Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி! adminJune 2, 2023 சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி சங்கானையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை (02.06.23) இடம்பெற்றது. சங்கானை பிரதேச கலாசார மண்டபத்தில் ஆரம்பமான நடைபவனி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் மஞ்சுள செனரத், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரேமினி, வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2023/191454/

  2. மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன்மணல் மயானம் தெரிவு adminJune 1, 2023 யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்புகுழுவில் நேற்றைய தினம் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் எதிர்ப்புக்கள் தெரிவித்தமையால் இடத்தெரிவில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில…

  3. தையிட்டி சட்டவிரோத விகாரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை adminJune 1, 2023 தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தையிட்டி விகாரை தொடர்பான விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்தனர். அதன் போது , விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், இ…

    • 2 replies
    • 455 views
  4. தேசிய பொசன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கும் : ஜனாதிபதி ஊடகப்பிரிவு! தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தினால் மாத்திரம் 288 இலட்சம் ரூபா ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், 2020 மற்றும் 2021 கொரோனா சமயத்திலும், 2022 ஆம் ஆண்டிலும்…

  5. ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்! ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் தற்போது ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது. குறித்த அரசாங்கத்தின் முயற்சியில் குறித்த ஆணைக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வேளையும் ஒரு ஊடக நிறுவனத்திற்குள் சென்று விசாரணைகளை நடத்தலாம். இந்த விடயம் ஊடக சுதந்திரத்தி…

  6. பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது. மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்த…

    • 6 replies
    • 446 views
  7. இனவாதத்தை அரசில்வாதிகள் வியாபாரமாக்கியுள்ளனர் : சர்வமதத் தலைவர்கள் குற்றச்சாட்டு! அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர். தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் …

    • 1 reply
    • 186 views
  8. பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது. இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த க…

    • 5 replies
    • 579 views
  9. Published By: VISHNU 01 JUN, 2023 | 05:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்க…

  10. இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரம்புக்வெல்ல, கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்து…

  11. பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைதுசெய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். நடாசா உள்நோக்கத்துடன் பௌத்தைஅவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவவழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வுபேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விடதீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஷாபிக்கு எ…

    • 2 replies
    • 237 views
  12. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வணக்கத்துக்குரிய நயினாதீவு ரஜமகா விகாரையின் பிரதம குருவான ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தேரரை வியாழக்கிழமை (01) சிவசேனை அமைப்பின் சிவத் தொண்டர்கள் அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நயினாதீவு நாக விகாராதிபதியை சந்தித்த சிவசேனை | Virakesari.lk

    • 3 replies
    • 635 views
  13. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 04:55 PM சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமான நொதேர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீளச் செயற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டமை உண்மையே என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராயப்படும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 372 பேருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கிணறுகளை இறைப்பதற்கு 20 மில்லியன் ரூபா…

  14. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 05:01 PM கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்று…

  15. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 02:46 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது…

  16. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 10:29 AM வவுனியா நீதிவான் நீதிமன்றின் இருவேறு கொலை வழக்குகளின் சான்றுப்பொருள்களான தங்க நகைகள் காணாமற்போனமை தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் சான்றுப்பொருள் காப்பாளர்களாகக் கடமையாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, குறித்த இருவரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பித்துள்ள நிலையில் நாடுகடத்துவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம், வவுனியா நீதிவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை வழங்கியுள்ளார். ஓமந்தை இரட்டைக் கொலை வழக்கு மற்றும் சமளங்குளம் இரட…

  17. Published By: DIGITAL DESK 5 01 JUN, 2023 | 09:41 AM வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 55 கடைத் தொகுதிகளும் உள்ளன. குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாது உள்ள நிலையில் அதன் மின்சாரப் பட்டியலுக்கான கொடுப்பனவு நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளது. தனித்தனி கடைகளுக்குமான மின்சாரப் பட்டியல்களின் ஒருமித்த தொகையே 4 இலட்…

  18. Published By: DIGITAL DESK 5 01 JUN, 2023 | 11:16 AM யாழ். மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுரை வழங்கியுள்ளார். புதன்கிழமை (31) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் பனைவளம் அழிக்கப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறி…

  19. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 11:39 AM மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும் சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வங்கியை உடைத்து வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் பிரதான பாதுகாப்பு பெட்டகம் (லொக்கர்) வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து உள்ளே நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். இதன்போது, வங்கியின் முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தனது தொலைபேசி இலக்கத்தை இணைப்புச…

  20. இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்…

    • 4 replies
    • 806 views
  21. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2023 | 01:48 PM வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது கடற்படை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒரு சில படகுகளில் இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை கட்டுப்படுத்துவதற்க…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் அண்மை காலமாக மத அவமதிப்பு தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடாஷா எதிர்சூரிய என்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேடை நிகழ்ச்சியொன்றில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், நடாஷா எதிர்சூரிய கருத்து வெளியிட்டார் என தெரிவித்து, பல்வேறு தரப்பின…

  23. Published By: VISHNU 31 MAY, 2023 | 12:39 PM யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/156581

  24. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2023 | 10:05 AM பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஒரு ஊடகக் குறிப்பில், இலங்கை மத்திய வங்கியானது தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர் விபரங்களை பொதுமக்களின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/156563

  25. Published By: DIGITAL DESK 3 31 MAY, 2023 | 12:24 PM யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார். புதன்கிழமை (31) இடம்பெற்றுவருகின்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போதும் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது ஆனால் குடிநீர் வழங்குவதற்கான குழாய் புதைக்கும் திட்டமானது நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.