Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 28 JUL, 2023 | 11:17 AM நோயாளியொருவரின் மரணம் தொடர்பில் அங்கொட மனநோய் வைத்தியசாலை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்கொட மனநோய் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் இது குறித்து மௌனம் காப்பதாகவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை20 ம்திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் இந்த வாரம் வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. நோயாளியை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை தாக்கியுள்ளனர். ப…

  2. முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு ! மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார். இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொர…

  3. யாழில் உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று(28) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச் சாலைகள், சிற்றுண்டிச் சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய …

    • 0 replies
    • 288 views
  4. பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்! பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார் தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது. வட்டுவாகல் பாலம் தொடக்கம் …

    • 29 replies
    • 2.3k views
  5. கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு! இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்டார். இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும்…

  6. தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பு பிழை எனக் கூறும் அரசியல் தலைவர்கள் தலைவர்கள் இருக்குமவரை நீதித்துறை கேள்விக்குறியே – சிறிதரன் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் குருந்தூர்மலை உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நேற்று இடமபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொக்குத்தாெடுவாய், மண்டைவு மனித புதைகுழி என இன்னும் பல …

  7. “நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னைத் தூக்குவேன்” யாழில் சம்பவம் ” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் ” எனது உறவினரிடம் வவுனியாவை சேர்ந்த நபரொருவர் 2 இலட்ச ரூபாய் பணத்தினைக் கடனாகப் பெற்ற பின்னர், அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார். இதனால் இச்சம்பவம் தொடர்பில் எனது உறவினரை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் இது குறித்து அந்நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன். எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந…

    • 2 replies
    • 626 views
  8. வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்ச உணர்வுக்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்று முழு காரணம் பொலிஸார் தான். வவுனியா மாவட்டத்திலே இருக்கின்ற நகர பொலிஸ் நிலையம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய குற்றத் தடுப்புப் பிரிவு இந்த இர…

    • 7 replies
    • 751 views
  9. மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்! மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ”நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந…

  10. பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ! இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர். https://athavannews.com/2023/1341582

  11. வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு வடக்கு- கிழக்கில் இன்று இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்க…

  12. தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்! வவுனியா, நொச்சிமோட்டையில் நேற்று இரவு முகமூடி அணிந்த சிலர் வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதிகளான 58 வயதான மாரிமுத்து செல்வநாயகம் மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் அவ்வீட்டில் திருடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சுதாகரித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர் திடீரென வாளை திருடர்களிடம் இருந்து பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த திருடர்கள் அங்கிருந்த தொலைபேசி ஒன்றை மாத்திரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் …

  13. Published By: VISHNU 28 JUL, 2023 | 03:50 PM கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் பொலிசாரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாருக்கு அல்லது விசேட அதிரடிப்படையினருக்கு தகவல்களை வழங்கினாலும் அவற்றை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் அவற்றை ஊக்குவிக்கும் விதத்திலே அவர்களது செயற்பாடு அமைந்திருப்பதாகவும் பொது அமைப்புகளாலும் பொதுமக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. …

  14. Published By: DIGITAL DESK 3 28 JUL, 2023 | 04:19 PM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் வெள்ளிக்கிழமை (28) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், யாழ்ப்பாண சுற்றுலாதுறை அமைப்பின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், பிரதேச சபை நகர சபை செயலாளர்கள், உணவுச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடனும் …

  15. 2025ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். 36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் வீதிகள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பது அடையாளப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இணையவழி தொழில்நுட்பத்தி…

  16. Published By: DIGITAL DESK 3 28 JUL, 2023 | 03:31 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பெண்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டன ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்களும் பாடசாலை மாணவர்களும் பதாதைகளை ஏந்தியவாறு பிரதான வீதி ஊடாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கு பொலிஸாரிடம் மகஜர்களையும் கையளித்தனர். பிரதேசத்தில் பாரிய அளவில் நடைபெறுகின்ற போதைப்பொருள் வியாபாரத்தை தடுத்து நிறுத்தி போதைப்பொருள் விற்பவர்களை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தியே இப்பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டன பே…

  17. பொலிஸ் அதிகாரிகளின் நடத்தைக்கு எதிராக மொத்தம் 11,450 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு எதிரான 9,774 பொது புகார்கள் 1960 ஹொட்லைன் எண் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுமார் 1800 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குழுவின் கூற்றுப்படி, சந்தேக நபர்களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பயன்படுத்துதல், பொது மக்களிடமிருந்து புகார்களை ஏற்றுக் கொள்ளாமை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை புகார்களில் அடங்குகின்றன. 1960 என்ற தொலைபேசி …

  18. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவிருந்த வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கைவிரல் அடையாளம் இடும் கட்டாய நடவடிக்கையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்து வைத்திய நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வைத்திய துறையை சேர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் குறித்த விடயமானது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர். அத்துடன் கைவிரல் அடையாள முறைமையானது வைத்திய துறையின் யாப்பில் பிரச்சினை…

  19. நோர்வேயில் வசித்து வரும் இலங்கையரான வைத்தியரின் மனிதாபிமான பணி 28 Jul, 2023 | 11:20 AM இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை (28) பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு மனிதாபிமான பணியை செய்துள்ளார். வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகளை வழங்கி வைத்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் …

  20. எதிர்காலத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இ-மொபைலிட்டி எனும் இலத்திரனியல் வாகனக் கொள்கையை தயாரிக்க கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வாகன மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் மொத்தம் 26 உள்ளூர் நிறுவனங்கள் தற்போது வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதேவேளை, 2035ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் மோட்டார் வாகன விநியோகச் சங்கிலியின் கேந்திர நிலையமாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். வாகன உற…

  21. Published By: NANTHINI 03 MAR, 2023 | 01:17 PM (எஸ். தியாகு) இலங்கையில் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்ற 550 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பொன்று கிட்டியிருக்கும் நிலையில், அதற்கான ஆட்சேர்ப்பானது, வெளிப்படைத்தன்மையின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும், இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல், மௌனத்தை கடைப்பிடிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் முயற்சிகளையடுத்து, இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள 550 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்…

  22. Published By: DIGITAL DESK 3 24 JUL, 2023 | 02:47 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் அன்றையதினம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்ப…

  23. இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையைக் கண்டறிய வாய்ப்பு : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி! உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தி…

    • 3 replies
    • 589 views
  24. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம்…

  25. கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.