Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்) யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்) சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா) பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா) தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. …

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம். ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் உறங்குநிலையில் உள்ளன. எனினும் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களும் 10 மாதங்களும் எடுத்த படை நடவடிக்கையில் இராணுவம் பெருமளவிலான ஆட்பல அதிகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது என்றார் அவர். …

    • 6 replies
    • 1.5k views
  3. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.அத்துடன் மிக குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்தோரை நலன்புரி முகாம்களிற்குள் ஒன்று சேர்க்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பல எடுத்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன் போது உரையாற்றுகையிலேயே ஹெத் சூலர் இதனை தெரிவித்தார். தமது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழுவினர் வவுனியா மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தனர்.அமெரிக்காவிற

  4. மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்?என்பதே எமது கேள்வி. இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு. சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார். 13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய விரிவாதிக்கத்திற்கு வழியமைக்கவே இவற்றினைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார். …

  5. இராணுவ நடவடிக்கை முடிந்தபட்சத்தில், நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை முடித்துக் கொள்ளுமாறும் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு இடம்பெயர்ந்தோர்களிடம் செல்வதற்கான தடையொன்றுமில்லாத அனுமதியை வழங்குமாறும் அமெரிக்கா சிறிலங்காவிடன் கேட்டுள்ளது. சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, கல்வி, சுகாதாரம், வதிவிடம், குடிநீர் மற்றும் உணவு போன்றவற்றை அடைவதற்கு சமமான வழிகளை சகல சிறுபான்மையினருக்கும் உறுதிப்படுத்தி, பாரபட்சங்கள் இல்லாமல் செய்வதற்கு எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சிறிலங்காவுக்கு நாம் ஊக்கமளிக்கிறோம் என ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் அமெரிக்காவின் ராஜதந்திர விவகாரங்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வகி…

    • 0 replies
    • 727 views
  6. ஐநாவின் துணைப்பேச்சாளர் மறி ஒக்பே செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவிக்கையில் மனித உரிமைகள் ஆணையம் அவ் அமர்வில் போர்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் இத்திர்மானம் வேறு இடங்களில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 0 replies
    • 690 views
  7. சிறீலங்காவிற்கு விஜயம் செய்த அமெரிக்காவின் காங்கிரஸ் தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சிறீலங்காவிற்கு இக்கடன்தொகை அவசியமானது எனக்கருதுவதாகவும் இது அவர்களது நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். பதிவு

    • 0 replies
    • 715 views
  8. உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ‘புக்கர் பரிசு’ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ரோய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் அருந்ததிரோயை எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூனியர் விகடனுக்காக சந்தித்துப் பேசினார்: ”இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்கள்?” …

    • 0 replies
    • 676 views
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுக்கும் இலங்கை நன்றித் தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொள்ளாத 12 நாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் குறித்த நாடுகளில் அமையப் பெற்றுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக உரிய விபரங்களை விளக்கி கூற நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றமை தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளுக்காக செயற்படும்…

    • 0 replies
    • 629 views
  10. 13ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக வழங்குவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்களின் ஓர் கட்டமாகவே கிழக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்டதாகவும், வடக்கில் மாகாணசபை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர வேறும் அதிகாரங்களை வழங்குவது குறித்து அசராங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி…

    • 0 replies
    • 523 views
  11. வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் நாளாந்தம் சராசரியாக 14 மரணங்கள் நிகழ்வதாக செட்டிக்குளம் திடீர் மரண விசாரணை அதிகாரி இ.சாகுல் ஹமீட் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரையிலான நான்கு நாட்களில் இந்த முகாம்களில் 56 பேர் வரை மரணமடைந்திருக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மை நாட்களாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 மரணங்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 பேரும் திங்கட்கிழமை 11 பேரும் செவ்வாய்க்கிழமை 14 பேரும் புதன்கிழமை 9 பேரும் மரணமடைந்துள்ளனர். முதியவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமையே இறப்பிற…

    • 2 replies
    • 626 views
  12. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது, தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தவண்ணமுள்ளன. அமெரிக்கா, கலந்து கொள்ளவில்ல?! - 'The Financial Times' நாளேடு - 30 வருட கால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட தாக்குதல்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுட்டும் காயமடைந்தும் உள்ளனர். உதவி நிறுவனங்களின் பணிகளும், தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கபப்டுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மக்கள் காணாமல் போவது, துன்புறுத்தப்படுவது, படுகொலை செய்யபப்டுவது போன்ற தக…

    • 0 replies
    • 680 views
  13. "இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது' வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!''. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை. "யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது' என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக…

  14. இது BTF நடத்தும் கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவு செய்து கொள்ளலாம். எல்லாரும் பார்க்க வசதியா இருக்கும். (எங்கிருந்தாலும் சபேசன் உடனடியாக மேடைக்கு வரவும்) 1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும். 1.1 BTF தற்போது நடைமுறையில் உள்ளவாரே இதனைச் செய்யவேண்டும். 1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும். 1.3 புதியதோர் அமைப்பை உருவாக்க வேண்டும் 1.4 BTF கலைக்கப்பட்டு கைவிடப்பட வேண்டும் 1.5 வேறு ஜோசனைகள். 2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும் 2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக 2.2 : அதிகாரம் பகிரப்பட்ட அ…

    • 12 replies
    • 1.6k views
  15. விருப்பு அல்லது ஆசை என்பது உண்மை அல்லது நிஐம் ஆகுமா??? தலைவரருடைய இருப்புப்பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்தான் இது அதாவது எனது அல்லது என்போன்ற தமிழர்களுடைய அல்லது ஈழத்தமிழர் ஒவ்வொருவருடைய விருப்பம் அல்லது ஆசை அல்லது அவா தான் தலைவர் இருக்கவேண்டுமென்பது. ஆனால் நிஐம் அல்லது உண்மை என்பது எமது ஆசையோடு ஒன்றிப்போகும் என்று எதிர்பார்ப்பது மிகவும் முட்டாள்தனமானது இது எனக்கும் தெரியும் ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் அது எனக்கு வேண்டும் அது எனக்கு அவசியம் ஏனெனில் அது இல்லையென்றால் நான் பூச்சியமாகிவிடுவேன் எனவே நான் ஏதாவது காரணம் கூறி என்னை நானே நம்பும்படியாக அல்லது நம்பிக்கைவரும்படியாக ஏதாவது ஒரு வழியைக்கண்டுபிடிப்ப…

  16. ஐரோப்பாவில் உள்ள மக்களின் வரிப்பணம் அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக சிறிலங்கா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றடைவதை எதிர்க்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனனி ஜனநாயகம் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 305 views
  17. "ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது. பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்ச…

  18. சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 324 views
  19. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கி மற்றும் துப்பாக்கி தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  20. இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் குறைந்தது 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  21. இந்திய உள்துறை அமைச்சரான பழனியப்பன் சிதம்பரம், சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார். இலங்கையின் தென் கடலோரப் பகுதியில், உலகின் மிகவும் சுறு சுறுப்பான கடற்பாதையிலிருந்து பத்து மைல்கள் மட்டுமே தொலைவிலுள்ள உறக்கமடைந்து கிடந்த மீன்பிடி நகரான அம்பாந்தோட்டை பாரிய கட்டட வேலைகளில் அமிழ்ந்து போயுள்ளது. இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வட கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெறும் போரில் ஈடுபாடுள்ள ஒருவரின் மன நிலையிலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் 21 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டது இக்கிராமம். எது எவ்வாறோ, சிறீலங்கா இராணுவம் துணிவுற்று எழுந்தமைக்கும், மேற்குலக அரசுகள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட அதிகாரமற்று…

  22. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 277 views
  23. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கேர் காகன் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 402 views
  24. இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அவலங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் மக்களின் உரிமைகளை அனைத்துலகத்துக்கு மீண்டும் எடுத்து இயம்பும் வகையிலும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலும் கனடாவின் தலைநகர் ஓட்டாவாவிலும் மாபெரும் மக்கள் பேரணி நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 339 views
  25. 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. “”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!” வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்ப…

    • 15 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.