ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142959 topics in this forum
-
இலங்கையில் நடைöற்ற 26 வருட கால யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்குஇ காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கவில்லை என்பது குறித்து பூரண விசாரணை ஒன்று நடத்தப்படவில்லை என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் றுபேர்ட் கொல்வில் தெரிவித்தார். இலங்கை படையினரும்இ விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் ஜுரர் றிச்சட் கோல்ட்ஸ்ரோன் தலைமையில் நடத்தப்பட்ட காஸா யுத்த விசாரணை போன்றதொரு விசாரணை …
-
- 0 replies
- 625 views
-
-
நாம் தமிழர் இயக்கம் துவங்கி தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். இன்று (சனிக்கிழமை) மாலை 6மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு சீமான் தலைமையேற்று உரையாற்றுகிறார். இப்பொதுக்கூட்டத்திற்கு வரும் சீமானுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை முழுவதும் சுவரொட்டிகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. பிரபாகரன் படத்திற்கு போலீசார் அனுமது மறுத்துவிட்டனர். சீமான் படம் மட்டும் வைப்பதற்கு போலீசார் அனுமது அளித்துள்ளனர். அதன்படி திரும்பிய பக்கமெல்லாம் சீமான் படம் இருக்கிறது. இணைய இணைப்பு http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=…
-
- 0 replies
- 847 views
-
-
இலங்கை ஜி.எஸ்.பி. வர்த்தகசலுகையைப் பெறவேண்டுமானால் அந்த நாடு தனது மனித உரிமைக் கடப்பாடுகளைத் தீவிரமா நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வலியுறுத்திக் கூறியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் இதனைத் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.பி. வர்த்தகச் சலுகையைப் பெறுவதற்கு அவசியமான 27 சர்வதேச பிரகடனங்களை இலங்கை பின்பற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்இ இதுபற்றி மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சமீபத்தில் சந்தித்தவேளைஇ இடம்பெயர்ந்த நிலையிலுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துமாறு கோரினோம். விரைவில…
-
- 0 replies
- 546 views
-
-
வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாக விகாரையில் சிங்கள சமயச் சடங்கான பெரகராவை இலங்கை இராணுவத்தினர் கொண்டாடியுள்ளனர். ராஜபக்சவின் புதல்வர் நிமல் ராஜபக்ச சுமார் 250 சிங்கள இளைஞர்களுடன் , வந்திருந்ததாகவும், பல புத்தபிக்குகள் அதில் கலந்துகொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலை வீதியில் தொடங்கி ராசாவின் தோட்டம் வீதி, மற்றும் நாவலர் வீதி என பல வீதிகளில் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் கண்ணிவெடியில் பல இராணுவத்தினர் ஆரியகுழம் பகுதியில் கொல்லப்பட்டதும், பின்னர் புலிகளால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதால் இந்த நக விகாரை செயலிழந்து இருந்தது யாவரும் அறிந்ததே. இன்று நிலை தலை கீளாக மாறியுள்ளது. தட்டிக்கேட்க்க ஆளில்லை அதனால் …
-
- 1 reply
- 587 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக் கட்ட மோதல்களின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இரு தரப்பினராலும் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான துரித விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டதனைப் போன்று இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையை கண்டறியும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என நவனீதம் பிள்ளையின் பேச்சாளர் ரூ…
-
- 0 replies
- 406 views
-
-
தடுப்பு முகாமில் உள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கும் கொடையாளர்கள் தடுப்பு முகாம் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி திரு நீல் பூனே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களிற்கு அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தாம் கொடையாளர்களுடன் பேசியதாகவும் ஆனால் அதில் சிறிதளவேனும் முன்னேற்றத்தினை காண முடியவில்லை என்றும் கூறியுள்ளார். கொடையாளர்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் தமது கரிசனையினை வெளிப்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார். திரு நீல் பூனே. 185 திட்டங்களுக்கு சுமார் 270 மில்லியன் டொலர்கள் தேவை எனினும் 150 மில்லியன் வரை…
-
- 0 replies
- 323 views
-
-
அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு, முதுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வோடு இலங்கையில் நீங்கள் வசித்து வருவதாக அறிந்தேன். மகிழ்ச்சி எல்லாம் இல்லை. ஆனால் மனித வளத்தை இழந்து விட்ட ஈழத் தமிழினத்திற்கு ஆக்க பூர்வமான உங்கள் பணிகள் எமது எதிர்காலக் குழந்தைகளுக்குத் தேவை. ஆமாம் அறிவாயுத்தத்தை எமது அடுத்த சந்ததி ஏந்த வேண்டும் என்ற அலாதி ப்ரியத்தோடு எங்களுக்கான வழிகாட்டியாக திகழ வேண்டிய உங்களுக்கு இம்மடல் எழுத நேர்ந்த சூழல் துரதிருஷ்டவசமானது. வருகிற ஜூன் மாதம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத் தலைவராக நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் சூ…
-
- 0 replies
- 674 views
-
-
அமெரிக்காவின் இலங்கை போர் குறித்து வெளியான அறிக்கையானது இலங்கையில் போர்குற்றம் தொடர்பில் ஓர் சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகள் தொடர்பில் தமது சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள தவறி உள்ளமையினை சுட்டி காட்டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரைட் அடம்ஸ். இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு சர்வதேச நாடுகள் அழைப்பு விடவேண்டும் என கோரியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 496 views
-
-
ஓசியன் லேடி கப்பலில் கனடா சென்ற 76 பேரில் ஒருவர் கனேடிய ரோயல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையோர் 48 மணி நேர விசாரணை முடிந்து அடுத்த கட்ட விசாரணைக்காக 07 நாட்கள் பிரிதொரு தடுப்பு முகாமிற்கு அனுப்பபட்டுள்ளனர். குறிப்பிட்ட கைது செய்யப்பட்ட தமிழர் என்ன நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பதனை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். எனினும் இலங்கை அரசாங்கம் கொடுத்த தகவல்களை அடிப்படையாகவைத்தே கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வருகின்றது. ஏனைய 75 பேரும் வான்கூவரில் உள்ள மாபிள் ரிட்ஜ் தடுப்பு நிலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 624 views
-
-
இந்திய கரையோர காவற்படையால் இலங்கை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 06 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். திருமலை துறை முகப்பகுதியில் இருந்து நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற 06 மீனவர்களுமே கைது செய்ய பட்டதாக கூறப்படுகின்றது. விசாகபட்டினத்தில் உள்ள காவல்துறையினரிடம் இந்த 06 மீனவர்களும் ஒப்படைக்க பட்டுள்ளனர். இது வரை 156 மீனவர்கள் இந்திய படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கை வந்து தடுப்பு முகாம்களில் வதைபடும் மக்கள் நிலை பற்றி தவறாக அறிக்கைகள் விட்ட தமிழ் நாடு நாடாளுமன்ற குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தது. பருவ மழைக்கு முன்பு முகாமில் உள்ள தமிழ் மக்களை மீழ் குடியேற்றம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனராம். அத்துடன் தாம் தயாரித்த தடுப்பு முகாம்கள் தொடர்பான அறிக்கையினையும் கொடுத்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 288 views
-
-
மலேசியாவில் 100 இற்கு மேற்பட்ட தமிழீழ தமிழர்கள் சட்ட ரீதியற்ற முறையில் இருப்பதாக அவர்களை தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது மலேசிய அரசு. தடுத்து வைக்கப்பட்ட இம் மக்கள் தாயகத்தில் யுத்த சூழல்களால் இடம்பெயர்ந்து அங்கு வந்தவர்கள். இவர்கள் உத்தியோக பூர்வ ரீதியாக மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு அனுமதி கோரி பல தடவைகள் விண்ணப்பித்தாலும் மலேசிய அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதி தஞ்சம் வேண்டி பதிவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தடுத்து வைக்கபட்டோரில் 06 பேர் உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர். இந்த விடயமாக மலேசியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர் திரு கனகராசா அவர்கள் தெரிவிக்…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கையானது காசாவில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ஓர் போர்குற்ற விசாரணையினை எதிர்கொள்ள வேண்டிய தேவை எழலாம் என கூறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேச்சாளர் ரூபேட் கொவில் அவர்கள் கூறுகையில்; இலங்கையில் போரின் இறுதி காலப்பகுதியில் என்ன நடந்தது என்ன நடக்கவில்லை என்று இன்னமும் முறையாக விசாரித்து அறியப்ப்படவில்லை என கூறியுள்ளார். ஆகவே இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த விசாரணை காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினால் ஜூரி ரிச்சார்ட் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வி…
-
- 0 replies
- 356 views
-
-
கடந்த வாரம் கனடா சென்றடைந்த ஓசியன் லேடி கப்பலில் இருந்த 76 தமிழ் பொது மக்கள் மத்தியில் விடுதலைப்புலி சந்தேக நபர் ஒருவர் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கனடா சென்ற தாயக தமிழர்கள் அனைவரும் சட்ட ரீதியான ஆவணங்கள் வைத்திருந்தார்கள். இந்த ஆவணங்களை கனேடிய அரசு இலங்கை அரசுக்கு வழங்கி இந்த மக்களிற்குள் விடுதலைப்புலி சந்தேக நபர்கள் இருக்கின்றனரா என கேட்டுக்கொண்டது. அதன்படி தாம் கார்தீபன் மாணிக்கவாசகர் என்ற 26 வயது நபர் ஒருவரை விடுதலைப் புலிகள் சந்தேக நபராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 570 views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது. காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். எம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின…
-
- 0 replies
- 740 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு தொடுத்த போரினால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த இடங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது என்று தொடர்ந்து அரசு கூறிவருகிறது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது மக்கள் வசித்த பகுதிகளிலும், அவர்கள் தொழில் செய்துவந்த இடங்களிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும், அவைகளை அகற்றிய பிறகே மீள் குடியமர்த்தம் சாத்தியமாகும் என்றும், அதற்கு உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறியுள்ளார். இந்தப் பேச்சை படிக்கும் எவரும், அவர் கூறுகின்றமை அனைத்தும் உண்மைதானோ என்று நம்பிவிடக்கூடும். போரின…
-
- 0 replies
- 461 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் கோரிக்கை ‐ யுத்தக் குற்றம் தொடர்பில் அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த 60 பக்க அறிக்கையின் சாராம்சமும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 60 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளின் படுகொலை, காணாமற் போதல் மற்றும் மனிதாபிமான நிலை ஆகிய ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக…
-
- 0 replies
- 951 views
-
-
-
- 31 replies
- 2.5k views
-
-
'நீங்கள் ஒரேயடியாகமரணிக்கப் போகிறீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக எனது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு இரையாகப் போகிறீர்களா?' என்று அந்த வனராஜாவான சிங்கம் அங்கு வாழ்ந்த விலங்குகளைப் பார்த்து கர்ச்சித்தது. நடுங்கிப்போன வன விலங்குகள் வனராஜாவுக்கு உணவாக, தினமும் சிலவாக மரணிக்கச் சம்மதித்தன. இந்த நிலையில்தான் சிங்கள கொலைக் கரங்களின் பிடியிலிருந்து தப்பி வவுனியா முள்வேலி முகாம்களில் வதைபடும் வன்னித் தமிழர்களும், வாயடைக்க வைக்கப்பட்டு வெளியே வாழ மட்டும் அனுமதிக்கப்பட்ட தமிழர்களும் உள்ளார்கள். இலங்கைத் தீவில் தொடர்ந்தும் வாழ வேண்டுமானால் அவர்கள் சிங்கள தேசத்துடன் இதுபோன்றதொரு உடன்படிக்கைக்கு வந்தேயாகவேண்டும் என்பதே விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக எ…
-
- 7 replies
- 1k views
-
-
நக்கீரன், நாளேடு 21/10/2009, 17:44 நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி? இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் அந்நாட்டு அரசு அடைத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் ஒரு பிரதி இலங்கைத் தூதுவரகத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. அவ்வறிக்கையில் மோதலில் ஈடுபட்ட இரண…
-
- 1 reply
- 839 views
-
-
சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு? ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவி வருவதால் குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி இராணுவ சேவையில் பணியாற்றிவரும் அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என ஆராய்ந்து பார்த்து உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இராணு…
-
- 1 reply
- 2k views
-
-
கிளினொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். கிளினொச்சி நகர், பூனகரி, முழங்காவில், மான்குளம், முள்ளீயவளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை தற்காலிக தடுப்பு முகாம்களாக்கி அங்கு வவுனியாவில் இருந்து மீழ் குடியேற்றம் என மக்களை அழைத்து வந்து தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார் அந்த அதிகாரி. இந்த பிரதேசங்களில் பாடசாலை, வைத்திய சாலைகள்,கூட்டுறவு கடைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் நிலையங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இங…
-
- 4 replies
- 1k views
-
-
ஓசியன் லேடி கப்பலில் கனடா சென்ற 76 பேருக்கும் கனேடிய குடி வரவு அதிகாரிகள் இன்று சட்ட ரீதியாக அகதி அந்தஸ்து கோர வழி செய்யப்படும் என தெருவித்துள்ளதாக தெரியவருகிறது. இவர்களுக்கான விசாரணைகள் மிக கடுமையாக இருக்கும் என்று கூறிய அதிகாரிகள் அதே நேரம் தனித்தனியாகவே இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும் கூரியுள்ளனர். இதே நேரம் இவர்களை பார்ப்பதற்கு என சென்ற தமிழ் சட்டவாளரான கரி ஆனந்த சங்கரி என்பவருக்கு கனேடிய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். 76 பேரும் 45 000 டொலர் வரை கொடுத்தே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் இலங்கையில் இருந்து மக்கள் வருவதற்கான காரணம் அங்கு போர் முடிந்தாலும் மக்கள் சித்திரவதைப் படுத்தப்படுகின்றனர் என்றும்இ முகாம்களில் அடைத்து வைக்கப்பட…
-
- 3 replies
- 1.1k views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்இ யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்துஇ இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்குஇ மீள் குடியேற்ற கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை சமூக சேவைகள்இ சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம்இகோப்பாய்இ நல்லூர் பிரதேச செயலகங்களைச் சோந்தவர்கள் இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளைஇ வவுனியாவில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண…
-
- 0 replies
- 573 views
-