ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
கிழக்கின் சிங்கள உதயம்! தமிழின் அஸ்த்தமனம்! பாருங்கள், கிழக்கின் விடிவெள்ளிகள் தமிழை எப்படி வளர்க்கிறார்கள் என்று!
-
- 2 replies
- 771 views
-
-
இப்போது ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே பாக்கியாக உள்ளன. ஒன்று, தற்போது மேற்குலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை முறையாகப் பயன்படுத்தி தமிழீழத்தை நோக்கி நகர்வது. மற்றொன்று, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தமக்கான பாதுகாப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது. தற்போது மேற்குலகிலும், அமெரிக்காவிலும் சிங்கள அரசின் இனவாதத்திற்கெதிரான கருத்துக்களும் கண்டனங்களும் வலுவடைந்து வருகின்றன. பல திசைகளிலுமிருந்து சிங்கள அரசுக்கெதிரான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான அரசியல் சூழ்நிலைகளை மிகச் சாதுரியமாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதனூடாக தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை நோக்கிய பயணத்தை வென்றெடுக்க முடியும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.…
-
- 0 replies
- 724 views
-
-
இந்த ஆண்டின் இறுதி பகுதியில் எடுக்கப்பட இருக்கும் ஜி.எஸ்.பி க்கான இறுதி முடிவு பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமாக இருக்காது என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1400 கோடி ரூபாய்களை இலங்கை அரசு இழப்பதோடு 250,000 பேர் இலங்கையில் வேலை வாய்ப்பினையும் இழக்க நேரிடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் கவனம் செலுத்தாது அதனை புறக்கணிப்பதாகவும் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசு அனுமதியினை மறுத்து வருவதுமே வரிசலுகை நீக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 601 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவான கடற் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்கள். வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் அங்கிருந்து தப்பிச் சென்று மறைவிடம் ஒன்றில் இருந்ததாகவும், கொழும்பிலிருந்து சென்ற காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஒன்று இவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வந்திருப்பவர்களில் சுமார் 10,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடற்புலிகள் அ…
-
- 0 replies
- 621 views
-
-
வணங்கா மண் நிவாரணப்பொருட்களை வேணுமென்றே தாமதப்படுத்துவதற்கும் அல்லது புறக்கணிப்பதற்குமாக இலங்கை அரசு போட்ட நாடகம் ஏற்கனவே தெரிந்ததே. இதன்படி வழமையாக செஞ்சிலுவை சங்கத்திற்கு வரிவிதிப்பதில்லை ஆனால் வணங்கா மண் பொருட்களுக்கு அனைத்து வரிகளும் சாதாரண வாணிப நடவடிக்கைகள் போல் விதிக்கப்பட்டது. பின்னர் வரி தொடர்பாக மூன்று மாதம் இழுத்தடிக்கப்பட்டது. தற்போது தாம் ஏதோ மக்களுக்கு உதவுவது போன்று அந்த வரியினை ஜனாதிபதி ஏற்பதாக கூறப்படுகின்றது. வரும் திங்கட்கிழமை இந்த வரியினை ஜனாதிபதியின் செயலர்செலுத்துவதாகவும் அதன்பின்னர் தரக்கட்டுப்பாட்டு சபையின் சோதனையின் பின்னர் இவை மக்களுக்கு வழங்கப்படும் என தற்போதய செய்திகள் கிடத்திருக்கின்றன. இதன்படி 2 மில்லியன் ரூபா வரியினை அரசாங்கம் செலுத்துவதாக…
-
- 0 replies
- 529 views
-
-
வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன. இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்ட தமது உண்ணா நோன்பினை கைவிட்டுள்ளனர். இந்த போராட்டம் ஒர் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்துவதாகவும் அத்துடன் அங்கு இருக்கின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையினை கருத்தில் கொண்டும் தாம் இந்த போராட்டத்தினை கைவிடுவதாகவும் கூறியுள்ளனர்.தாம் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் உதவியுடன் அவர்கள் எம்மை பொறுப்பெடுத்தால் படகில் இருந்து வெளியே வர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு குழந்தை உட்பட உண்ணாவிரதம் இருந்த இருவர் உடல்னிலை மோசமாகியதால் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. தம்மை நீண்டகாலத்திற்கு இந்தோனேசியாவில் வைத்திருக்கவேண்டாம் எனவும் ஏனெனில…
-
- 0 replies
- 647 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு வாரியான செயற்பாட்டுக் குழுக்கள் - Countrywise Working Groups தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக - தமிழீழ மக்களின் சுதந்திரத்தினையும் இறைமையினையும் ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்கான நிறுவனமாக நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனை நீங்கள் அறிவீர்கள். இந்த முயற்சி நாளாந்தம் முன்னேற்றம் கண்டு…
-
- 5 replies
- 649 views
-
-
பிரித்தானியாவுக்கான மாணவர்களுக்கான விசா அனுமதி பெற்று பிரித்தானியா வருவதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற 18 தமிழ் மாணவர்கள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று மதியம் இலங்கை நேரப்படி 1.15 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ஏ.எல்.கே.503 விமானத்தில் இவர்கள் பயணிக்க இருந்தனர். குடிவரவு குடியகல்வு பரிசோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்காகக் காத்திருக்கச் செல்கையிலேயே இவர்கள் அனைவரும் பயணத்தைத் தொடர விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதற்கு நியாயமான காரணமெதுவும் தெரிவிக்கப்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் நேற்றிரவு ஆயுத முனையில் தனி நபர் ஒருவர் பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அவரைத் துரத்திப்பிடித்த ஊரவர்களை நோக்கி இந்நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்; மற்றுமொருவர் பலத்த காயங்களுக் குள்ளானார்.ராமமூர்த்தி குலேந்திரன்(36 வயது) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமானார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.மேற்படி நபர் ஒரு லட்ச ரூபாவுக்கும் மேல் பணத்தையும் 26 பவுண் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இணைய இணைப்பு http://www.eelanatham.net/story/வவுனியாவில்-துப்பாக்கி-முனையில்-கொள…
-
- 0 replies
- 410 views
-
-
எதிர்வரும் 15 நாட்களில் 58 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப் படுவார்கள் என்ற செய்தி தொடர்பில் எதுவும் தெரியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தின் பின்னர் கருணாநிதி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட செய்திக்குப் பதிலளிக்கும் வகையில் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக தல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இ…
-
- 1 reply
- 411 views
-
-
வடமராட்சியினை பிறப்பிடமாக கொண்டவரும் தற்pோொ்து அமெரிக்காவில் வதியும் பிரபல பங்கு வர்த்தக அதிபரான இராஜ் இராஜரட்னம் அவர்கள் பங்கு வர்த்தகத்தில் உள்ளக வியாபாரம் செய்து பெருமளவு இலாபம் ஈட்டியதற்காக இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலண்டன் கேம்பிரிட்ஜ் பட்டதாரியான இவர் 1989 ம் ஆண்டு பங்கு வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டு பின்னர் தானே கலியோன் குழுமம் என்ற முதலீட்டு கம்பனியினை ஸ்தாபித்து பெரும் தொழில் அதிபர் ஆனார். இவர் உலகின் மிகப்பெரும் வணிக நிறுவனக்களான சுவிஸ் வங்கி,கூக்கிள் வலையமைப்பு, மைக்ரோ சொஃப்ற் உட்பட்ட கம்பனிகளின் முதலீடுகளையும் பகுதியளவு முகாமைத்துவம் செய்து வந்தார். இலங்கையிலும்,கார்கில்ஸ்,உட்பட்ட பல பங்குகளில் முதலீடு செய்து வந்தார்.இலங்கை பங்கு வர்த்தகத்தி…
-
- 0 replies
- 890 views
-
-
பிரித்தானியாவில் எதிர்வரும் 17ந் திகதி சனிக்கிழமை, முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரி, பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு, பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டு கோள் விடுத்திருக்கிறது. இப்பேரணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார், மற்றும் கவிஞர் தாமரை, திரு. பழ. நெடுமாறன், பாமரன், கவிஞர். இன்குலாப், கொளத்தூர் மணி, ஆகியோரும் விடுத்துள்ள அழைப்பும் ஒலிவடிவில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. பேரணி பற்றி விபரங்கள்: Date: Saturday, 17 October 2009 Time: 1pm - 5pm Route: Starts at 1pm f…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
The European Union has found Sri Lanka in breach of International Human Rights laws, implying that Colombo does not fulfil the basic human rights conditions of GSP plus, according to an exclusive update by Reuters Friday night. It is likely that Sri Lanka would lose concessions worth over $100 million for its top exports to Europe, the report said citing EU sources. The findings of the investigations by the EU are expected to be published Monday. "This is not a trade sanction. There are rules for GSP plus and if you break the rules, then unfortunately there are consequences. They will keep basic GSP either way," the report filed by Darren Ennis of the Reuters quoted …
-
- 0 replies
- 779 views
-
-
கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த இரு பாராளுமன்ற உற்ப்பினர்களுக்கு இலங்கைக்கு சென்று அங்கிருக்கின்ற தமிழ் மக்களின் தடுப்பு முகாம்களை பார்வையிடுவதற்கு விசாவிற்கு விண்ணப்பித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.பற்றிக் பிரவுண்,போல் கலெண்ட்ரா ஆகிய இரு உறுப்பினர்களுக்கே விசா மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இது தொடர்பாக கனேடிய அரசுக்கு முறையிடவுள்ளதாக தெரியவருகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 3 replies
- 587 views
-
-
வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் (32வயது) தீக்குளித்துள்ளார். இவர் முல்லைத்திவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. இரத்தினசிங்கம் பிரபாகரன் என்ற மேற்படி நபர் அண்மையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆயினும் சரியான மருத்துவமோ அல்லது எதுவித சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாதிருந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் அவர்கள் நேற்று முன்தினம் தன்னை மறந்த நிலையில் தனது ஒருமாதக் குழந்தை தனது மனைவி மற்றும் தனது தாயாரையும் கத்தியால் வெட்டியுள்ளார் அதன் பின்னரேயே தன்னைத் தீமூட்டியுள்ளார். இவரது குழந்தை , மனைவி , தாயார் மூவரும் உயிர் தப்பியுள்ளனர். செட்டிகுளம் மருத்துவமனையிலிருந்து மயக்கமருந்து கொடுக்கப்பட்டு …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? திகதி: 16.10.2009 // தமிழீழம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் இன்னும் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் இன்றே (வியாழக்கிழமை) தொடங்கும் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன், எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்…
-
- 0 replies
- 603 views
-
-
வவுனியாவில் சிறீலங்காவினால் புதிதாக சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது திகதி: 16.10.2009 // தமிழீழம் வவுனியாவில் சிறீலங்கா அரசாங்கத்தினால் புதிதாக சிறைச்சாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலும் தமிழ் மக்கள்தான் வாழ்நது வருகின்றார்கள். இன்னிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் சந்தேகத்தின் பெயரிலிலும் வவுனியாவில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிறீலங்கா காவல்துறையினரின் பணியினை இலகுபடுத்தும் நோக்கில், வவுனியா நீதிமன்றத்துடன் இணைந்த வளாகத்தில் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக சிறைச்சாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிறைச்சாலை 300 பேரை அடைப்பதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்…
-
- 0 replies
- 301 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 16/10/2009, 13:25 எமது கோரிக்கைகள் எதனையும் சிறீலங்கா அரசாங்கம் செவிசாய்க்கவில்லை - நவநீதம் பிள்ளை யுத்த முன்னெடுப்புகளின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அனைத்துலக விசாரணை அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அதற்கு சிறீலங்கா அரசாங்கம் செவிசாய்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 0 replies
- 435 views
-
-
அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் வழியில் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தமிழர்களும் தாம் பயணித்த படகிலேயே காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். "அனைத்துலக சமூகததிற்கான பட்டினிப் போராட்டம்”, "எமது உயிர்களைப் பாதுகாருங்கள்” என்று எழுதிய பலகைகளுடன் படகில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் படங்கள் அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவர்களைப் படகை விட்டு வெளியேறி வருமாறு இந்தோனேசிய அதிகாரிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் மறுத்து விட்டனர். இந்தேனேசிய நிலப் பகுதிக்கு வந்து தற்காலிக இருப்பிட வசதிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அங்கிருந்து வழமையான நடவடி…
-
- 0 replies
- 267 views
-
-
திருமாவுக்கு ஒரு கடிதம் – வா.மணிகண்டன் அன்பின் திருமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் ‘சில’ ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவ…
-
- 1 reply
- 848 views
-
-
வன்னி வதை முகாம்களில் இருந்து யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 2,000 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் போக்குவரத்துச் சபை பேருந்துகளில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கி உள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 பேரை 2,000 பேர் கொண்ட தொகுதிகளாக மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்தின் கீழ் மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்பட்டனர் என அதிகாரிகள் கூறினர். இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்படுவார்களா அல்லது இடைத் தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்படுவார்களா என்பது குறித்து தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வன்னி முகாம்களில் இருந்து விடுவ…
-
- 0 replies
- 503 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியிருப்பதாக வெளியாகியிருந்த செய்திகளை சிறிலங்கா இராணுவம் இன்று திட்டவட்டமாக மறுத்திருக்கின்றது. முன்னாள் இராணுவத் தளபதி அரசாங்கத்துடன் முரண்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இராணுவப் பேச்சாளர் உதயா நாணயக்கார இந்த அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றார். முன்னாள் இராணுவத் தளபதியுடன் அரசுக்கு பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகப் பரப்பப்படும் தகவல்கள் ஆதாரமற்ற தவறானவை எனத் தெரிவித்த பிரிகேடியர் உதய நாயணக்கார, அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே இந்தத் தகவல்கள் திட்டமிட்ட முறையில் பரப…
-
- 0 replies
- 285 views
-
-
இடம்பெயர்ந்து வதை முகாம்களில் உள்ள வாக்களர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவை எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்று சந்தித்துப் பேசியது. நடைபெற உள்ள தேர்தல்களின் போது இடம்பெறக்கூடிய மோசடிகள் குறித்துக் குழுவினர் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். அதேபோன்று, அரசு முகாம்களில் அடைத்து வைத்துள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமலேயே போகலாம் என்ற அச்சத்தையும் எதிர்க் கட்சி நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், இடம்பெயர்ந…
-
- 0 replies
- 309 views
-