ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
// தமிழீழ விடுதலைப்புப் புலிப் பெண் போராளிகள்.// ஈழ விடுதலைப் போராட்ட காலம் தந்தை செல்வா காலத்துக்கு முன், பின் என்று பிரிக்கப்பட்டு நோக்கப்படுவது அவசியம். தந்தை செல்வா காலம் வரை அகிம்சைப் போராட்டங்களே (சத்தியாக்கிரகங்கள்.. பேரணிகள்.. பேச்சு வார்த்தைகள்.. ஒப்பந்தங்கள்) தமிழர்களின் அரசியல் உரிமைக்கான முக்கிய போராட்ட வடிவங்களாக இருந்தன. இருந்தாலும் அவற்றின் தோல்வியும்.. அவை சிங்கள அரசுகளின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தவறியமையே ஈழத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சியுரிமையுள்ள தமிழீழத்திற்கான தேவையையும் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையையும் உருவாக்கியது. ஆனால்.. இன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளின் 33 ஆண்டு கால ஆயுதம் போராட்டத்தால் தான் தமிழீழம் என்பது கனவானது.. இத்தனை …
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு கடன்னுதவி வழங்க அமெரிக்க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்னுதவி வழங்குவதை அமெரிக்க திறைசேரி அமைச்சர் முழுமையாக தடுக்க வேண்டுமென விரைவில் நிறை வேற்றப்பட உள்ள அமெரிக்க வெளிவிகார சட்டழூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் இடம் பெயர்ந்த மக்களை சர்வதேச தரத்திற்கு அமைய நடத்துகின்றது என்பதையும் அவர்களது நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது என்பதையும் அமெரிக்க வெளிவிகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கும் வரை இலங்கைக்கு கடன்னுதவி வழங்க திறைசேரி அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லினக்கம் மற்றும் நீதியை உரிய முறையில் கடைப்பிடித்தல் மற்றும் அரசமைப்…
-
- 0 replies
- 584 views
-
-
சிறிலங்காவிற்கான கடனுதவியை தடுக்குமாறு அமெரிக்க அமைச்சின் கோரிக்கை திகதி: 18.07.2009 // தமிழீழம் சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவிற்கு கடனுதவி வழங்குவதை அமெரிக்க திறைசேரி அமைச்சர் முழுமையாகத் தடுக்கவேண்டுமென விரைவில் நிறைவேற்றப்படவிருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை சிறிலங்கா, சர்வதேச தரத்திற்கு அமைய நடத்துகின்றது என்பதையும், அவர்களது நடமாட்டச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது என்பதையும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கும் வரை சிறிலங்காவிற்கு கடனுதவி வழங்குவதற்குத் திறைசேரி அமைச்சு அனுமதியளிக்கக் கூடாது என்று…
-
- 0 replies
- 326 views
-
-
சிறிலங்காவில் ஊவா மாகாண சபைக்காக நடைபெறும் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலினை நேற்று நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப் புலி பிரபாகரனின் வீரம் – கன்னட முற்போக்காளர்கள் [படங்கள் இணைப்பு]லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் ஜெய் ஈழம் என்றத் தலைப்பில் கருத்தரங்கமும்,கன்னடப் பத்திரிகையாளர். குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கருநாடகத் தலைநகர். பெங்களூர். காந்தி பஜார்- கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது. லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர்.கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். முனைவர்.பஞ்சகரே.ஜெயபிரகாஷ், ஓ ஈழம் நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மைசூர் புலி திப்பு சுல்தானி…
-
- 0 replies
- 862 views
-
-
சென்னையிலுள்ள ஈழ ஏதிலிகளுக்கு நிபந்தனையின்றி வேலை வழங்கலாம்: சென்னை பொலிஸ் தெரிவிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில சென்னை பொலிஸ் எஸ்பி சாரங்கன் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மப்பேடு, காக்களூர், சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இதில் தொழிற்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கையின் வட,கிழக்கு பகதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு பிரிட்டன் உதவத் தயார் என்று கூறியுள்ளது. கிழக்கின் நிலமைகளை நேரில் கண்டறிவதற்காக மட்டக்களப்பு விஜயம் மேற்கொண்ட கொமும்பில் உள்ள பிரிட்டன் உயஸ்தானிகர் பீறறர் ஹெய்ஸ் மேலும் தெரிவிக்கையில் கிழக்கின் பாதுகாப்பு நிலவரங்களில் வீதிகளில் காவலரண்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருந்ததை கானக் கூடியதாக இருந்தது. பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வமான நிகழ்சி நிரலை கிழக்கு மாகாணசபை கொண்டுள்ளது ஆனால் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இல்லாமல் திண்டாடுவதைக் கானமுடிகின்றது. இலங்கையில் அதிக முதலலீடகளை மேற்கொள்வது தொடர்பாக பிரிட்டிஷ்; வர்த்தக சழூகம் அதிகளவான கேள்விகளை எழுப்பியுள்ளத…
-
- 0 replies
- 449 views
-
-
தமிழினக் காவலர் என்று வேடம் போட்ட கருணாநிதி வெளியிட்ட அறிக்கையானது அனைத்து ஈழத் தமிழர்களாலும் உற்று நோக்கப்படவேண்டியது. தமிழர்களின் உரிமைப்போரும், விடுதலையும், தனித் தமிழீழமும், சுயநிர்ணயமும் இனிச் சாத்தியமற்றதென்றும், அத்தீவில் தமிழர்கள் அடிப்படை வாழ்வுரிமையோடும், மொழிபேசும் உரிமையோடும், மதம் பின்பற்றும் உரிமையோடும் சிங்களவர்களின் கீழ் அவர்களைக் கோபப்படுத்தாது, சேர்ந்து வாழ்ந்து அவர்கள் தருவதை மட்டுமே பெற்று வாழ மட்டுமே இனிமுடியும் எனக் கூறியுள்ளார். இவரின் இந்தக் கூற்று, இவரின் உண்மை முகத்தையும், சிறீலங்கா அரசின் மீது இவரின் உண்மை விசுவாசத்தையும் காட்டியுள்ளது. தமிழர்களின் உயிர் வாழ்வும், புனர்வாழ்வும் சிங்கள மக்களையும், சிறீலங்கா அரசையும், பெளத்த துறவிகளையும் கோபமடைய…
-
- 0 replies
- 419 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருப்பதால் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பைக் குறைத்துக்கொள்வது என சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களுக்கும் அவர்களின் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் குறைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதிக் காவல்துறை மா அதிபர்களான என்.கே.இலங்கக்கோன், சரத் பெரேரா ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போது குறைவடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான மேலதிக பாதுகாப்பைக் குறைக்க முடியும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கி…
-
- 0 replies
- 324 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் டி வுக்கு வந்த பின்னர் அரசாங்கம் மேற் கொண்டு வரும் சில நடவடிக்கைகள் தமிழ் மக்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து அதிகமாகப் பேசப்படும் இந்த வேளையில், வடக்கில் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங் களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கடந்தவாரம் மங்கள சமரவீர எம்.பி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும "கிழக்கில் மீளக்குடியமர்வு டிவடைந்துள்ள நிலையில் அங்கு ஏற்கனவே குடியிருக்காத ஒரு சிங்களக் குடும்பம் கூட குடியமர்த்தப்பட வில்லை என்றும் அதேபோன்று வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படாது' என்றும் கூறியிருந்தார். இது எந்தளவுக்கு உண்மையானதென்ற சந் தேகம் தமிழ்மக்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது…
-
- 0 replies
- 432 views
-
-
சிறிலங்காவில் ஊவா மாகாண சபைக்காக நடைபெறும் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலினை நேற்று நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவாளர்கள் நன்கு திட்டமிட்டு நடத்திய இந்தத் தாக்குதலின் போது மனோ கணேசன் அவரது மெய்ப்பாதுகாவலர்களால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதால் காயம் எதுவும் இன்றித் தப்பித்துள்ளார். இருந்த போதிலும் அவரது ஆதரவாளர்கள் பலர் படுகாயமடைந்திருக்கின்றனர். வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. பசர வீதியில் உள்ள மடுல்சீமைப் பகுதியில் வைத்தே …
-
- 0 replies
- 329 views
-
-
இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும் என தமிழின உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணையூடாக பாலமொன்றை நிர்மாணிக்கும் யோசனை குறித்து கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் ஆராயப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறியுள்ளார்.இந்தப் பாலமானது இலங்கையானது பிராந்தியத்தில் தனது அடையாளத்துவத்தை மீளப்பெறவும் கண்டத்தில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் உதவியாக அமையுமென்றும் அவர் கூறியுள்ளார். மணல்மேடுகளை உள்ளடக்கியதாக தற்போது இருந்து வரும் ஆதாம் பாலத்தின் மீது இந்தப் பாலம் அமைவது இரு நாடுகளுக்குமிடையில் கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவை ஏற்படுத்தும் விடயமாக அமையுமென்று அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் தரைவழி தொடர்பை நா…
-
- 0 replies
- 530 views
-
-
சிறிலங்காப் படையில் இருந்து தப்பிச்சென்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 301 views
-
-
ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு(!) வந்தாப் பிறகு, இண்டைக்கு சனநாயக வழிப் போராட்டம் எண்டு கதைக்கப்படுற சூழலில - சனநாயகத்த பற்றி பொதுவாக எங்கட சமூகத்துக்குள்ள இருக்கிற கேள்வியளை மையப்படுத்தியதான ஒரு உரையாடல். கி.பி.அரவிந்தன் அண்ணாவின் கருத்துப்பகிர்வு - குரல் வடிவில்: கேட்பதற்கு: இங்கே அழுத்தவும் அல்லது: இங்கு சென்றும் கேட்கலாம்
-
- 2 replies
- 842 views
-
-
ஈழத் தமிழர்களை மீட்க நடுவணரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கூட்டத்தில் இயக்குநர் சீமான் இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் வலியுறுத்தி பேசினார். “நாம் தமிழர்” அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: இந்த “நாம் தமிழர்’ இயக்கமானது கட்சி, மதம் சார்பற்றது. ஈழத் தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்க தமிழர்களை ஒன்று திரட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சுயநலமற்ற ஓர் அமைப்பாகும். இலங்கையில் 3.50 லட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்தமண்ணிலேயே முகாம்களில் இலங்கை அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இலங்…
-
- 0 replies
- 526 views
-
-
சிறிலங்கா அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனி…
-
- 6 replies
- 703 views
-
-
இலங்கையிலிருந்து கனடா செல்ல விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 40 வரையான விசா விண்ணப்பங்கள் கடந்த ஒரு மாத காலத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. அரச அதிகாரிகள், விளையாட்டுசார்ந்த விடயங்களுக்காக செல்லவிருந்தவர்கள், கலாசார நிகழ்வுகளுக்கு செல்ல இருந்தவர்கள், தனியார் துறையைச்சார்ந்தவர்கள் போன்றோருக்கே கனடா செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. உரிய அழைப்புகள் இருந்த நிலையிலேயே இவர்களுக்கான விசாக்கள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களது கொள்கை நடவடிக்கைகளின் பிரகாரம் விசா தொடர்…
-
- 2 replies
- 1.6k views
-
-
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள வன்னிப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் சிறிலங்காப் படையினரையே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தமியிருக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், இந்தப் பணியில் இந்தியப் படையினரை ஈடுபடுத்துவது மற்றொரு பிரச்சினையைத் தோற்றுவிப்பதாகவே அமையும் எனவும் எச்சரித்துள்ளார். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரை வரவழைப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே எல்லாவல மேதானந்த தேரர் இவ்வாறு தெரிவித்தார். கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின…
-
- 3 replies
- 546 views
-
-
யாழ் மக்கள் கொழும்புக்கு வரவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை தளர்த்துவத தொடர்பாக ஆராயுமாறு உயர்நீதிமன்றம் சட்டமா அதிபர்ருக்கு உத்தரவு இட்டுள்ளது. சட்டத்தரணி அப்பாத்துரை வினாயகழூர்த்தி சமர்பித்த மனு தொடர்பான விசாரணை எடுக்கப்பட்டபோது உயர் நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோர் பாதுகாப்பு படையினரின் விசேட அனுமதியினை பெற்றுகொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவானது யாழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மரணவீடு, நேர்முக பரீட்சை மற்றும ஏனைய தேவைகள் கருதி யாழ் மக்கள் கொழும்பு வருவதில் மிக துன்பகரமான நிலையினை எதிர்நோ…
-
- 1 reply
- 615 views
-
-
பிள்ளைய்யான் குழுவில் 100 ற்கும் மேற்பட்ட சிறுவர் போராளிகள்: யுனிசெப் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இன்னமும் 100க்கும் மேற்பட்ட சிறுவர் போராளிகள் உள்ளனர் என யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரி.எம்.வீ.பி. கட்சியில் இன்னும் 107 சிறுவர் போராளிகள் எஞ்சியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ரி.எம்.வீ.பி.யினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுவர் போராளிகளில் 77 பேர் தற்போது 18 வயதைக் கடந்துள்ளதாகவும், ஏனையவர்கள் தொடர்ந்தும் சிறுவர் போராளிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சிறுவர் போராளிகளை முற்றாக விடுவித்துள்ளதாகவும், வேறு இயக்கங்கள் சில வேளைகளில் சிறுவர் போராளிகளை பயன்படுத்தக் கூடுமென ரி.எம்…
-
- 1 reply
- 491 views
-
-
அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது: …
-
- 1 reply
- 891 views
-
-
தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில்தான் இந்தியா-சிறிலங்காவின் நல்லுறவு அடங்கி உள்ளது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரித்துள்ளார். எகிப்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற அணிசாரா நாடுகளின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை மன்மோகன் சிங் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் கந்துகொண்ட மன்மோகன் சிங்கிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளின் குறைகளை போக்குவதற்கு உறுதியா…
-
- 1 reply
- 539 views
-
-
//சிங்களப் பேரினவாதம் - படம்: தமிழ்நேசன்.ஆர்க்/ இணைய உலகில் சில மரை கழன்ற தம்மை அரசியல் விற்பன்னர்களாகக் காட்ட விளையும் தமிழ் தேசிய விரோதிகள் சிலர் தமிழ் தேசியத்தை (Tamil nationalism) பேரினவாதமாக இனங்காட்டி சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு (Sinhala Chauvinism) மறைமுகமாகக் கொடி பிடிக்க விளைகின்றனர். தமிழ் தேசியம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான.. தமிழ் மொழி சார்ந்த.. தமிழ் இனம் சார்ந்த அதன் பாரம்பரிய நிலம், கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த அடையாள வாதமாகும். சிங்கள பெளத்த தேசிய வாதம் என்பது சிறீலங்காவைப் பொறுத்தவரை ஒரு தேசத்தை ஆளுகின்ற பெரும்பான்மை இனத்தின் அதன் ஆளுமையை, அதிகார வெறியை.. சிறுபான்மை இனங்களை அடக்கி ஒடுக்கும் தன்மையை வெளிப்படுத்தும் …
-
- 1 reply
- 784 views
-
-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது இங்கிலாந்து இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பண…
-
- 3 replies
- 1.7k views
-