ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
இலங்கை விவகாரம்-ஒபாமா அவசர ஆலோசனை இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாக ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மி…
-
- 2 replies
- 2k views
-
-
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டுள்ள சிட்னியில் வசிக்கும் தமிழர்கள், சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை அவுஸ்திரேலியா கொடுக்கவேண்டும் என வலியுறுத்தும் போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-
-
"அனைத்துலக சமூகத்திடம் இருந்து எந்தளவுக்கு அழுத்தங்கள் வந்தாலும், போர் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது" என சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போ…
-
- 2 replies
- 1.3k views
-
-
- எஸ்.சரவணன் சென்னை, ஏப்.27: தொலைக்காட்சிகளில் காலைச் செய்திகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, அந்தச் செய்தி. 'இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம்.' காலதாமதமான உச்சபட்ச முயற்சி என்றாலும், தி.மு.க. தலைவரின் முனைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று மக்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். 'எல்லாம் முடிந்துவிட்டதே. இப்போது இது தேவையா?' என்ற ஏமாற்றம் கலந்த கோபக்குரல் மற்றொரு புறம். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று (ஏப்.27) அதிகாலை 6.10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய கருணாநிதி, "இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் மகிழ்ச்சியான தகவல் வரும…
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அண்ணா சமாதிக்கு நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4:40 நிமிடத்துக்கு - திடீரென சென்ற திரு. மு. கருணாநிதி, குடும்பத்தினரிடம் கூடச் சொல்லாமல் அதிரடியாக ஒர் உண்ணாநிலையைத் தொடங்கினார். இந்தப் பின்னணியில் இருந்து தமிழக அரசியல் சூழலில் ஈழப் பிரச்சினையை அலசுகின்றார் தமிழகத்தில் இருந்து அ.பொன்னிலா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
ரஜபக்சேயுடன் கருணாநிதி கூட்டு. கருவின் போர் நிறுத்த நாடகத்தின் பின்னால் ஒரு பாரிய சதி.. பங்கருக்குல் ஒளித்திறுக்கும் ஈழத்தமிழர்களை வஞ்சகத்தால் வெளியேவரவைத்து கொத்துகறி போடுவதே சிங்களவரின் திட்டம்.. நேற்றும் இண்றும் கறுங்காலி கருணாநிதியினால் பலபேர் கொலை செய்யப்பட்டார்கள்.
-
- 1 reply
- 1.6k views
-
-
சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை வீசா மறுப்பு: இவருடன் செல்லும் மற்ற பிரித்தானிய, ப்ரென்ச் அமைச்சர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. காரணம் : பல முக்கிய பிரமுகர்களை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதாம். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8022190.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் தடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பி உள்ளதாக கவிஞர் இன்குலாப் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 526 views
-
-
சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் சார்ள் பில்டிற் கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளதற்கான பதில் நடவடிக்கையாக சிறிலங்காவுக்கான தனது தூதுவரை சுவீடன் அவசரமாகத் திருப்பி அழைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 393 views
-
-
"எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
மாயாண்டி குடும்பத்தார் என்ற தமிழ்சினிமாவில் இயக்குநர் சீமான் நடித்துள்ளார். புதுச்சேரி சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனவுடன் இரவில் நடந்த இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் இயக்குநர் சீமான். விழாவில் சீமான், ’’சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது. சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள். நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம். அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே …
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். நன்றி: நக்கீரன…
-
- 56 replies
- 5.7k views
- 1 follower
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் மனிதப் பேரவலம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையை உடனடியாக நிறுத்தி அங்குள்ள அப்பாவி மக்களுக்கு விமோசனம் அளிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் இன்று பேரணியும் அதனைத் தொடர்ந்து ஒளிதீப ஒன்றுகூடலும் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:14.44 PM GMT +05:30 ] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV2b02ZLu2e
-
- 10 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் தடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு மாநில அரசால் 2006 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருது கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்டிருந்தது. 'கலைமாமணி' விருது, எனக்கு கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக அமையும் எனவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே இந்திய மத்திய அரசால் வழங்கப்பட்ட 'பத்மசிறீ' விருதினை திருப்பி அனுப்பபோவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 899 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக தமிழ்மக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டமும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் அங்கு முன்னெடுக்கப்படும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரமாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழ்மக்களால் கடந்த 23 நாட்களாக இரவு- பகல் பாராது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதுடன் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் 22 நாட்களாக அங்கு சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி சிறிலங்கா அரசிற்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இலங்கையில் உடனடியாக நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆ…
-
- 0 replies
- 706 views
-
-
தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு என தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு என தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
பொதுமக்கள் செறிவாகவுள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது போர்க்காலச் சட்டங்கள் அரசாங்கப்படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மீறப்பட்டிருப்பது தொடர்பாக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சுட்டிக் காட்டியிருக்கின்றது. "கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் அரச தலைவரின் செயலகத்தால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மைக்கால போர்களின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது"…
-
- 0 replies
- 642 views
-
-
கடனாவின் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை (23.04.09) பிற்பகல் 12:00 மணி தொடக்கம் தமிழ் இளையோரால் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் நேற்று தொடக்கம் வீதி மறிப்பு போராட்டமாக மாறியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
-
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழம…
-
- 11 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் இன்று காலை பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இத்தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என இன்னும் சரியாக தெரியவரவில்லை. லண்டன் போலீசாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது இதுபற்றி கூறமறுத்துவிட்டனர். இத் தாக்குதலில் சிறு சேதங்கள் தூதரங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. http://athirvu.com/
-
- 3 replies
- 1.3k views
-