Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் முன்னர் கூறப்பட்டது போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 6 ஆம் நாள், சிறிலங்காப் படையினரும் அதன் புலனாய்வுத்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்படவில்லை என்று கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 416 views
  2. கனடா ரொரன்டோ மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியூ வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 135 ஆம் நாளாகத் தொடரும் கவனயீர்ப்பு தினசரி காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை நிகழ்ந்து சிங்களத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏந்திய பிரார்த்தனை நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. காட்சிப்படுத்தல்கள் சில... நாளாந்தம் காலை 8 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு தொடர்ந்து நடைபெறும் என்பதை அக்கவனயீர்ப்பில் கலந்து கொள்ளும் மக்கள் அறிவித்துள்ளனர்.

  3. 'உண்மையைப் பேசவிடு' ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் கனடியத் தமிழர் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து 'உண்மையைப் பேசவிடு" என்ற ஓர் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை 250 Front streetல் அமைந்துள்ள CBC ஊடக மையத்தின் முன்பாக செப்ரெம்பர் 4 ந்திகதியான இன்று மாலை 3 மணியிலிருந்து 8மணிவரை முன்னெடுத்திருந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் இவ் ஆர்ப்பாட்ட ஒன்று கூடலில் கலந்துகொண்டனர். எழுச்சியுடனும், கோபத்துடனும் மக்கள் உண்மைகளை உரத்துக் கூற ஊடகத்துறையினருக்கு அழைப்பு விடுத்ததுடன் சிறீலங்கா அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகத்தையும் விடுவிக்க ஊடகத்துறை சார்ந்தவர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். கனடிய தமிழர் சமூகமும், கனடிய மாணவர் …

  4. சிசிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழ…

  5. சிறிலங்கா தனது சொந்த முயற்சியிலேயே பயங்கரவாதத்தைத் தோற்கடித்தது என ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவரும் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு சில அரிய சம்பவங்களில் சிறிலங்காவும் உள்ளடங்கும் எனத் தெரிவித்த அவர், நாட்டிற்கு பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள், விடுக்கப்பட்ட பயமுறுத்தல்கள், ஒதுக்கப்படுதல்கள் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு சிறிலங்கா தனது சொந்த முயற்சியில் பயங்கரவாதத்தை தோற்கடித்தது என்றார். தாய்லாந்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இ…

  6. அனைத்துலக சட்டங்களை மீறும் வகையில் தமிழ்ப் போராளிகளை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் ஏதும் இன்றிப் படுகொலை செய்தார்களா என்பது குறித்து முழு அளவிலான அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் தெரிவித்தார். "இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் எந்த ஒரு அரசும் தெளிவான, முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது" என்றார் பிலிப் அல்ஸ்டன். இவர், நீதிக்குப் புறம்பான மற்றும் விசாரணைகளற்ற படுகொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்ட ஐ.நா. அதிகாரி. 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 'சனல் -4' நிறுவனம் அண்மையில் வெளிப்படுத்திய காணொலி குறித்து கருத்துத் தெரிவ…

  7. தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். மேலும்... http://parantan.com/pranthannews/

    • 0 replies
    • 1.2k views
  8. காலச்சுவடு இதழில் (ஆகஸ்ட்) வந்த 'வன்னிக் களமுனை' பற்றிய கட்டுரைக்கு 'பரணியும்' நண்பர்களும் எழுதிய பதில் இணைத்துள்ளேன்.இது காலச்சுவடு செப்டெம்பர் இதழுக்கானது. கலச்சுவடு ஆசிரியஆகஸ்ட் 2009 இதழில் வெளிவந்த "வன்னியில் என்ன நடந்ததது? களத்திலிருந்து ஓர் அனுபவப்பதிவு" கட்டுரைக்கான ஒரு சிறிய எதிர்வினை... முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழத்தமிழினத்தின் உரிமைப்போராட்டமும் அவர்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று கால கட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புக்களும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்ல யூகித்திருக்கவே முடியாத கொடுரங்களுடன் மரணஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்ச…

  9. 'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்கா தீவிர அக்கறை: ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் விவாதிக்கப்படலாம் [வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2009, 08:39 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்] விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. "இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூத…

  10. ஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. ஜூன் மாதம் ஏ9 வீதி திறக்கப்பட்ட தன் பின்னர் இதுவரை குறித்த லொறிகள் எவ்வித போக்குவரத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு லொறி உரிமையாளர்கள், ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாகக் கோருகின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே, எவரும் இந்த லொறிகளை வாடகைக்கு அமர்த்த ம…

    • 0 replies
    • 796 views
  11. “ஜி.எஸ்.பி. பிளஸ்” சலுகை என்பது இலங்கைக்கு நிரந்தரமாகவே கிடைக்கும் சலுகையல்ல என்பதனால், இது தொடர்பில் யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எமது தொழிற்றுறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சலுகை கிடைக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். என்றாலும், அவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக எமக்குக் கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்ததும் அதற்கு நாம் உரிய வகையில் பதிலளிப்போம் என்றும் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர…

    • 0 replies
    • 893 views
  12. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியான புதுக்குடியிருப்பில் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஜப்பானிய தூதுக்குழுவினர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள

  13. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழு ஒன்று அடுத்த வாரம் கொழும்பு செல்லவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 489 views
  14. ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுவரும் வரிச் சலுகையை சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஒன்றியம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் சிறிலங்காவிற்கு ஆண்டுக்கு 150 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படும். ஒன்றியத்தின் இறுதி முடிவு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை எதிர்த்து மேன்முறையீடு எதுவும் செய்யமுடியாது. ஒரு வாரத்துக்கு முன்னர் ஒன்றியம் அனுப்பிவைத்த தொடக்க அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடந்த 25 ஆண்டு காலப் போரி…

  15. வடபகுதியில் சிறிலங்கா கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கலந்துகொள்ள இருந்த படைத்துறை நிகழ்வு, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது. போரில் உயிர்நீத்த படையினருக்காக கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் புதுமாத்தளன் ஆகிய இடங்களில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களை முன்னாள் தரைப்படைத் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவிருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜெனரல் சரத் பொன்சேகாவும் தரைப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவும் இன்று வடபகுதிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தின் ஒரு பகுதியாக நினைவுச் சின்னங்களைத் திறப்பு வ…

    • 0 replies
    • 641 views
  16. ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை குறித்தும் அதன் நியாயப்பாடுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிக்கை ஒன்றை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 465 views
  17. உலகின் பிரபல புலனாய்வு துறையின் முக்கியஸ்தர்கள் சிலர் சுற்றுலாப் பயணிகளை போல் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற ஒருவர், இந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர், ரஷ்ய ஆயுத முகவர்கள், சுற்றுலாப் பயணிகளை போல் இலங்கை சென்றிருந்தாக, இலங்கை தூதுவரினால், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்டிக்கப்பட்டமை, மற்றும் 3 லட்சத்து மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொடர்பில் மேற்கூறிய புலனாய்வு பிரிவிற்குரிய நாடு கவலையடைந்திருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு…

    • 0 replies
    • 1.2k views
  18. சிறிலங்கா தனது சொந்த முயற்சியிலேயே பயங்கரவாதத்தைத் தோற்கடித்தது என ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவரும் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 423 views
  19. சிறிலங்கா வான்படையின் அனுராதபுரம் வானூர்த்தித் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அந்தத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படும் சந்தேக நபர் இணங்கியுள்ளார் என கண்டி மத்திய காவல்துறையின் புலனாய்வுத்துறை அனுராதபுரம் நீதவானுக்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 362 views
  20. சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழமை …

    • 0 replies
    • 514 views
  21. பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க அரசு தயார் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடை பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் இது பற்றி மேலும் தெரிவித்ததாவது, முதல்கட்ட நடவடிக்கையாக இந்த வீடியோக் காட்சி குறித்து அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. இதேவேளை, குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் போல…

    • 0 replies
    • 526 views
  22. இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'குமுதம்' குழுமத்தின் 'தீராநதி' மாத ஏட்டுக்கு அவர் வழங்கிய முழுமையான நேர்காணல் வருமாறு: ஈழப் போராட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய பின்னடைவுக்கு காரணமாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலிருந்து நாம் தொடங்கலாம். அந்த விமர்சனங்களில் முக்கியமானது, 'முப்பதாண்டுகலமாக நடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டம் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டமாக மட்டும் நடந்தது என்பத…

    • 4 replies
    • 831 views
  23. வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியனரை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் போசும் போது இதனைத் தெரிவித்தார். ‘விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர்கள் என 25,000 பேரைத் தான் அடையாளப்படுத்தியுள்ளதாக அரசு கூறுகின்றது. அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான உத்தரவைப் பெறுவதற்கு அரசு என்ன செய்துள்ளது? அத்துடன் மற்றையவர்களை விடுவிக்க வேண்டும்.” – என்றார் ரணில் விக்கிரமசிங்க. முகாம்களுக்கு வெளியே தமது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வசிப்பதற்கான விருப்பத்தை 130,000 …

    • 0 replies
    • 445 views
  24. ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்துக்கு சிறிலங்கா நீதிமன்றம் ஒன்றினால் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையிட்ட

    • 0 replies
    • 546 views
  25. மகிந்த மீது பாலியல் துஷ்பிரயோகம்....

    • 0 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.