ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
அடுத்த மாதம் டிசம்பர் முதலாம் திகதிமுதல் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும் என பசில் இராகபக்ஸ இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இன்று மெனிக் முகாமில் நடந்த விசேட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக மாற்றப்படும் எனவும். அதே நேரம் ஜனவரி 31 இற்கு முன்பாக அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அழுத்தம், வருகின்ற ஜனவரி மாதம் வரப்போகின்ற தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே இந்த முடிவு என தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.2k views
-
-
சரத்பொன்சேகா நேற்று மாலை இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா புட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க தூதரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சரத் பொன்சேகாவின் வேண்டுதலின் பேரில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இதே நேரம் சந்திப்பின் நோக்கம் பற்றியோ அல்லது என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பதனையோ சரத் பொன்சேகா கூறமறுத்துவிட்டார். அதே போன்றி அமெரிக்க தூதரும் சந்திப்பு நடந்ததனை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை என தெரியவருகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 751 views
-
-
ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் …
-
- 36 replies
- 3.4k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
- 8 replies
- 1.6k views
-
-
தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம். தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்…
-
- 16 replies
- 2.2k views
-
-
இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம். போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என …
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அது சகலரையும் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடுமென சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவுத்துறைப் பணிப்பாளர் கரோலின் எட்கின்சன் தெரிவித்துள்ளார். மனித உரிமை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்தால் ஒட்டு மொத்த மக்களே அதனால் பாதிக்கப்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net
-
- 0 replies
- 690 views
-
-
வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ஈழத் தமிழர்களில் 1,19,000 பேரை அவர்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியுள்ளோம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ள நிலையில், முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் கண்டு விவரித்துள்ளது கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இணையத் தளம். கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இந்த இணையத் தளத்தை சிறிலங்கப் பத்திரிக்கையாளர்களே நடத்திவருகின்றனர். இதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு கடந்த வாரம் மாணிக்கம் பண்ணை முகாமிற்கும், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தனது பயணத்தில் கண்டதை உள்ளது உள்ளவாறு விவரித்துள்ளார். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று தமிழகத்தின் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம் இவ் விடயம் 20. 11. 2009, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:54க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவ…
-
- 0 replies
- 959 views
-
-
சரத்பொன்சேகாவின் பதவி விலகல் கடிதமும், அவர் குறிப்பிட்ட 16 காரணங்களும் ! திகதி: 14.11.2009 // தமிழீழம் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகம்,கொழும்பு 2009 நவம்பர் 12 மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோள், 1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டப்ளியூ.பி., ஆர்.எஸ்.பி., வி.எஸ்.வி., யூ.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி அதிகாரி தரத்திற்கு நியமிக்கப்பட்டேன். தனிப்பட்ட ரீதியா…
-
- 2 replies
- 635 views
-
-
பேராதனை பல்கலைகழகத்தில் கலைப் பிரிவில் 2ம் ஆண்டில் கல்வி பயிலும் ராசையா துவாரகா எனும் மாணவி கடந்த 12ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம். அன்று வியாழக்கிழமை, நேரம் மாலை 5.05 பேராதனையின் அழகிய பல்கலைக்கழக வளாகம் பட்டப்படிப்பினை பெறுவதற்காக வந்திருந்த மாணவர்கள் விரிவுரையாளர் மண்டபத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். புவியியல் விரிவுரை மண்டபத்தை விட்டு துவாரகா வெளியே வந்தாள். அடுத்த விரிவுரை மண்டபத்துக்குச் செல்வதற்காக அடியெடுத்து வைத்தாள், பின்னாலிருந்து ஒரு குரல் கடுமையான தொனியில் கட்டளையிட்டது. ஏய் அப்படியே நில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
sorry allready post same news.any way im really sorry.
-
- 0 replies
- 784 views
-
-
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது …
-
- 0 replies
- 449 views
-
-
அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த நான்கு புதிய நிபந்தனைகளை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி்த் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே விதித்துள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக அவர்கள் பொன்சேகாவை தேர்வு செய்து வைத்துள்ளனர். இருப்பினும் பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் சுத்தமாக ஆதரவு இல்லை. மேலும் தமிழ்க் கட்சிகளும் கூட ஆதரவு தர தயக்கம் காட்டுகின்றன. இதையடுத்து அவருக்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சில உத்தரவாதங்களைத் தர வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே கூறி வருகிறார். இதுதொடர்பாக அவர் நான்கு புதிய நிபந்தனைகளை பொன்சேகாவுக்கு விதித்து…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கையில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்காக தான் உறுதியுடன் பாடுபடப் போவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். இராணுவ வீரர்களுக்கு அனுப்பிய பிரியாவிடைக் கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார் இராணுவத்தில் இருந்த போது தான் முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றியது போல் தான் நேசிக்கும் தனது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அதேயளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூற்று அவரது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். http://www.tamilstar.org
-
- 0 replies
- 622 views
-
-
முன்னாள் சிறிலங்கா இராணுவ பிரதானி சரத் பொன்சேகா தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சினால் கோரப்பட்டுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் உத்தியோக பூர்வ இல்லம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதால், உடனடியாக புதிய பாதுகாப்பான இருப்பிடத்தினை பெற்றுக் கொள்வதில் சரத் பொன்சேகா சிக்கல்களை எதிர் நோக்குவதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரத் பொன்சேகா தனது பதவியை கடந்த திங்கட் கிழமை இராஜினாமா செய்தபோது உத்தியோகபூர்வ இல்லம் தற்போது கையளிக்கப்படத் தேவையில்லை எனத்தொரிவிக்கப்பட்ட போதும், தற்போது உடனடியாக இவ் உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை இவ்…
-
- 0 replies
- 571 views
-
-
ஜனரல் சரத் பொன்சேக்கா தம்முடன் பெரும் வைராக்கியம் கொண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே ராவய பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். . ஜனரல் சரத் பொன்சேக்கா தம்முடன் பெரும் வைராக்கியம் கொண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே ராவய பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவிற்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து ராவய பத்திரிகை கோதாபயவிடம் கேட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு குறித்து அனைத்துப் பணிகளையும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் செயற்பாட்டின் கீழேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தம்மீதே சரத் பொன்சேக்கா பெரும் வைராக்கியம் கொண்டிருப்பதாகவும் கோதாப…
-
- 0 replies
- 811 views
-
-
கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார். சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு …
-
- 0 replies
- 835 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார். பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடத்தப்படும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அங்கு சென்றிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர். இதேசமயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நா…
-
- 5 replies
- 910 views
-
-
-
தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மீனவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே எழுந்துள்ள எழுச்சியையும் சிங்கள அரசுக்கு எதிரான மீனவர் போராட்டத்தையும் மழுங்கடிக்கவும் அதை திசை திருப்பவும் நிகழ்வுகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் திட்டுவதாகவும் இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் சிங்கள அரசுக்கு செய்தி அனுப்பி சிங்களப் படைகள் தமிழக மீனவர்களை அடித்து துரத்தி அனுப்புகின்றனர் என்றும் இதற்கு ஆதாரமாக சி.டி க்கள் இருப்பதாகவும் தமிழக மீனவர்களை வெறுப்படையச் செய்ய திட்டமிட்டே கொடுமையான செய்திகளை மீனவர்களிடையே பரப்பப்படுகின்றன. இந்தத் துரோகத்திற்கு துணையாக தமிழகத்திலுள்ள சில வார இதழ்களின் நிருபர்கள் இர…
-
- 0 replies
- 692 views
-
-
தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார். இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரை தொடங்கி, கூடவே கணிசமான தமிழ் மக்களை அழித்த, சரத் பொன்சேகா என்ற முன்னாள் இராணுவத் தளபதியை தான் சொல்கிறேன். உலகம் எப்படி கணித்திருந்தாலும், சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஒரு மாபெரும் வீரனாக பார்த்தார்கள். யாரும் வெல்ல முடியாத போரில் தமிழரை அடக்கி வெற்றிவாகை சூடிய மகிந்த மகாராஜாவின், தானைப் படைத்தளபதியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவி இருந்தது. நாடெங்கும் முக்கிய நகரங்களில் தென்னை மர உயர கட்-அவுட்களில் சரத், மகிந்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தார். ரஜனி ரசிகர்கள் போல பாலபிஷேகம் செய்யாதது மட்டுமே பாக்கி. அநேகமான கட்-அவுட்கள், போஸ்டர்களில்…
-
- 0 replies
- 851 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தம் குடும்பத்துடன் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு வன்னி / ஈழ மக்களை மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டும் என எதிர்பார்க்கும் மனிதர்களுக்கு இந்த துயர் செறிந்த கதைகள் சமர்ப்பணம். இவற்றை வாசித்த பின்னும், இந்த மக்கள் அரச பாதுகாப்பை விரும்பித்தான் சென்றனர் எனச் சொல்லவும் எம்மிடம் ஆட்கள் இருப்பினம் குளோபல் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு என் நன்றிகள் மூல இணைப்பு தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரியின் சகோதர வாரப் பத்திரிகையான மித்திரன் வாரமலர் நடுப்பக்க சினிமா மற்றும் கிசுகிசுக்கள், துப்பறியும் தொடர்கதைகள், மூன்றாந்தரப் பாலியல் தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் எனப் பல்சுவை அம்சங்களுடன் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரங்களின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அவ்வியக்கத்தின் ஒருங்கினைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்ச…
-
- 1 reply
- 669 views
-