ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
19 MAY, 2023 | 07:35 PM இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும் அந்த சுதந்திரம் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகளை நாம் அனுபவிக்க முடியாமல் இன்றும் இந்த நாட்டில் இருக்கின்றோம். இந்த நாடு சுதந்திரம் பெற முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்பும் எமது மக்கள் அடிமைகளாகவே வாழுகின்றார்கள் என்பதுதான் உண்மை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நுவரெலியா புதியநகர மண்டபத்தில் நடைபெற்ற " மலையகம் 200 " நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொழுது கூறினார். அங்கு இராதாகிருஷ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில், தென்னிந்தியாவிலிருந்து இலங்கை நாட்டுக்கு நாட்கூலிகள…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 19 MAY, 2023 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்) கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் 2024இல் ஒரே வருடத்துக்குள் நடத்தி பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம். அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் 7800 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பங்குபற்றலுடன் கல்வி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற, குறைந்த வருமானம் பெறும், பெ…
-
- 1 reply
- 190 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) சீமெந்து மூடை ஒன்றுக்கு ரூ.150 குறைக்கப்பட்டமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த குறைப்பு போதாது எனவும், அரசாங்கம் சீமெந்து விலையை ரூ.1800 வரை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி ஓரளவுக்கு குறைந்துள்ள இவ்வேளையில், மக்கள் நலனுக்காக, குறிப்பாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான தொழிலாளர்களுக்காக அரசாங்கம் சீமெந்துப் பொதியைக் குறைக்க வேண்டும் என NCASL இன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். தற்சமயம் 55 சதவீத அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானங்கள் சந்தையில் தாங்க முடியாத சீமெந்து விலையால் முற்றிலுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் எனவே இந்த தொகையை விட குறைந்த பட்சம் ரூ.1800 அல்லது அதற்கும் …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
வட மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/254601
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 MAY, 2023 | 02:38 PM இந்தியக் கடற்படைக் கப்பலான “பற்றி மால் 2023” மே 16-17 ஆகிய திகதிகளில் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக இந்தியக் கடற்படைக்கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ரியர் அட்மிரல் மன் சிங் எம் கிழக்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் HGUD குமார கிழக்கு கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். 2023 ஜூன் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச யோகா தின முன்னோட்ட நிகழ்வாக விசேட யோகா அமர்வும் பல்வேறு அம்சங…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது. எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதி…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
பூமியின் மிகவும் குறைந்த ஈர்ப்பு விசை இலங்கையின் தெற்கு முனையில்! பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக, மேற்கொண்ட செயற்கைகோள் ஆய்வுகளில் இந்த வேறுபாடுகளை கண்டறிந்துள்ளது. பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதால், அவை ஈர்ப்பு விசைகளி…
-
- 0 replies
- 291 views
-
-
ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு! 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு நினைவு கூரப்படவுள்ளனர். இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் உயிரிந்த இராணுவ வீரர்களின…
-
- 4 replies
- 602 views
- 1 follower
-
-
இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு! இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றவுள்ளனர். இதேவேளை இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332268
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
ஆளுனராக செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்! கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…
-
- 6 replies
- 413 views
-
-
ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 10:53 AM ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு…
-
- 15 replies
- 686 views
-
-
தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல் Published By: Rajeeban 19 May, 2023 | 10:30 AM தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது. கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார். இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்…
-
- 61 replies
- 3.7k views
- 1 follower
-
-
தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி : அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள் 19 May, 2023 | 07:05 AM தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண…
-
- 4 replies
- 405 views
-
-
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு! May 19, 2023 வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (19.05.23) ஆளுநர் திருமதி சாள்ஸ் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட காவற்துறையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. https://globaltamilnews.net/2023/190789/
-
- 1 reply
- 317 views
-
-
பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்து வருகின்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்வினைக் குழப்பும் வகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்போம், புலிகளை நினைவுக்கூர வேண்டாம் எனற பதாதைகளை ஏந்தி, போராட்டத்தை மேற்கொண்ட…
-
- 9 replies
- 660 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் அஞ்சலி 18 May, 2023 | 06:48 AM முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் வியாழக்கிழமை 18.05.2023 நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. குறித்த அஞ்சலியின் பின்னர் ரவி…
-
- 0 replies
- 352 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழின படுகொலை நினைவு ஊர்தி பவனி முள்ளிவாக்கால் நினைவு முற்றத்தை வந்தடைந்தது 18 May, 2023 | 09:34 AM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரி, படுகொலையினை சித்தரிக்கும் படுகொலை உருவப்படங்கள் தாங்கிய வாகன ஊர்திப் பவனி புதன்கிழமை (17) இரவு முள்ளிவாக்கால் நினைவு முற்றத்தை அடைந்தது. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி தமிழின படுகொலைக்கு நீதி கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்தரிக்கும் வகையில் வாகன ஊர்தி பவனி ஒன்று அம்பாறை வீரமுனை கோவிலில் 199…
-
- 0 replies
- 322 views
-
-
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். முடங்கிப் போன பொருளா…
-
- 0 replies
- 322 views
-
-
கிழக்கு ஆளுநர் நியமனம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்கு தமிழ் ஆளுநர்களை நியமிக்குமாறு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றியமை வரவேற்கதக்கது. வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சி. அதுவும் இல…
-
- 0 replies
- 236 views
-
-
14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் நே…
-
- 42 replies
- 2.4k views
- 2 followers
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் செய்யும் இடம் முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் செய்யும் இடமாக மாறி உள்ளது. 2009 ஆம் ஆண்டு கால பகுதியில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்றால் உண்மையிலேயே மிகவும் ஒரு ஆச்சரியமான விடயம். இவர்கள் இவ்வளவு பேரும் இருந்தார்களா என்று கூட கேட்க தோன்றும் உண்மையில் அவர்கள் அனைவரும் தலைமறைவா…
-
- 1 reply
- 253 views
-
-
17 MAY, 2023 | 10:10 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார். மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் எழு மாதங்களாக தே…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, வலிகள் நிறைந்த யுத்த காலத்தின் கடைசி நாட்களில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும் இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்துவாா். அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிப்பதுடன், பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பாா்கள். வடபகுதியில் கறுவாச் செய்கைய…
-
- 0 replies
- 470 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலையின் 14வருட நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளைய தினம் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரவும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நி…
-
- 2 replies
- 461 views
-