Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள உரிமை கோரப்படாத பணத்தை கொண்டு மக்களுக்கு கடன்களை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டுள்ளார். அரசாங்க வங்கிகளில் இவ்வாறு உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இவற்றை விவசாய மற்றும் கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களுக்கு கடனாக வழங்க அனுமதி வழங்குமாறு அமைச்சர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் உள்ள வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புக்களின் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று உரிமை கோரப்படாத பெருந்தொகையான நகைகள் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உரிமை கோரப்படாத பணம் மற்றும…

  2. கலையழகன், யாழ்ப்பாணம் 14/09/2009, 13:24 வடக்கு வங்கிகளில் உரிமை கோரப்பாடாத 1 பில்லின் ரூபாக்கள் மற்றும் 2 பில்லியன் நகைகளை எடுக்க திட்டம்! தமிழர் தாயகத்தின் வடக்கில் அமைந்துள்ள வங்களில் உரிமை கோரப்படாது உள்ள பெருந்தொகைப் பணம் மற்றும் தங்க நகைகளை மீளப்பெற்ற மக்களுக்கு கடன் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக துணை இராணுவக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில் சிறீலங்கா அரசின் கீழ் இயங்கும் வங்கிகளில் 1 பில்லியனுக்கு அதிகமான இலங்கை ரூபாக்களும் 2 பில்லினுக்கு அதிகமான தங்க நகைகளும் உரிமை கோரப்படமால் இருக்கின்றன. அவற்றை வங்களிலிருந்து எடுத்து விவசாய மற்றும் கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களுக்குக் கடனாக வழங்குதவற்கு சிற…

  3. வவுனியா மெனிக்பார்ம் முகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். கொழும்பு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் செயற்பட்டு வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான லெப்டினட் கேர்ணல், தீபன் என்ற நாகேஷ் சுடர்தீபனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர் இடைத் தரகர்களுக்கு 6 லட்சம் ரூபா பணத்தை கொடுத்து முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகளின் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப்படும், தீபனின் மனைவியான சோபா என்பவர், புலிகளின் மருத்துவராக சேவையாற்றி வந்துள்ளார். …

  4. அம்பாறை வந்த மக்களுக்கு மீண்டும் கிடைத்தது அகதி வாழ்க்கை வீரகேசரி இணையம் 9/14/2009 3:35:11 PM - வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வேறு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்தின் 48 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டனர். இவர்களைச் சிவில் அதிகாரிகள் பொறுப்பேற்று சனிக்கிழமை அழைத்து வந்தனர். காரைதீவு இராமகிருஷ்ணன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களின் விபரங்கள் பொலிசாரால் பதிவு செய்யப்பட்ட ப…

  5. சேரமான் 14/09/2009, 16:51 மன்னார் கடலடிப் படுக்கையின் எண்ணெய் வளம் இந்தியாவிடம் தாரைவார்ப்பு! மன்னார் கடலடிப் படுக்கையில் பொதிந்து கிடக்கும் எண்ணெய் வளத்தை இந்தியாவிடம் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. எண்ணெய் வள அகழாய்வுக்கான முதலீடுகள் ஊடாக இவ்வாண்டின் இறுதிக்குள் குறைந்தது நூறு கோடி டொலர்களை ஈட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும் சிறீலங்கா அரசு, மன்னார் கடலடிப் படுக்கையின் முதன்மைத் தொகுதிகளை இரண்டு இந்திய நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (15.09.2009) மும்பைக்கு பயணம் செய்யும் சிறீலங்கா முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சரும், காமினி திசநாயக்கவின் புதல்வருமான நவீன் த…

  6. பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியின் உரிமையாளர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபேண்ட் என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புக்காக பேசும் நோக்கில், மிலிபேண்ட் இலங்கை வந்திருந்த போது, அவரது உள்நோக்கத்தை அறிந்து கொண்ட அரசாங்கம்,அவரை திருப்பி அனுப்ப உத்தரவிட்டதாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவர் செனல் 4 தொலைக்காட்சி ஊடாக இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், பொய்யை புனைந்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இலங்கைப் படையினரால் சில தமிழ் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ படங்களை செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டமை தொடர்பாகவே இலங்கை அரசாங்கத்த…

  7. ஒன்றிணைந்த சிறிலங்காவிற்குள் கூட்டரசு (சமஷ்டி) முறையிலான தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. சேரமான் 14/09/2009, 03:09 போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்! வன்னி யுத்தத்தில் ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஊடகங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறீலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை எதிர்கொள்ளும் நிமித்தம் ஜெனீவாவிற்கு மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும், இலண்டனுக்கு பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவையும், நியூயோர்க்கிற்கு கலாநிதி பாலித்த கோஹொன்னவையும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருப்பதாக இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த சனிக்கிழமை ஜெனீவாவிற்குப் பயணமாகிய சி…

  9. வைகறை, சென்னை 13/09/2009, 20:07 கச்சதீவுக் கடலில் சிறீலங்கா கடற்படை கொலைவெறியாட்டம்! கச்சதீவுக் கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை சிறீலங்கா கடற்படை நிகழ்த்தியுள்ளது. சனிக்கிழமை இரவு கச்சதீவை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு தொகுதி கடற்தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்த சிறீலங்கா கடற்படையினர், மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து கடற்தொழிலாளர்களை துப்பாக்கிப் பிடிகளால் மூர்க்கத்தனமாகத் தாக்கியதோடு, அவர்களின் வசமிருந்த மீன்பிடிகளையும் அபகரித்துள்ளனர். இதில் காயமடைந்த முருகன், ஜஸ்ரின், இராமமூர்த்தி ஆகிய மூன்று கடற்தொழிலாளர்களும் இராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை…

  10. இலங்கை – மேற்குலக பனிப்போர் தமிழருக்கு விடிவைத் தருமா? விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை அரசுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மேற்குலக நாடுகள் இப்போது அதற்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்துள்ளன. புலிகளுக்கு எதிரான போரின்போதும்- போருக்குப் பின்னரும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது பற்றிய ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும். அண்மையில் பிரித்தானியாவின் ~சனல் – 4| தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் இலங்கை அரச படைகளின் கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்யும் கொடூரக் காட்சிஇ தடுப்பு முகாம்களுக்குள் அடை…

  11. 2008 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் ஏற்பட்ட 6.6 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதம் மிக மோசமானதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  12. அனைத்துலக நாணய நிதியம் அண்மையில் சிறிலங்காவிற்கு வழங்கிய 2.6 பில்லியன் டொலர் பணத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்ற உண்மையை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்குச் சவால் விடுத்தார். தொடர்ந்து வாசிக்க

  13. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே சிறிலங்கா அரசிற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் அந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிப்பதற்கான கால எல்லை கடந்த வியாழக்கிழமை (10.09.09) முடிவடைந்தது. எனினும் பதில் அனுப்பப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க

  14. வன்னிப் பிரதேசத்தில் ஏ-9 பாதைக்கு மேற்குப்புறமாக உள்ள பகுதிகளில் முதலில் மக்களை மீளக்குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்பவே கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை படையினர் அது செயற்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் கிழக்கிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

  15. வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான முழு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து 'இலங்கைத் தமிழர் உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம், உதவிக் கரம் நீட்டுவோம்' என்ற கருப்பொருளில் சென்னையின் லயோலாக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் துணைப் படையான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும், அவரது வான் சாரதியும் படுகாயமடைந்திருக்கின்றார்க

  17. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றிகொள்வதற்கு வரையறையற்ற அதிகாரத்தை படையினருக்கு கொடுத்திருந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, படைத்துறையின் செல்வாக்கைக் குறைப்பதற்கான நகர்வுகளை தற்போது துரிதமாக மேற்கொண்டு வருவதாக அனைத்துலக செய்திச் சேவையான 'ரொய்ட்டர்' வெளியிட்டிருக்கும் செய்தி ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  18. சிங்களப் படையினரால் தமிழர்கள் நீதி விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து யாரோ சிலர் சிறிலங்கா மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக அது பற்றிய விசாரணைகளை நடத்த முடியாது என அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளர் பேராசிரியர் றஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறினார். இந்த நிறுவனமே தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காணொலியை முதலில் வெளியிட்டது. அதன் ஊடகவியலாளர் கிருஷ்ணா குருமூர்த்திக்கு பேராசிரியர் றஜீவ விஜயசிங்க வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு: மனித உரிமை மீறல்கள் குறித்தும் சட்டத்திற்கு முரணான கொலைகள் குறித்தும் விசாரணை நடத்…

  19. வடக்கு கிழக்கில் முப்படை முகாம்கள் அகற்றப்பட மாட்டா : ஜனாதிபதி வீரகேசரி இணையம் 9/13/2009 12:34:06 PM - வடக்கு கிழக்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்…

  20. கானகன் ‘என்ன செய்யலாம் ஊடகங்களை?’ என்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கொதித்துக்கொண்டிருக்கிறா

  21. விக்ரம், கொழும்பு 13/09/2009, 23:18 நான்கு மாதங்களில் அதிபர் தேர்தல்? யுத்தத்தில் ஈட்டப்பட்ட வெற்றியை துருப்புச்சீட்டாகக் கொண்டு ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட மாகாண சபை தேர்தல்களின் தொடர்ச்சியாக, வரும் சனவரி மாதத்தில் அதிபர் தேர்தலை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் இடம்பெறக்கூடும் என்றும் அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர். இதனிடையே, அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகளுக்கு பதவி ஓய்வு வழங்கி வருங்காலத்தில் படைப்புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை இல்லாதொழிக்குமாறு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அவரது ஆலோசகர…

  22. கே.பி. கைது தொடர்பின் பின் உள்ள மலேசிய பொருளாதார நலன் – மாதவி பிர்லா குழுமத்துக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் 2009 மே 25 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தன் சேவையைத் துவக்கியது. ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து சென்னையிலும் அது தன் சேவையை அளிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 25,000 சில்லரை விற்பனை மையங்களையும், 60 ஐடியா காட்சி அறைகளையும் நிறுவ அது திட்டமிட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 4.7 கோடி அலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஐடியா செல்லுலார் நிறுவனமானது தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை செயல்படவில்லை. அந்த நிறுவனத்திற்குப் பலகாலமாக இருந்த அந்தக் குறை இன்று தீ…

  23. சிறையிலடைக்கப்பட்ட திச நாயகமும், வன்னி மக்களும் 13/09/2009 மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது. தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது. ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், …

  24. இத்தனை நாள் தமிழ்நாடு தமிழர்கள் என்றால் வேப்பங்காயாய் இருந்த தமிழ் எதிரிகளுக்கு இன்று குளிர்விட்டு போய்விட்டது ராகுல் என்பவன் தமிழ்நாட்டிற்கு வந்து தாராளமாக சுற்றி திரிகிறான்.. ஈழ தமிழர்களுக்காக தானும் தங்கள் குடும்பமும் உயிரை குடுத்து(எடுத்து) பாடுபடுவதாக புளுகுகிறான்.இவர்களை வளர்த்து விட்ட திராவிடம் பேசும் கழுதைகள் இன்று அவர் நம்மை வந்து சந்திக்கவில்லையாம் ..ஒப்பாரி வேறு! உண்மையில் அவன் வந்தது தமிழக ஆட்டு மந்தைகள் எதற்கு விலைபோவார்கள் என கணிப்பதற்கே! கல்லூரி மாணவர்கள் இருந்து காய்கறி வியாபாரிகள் வரை..அரவணிகள் வரை .. அனைவரும் போராடி பார்த்தும்..16 பேருக்கும் மேல் தீக்குளித்து செத்தும் கொஞ்சம் தமிழுணர்வு மேல் எழும்பிய அந்த நேரத்தில் அதை அரசியல் சாணக்கியமும் தமிழின வர…

  25. இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் அனைத்துலக சட்ட மரபு நெறிகளுக்கு உட்பட்டு, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வரும் தமிழ் ஈழத்தவர்கள் தற்போது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என்று அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.