ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
டெல்லியில் நடந்த சந்திப்பு! தோழர் தியாகு விளக்குகிறார் (நேர்காணல்) இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலரும், சமூக நீதி தமிழ் தேசத்தின் சிறப்பு ஆசிரியருமான தோழர் தியாகு அவர்களை தமிழ்.வெப்துனியா.காம் சந்தித்து. தமிழ்.வெப்துனியா.காம்: இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரரும், அவருடைய பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அதிபருடைய செயலர் லலித் வீரதுங்கா ஆகிய மூவரும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் புதன் கிழமையன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோதய ராசபக்ச அமெரிக்கவின் லொஷ்ஏன்ஜலில், அமெரிக்கா வாழ் இலங்கை மக்களிடம் பணம் கறப்பதற்காக வந்துள்ளாதாக தகவல் வந்துள்ளது!
-
- 2 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 28, ஜூன் 2009 (18:5 IST) தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு ராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதிக்குள் மீனவர்கள் நுழைந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முடியாத மீனவர்கள் பலர் மீன்பிடிக்காமல் நள்ளிரவில் கரை திரும்பினர். இதனால் மீனவர்களின் படகில் 10 கிலோவிற்கும் குறைவாகவே இறால் மீன்கள் பிடிபட்டு இருந்தது. இதுபற்றி மீனவர்கள் கூறும்போது "மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க சென்றோம்.கடலுக்கு சென்று கரை திரும்பும் வரை கச்சத்தீவு கடல் பகுதிக்குள் எங்களை இலங்கை கடற்படையினர…
-
- 1 reply
- 588 views
-
-
யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை: கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன். மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமி…
-
- 13 replies
- 2.9k views
-
-
எழுத்தாளர் அமரந்த்தா எழுதியிருக்கும் கடிதம் இது. அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். இதுவரை இயலவில்லை. இருந்தாலும் இந்தக்கடிதம் முக்கியமான ஒன்று என்பதால் அவர் அனுமதி கிட்டும் என்ற நம்பிக்கையில் இதையும் இதுதொடர்பாக அவருக்கு வந்த கடிதங்களையும் வெளியிட்டிருக்கிறேன். இந்தக்கடிதம் பற்றி என் கருத்துக்கள் பின்னர். - நாகார்ஜுனன். லத்தீன் அமெரிக்க நட்புறவுக்கழகம் சார்பில் ஜூன் 25 அன்று எழுத்தாளர் அமரந்த்தா, இந்தியாவில் இயங்கும் க்யூபத் தூதரகம் மற்றும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம். அன்பார்ந்த தோழருக்கு இலங்கைத் தீவு நாட்டில் வாழும் தமிழர்களை முழுமையாக துடைத்தழிக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமைக்குழுவில் க்யூ…
-
- 0 replies
- 1k views
-
-
பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம்: கோவையில் சிறுவர்கள் முழக்கம் கோவையில் தமிழர் ஆதரவு முன்னணி சார்பாக ஈழ ஆதரவாளர் விடுதலை இயக்க மாநாடு 21.6.09 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் பத்து வருடம் கழித்து நாங்கள் போராளியாக மாறுவோம் என்று கூறியது அனைத்து தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்புவதாக இருந்தது. கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், புதுகோட்டை பாவாணன், திரைப்பட இயக்குநர்கள் சீமான்,ராம், ஆகியோர் பங்கேற்க அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாடு நடந்துகொண்டு இருக்கும் வேளையில் மளமளவென மேடை ஏறிய ஆத்தூரில் பயிலும் எட்டு வயது சிறுவன் நக்கீரனும்,அவரின் மூன்று வயது தங்கை இனியாவும் மை…
-
- 29 replies
- 3.7k views
-
-
வெளிநாடுகளில் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதரக பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதரகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசியாவின் பிரதித்…
-
- 4 replies
- 752 views
-
-
"பார்சல்" தபாலில் இருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! திகதி: 28.06.2009 // தமிழீழம் தமிழகத்தில் இருந்து கொழும்புக்கு வந்த "பார்சல்" தபாலில், துப்பாக்கி ஒன்று இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில்: சென்னை அண்ணாசாலையச் சேர்ந் த விஜய் என்பவர், இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள தனது நண்பர் சபரீச னுக்கு பறவைகளைச் சுடும் துப்பாக்கி ஒன்றை பரிசாக அனுப்ப விரும்பினார். அதையடுத்து பார்சல் தபால் மூலம் கொழும்பு முகவரியிட்டு, துப்பாக்கியை அனுப்பினார். இந்தப் பார்சலை தபால் துறையைச் சேர்ந்த சு ப்ரமணியன் என்பவர் விமான நிலையத்தில் க…
-
- 1 reply
- 723 views
-
-
ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று தமிழின ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார். பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த …
-
- 3 replies
- 728 views
-
-
அமெரிக்க பிரஜைகளுக்கும், இலங்கையில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களுக்கும் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. எனினும் இலங்கைக்கு பயணிக்கும் தமது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக அமையவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளை அவதானத்துடன் இருக்கும் படியும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு ப…
-
- 1 reply
- 684 views
-
-
தாய் நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படும் புலம் பெயர் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படும் புலம்பெயர் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் புலம் பெயர் மக்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகிவற்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செயற்படும் புலம்பெயர் இலங்கையரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய ஆதாரங்களுடன் விடுக்கப்படும் கோரிக்கையை உலக…
-
- 2 replies
- 851 views
-
-
28/06/2009, 12:03 ] சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பெண் தொண்டூழியர் பருத்தித்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் பருத்தித்துறையிலுள்ள அவரது வீட்டில், வியாழக்கிழமையன்று கொலை செய்யப்பட்ட 33 வயதுடைய சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பெண் தொண்டர் ஒருவரின் சடலம், வடமராட்சி காவல்துறையினரால், வெள்ளிக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலைசெய்யபட்ட பெண் தனியே வாழ்ந்துவந்துள்ளார். அவரைக் காணவில்லையென்று கருதிய அயல்வீட்டார் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர். பின்பு அவரது வீட்டுக்குள்புகுந்த காவல்துறை அவரது சடலத்தைக் கண்டுள்ளனர். கொலைசெய்யப்பட்ட பெண், தெய்வேந்திரன் அபிராமி, 33, என்றும் கந்த உடையார் தெருவில் வசித்தவர் என்றும் தெரியவருகிறது. தனது பெற்றோர் இறந்தபின்பு அபிரா…
-
- 1 reply
- 767 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘உதயன்’ நாளேட்டுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் குடாநாட்டில் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளது. ‘உதயன்’ நாளேட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இம்மாத இறுதியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் இந்தத்துண்டுப் பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் இருந்து வெளிவரும் நாளாந்தப் பிரதிநிதிகள் வீதிகளில் வைத்து பலவந்தமாக எரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு இடையில் இவ்வாறு கடுமையாக எச்சரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருப்பது ஊடகத்துறையினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குடாநாட்டில் உள்ள நாளேட்டு விற்பனையாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை காலை விநியோகிக்கப்…
-
- 0 replies
- 497 views
-
-
வணங்காமண் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும்-வாசன் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2009, 12:58 [iST] சென்னை: வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படும் என ராஜபக்சே உறுதி கொடுத்துள்ளார். எனவே கப்பல் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்டும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. நேற்று இதன் முடிவுகளை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜிகே வாசன் வெளியிட்டார். சுமார் 4 ஆயிரத்து 540 மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் சுமார் 91.52 சதவீத மாணவர்கள் தகுத் பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரத்பாபு முதலிடத்தை பிடித்துள்ளார். விழா முடிந்த பின்னர் ஜிகே வாசன் நிருபர்களிடம் கூறு…
-
- 0 replies
- 546 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 வயதான மருத்துவர் நாகரூபன் ஆறுமுகத்திற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்துவரும் ஒரு சில நாட்களில் இடம்பெறவிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'லங்காதீப' வார ஏடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-
-
வாழ்விழந்து நிர்க்கதியõகிப்போயுள்ள வன்னி மக்களின், அடிப்படை மனித உரிமைகள் மீண்டும் நிலை நிறுத்தப்படாமல், நிவாரண பூச்சுக்களாலோ அல்லது வார்த்தை ஜால ஆற்றுப்படுத்துகைகளாலோ வசந்தங்களைத் திணிக்க முடியாது. முகாமிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை இனங்காண, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புதைந்துள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்ற கால அவகாசம் தேவையெனக் கூறும் அரசாங்கம், புத்தர் சிலைகளையும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் இம்மண்ணில் நிறுவிட நடத்த முயற்சிப்பதன் காரணம் புரியப்படுகிறது. ஆனாலும், வன்னி மக்களை, மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் வைத்திருந்தார்களென்று, யுத்தத்திற்கு வியாக்கியானம் வழங்கிய மேற்குலத்தார், வவுனியா முகாம்களில் இன்றுவரை அடைக்கப்பட்டு துன்பப்படும் மக்…
-
- 0 replies
- 536 views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் பின்னால் பாட்டாளி மக்கள் கட்சி…
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஒன்று தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் குற்றப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள், இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் இருவரைக் கைது செய்திருப்பதுடன், அரசியல்வாதிகள் இருவரைக் கைது செய்வதற்கும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துலக அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் சிலவற்றின் உதவியுடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பயன்படுத்தியே மகிந்தவை படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அதிகாரத்துக்கு வருவார் என்பது உட்பட மேலும் சில எதிர்வுகூறல்களை வெளியிட்டமைக்காகக் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள் ஜோதிடர் சந்திரசிறி பண்டார தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத்துறையினரால் செய்யப்பட்ட இவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் அவரைச் சந்திப்பதற்கு அவரது மனைவிக்கோ உறவினர்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து வெளியாகும் 'இருதின' என்ற சிங்கள ஏட்டில் சந்திரசிறி பண்டார தொடர்ந்தும் …
-
- 0 replies
- 532 views
-
-
வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்காப் படை அதிகாரிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களுக்கும் வெளிநாடுகளில் தூதரகப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்காப் படை அதிகாரிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களுக்கும் வெளிநாடுகளில் தூதரகப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு வியன்னாவில் தூதரகப் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனின் பிரதி தூதுவராக நியமிக்க…
-
- 0 replies
- 482 views
-
-
வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்காப் படையினருக்கு பதவி உயர்வுகளை அந்நாட்டின் படைத் தலைமையகம் வழங்கியுள்ளதுடன் கொல்லப்பட்ட படையினருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்காப் படையினருக்கு பதவி உயர்வுகளை அந்நாட்டின் படைத் தலைமையகம் வழங்கியுள்ளதுடன் கொல்லப்பட்ட படையினருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. லெப்டினன்ட் தர அதிகாரிகள் கப்டன்களாகவும் லெப். கேணல் தர அதிகாரிகள் கேணல்களாகவும் கேணல் தர அதிகாரிகள் பிரிகேடியர்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே கெமுனுவோச் றெஜிமென்ட படையணியைச் சேர்ந்த கேணல் அருணா ஜெயசேகர படையினரின் நடவடிக்கை …
-
- 0 replies
- 415 views
-
-
மில்லர் ஒரு சகாப்தம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 976 views
-
-
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களில் வாழும் சிறுவர்களில் 25 விகிதமானவர்கள் போசாக்கு குறைந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 25 விகிதமானவர்கள் போசாக்கு குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அது மேலும் அதிகமாக இருக்கலாம். புதிய ஆய்வுகளின் தகவல்கள் இன்றுவ…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை அமைப்பை இராணுவ ரீதியாக முறியடித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் அந்நாட்டில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், அங்கு பயணம் செய்யும் தமது குடிமக்களை அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிவித்தல் ஒன்றை அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் சிறிலங்காவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட உறுதியற்ற நிலை அங்கு தொடர்வத…
-
- 0 replies
- 234 views
-