ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது! நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகை தந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1332599
-
- 54 replies
- 3.8k views
- 1 follower
-
-
Published By: NANTHINI 14 MAY, 2023 | 02:28 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள், இருப்பினும் கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது என்றும், அதனை ஒரே முறையில் சரியாக செய்து முடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் கீழ், சுமார் 3 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்றிட்டத்தை ஏப்ரல் …
-
- 7 replies
- 446 views
- 1 follower
-
-
வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை எடுத்துச் சென்று அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் போலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் வியாபார நோக்கத்திற்காக பதுளை மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகை தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வான் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டு வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இவ்வாறு வாடகை அடிப்படைய…
-
- 0 replies
- 172 views
-
-
சிறைச்சாலை கூரை மேலேறி கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=173735
-
- 3 replies
- 294 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 MAY, 2023 | 04:39 PM திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இதில் கிண்ணியா,கந்தளாய்,தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர். இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள்,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிர…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 28 MAY, 2023 | 12:14 PM சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடா நாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவி…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
சீனக் குற்றச்செயல்களின் கேந்திரமாகும் இலங்கை? அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்ற…
-
- 0 replies
- 259 views
-
-
சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் இருந்தபோது குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு ப…
-
- 0 replies
- 146 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2023 | 09:52 AM (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள்…
-
- 1 reply
- 436 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயார் – சீ.வீ.கே.சிவஞானம் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும் போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட…
-
- 2 replies
- 205 views
-
-
தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது. குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்க…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:31 PM (எம்.மனோசித்ரா) வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெ…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என …
-
- 3 replies
- 366 views
-
-
Published By: NANTHINI 27 MAY, 2023 | 05:32 PM மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். htt…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் நாணய மதிப்பிழப்பு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் மனிதாபிமான அவசரநிலை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலைவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், இந்த அளவீட்டின் அடிப்படையி…
-
- 2 replies
- 483 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:13 PM (நா.தனுஜா) ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பே…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை? இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது. சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை…
-
- 7 replies
- 643 views
-
-
Published By: RAJEEBAN 27 MAY, 2023 | 02:23 PM இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம் - செந்தில் தொண்டமான் 27 May, 2023 | 11:23 AM கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவ…
-
- 2 replies
- 475 views
-
-
இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கைய…
-
- 4 replies
- 287 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 09:50 AM கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – 18ம் திகதி நால்வர் கைது – மன்னிப்புச்சபை கவலை 27 May, 2023 | 11:43 AM பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக்…
-
- 0 replies
- 296 views
-
-
மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889
-
- 0 replies
- 382 views
-
-
146 நாட்களில் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவு இந்த வருடத்தில் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் …
-
- 0 replies
- 198 views
-
-
சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனை-சந்தித்தார்-செந்தில்/175-317966
-
- 16 replies
- 1.1k views
-