்வந்தனர்.இவர்களைக் கொண்டு தமிழ்ப் பிரதேசங்களில் தனக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபடுத்த ஜனாதிபதி மகிந்த எண்ணியிருந்தார். இந் நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பாத சிவநாதன் கிஷோர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.சந்திரநேரு சந்திரகாந்தன் தன்னைத் தானே சுட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின…

  4. அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான பொடி அப்பு பியசேன என்பவரது வர்த்தக நிலையமே தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துவிச்சக்கர வண்டி, அதற்கான உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், கட்டிடப் பொருட்கள் என்பனவே தீ வைத்த சம்பவத்தில் வர்த்தக நிலையத்துக்குள் இருந்து சேதமடைந்தவை என தெரிவிக்கப்படுகிறது. தீ வைப்பு சம்பவத்தையடுத்து பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்களும் பொலிஸாரும் சேர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெ…

  5. வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கிக் கொள்வதில் சிறிலங்காவின் வங்கிகள் போட்டி போடத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைத்து தமிழ் மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான சிறிலங்கா வங்கிகள் இறங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் இரண்டு வர்த்தக வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தமது கிளைகளைத் திறந்துள்ளன. சனச வங்கி, வர்த்தன வங்கி ஆகியனவே நேற்று யாழ்.நகரில் கிளைகளை ஆரம்பித்துள்ளன. அதே வேளை, போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுவரையில் சுமார் இருபதுக்கும் அதிகமான புதி…

  6. வடக்கு கிழக்கில் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் தேவையாகும். தற்போதைய அரசின் ஆட்சியிலேயே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டதுடன்,சுனாமி கட்டமைப்பும் இல்லாமல் போனது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நிபுணத்துவக் குழுவின் அறிக்கையும் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தோல்வியின் விளிம்புக்கு வந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொன்சேகாவுடன் சம்பந்தன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளதாகக் கூறி இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, சுரே…

  7. “எல்லாவற்றையும் இழந்து விட்டோம்; யாராவது கொஞ்சம் உதவினால் நிமிர்ந்து விடுவோம்” கிளிநொச்சியின் பரந்து விரிந்த வயல் நிலங்கள் இன்று காடு பற்றிக் கிடக்கின்றன. கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்த ஆடுகளும் மாடுகளும் காணமல்போய் விட்டன. உழவு இயந்திரங்கள், உந்துருளிகள் அனைத்தும் மாயமாகி விட்டன. கட்டங்களும் வீடுகளும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு கற்குவியல்கள் ஆக்கப்பட்டு விட்டன. போரால் இடம்பெயர்ந்தவர்கள் அங்கே கொண்டு வந்து விடப்பட்டுள்ள நிலையில், அவர்களது பழைய வாழ்வின் மிகச் சொற்பமே அவர்களுக்காக விட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு எழுதியிருக்கின்றார் அமெரிக்க ஊடகவியலாளரான Krishan Francis. கிளிநொச்சிப் பயணத்திற்குப் பின்னான தனது செய்திக் க…

  8. யதார்த்தமாக சிந்திக்க வேண்டும் உருத்திரகுமாரனுக்கு சம்மந்தனின் பதில்.. உருப்படியாக இல்லாவிட்டாலும் செருப்படியாக சில செய்திகள் உள்ளன… தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்மந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் செருப்படியாகவேனும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும். சிந்தனை ஒன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதலில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று சம…

    • 1 reply
    • 1.4k views
  9. சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தமிழ் மக்களின் தீர்வு இல்லை: முல்லைமாவட்ட வெகுஜென அமைப்புக்களின் ஒன்றியம் சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தமிழ் மக்களின் தீர்வு இல்லை என்பதை உணரவைக்கும் வாக்கெடுப்புக்களாக பன்நாட்டு வாக்கெடுப்புக்கள் அமையவேண்டும் என்று முல்லைமாவட்ட வெகுஜென அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முல்லை மாவட்ட வெகுஜென அமைப்புக்களின் ஒன்றியச்செயலாளர் சிலைவேந்தன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் சிறீலங்காப்படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து சிறீலங்காப்படையினரின் வல்வளைப்புக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் பன்நாட்டு தமிழ் மக்களின் எழுச்சிகளை அறிந்துகொள்ள முடியாமால் சிறீலங்கா அரசு ஊடக அடக்குமுறையினை முன்னெடுத்து வருகி…

  10. திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுத்தமாக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர் கூறுகையில், எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சேவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள். எனவே இவர்களுக்கு வாக்…

    • 12 replies
    • 1.4k views
  11. இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் "கதாநாயகர்கள் வெற்றிபெற்றாலும் யுத்தத்தினால் சின்னாபின்ன மடை ந்திருக்கும் நாட்டில் நீடித்த சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலுக்கான இதய சுத்தியுடனான நடவடிக்கைகளே தேவைப்படுகின்றது. நாட்டின் எதிர்காலம் இவற்றிலேயே தங்கியுள்ளது என்று இந்திய தேசிய பாதுகாப்புச் சபையின் முன்னாள் உறுப்பினரும் புதுடில்லியிலுள்ள கொள்கை ஆய்வு நிலையத்தின் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான பேராசிரியருமான பிரம்மா செல்லானி தெரிவித்துள்ளார்.கார்டியன் பத்திரிகையில் "சமாதானத்தில் தோல்வியடைந்த இலங்கையின் போர்க் குதிரைகள்%27 என்ற தலைப்பில் பிரமா ரெல்லானியின் கட்டுரை நேற்று ச…

  12. சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கும் டப்ளின் போர்க்குற்ற விசாரணைகள் டப்ளினில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையை சிறிலங்கா நிராகரித்துள்ள போதும், இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். சிறிலங்கா அரசு அனைத்துலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எதிர்நோக்கும் முதலாவது சிக்கல் இதுவாகும். அதேவேளை சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக அனைத்துலக அளவில் நன்கு அறியப்பட்ட நீதியாளர்கள் கூறியிருப்பதால், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் சிறிலங்கா அரசின் அழுத்தங்க…

  13. தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். இதனை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நாம் எடுத்துக்காட்டுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு சென். ஜோன்ஸ் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்திலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய சம்பந்தன் பா.உ. மேலும் கூறியதாவது, தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது ஆயுதங்களுடன் ஆரம்பிக்கப்படவில்ல…

  14. சிறிலங்க அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - ஏன்? எம்.ஜி. தேவசகாயம் செவ்வாய், 19 ஜனவரி 2010( 18:32 IST ) WD இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து செயல்பட்டுவரும் சுதந்திர அமைப்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal - PPT), இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்ற‌ங்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பொங்கல் தினத்தன்றும், அதற்கு மறுநாளும் விசாரணை நடத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அளித்த சாட்சியங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த அத்தீர்ப்பாயம், சிறிலங்க அரசு போர் குற்றவாளியே என்றும், அது மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் தனது முதற்கட்டத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.…

  15. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெவித்தார். கினிகத்தேன பிளக்வாட்டர் தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெவித்தார்.அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழர்களுக…

    • 6 replies
    • 1.1k views
  16. வன்னியில் இறுதி மோதல்களின் போது புதுமாத்தளன் மருத்துவமனையில் கடமையாற்றிய மருத்துவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப் படவில்லை என்று அவர்கள் அனைவரையும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. முல்லைத்தீவு மருத்துவமனையில் கடமையாற்றிய Dr.சத்திய மூர்த்தி, Dr.வரதராஜா, Dr.சண்முகராஜா, Dr.இளஞ்செழியன், Dr.வல்லவன் உட்பட்ட உதவியாளர் கேதீஸ் ஆகியோர் நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் பிணையில் விடுதலையாகியிருந்த இவர்களுக்கு வாரந்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், நீதி விசாரணைகளுக்கு தவறாது சமூகமளிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த …

    • 4 replies
    • 1.1k views
  17. பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்புக்கு வருகை தந்துள்ளது.'பிஎன்எஸ் ஷம்ஷீர்' [PNS Shamsheer] என்ற பாகிஸ்தான் போர்க்கப்பலே தற்போது கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க விஜயம் செய்திருந்தார். இதன்போது பாகிஸ்தான் போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நெய்மத்துல்லாவுடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார். நல்லெண்ண பயணமாக வந்துள்ள இந்தப் போர்க்கப்பல் சில நாட்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கும் எனத் தெரியவருகிறது.123 மீற்றர் நீளமும் 1883 தொன் எடையும் கொண்ட இந்தப் போரக்கப்பலில் 14 அதிகாரிகள் உட்பட 202 பாகிஸ்தான் கடற்படையினர் பணியாற்…

  18. அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல் மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், குறித்த 78 பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியிருந்த 13 பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது. http://www.var…

  19. வன்னிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று வன்னி பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காலில் காயம டைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்னா தெரிவித் துள்ளார். வன்னி பகுதியில் உள்ள புளியங்குளம் பகுதியில் இடம் பெயர் ந்த மக்கள் தங்கியுள்ள முகாமிற்கு அருகில் இந்த சம்பவம் நடை பெற்றதாகவும் காயமடைந் தவர் ஆபத்தாக கட்டத்தை தாண்டி விட்டதாக வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.valampurii.com

  20. தேர்தல் வன்முறைகள் அச்சம் தருகிறது – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தேர்தல் தொடர்பான வன்முறைகள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துச் செல்வது தொடர்பாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறவேண்டுமானால், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக கொள்கை ரீதியிலான விடயங்களை முதன்மைப்படுத்தி பல்வேறு விடயங்களை வெளியிடக்கூடிய சுதந்திரம் அவசியம் என அறிக்கை ஒன்றில் இலங்கை ஆயர்கள் பேரவை கேட்டுள்ளது. அதன் காரணமாக சகல மட்டங்களிலும் நடைபெறும் வன்முறைகளை தடுப்பதோடு வேட்பாளர்களுக்கும் அவர்களின் அரசியல் கட்சிகளுக்கும் எதிரான அவதூறுகளை வெளியிடுதற்கு பதிலாக வாக்காளர்களை தெளிவுபடுத்துவதற்கான விவாதங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை…

  21. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகம் இந்துக்களின் புனித பிரதேசமாக சனாதிபதி மகிந்தராஜபக்ஷவினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெரும் பழமைவாய்ந்த இந்த ஆலய அபிவிருத்திக்கும் வசதிகளை மேம்படுத்தவும், புனருத்தாணத்திற்கும் வடக்கில் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஊடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்து ஆலயங்கள் அமைந்துள்ள வளாகங்களை புனித பிரதேசங்களாக்க இதற்கு முன்னரும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சாத்தியப்படவில்லை. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் மன்னார் திருக்கேதீஸ்வரம் பாடல் பெற்றதலமாகும்.

  22. சிவாஜிலிங்கம் மாலைதீவு சென்று திரும்பினார்;புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு மாலைதீவில் இடம்பெற்ற புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும் ஜானாதிபதித் தேர்தல் குறித்தும் தமது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று காலை நாடு திரும்பியுள்ளதுடன், தற்போது மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் போது தமது நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் , இது குறித்து விரைவில் சாதகமான அறிக்கை விடுவதாகவும் அவர்…

  23. அவுஸ்திரேலியா நோக்கி அகதி தஞ்சம் கோரி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்ட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தமது 100 வது நாளையும் இன்னமும் கடலிலும் கப்பலிலுமே கழிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள். ஈழத்தில் அல்லலுற்ற இவர்கள் தற்போது இந்தோனேசியாவிலும் அல்லலுறுகின்றனர். கடுமையான காலநிலை சீர்கேட்டால் அகதிகள் தங்கியிருக்கும் கப்பல் பகுதி பகுதியாக சிதைந்து எந்நேரமும் பெரும் உயிர் ஆபத்தை உண்டுபண்ணக் கூடிய நிலையில் இருக்கின்றது என்று அதிர்வு இணையம் அறிகிறது. குழந்தைகள் பெண்கள் மற்றும் ஓர் கர்ப்பிணி பெண் உட்பட நூற்றுக்கணக்கான அகதிகள் சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய் தாக்கத்தி…

  24. இறுதிப்போரில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் பலி; 36 ஆயிரம் வீரர்கள் அங்கவீனர்களாயினர்: சரத் பொன்சேகா இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது மகிந்த ராசபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போது சிறி…

  25. சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மகிந்தராஜபக்ச உத்தரவு சிறீலங்காவில் உள்ள அனைத்து பாதுகாப்புக்களையும் பலப்படுத்துமாறு மகிந்தராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். சிறீலங்காவில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைகளில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி வன்முறைகள் பதிவாகியுள்ளதுடன், துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தும் ஐம்பது வரையானோர் காயமடைந்துமுள்ள நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பினை பலப்படுத்திகொள்ளுமாறு அவரச உத்தரவினை சிறீலங்கா அரசதலைவர் மகிந்தராஜபக்ச விடுத்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2987&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.