ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் : மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....=9077&cat=1
-
- 10 replies
- 1.7k views
-
-
திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…
-
- 11 replies
- 1.5k views
-
-
கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவரை வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசு திட்டம்? ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2009, 08:02 மு.ப [ஈழம][கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பணிபுரியும் சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பூனேயை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையிட்டு அரச உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும் தெரிகின்றது. வன்னியில் தொடரும் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகமே திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்ததையட…
-
- 0 replies
- 577 views
-
-
இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில் - ஆக்கபூர்வமாக - துணிச்சலாக - பகிரங்கமாக - அச்சம் இன்றி - ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எனக்கு உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் பெருமிதம் வெளிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலகெங்கும் இருந்து கடந்த சில நாட்களாக எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், E-mail எனப்படும் மின்னஞ்சல்களு…
-
- 26 replies
- 2.3k views
-
-
தமிழரை கொல்ல 80 லாரியில் ஆயுதம்; பவாணி அருகே மக்கள் வீதி மறிப்பு 30 பேர் கைது;தற்பொழுது நீலம்பூர் அருகில் மக்கள் வீதி மறிப்பு;மக்களை உடனடியாக நீலம்பூர் வருமாறு ஒருங்கமைப்பாளர்கள் அறைகூவல் ராணுவம் மீது மக்கள் தாக்குதல்; மேலும் பலர் கைது. நேரடி செவ்வி Source Link: Indian Army Weapons go to Sri Lanka ; 30 arrested near Bhavani
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
வன்னியில் தொடரும் போரினால் வடபகுதியில் உருவாகியுள்ள மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியாவில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறப்பு தூதுக்குழு ஒன்று நாளை திங்கட்கிழமை கொழும்பு செல்லவிருக்கின்றது. பக்கிங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண், ஸ்கொட்லான்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மல்கெம் புரூசி, வட அயர்லாந்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் மக்கிலடி மற்றும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் சர்வர் ஆகியோர்தான் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெறவிருக்கின்றார்கள். இந்த இருநாள் பயணத்தின்போது இவர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் பல்வேறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் நாடாளுமன…
-
- 2 replies
- 683 views
-
-
சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோதமான முறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக தெரிவித்து, வித்தியாதரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, வித்தியாதரனின் அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் காலங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர சேனாநாயக்க, உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி.பி. விஜ…
-
- 1 reply
- 541 views
-
-
போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள். பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா. எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத்துக…
-
- 4 replies
- 1.1k views
-
-
விசாரணை நடத்துமாறு ஐ.நா.விடம் அரசு வலியுறுத்தல் இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வலயத்தின் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்து சென்றது என்பது தொடர்பாக ஐ.நா.விற்கும் இலங்கைக்கும் இடையில் சர்ச்சை மூண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நில்பூனே வரவழைக்கப்பட்டிருக்கிறார். உணர்வு பூர்வமான இந்த ஆவணம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்து சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.விடம் கேட்டிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயை சந்தித்த பின்பே அமைச்சர் சமர…
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை பெரவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ’’அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளில் இருந்தும் மே 16-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த தீர்ப்பு இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும்.…
-
- 0 replies
- 683 views
-
-
புதிய ஈழத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு : புதிய ஈழ இராச்சியமொன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படுவதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை, காணி மற்றும் நிதி சம்பந்தமான அதிகாரங்களை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த உறுதிமொழியின் மூலம் அரசாங்கம் பிரிவினைவாதம் வெளிச்சமாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந…
-
- 0 replies
- 859 views
-
-
அவர்கள் அதிர்ந்து போய் கேட்டுக்கொண்டிருந்தனர்; கைகளை சொடுக்கிய படி அவர் உரத்துக்கூறினார். நான் நினைத்தால் இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை இழுத்து மூடிவிட முடியும். பலாலி அழைத்துச்செல்ல பயன்பட்ட இராணுவ வாகனங்கள் வெளியே காத்திருந்தன. குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன், யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அவர்கள் அவரது மேசைக்கு முன்னாலுள்ள கதிரையில் சொல்வதற்கு ஏதுமின்றி வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தனர். இவ்வளவு எச்சரித்தவர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியாக இருந்து தற்போது இராணுவ தலைமைய அதிகாரியாகவும், தற்போது தான் வன்னியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்;டிருக்கும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந…
-
- 0 replies
- 770 views
-
-
இந்தியா-சீனா அதிகாரப் போட்டியில் தடுமாறும் மேற்குலகம்--- சி.இதயச்சந்திரன் இந்தியப் புலனாய்வு வலையமைப்பின் தீவிர செயற்பாடுகள் உலகெங்கும் விரிந்து செல்கிறது. இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்திற்கு அடுத்ததாக, இலங்கை விவகாரத்திலேயே இந்தியாவின் க?சனை அதிகளவில் காணப்படுகிறது. இந்திய அமைதிப் படைக் காலத்தில், துணைக் குழுக்களோடு, தமிழர் கூட்டணியை இணைத்து, புதிய தமிழ் தலைமையொன்றினை உருவாக்க, "றோ' மேற்கொண்ட சதிகளை இன்றைய நிலைவரத்தோடு ஒப்பீடு செய்யலாம். தமிழ் அரசியல் களத்திலிருந்து விடுதலைப் புலிகளின் வகிபாகம் முற்றாக அகற்றப்படும் நிலை ஏற்படப்போவதால், தமது அனுசரணையோடு புதிய அவதாரம் எடுத்தால்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் இருப்பு தக்க வைக்கப்படு…
-
- 0 replies
- 1k views
-
-
நேற்று இரவு (02-05-2009) 10.20 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்திலுள்ள வெம்பு பகுதியில் ரோந்து சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 0 replies
- 518 views
-
-
இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண…
-
- 24 replies
- 2.5k views
-
-
நேற்றைக்குக்கூட ஈழத்தில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனையில் சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் அப்பாவி நோயாளிகள் 64 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று வரையிலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்தியாவில் நடந்து கொண்டுதான் வருகிறது. பிச்சைக்காரர்களே இருந்திராத தேசத்தில் அத்தனை மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சிங்கள இனவாத அரசுக்குத் துணை போகும் காங்கிரஸ் அரசையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் அத்தனை பேருக்கும் உண்டு. சிங்கள அரசு சொல்லும் அனைத்துப் பொய்களுக்கும் ஆமாம் சாமி போட்டு ஆதரவு அளிப்பது மத்திய, மாநில அரசுகள்தான்.. இப…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
வன்னியில் உள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வலியுறுத்துமாறு உலகத் தமிழர்களிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 284 views
-
-
சாவின் விளிம்பில் நின்று இனவாத சிறிலங்கா அரசின் கொடிய குண்டுமழையில் குளித்தும் எறிகணையில் எரிந்தும் கொத்தணிக் குண்டிலும் நச்சுவாயுவிலும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் துயர்கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்துக்கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது என்று இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
சீனாவினால் மில்லியன் டொலர் செலவில், சிறிலங்காவின் தெற்கின் கடலோர நகரமான அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத்தளத்துடன் கூடிய துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதை டைம்ஸ் ஒன்லைன் கசியவிட்டுள்ளது. முழு தெற்காசியாவுக்குமான தமது கண்காணிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும், கடற்போக்குவரத்தின் போது கப்பல்களுக்கு மீள் எரிசக்தி அளிக்கவும், கப்பல் பழுது பார்க்கும் தளமாகவும் மாறவிருக்கும் இக்கடற்படை தளத்தினை அம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்காக 2007 மார்ச் மாதம் ஒப்பந்தத்தினை சீனா, இலங்கை அரசுடன் கைச்சாத்திட்டதாகவும், சிரிலங்கா அரசின் இராணுவ வெற்றிகளுக்கும், சீனா வழங்கிய இராணுவரீதியான உதவிகளே காரணம் எனவும் டைம்ஸ் ஒன்லைன் சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்த்தானின் க்வதார், வங்காளதேசத…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பை இராணுவ பிரதேசமாக்கி தமிழர் தாயக கோட்பாட்டை நில ரீதியாக பிளவுபடுத்தி தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதி வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 498 views
-
-
-
- 0 replies
- 741 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக சிறிலங்கா படையினர் வன்னியின் இரட்டைவாய்க்கால் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை உடைத்து - 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழைய அதிக பலத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது படை தரப்பு பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது. இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் முறியடிப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 60 வரையான படையினர் கொல்லப்பட்டுள…
-
- 1 reply
- 1.1k views
-