Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21 AUG, 2023 | 03:09 PM முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும…

  2. 21 AUG, 2023 | 01:28 PM இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (21) அதிகாலை 04.14 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-126 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்நிலையில் அவர் கொண்டு வந்த உடுதுணிகளைச் சோதனையிட்டபோதே இந்த 4 கடவுச்சீட்டுகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…

  3. புலம்பெயர் முதலீடுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் - முன்னாள் பிரதி அமைச்சர் கருணா சந்திப்பு Published By: Vishnu 21 Aug, 2023 | 11:17 AM கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (2108.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். …

    • 5 replies
    • 585 views
  4. 21 AUG, 2023 | 10:37 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார். குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு …

  5. 20 AUG, 2023 | 08:24 PM 1976 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 விதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (18) தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் கச்சதீவை மீட்போம் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்கள் வரும்…

  6. 20 AUG, 2023 | 05:20 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிநீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அம்மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடிநீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால் நடையாகச் செல்லும்போது காட்டு யானைக…

  7. 20 AUG, 2023 | 05:11 PM முல்லைத்தீவு, உணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் உணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையமொன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, அவர்கள் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றினை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை வழங்கியுள்ளார்கள். இந்நிலையில், கடிதம் வழங்கியும் இதுவரை மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் …

  8. 20 AUG, 2023 | 02:22 PM உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/162767

  9. மாற்றத்துடனான கல்வி முறையொன்றே நாட்டுக்கு அவசியம் ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று முன்தினம் (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு ஆய்வு கூடத்தை (Analytical Laboratory) திறந்துவைத்த சாகல ரத்னாயக்க, பல்கலைக்கழக மைதானத்தில் கட்டப்பட்டு வரும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளையும்…

    • 0 replies
    • 193 views
  10. மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பம் இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது. இதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் (புதன்கிழமை தவிர) விமான சேவைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 198 views
  11. “இனவாதங்களை தூண்டிவிட்டு தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்க முயற்சி” இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். …

    • 1 reply
    • 320 views
  12. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (19) காலை யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை வீதியூடாக பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நிலவும் வறண்ட காலநிலை காரணமாக பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் கிணறுகளுக்கு நீரை வெளியிடும் திட்டத்தில் பூங்கா நிர்வாக திணைக்களமும் இணைந்துள்ளது. இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங்கும் இணைந்துகொண்டார். https://thinakkural.lk/article/269403

  13. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ,999 குடும்பங்களை சேர்ந்த 70,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கானை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அராலி, பொன்னாலை பகுதிகளில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பிடிக்கப்படும் இறால், நண்டு, சிறு மீன்களின் அளவு வெகுவாக குறைவடைந்துள்ளமையினால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர…

  14. 19 AUG, 2023 | 02:08 PM யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (19) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் ஆவார். மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

  15. 19 AUG, 2023 | 09:10 PM கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.. கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் 2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார். https://www.virakesari.lk/article/162729

  16. மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள…

    • 8 replies
    • 759 views
  17. மன்னாரில் காணி விடுவிப்பு கூட்டம் ! புறக்கணித்த தமிழ் எம்.பிக்கள் ! வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தவைமையில் இன்று இக் கூட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஏனைவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறித்த கூட்டம்…

    • 2 replies
    • 453 views
  18. வடக்கிலிருந்து 50 வைத்தியர்கள், 20 தாதியர்கள் வெளியேற்றம் ! வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டுக்கு கல்விக்காக சென்ற மீண்டும் நாடு திரும்பாதவர்களும் உள்ளனர். அத்துடன் 20 தாதியர்களும் வெளியேறியிருக்கின்றனர். வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறு…

    • 1 reply
    • 332 views
  19. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு ! இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 77 ஆயிரத்து 552 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 65 ஆயிரத்து 612 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் கடந்த மாதத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 39 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அத்துடன் பிரித்தானி…

    • 0 replies
    • 296 views
  20. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை பூஸ்ஸ கடற்படை உயர்…

    • 0 replies
    • 120 views
  21. இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். …

    • 5 replies
    • 581 views
  22. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் EPDP பரிந்துரை ! தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின், நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்ப்பில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களம் , வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமி…

    • 2 replies
    • 385 views
  23. உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மாகாண சபை முறைமையுடன் எதிர்கால நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்க…

  24. வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13வது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும் என சுற்­றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன், மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். மேலும், இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் பங்­கேற்பு இல்­லாமல் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­…

    • 4 replies
    • 509 views
  25. நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும். என்ற முன்மொழிவை முன்வைத்துள்ளார். மேலும், வடகிழக்கு மாகாணம் பி…

    • 3 replies
    • 289 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.