ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
தமிழ் எம்.பி க்களே மக்களின் நிலைமையினையும் அரசாங்கத்தின் சேவையினையும் யதார்த்தமாக புரிந்து கொண்டு செயற்பட்டுள்ளனர். மற்றவர்களைப்போல் விமர்சனங்கள் செய்யாது மேலும் உதவிகளை பெற்றுதர முயற்சித்துள்ளனர். தமிழக எம்.பி களுக்கு இல்லாத உணர்வு வேறு யாருக்கும் வரப்போவதும் இல்லை என வாழ்த்தி போற்றியுள்ளார். இலங்கை ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா.சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டனர். மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் தமது நாடுகளுக்கு சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள்குடியேற்றம் குறித்து அழுத்தங்களை வெளியிட்டனர். மற்றும் சிலர் வேறுபட்ட கருத…
-
- 0 replies
- 446 views
-
-
இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் மக்கள் மத்தியில் பணிபுரியும் அரச சார்பற்ற அமைப்புகள் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் தமது வேலைத் திட்டங்களை நிறுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகின்றன. தடுப்பு முகாம் களுக்கு மேலும் உதவுவது அந்த முகாம்கள் நீடிப்பதற்கு உதவும் எனக் கருதியே அரச சார் பற்ற அமைப்புகள் இவ்வருட இறுதிக்குள் தமது பணிகளை முடித்துக் கொள்வது குறித்து ஆராய்வதாக கூறப்படுகின்றது.இந்த முகாம்களுக்கு மேலும் உதவுவது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என அரச சார்பற்ற அமைப்புகள் கருதுகின் றன எனத் தெரிவித்துள்ள "இன்னர் சிற்றி பிரஸ்" இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணிபுரியும் அரச சார்பற்ற அமைப்புகள் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தம…
-
- 0 replies
- 431 views
-
-
அமெரிக்காவில் முறையற்ற பங்கு சந்தை வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜ் இராஜரட்ணம் அவர்கள் 100 மில்லியன் டொலர் பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவரது சட்டதரணி ஜிம் வோல்டன் தெரிவித்துள்ளார். எனினும் இவர் நியூ யோக்கில் இருந்து 110 மைல்களுக்கு அப்பால் பயணம் செய்ய முடியாது எனவும் அதே நேரம் பயண அனுமதி சீட்டினை நீதிமன்றில் ஒப்படைத்து இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திரு இராஜ் இராஜரட்னம் அவர்கள் அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் இலங்கை நீதி அமைச்சு திரு இராஜ் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதி உதவி செய்துள்ளமையானது விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்துள்ளதாக கருத முடியாது எனக்கூறியுள்ளனர். திரு இராஜ் அவ…
-
- 1 reply
- 725 views
-
-
முல்லைத்தீவு, சுதந்திபுரம் பிரதேசத்தில் சிறீலங்காப்படை கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் சிறீலங்காப்படையினன் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் வீதியால் பயணித்த சிறீலங்காப் படையினரின் கனரக ஊர்தி சுதந்திரபரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சிறீலங்காப்படையினன் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர்காயமடைந்துள்ளனர். ஊர்தியின் வேக அதிகரிப்பினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி சங்கதி இணையம் http://www.sankathi.com/
-
- 0 replies
- 631 views
-
-
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது. முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரே ரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவே இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 425 views
-
-
இந்திய இறையாண்மைக்காக இந்திய அரசு தம் குடிமக்களாகிய தமிழர்களை பலி கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை. இதுதான் ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கைக்கு தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்யவும், சுட்டுக் கொல்லவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழக தலைநகரான சென்னையில் தமிழில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததற்காக இளம்பெண் ஒருவரை பீகாரை சேர்ந்த ரயில்வே காவலர்கள் தாக்கியுள்ளனர். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வட இந்தியர்கள் வைத்துள்ள வெறுப்பையே இந்த சம்பவம் காட்டுகிறது. வட இந்தியர்கள் ஒரு போதும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அதற்கு தமிழ் துரோகிகளும் விடப் போவதுமில்லை. சிங்களன் சீனாவுடன் வலுவாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவையும், மேற்குலக நாடு…
-
- 30 replies
- 2.6k views
-
-
பொறுப்பற்ற வகையில் செய்திகளை வெளியீடு செய்யும் இணைய தளங்களை கறுப்புப் பட்டியல் இட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தக் கூடிய வகையில் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடும் இணைய தளங்களை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படும் இணைய தளங்களின் பட்டியல் ஒன்று விரைவில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊடகச் சட்டத்தின் மூலம் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் பொறுப்பற்ற வகையில் செய்திகளை வெளியிடும் சகல இணைய தளங்களும் முடக்கப்படும் என அராங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இணைய இணைப்பு : http…
-
- 0 replies
- 404 views
-
-
இந்த வருட இறுதிக்குள் முதலமைச்சர் பதவியில் இருந்து பிள்ளையானை நீக்கிவிட்டு கருணாவை நியமிக்க இலங்கை அரசு முயற்சிப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிள்ளையான் கொழும்பு நிர்வாகத்துடன் ஒத்து போகாமை, தன்னிச்சையாக செயற்படுதல், கொழும்புடன் முட்டி மோதிக்கொண்டு உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உறவாடுதல் மற்றும் இந்தியாவுடனான அதீத உறவு ஆகியனவற்றால் அரசாங்கம் பீதியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது ஆகவே பிள்ளையானை தொடர்ந்து வைத்திருத்தல் தமக்கு நீண்டகாலத்தில் பிரச்சினையினை உண்டு பண்ணும் என பாதுகாப்பு அமைச்சும் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 506 views
-
-
தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டுமென மலேசிய பிரதமர் டெடுக் சிறி டுன் ரஸாக் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் தமிழ் மக்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம் படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரும் இல்ஙகைத் தமிழர்களின் எண்ணக்கையை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்ட விரோதமாக பிரவேசிப்பதற்காக இலங்கையர்கள் 15000 முதல் 20000 வரையிலான அமெரிக்க டொலர்க…
-
- 0 replies
- 328 views
-
-
முற்குறிப்பு இயக்குணர் சீமானின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கி எனது இந்த மடலை உலகத்தமிழினத்துக்கு எழுதுகிறேன். போகிற போக்கை பார்த்தல் சிங்கள அரசே பரவா இல்லை போல இருக்கிறது. அவர்களை பொறுத்த வரை போர் முடிந்து விட்டது. பிரபாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்டார். (நமக்கு வீரச்சாவு). அறிவியலில் உச்சபச்ச வளர்ச்சி கொண்ட இலங்கையில் இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ சோதனை செய்து உறுதி ஆகியது. பின்னர் சடலத்தை எரித்து இந்துமா கடலில் சாம்பலை எரிதாகி விட்டது. அப்படியே பதினாறாம் நாள் காரியம் செய்தால் எல்லாம் முடிந்தது. லண்டனில், நோர்வேயில் இருக்கும் செய்தி தொடர்பாளர்கள் முதலில் தலைவர் உயிருடன் உள்ளார் என்றார்கள். வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரும் உறுதி செய்தனர். நக்கீரனும் தன் பங்…
-
- 23 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒரு ஓட்டை.. என்ன இது? கூகுள் மப்பில் பட்டது...
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சேவும் போர்க் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உலக சமுதாயம் மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைக்கு சமீபத்தில் திமுக தலைமையில் எம்.பிக்கள் குழு சென்றது. இதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். இலங்கை பயணத்தின்போது இவரும் ஒரு மெளனமான உறுப்பினராக சென்றிருந்தார். ராஜபக்சேவை தமிழக குழு சந்தித்தபோது திருமாவை சுட்டிக் காட்டி பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று பச்சையாகவே கிண்டலடித்தார் ராஜபக்சே. இதை ஒரு ஜோக் என்று சென்னை திரும்பிய பின்னர் தெரி…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பப் பட்ட நிவாரணப் பொருட்கள், ஐந்து மாதத்தின் பின், நாளை (21ம் தேதி) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அடுத்த இரு நாட்களுக்குள், தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவானது. மேலும் வாசிக்க இணைய இணைப்பு : http://www.sankathi.com/
-
- 1 reply
- 1k views
-
-
நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இதே போன்று கடந்த வாரம் கனடாவிலும் 76 இலங்கை அகதிகளுடன் ஒரு கப்பல் தடுத்து கைது செய்யப்பட்டதும் தற்போது அந்த அகதிகளுக்கான அகதி அந்தஸ்த்தை வ…
-
- 0 replies
- 619 views
-
-
2000மாம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையாளி பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதால் அவரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஊடக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக எமது இணையத்தளத்திற்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. நிமலராஜன், ராவய, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக கடமையாற்றியதுடன் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ், சிங்கள ஒலிபரப்புச் சேவைகளினதும் யாழ்ப்பாண செய்தியாளராக உயிருக்கும்போது கடமையாற்றிவந்ததுடன், அவர் அரசாங்கத்தின் அனுசரணையில் செயற்படும் ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பின் துப்பாக்கிதாரியினால் கொடுரமான முறையில் க…
-
- 0 replies
- 988 views
-
-
2010ம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தான் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். சரியாக ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் தான் நடத்தப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டினேன். உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த கருணாநிதிக்கோ அல்லது திமுக அரசுக்கோ எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. ஏற்கெனவே நான்…
-
- 0 replies
- 780 views
-
-
வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடக்கு இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 273000 பேரில் 100000 பேர் மட்டுமே இந்த ஆண்டுக்குள் மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.எனினும், இதற்கு முன்னர் சுமார் 80 வீதமான மக்களை மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இதுவரையில் சுமார் 27000 பொதுமக்களே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ச்சியாக…
-
- 2 replies
- 541 views
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டின் ஆடைக் கைத்தொழில்துறை வீழச்சியடைந்து விடும். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பகைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான நட்புறவை இலங்கை இழந்து வருகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் சுதந்திரத்திற்கான அரங்கின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான பிட்டோ பெர்னாந்து கூறியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு நீர்கொழும்பு மல்வத்தை வீதியில் அமைந்துள்ள மீள ஒத்துழைப்பு இயக்கத்தின் கூட்ட மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்…
-
- 0 replies
- 1.5k views
-
-
நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இணைய இணைப்பு : http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 808 views
-
-
இன்று காலை நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்து அமைதியைப் பேணுமாறு சபாநாயகர் வி.ஜெ.மு லொக்குபண்டார வேண்டுகோள் விடுத்தும் பலன் கிடைக்காததால் சபை நடவடிக்கைகளை அவர் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். இன்று காலை 10.50 அளவில் இடம்பெற்ற அமளிதுமளி காரணமாக முதலில் 10 நிமிடங்களுக்குச் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தனது ஆசனத்திற்கு முன்பாக சுவரொட்டி ஒன்றை ஏந்திப் பிடித்துக் காட்சிப் படுத்தினார். இதனை ஆளும் கட்சி பிரதம கொறடா சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் சுவரொட்டிகளை இவ்வாறு காட்சிப்படுத்த முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார். இதனை அப்புறப்…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான சூழலில், ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனப் பாதிக்கப்படலாம் என்ற பீதி பரவியுள்ள பின்னணியிலேயே இவ்வாறு புது டில்லியின் கருத்தைக் கொழும்பு தட்டிப்பார்த்திருப்பதாகக் கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் தமது பணி முடிந்து வெளியேறும் கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்…
-
- 4 replies
- 841 views
-
-
யாழ். மாவட்டத்தில் அகதிகளின் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, உட்கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துவதற் காக புது வகை நிர்வாகம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இங்குள்ள பிரதேச செயலகங்கள் எல்லாவற்றிலும்அமைச்சர்கள் பணி யாற்றவுள்ளனர். இதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் 11 அமைச்சர்கள் நேற்றுமுதல் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலர்களுடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கென மின்சக்தி, எரிசக்தி அமைச் சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமை யில் 7 அமைச்சர்கள் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்தனர். அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, துமிந்த திஸநாயக்க, லஸந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணத…
-
- 0 replies
- 515 views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள்இ இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள்இ சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோதுஇ அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். அன்றைய நாள் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கைக் காவல்துறையினருடன் இயங்கும் புலனாய்வுப் பிரிவ…
-
- 2 replies
- 957 views
-
-
நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பசில் ராஜபகச அண்மையில் மாத்தளையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையயே தான் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார். பசில் ராஜபக்சவை நீக்கிவிட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவர ஜனாதிபதி எண்ணியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களின் அடிப்படையில் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவைப் பதவியையும் சரத் பொன்சேகாவிற்கு வழங்க விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ள சரத் ப…
-
- 0 replies
- 816 views
-