ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி 2023 ஜூலை 24 கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான அதிக யானை உயிரிழப்புகளின் எண்ணிக்கை இது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மேலும் தெரிவித்தார். https://ww…
-
- 0 replies
- 292 views
-
-
சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகுதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு பதிலாக அதிகபட்ச சில்லறை விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஓகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை …
-
- 0 replies
- 259 views
-
-
சுமார் 10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – அரசாங்கம் அறிவிப்பு தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகளில் தற்போது 12,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக ஜானக வக்கும்புர கூறினார். தற்போது உள்ளூராட்சி அமைப்புகளில் தற்காலிக பண…
-
- 0 replies
- 173 views
-
-
நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதமான கடன் மறுசீரமைப்பு சீனாவுக்குக் கொடுக்க வேண்டிய கடன் சுமையின் காரணமாக இலங்கை சமீப காலங்களில் ஒரு பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ளது. நாடு அதிகரித்து வரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அரசாங்கம் மக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவற்றில் கைவைக்கும் தீவிர நடவடிக்கைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நடவடிக்கை ஏழைகளின் நலன் குறித்த கவலையை எழுப்பியுள்ளது, அவர்கள் தமது எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த நிதியையே நம்பியுள்ளனர். கடனை மறுசீரமைப்பதில் சீனா தயங்குவதால், நிலைமை இன்னும் மோசமாகி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதன்…
-
- 0 replies
- 379 views
-
-
யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை! யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர். இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்…
-
- 4 replies
- 884 views
-
-
இந்திய-இலங்கை பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ? இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில்…
-
- 1 reply
- 165 views
-
-
Published By: VISHNU 23 JUL, 2023 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் 'மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
வங்குரோத்து நிலைக்கு காரணம் என்ன ? – பல்கலைகழக பேராசிரியர்களிடம் ஆலோசனை பெற தீர்மானம் நாடு திவாலானதற்கான காரணங்களைக் கண்டறிய பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது. அனைத்து பல்கலைக் கழகங்களின் பொருளாதார துறை பேராசியர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். வங்குரோத்து நிலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதே தனது குழுவின் முதன்மையான நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என…
-
- 3 replies
- 333 views
-
-
இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியமையை தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எ…
-
- 3 replies
- 373 views
-
-
Published By: NANTHINI 22 JUL, 2023 | 01:44 PM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களின் பூர்வீகத் தொல்லியல் வழிபாட்டு அடையாளங்களை காணாமலாக்கிவிட்டு, அதன் மீது பௌத்த வரலாறுகளை எழுதி குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் இடமாக்கும் திட்டத்தோடு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாள…
-
- 4 replies
- 355 views
- 1 follower
-
-
23 JUL, 2023 | 01:40 PM யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை - தென்மயிலை ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம் கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2023/1341143
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
போராட்டத்தை கலைக்க நீர்த் தாரை பிரயோகம் சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நகர மண்டபம் அருகில் இன்று மாலை இந்த நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடம் பேரணியாக செல்ல அனுமதி வழங்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன…
-
- 0 replies
- 191 views
-
-
காத்தான்குடி கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்ப்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியை கொண்ட M.M. கலாவுதீன் நியமிக்கப்பட…
-
- 0 replies
- 179 views
-
-
வவுனியாவில் ரயிலுடன் பாரவூர்தி மோதி விபத்து வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரு…
-
- 0 replies
- 194 views
-
-
ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்! சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள். தமிழர் தாயப்பகுதியின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இழுத்தடிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் அவற்றினை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். மேலும் 1 3வது திருத…
-
- 1 reply
- 649 views
-
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத…
-
- 1 reply
- 506 views
-
-
ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்! பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1340604
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி ! Published By: Nanthini 22 Jul, 2023 | 02:08 PM யாழ். தென்மராட்சி மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது புகையிரதமொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், முற்பகல் 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அப்புகையிரத கடவையை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். அவ்வே…
-
- 3 replies
- 526 views
-
-
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு (21) நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்கள…
-
- 2 replies
- 424 views
- 1 follower
-
-
22 JUL, 2023 | 08:13 PM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தால் சுகாதாரத்துறைக்குள் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருக்காது என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு : குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா பட்டிக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை நெடுங்கேண…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
22 JUL, 2023 | 10:34 AM இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார். யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
24 கடலோரப் பகுதிகள் புதிய சுற்றுலா இடங்களாக அடையாளம் இலங்கையில் 24 கரையோரப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த சுற்றுலா தலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கொழும்பு, எல்ல, நுவரெலியா, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சுற்றுலா…
-
- 1 reply
- 610 views
-
-
நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 850 வகையான மருந்துகளில் இந்த 266 மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2023/1340978
-
- 1 reply
- 328 views
-