Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1340604

  2. யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி ! Published By: Nanthini 22 Jul, 2023 | 02:08 PM யாழ். தென்மராட்சி மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது புகையிரதமொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், முற்பகல் 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அப்புகையிரத கடவையை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். அவ்வே…

    • 3 replies
    • 502 views
  3. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு (21) நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்கள…

  4. 22 JUL, 2023 | 08:13 PM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தால் சுகாதாரத்துறைக்குள் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருக்காது என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …

  5. வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை நெடுங்கேண…

  6. 22 JUL, 2023 | 10:34 AM இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார். யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால…

  7. 24 கடலோரப் பகுதிகள் புதிய சுற்றுலா இடங்களாக அடையாளம் இலங்கையில் 24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலா தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கொழும்பு, எல்ல, நுவரெலியா, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சுற்றுலா…

  8. நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 850 வகையான மருந்துகளில் இந்த 266 மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2023/1340978

  9. 22 JUL, 2023 | 09:55 AM பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஹுங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் பிரமிட் திட்டத்தில் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும், இருப்பினும் அதற்கான கொடுப்பனவோ பணமோ குறித்த நபரால் மீள வழங்காமை காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் காருக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸ் நிலையத்…

  10. 21 JUL, 2023 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழர்கள் ஒற்றையாட்சியை கோருகிறார்களா ? அல்லது சமஷ்டியாட்சி கோருகிறார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் மக்கள் வாக்கெடுப்பு நடத்துங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசுக்கு சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான வ…

  11. தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை! நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்…

  12. கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார் வீரசேகர வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப இந்நாட்டை பிரிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்…

    • 7 replies
    • 407 views
  13. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூலை 2023, 10:21 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். கட…

  14. Published By: DIGITAL DESK 3 21 JUL, 2023 | 09:19 AM வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (20) நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2016 ம் ஆண்டு இரு நாட்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் மீனவர் பிரச…

  15. சீண்டிப் பார்க்க வேண்டாம் : சரத் வீரசேகரவிற்கு செல்வம் அடைக்கலநாதன் கடும் எச்சரிக்கை! சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மக்கள் பல போராட்டங்களை பார்த்தவர்கள் அவர்களை சீண்ட வேண்டாம். உங்களுடைய கதைகளை உங்களோடு வைத்திக்கொள்ளுங்கள். பத்திரிகைகள் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஆகவே எங்களது மக்களை தொடர்ந்து சீண்டிப் பார்க்க வேண்டாம். இங்கு சரத் வீரசே…

    • 1 reply
    • 542 views
  16. முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால்! தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்படியான ஒருவர்தான் தேசிய பொதுப் பாதுகாப்புக்குழுவின் தலைவராக உள்ளார். பொறுப்புக்…

  17. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஒகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றையதினம் யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன. குறித்த தீர்மானங்களின் படி, ஒகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டெம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். ஆலய வெளி வீ…

  18. இலங்கையில் உருவாகியுள்ள புதிய கூட்டணி : புது அரசியல் சூழ்ச்சியா? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு, உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கு, 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மேற்கொள்வதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் இணைவதற்காக, கடந்த காலங்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன், சில கலந்துரையாடல்கள், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு மத்தியில், நாடாளுமன்றின் வேறுபட்ட இடங்களில் இடம்பெற்றதாகவும் தெர…

  19. Published By: DIGITAL DESK 3 21 JUL, 2023 | 02:32 PM 2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு, https://www.virakesari.lk/article/160578

  20. கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை By RAJEEBAN 08 FEB, 2023 | 03:41 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை திங்கட்கிழமை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிவெளியேறிய பின்னர் அங்கு பெருந்தொகை பணம் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரிடம் மூன்றுமணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/147729 ஜனாதிபதி மாளிக…

  21. குருந்தூர்மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் : ஜயந்த சமரவீர! முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பிரிவாத அரசியல்வாதிகள், குருந்தூர் விகாரை வளாகத்தில் பொங்கல் நிகழ்வொன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்த முயற்சித்தனர். எனினும் பொலிஸார் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில், ரவிகரன் உள்ளிட்ட சில…

    • 1 reply
    • 388 views
  22. தமிழர்களுக்கான தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் : சாணக்கியன் எச்சரிக்கை! தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாம் ஜனாதிபதிக்கு ஒன்றைக்கூற விரும்புகின்றோம். நாடு ஜனாதிபதிக்குச் சொந்தமானது அல்ல. ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமானது மட்டுமல்ல. இந்த நாட்டில் அரச…

    • 1 reply
    • 221 views
  23. யாழில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : சிறிய தந்தை பொலிஸாரால் கைது! சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டுக்கு இரவு வேளைகளில் செல்லும், சிறுமியின் தந்தையின் சகோதரன், சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, குறித்த சிறுமி தனக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அது …

  24. மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமரை ஜீவன் சந்திப்பார் மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் பி…

  25. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் : அமைச்சர் ஹெகலிய! நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்ப முன்னர் அந்த கேள்விகளை உரிய அமைச்சருக்கு அறிவிக்கும் வழக்கம் நாடாளுமன்றத்தில் உள்ளது. தற்போது அந்த வழக்கத்தை ஒருசிலர் பின்பற்றுகிறார்களா என்பதை அறிய முடியவில்லை. நான் சபையில் இல்லாத போது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சிகளின் உறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.