Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி' திங்கள்கிழமை, நவம்பர் 9, 2009. சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிவத்தம்பிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதில் சிவத்தம்பி கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு ஈழத் தமிழ…

    • 11 replies
    • 1.5k views
  2. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசின் தீவிர விசுவாசிகள். அவர்கள் சுயாதீன அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் திராணியற்றவர்கள் என்று சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் கடுமையாகச்சாடியுள்ளது. குறிப்பிட்ட குழுவினர் விமர்சனத்துடன் கூடிய அறிக்கையொன்றை முன்வைப்பார்கள் எனக் கனவு கூடக் காணமுடியாது. தேசிய விசாரணையொன்றை மேற்கொள்வதாகத் தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொய் சொல்லியுள்ளார் என்பதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதாவது உணரவேண்டும் என்…

  3. சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தவுள்ளதாக உள்ள நிலையில், சரத் பொன்சேகாவுடனோ அல்லது அவரது பிரதிநிதியுடனோ முக்கிய சில விடயங்களைப் பேசுவதற்கு இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் இந்த வாரம் இலங்கை செல்லவுள்ளதாக தூதரகத் தரப்பின் தகவல்களைச் சுட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இந்திய தூதரகத்தின் அதிகாரியொருவர் அண்மையில் சரத் பொன்சேக்காவை சந்தித்துள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்த போது, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் அவரைச் சந்தித்த ஏலவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந் நிலையில், சரத் பொன்சேக்காவின் விசேட …

    • 0 replies
    • 716 views
  4. சுவிஸ்முரசம் கிழக்கு மாகாணத்தில் மிஞ்சியிருந்த தமிழர்களின் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் தொடர்ச்சியாக பறிபோய்கொண்டிருப்பது குறித்து இன்று என்னோடு கலந்துரையாடிய திருகோணமலையை சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் கவலை தெரிவித்தார். கிழக்கு மாகாண தமிழர்களின் பாரம்பரிய நகராக திகழும் திருகோணமலை இன்று பேரினவாதிகளின் கைக்குள் செல்வதற்கு அமைச்சர் முரளிதரன் மும்முரமாக ஈடுபட்டுவருவது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கிழக்கில் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அயராத முயற்சியினால் தமிழ் உணர்வுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு “தமிழ் தேசிய கூட்டணி”உருவாக்கப்பட்டு அத…

  5. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு தவபாலன் அறிவன் வழங்கிய நேர்காணல். 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசிலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றவர் தவபாலன் அறிவன். http://www.yarl.com/audio/thavapalan_arivan_091109.mp3

  6. மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மீது எந்த தடைகளையும் விதிக்கும் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் குற்ற சாட்டு தொடர்பாக இலங்கையின் படைதுறை அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயண தடைபோன்ற தடைகளை விதிக்குமா என கேட்டபோதே ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள் அவ்வாறான திட்டம் இல்லை என குறிபிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் திடகாத்திரமான உறவுகளை மேற்கொண்டுவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.http://www.eelanatham.net/news/important

  7. இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் கப்பலிற்குள் இருக்கும் 78 பேரினுள் விடுதலைப் புலிகளும் இருப்பதாகவும் சிலர் உயர் பதவியிலுள்ள உறுப்பினர்கள் என்றும் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி தெரிவித்துள்ளார். இவர்களின் புகைப்படங்களை வைத்து இதனை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ளவர்களை அவுஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆலோசனைகளில் அவுஸ்ரேலிய ஈடுபட்டு வரும் வேளை அதனை தடுப்பதற்காகவே இந்த புரளியினை கிளப்பிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். 09 November 09 02:12 pm (BST) வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செய…

  9. சிறிலங்காவில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்ட போதும், புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு உள்ளபடியே உள்ளது. இந்த வலையமைப்பு இருக்கும் வரையில் புலிகள் மீளவும் உயிர்ப்பதைத் தடை செய்யமுடியாது என சிறிலங்கா அரசு கருதுகிறது. ஆகவே வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி.மூலம் தாம் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரின் பெயர் விவரங்களைப் பெற்றுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதன் மூலம், விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றுமுழுதாக அழித்தொழிக்…

  10. காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினை சுவிஸ் நாட்டின் சீமெந்து உற்பத்தி கம்பனியான ஹோல்சிம் கம்பனியுடன் சேர்ந்து இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை டுபாயில் உள்ள அந்த கம்பனியுடன் நடைபெறுகின்றன. காங்கேசன் துறை சீமெந்து கம்பனி மிக நீண்டகாலமாக இயங்காது இருந்தன. இதனால் கிரைய விரயத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை அந்த பகுதி மக்கள் இழந்தாலும் அதைவிட பேராபத்தினை ஏற்படுத்தும் சூழல் மாசடைதல் நிகழ்வு தடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய கம்பனிகள் இந்த தொழிற்சாலையினை இயக்க முண்டியடித்துகொண்டு வந்தன. ஆனால் இப்போது இந்த ஒப்பந்தத்தினை சுவிஸ் கம்பனிக்கு கொடுக்க அரசாங்கம் முடிவு செய்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    • 1 reply
    • 818 views
  11. ஜி.எஸ்.பி வரி சலுகையினை நிறுத்துவதன் மூலம் எம்மை கைவிட்டு விடாதீர்கள். உங்களால் வழங்கப்படும் சலுகை மூலம் கிடைக்கும் பணம் இடம்பெயர்ந்த மக்களுக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமே பயனளிக்கும். இங்கு பெருமளவான வீதிகள் பாடசாலைகள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே சுனாமியின் பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட்ட வரி சலுகை வழங்கும் ஒப்பந்தத்தத்தினை நிறுத்தாது கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கைக்கான பேராயர் அதி, வண மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவரின் பக்க சார்பான அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆனது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது.காரணம் முகாம்களில் அடைபட்டு இருக்கும் மக்கள் தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக…

  12. தமிழிழ விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றதாக பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 46 மலையக தமிழ் இளைஞர்கள் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டனர். பொலிசாரின் முறைப்பாட்டினை விசாரித்த நீதிபதி 46 பேரினையும் தொடர்ந்து சிறையில் வைக்கும் உத்தரவினை வழங்கியுள்ளார்.பல்வேறு சூழல்களில் கைது செய்யப்பட்ட இவர்களிற்கு தற்போது புலிகளிடம் பயிற்சி பெற்றார்கள் என பொய் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்து சிறையில் வைக்க அனுமதி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important

  13. "பல தசாப்தங்களாக நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுடனான இராணுவத்தினரின் யுத்தம் இவ்வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.இதனை நாட்டின் அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது சீருடையினை கழற்றி வைப்பதற்கு தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அனைவரதும் கவனம் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக…

  14. பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக-போராட்டமாக வெடிக்கும்:சீமான் on 09-11-2009 05:41 Published in : செய்திகள், தமிழகம் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார். நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய சீமான் தெரிவித்ததாவது : இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. மனிதநேயம் பேசும் மார்க்ஸிஸ்டுகளும் இதனை ஆதரிக்கவில்லை. திராவிடம் பேசி பேசி தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம். உங்க…

  15. தடுப்பு முகாம்களில் விடுதலைப்புலிகளின் துண்டு பிரசுரங்கள்! தமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும்இ அவர் தலமையில் போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து யாரையும் செயற்படவேண்டாம் எனவும் வாசகங்களில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த துண்டுபிரசுரங்களை கண்டபின்னர் அங்கு விடுதலைப்புலிகள் இன்னமும் இருக்கலாம் என பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு பிரிவுஇ குற்றதடுப்பு பொலிஸ் பிரிவுஇ இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியன சேர்ந்து தடுப்பு முகாம்களில் இருக்கு…

    • 0 replies
    • 1.5k views
  16. சிறீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போத…

  17. போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது - தமிழீழ விடுதலைப் புலிகள் திகதி: 08.11.2009 // தமிழீழம் போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09-11-2009 சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள…

    • 24 replies
    • 2.8k views
  18. சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரிக்கு இராமேஸ்வரத்தில் கறுப்புக்கொடி காட்டப்படது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். நேற்று இரவு இராமேஸ்வரத்தில் தங்கிய இவர்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் வருகை ரகசியமாக வைக்கப்படிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இது குறித்த தகவலறிந்த செய்தியாளர்கள் , ஆதரவாளர்கள், இராமேஸ்வரத்திற்கு விரைந்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் உள்பட ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் பலர், ராஜபக்சே சகோதரி குடும்பத்தினரின் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இராமேஸ்வர மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்திச்…

    • 2 replies
    • 1.2k views
  19. திருப்பூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் [படங்கள்] திருப்பூரில் கொட்டும் மழையிலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் சீமான் 7.30 மணியிலிருந்து 9 மணி வரை கடும் மழைக்குள் உரையாற்றினார். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் காணொளிகளும் செய்திகளும் இணைக்கப்படும்…. http://www.meenagam.org/?p=8033

  20. விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்… [படம்] “ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞாரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞாரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது. ஆறு மாதக்காலத்திற்குப்பின் திடீரெனக் கலைஞருக்கு ஈழத்தமிழர்மேல் கரிசனைப் பிறக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் கேட்காத இராஷபட்சே, கருணாநிதியின் குழு இலங்கை சென்று வந்தவுடன் ,மக்களை முகாமை விட்…

  21. கொழும்பிலுள்ள ஹில்டன் விடுதியில் தற்போது தங்கியிருக்கும் இந்திய சோதிடரான தேவந்திரராஜா கொழும்பிலுள்ள வர்த்தகர்களை அழைத்து அவர்களுக்கு இலவசமாக சோதிட பலாபலன்களைத் தெரிவித்துவருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தின் சில அதிகாரிகள் கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு தேவேந்திர ராஜாவைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த வர்த்தகர்களுக்கு சோதிட பலனைக் கூறியுள்ள தேவேந்திரராஜா, எதிர்காலத்தில் சிறந்த காலம் உதயமாகும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் பல வருடங்களுக்கு நாட்டின் தலைவராக செயற்படுவார் எனவும், நாடு விரைவில் அபிவிருத்தி அடையும் எனவும் வலியுறுத்தி கூறியுள்ளார். ஜனாதிபதி சார்பில் நிரு…

    • 0 replies
    • 1k views
  22. இந்து, இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம், ஆகிய நான்கு மதத்தத் தலைவர்கள் ஒன்றினைந்து, கத்தோலிக்க மத்தின் நிர்வாக தலைமைத்துவம் ஆட்சி செய்யும் வத்திக்கானிலுள்ள உலகத்திலேயே மிகவும் பிரமாண்டமான தேவாலயம் என்று கருதப்படும்புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் முன் நிற்கும் இந்தப்படத்தினைப் பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு ஆன்மீகப்பரவசம் ஏற்படலாம். தப்பேயில்லை. மக்களை வாழ்விக்கும் மார்க்கங்கள் எனத் தோற்றம் பெற்ற மதங்கள், பிளவுபட்டு நின்று, மக்கள் வாழ்வுகளை கூறுபோடாது ஒன்றித்திருப்பது உலகத்திற்கு நன்மையே என்பது பொருத்தமான வாதமும், வாசகமும். மக்களை, மக்களின் வாழ்வினை, சுக துக்ககங்களை புரிந்தும், பகிர்ந்தும், அவர்களை ஆன்மீக உச்சநிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு, துறவிகளும்,மதகுரு…

    • 0 replies
    • 777 views
  23. அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது. அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான். மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?) இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் …

    • 6 replies
    • 1.4k views
  24. விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை உக்ரைன் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும், ஆசியா, ஆபிரிக்கா நாடுகள் பலவற்றிடமிருந்து ஆயுதங்கள் கிடைத்தபோதும் மிகமுக்கியமானது உக்ரைன் தான் எனவும் ஜப்பானின் கியோடோ நியூஸுக்கு அளித்த பேட்டியொன்றில் கருணா கூறியுள்ளார். வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் பெறப்பட்டனவா எனக் கேள்வி கேட்டபோது, அங்கிருந்தும் ஆயுதங்கள் கொள்வனவு செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவை எதுவும் ஒருபோதுமே வெற்றியளிக்கவில்லை என அவர் கூறினாராம். ஆனால் புலிகள் வடகொரியாவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாக கொழும்பின் நன்கு தகவலறிந்த ராணுவ அதிகாரி தமது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் கூறியதாக கியோடோ தெரிவித்…

  25. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் இந்த வருடம், தேசிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.