Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது : ஐ.நா கவலை! இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவும்வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே நேற்று அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். பொருளாதார சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என…

  2. எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது : குமார வெல்கம! எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தமது அரசாங்கத்தை அமைக்கின்றன. மாறிமாறி வரும் அனைத்து அரசாங்கங்கள் இதனையே வழக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வாறுதான் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அ…

  3. பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களின் பின்னணி வெளியானது! பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது, சுமார் 16 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கப்பலில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் பெட்டியொன்றில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/133589…

  4. புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவ…

  5. லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்! adminJune 21, 2023 லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன சமாந்தரமாக நகர்த்தப்படல் வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆளும் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்…

  6. Published By: VISHNU 21 JUN, 2023 | 10:21 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் …

  7. பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். Dupuy de Lôme என்பது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலாகும், இதில் 107 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். இந்த கப்பல் தளபதி அகஸ்டின் பிளான்செட் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, Dupuy de Lôme இன் குழுவினர் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள். கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளது. https://thinakkural.lk/article/259343

  8. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2023 | 02:33 PM பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முல்லைத்தீவு குருந்தூர்மலை விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு இன்று புதன்கிழமை (21) உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருகை தருவதற்கு முன்னதாக குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமா…

  9. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2023 | 04:58 PM வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நான் வடமாகாணத்தின் ஆளுனராக இருந்தாலும் வவுனியா மாவட்டத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒன்று இருக்கின்றது. காரணம் நான் வதியும் இடம், பல இடங்களிலே பதவி வகித்திருக்கின்றேன், இறுதியிலே மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஆற்றியிருக்கி…

  10. Published By: VISHNU 21 JUN, 2023 | 12:51 PM குமுதினி படகின் திருத்த வேலைகள் முடிவடைந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (20) படகு கடலினுள் இறக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (20) படகினை கடலுக்குள் இறக்க…

  11. இலங்கையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HIV தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 165 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்சமான தொற்றாளர்களின் எண்ணிக்கை இது எனவும், அதிகமான வழக்குகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்…

  12. வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு! வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக…

  13. நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவங்ச! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். விமல் வீரவங்சவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) ஆஜராகியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுத்தமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335754

    • 3 replies
    • 360 views
  14. 21 JUN, 2023 | 10:34 AM வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை (21) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, வீட்டிற்குள் சென்ற போது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தடவியல் பொலிஸாரின் உதவிய…

  15. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2023 | 10:55 AM யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். அது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு…

  16. மகிந்தாவுக்கு ஆதரவாக வந்து சாத்து வாங்கியவர் மோசடி வழக்கில் உள்ளே. மகிந்தா ராஜபக்சேவின் இறுதி நம்பிக்கையினை சிதறடித்த இந்த படம், மகிந்தா காகண்டகம என்னும் கொழும்பு மாநகரசபையில் முன்னாள் கவுன்சிலர், அவரது தீவிர ஆதரவாளர், இப்படி சாத்து வாங்கி, கோவணத்துடன் வீதியில் விழுந்து கிடந்த படம் வெளியாகி உலகம் எங்கும் பரவியது. கொம்பனி தெருவில் கட்டப்படும், நகர அபிவிருத்தி சபை அமைக்கும் (கோத்தாவின் திட்டம்) ஆடம்பர வீடுகளில், ஒரு வீட்டினை தருவதாக வாக்கு கொடுத்து இந்த பெரும்தொகைப் பணத்தினை ( 7 கோடி ) கண்டியில் வாழும் ஒருவரிடம் இருந்து பெற்று இருந்தார். சொன்னபடி தராமல் ஏமாத்தியதால், அவர் போலீசில் முறைப்பாடு செய்ய,கைதாகி உள்ளார்., ஜூன் 24 வரை விளக்கமறியலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்…

  17. Published By: VISHNU 20 JUN, 2023 | 04:58 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட …

  18. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 04:12 PM (எம்.நியூட்டன்) தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைத் தொடர்பு கோபுரம் இவ்விடத்தில் அமைக்க வேண்டாம். ஏழாலை தெற்கு புளியங் கிணற்றடி வீதியில் சனநெருக்கம் அதிகமாக உள்ள இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதை நாம் விரும்பவில்லை. இந்தச் செயற்பாடானது எமது பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போத…

  19. இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச! நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில்தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது. இவர்தான் நாட்டின் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர். நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் தீவிரமடைந்தது. இதனை நாம் சுட்டிக்காட்டியபோதுதான…

    • 8 replies
    • 705 views
  20. இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்: ஒருவர் படுகாயம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அதே வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடமையின் போது குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே இம்மோதல் உருவாவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2023/1335670

  21. Published By: RAJEEBAN 20 JUN, 2023 | 04:33 PM தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள்ள உள்ள உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு கிறீன்ஸ் கட்சி ஆதரவளிக்கின்றது என கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளார். இன்று நான் தமிழ் மக்களிற்கு ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு என்னை அவர்கள் அழைத்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அகதிகள் பேரவை தமிழ் அகதிகளிற்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல், கல்வி தொடர்பான உதவிகளை வழங்குதல், அகதிகள் தொடர்பா…

  22. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். h…

  23. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 10:34 AM (எம்.நியூட்டன்) இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நெடுந்தீவு அருகே திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http…

  24. Published By: VISHNU 19 JUN, 2023 | 06:30 PM (இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எஹலியகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசியல் இலாபம் அடைவதை ஒர…

  25. 19 JUN, 2023 | 05:17 PM இதய நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் தொடர்பான நிபுணர் டாக்டர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்நிலைமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது கூடுமான வரை முகக்கவசம் அணிந்துகொள்வது சிறந்தது. காற்று மாசுபாடு இதய நோயை மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களையும் ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.