ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது.கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது …
-
- 9 replies
- 2.8k views
-
-
கருணா குழு அலுவலகம் மீது தாக்குதல் - ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம் கருணா குழு அலுவலகம் மீது இன்று விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது இன்று இரவு 8.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது ஒருவர் கொல்லப்பட இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். ஏனையவர்கள் அருகிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமிற்கு தப்பியோடி உயிர்தப்பியுள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் செங்கலடி மருத்தவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 35 வயதான திருகேஸ்வரன் என்பவர் மாவடிவேம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.sankathi.com…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை "ஈழப் போர்" 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை "ஈழப் போர் 1" என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை "ஈழப் போர் 2" என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை "ஈழப் போர் 3" என்றும் அழைப்பார்கள். இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்று சொல்வார்கள். சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை "ஈழப் போர் 1,2,3" என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை "இந்திய - ஈழப் போர்" என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழ…
-
- 10 replies
- 3.6k views
-
-
பிரவாசி மாநாட்டில் மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்காதது ஏன்?: சிவநேசன் [ ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 01:05.15 PM GMT +05:30 ] [ வீரகேசரி ] வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து வாய் திறக்காமல் போனது தமக்கு வருத்தம் அளிப்பதாக மலேசியாவின் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் அன்றாடம் அழுகிறார்கள். ஆனால் இதை தட்டிக்கேட்க இங்கு நாதியில்லை. பிரதமர் மன்மோகன் சிங் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேசினார்…
-
- 1 reply
- 875 views
-
-
இதுவரையில் கிளிநொச்சியில் மையம் கொண்டிருந்த போர் இப்போது முல்லைத்தீவில் மூர்க்கம் பெறத் தொடங்கியிருக்கிறது.மணலாறின் கொக்குக் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ பிரதேசத்தினூடாக முன்னேறத் தொடங்கிய பிரிகேடியர் நந்தன துடுவத்தவைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது டிவிசன் - இப்போது முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வந்து நிற்கிறது. சிலாவத்தைக்குத் தெற்காக நிலைகொண்டிருக்கும் 59-1 பிரிகேட்டுக்கு மேற்காக இன்னொரு புறத்தில் 59-3 பிரிகேட் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளையின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு மேற்காக 59-2 பிரிகேட் குளமுறிப்பு, கற்சிலைமடுப் பகுதிவரை முன்னகர்ந்திருப்பதாகப் பிந்திய தகவல்.சிலாவத்தை வழியாக முல்லைத்தீவை நோக்கி மு…
-
- 5 replies
- 3.3k views
-
-
'ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது' என்று கோவையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு ஆளும் கட்சி இடைத்தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்ததில்லை. அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு மீது நாங்கள் தகுந்த ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி. நடேசன் அளித்துள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு செயல்பட வேண்டிய கடமையையும் எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் ஈழத் தமிழர்கள் திட்டமிட்டு சிங்கள இராணுவத் தால் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் - விடுதலைப்புலி களை அழிக்கிறோம்; தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற சாக்கில். ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கப் போராடிவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்து சில நாள்களுக்கு முன் - இலங்கையின் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இராணுவ நடவடிக்கை தீர்வா காது; அரசியல் தீர்வுதான் தேவை என்று இந்திய அரச…
-
- 0 replies
- 970 views
-
-
வன்னியில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வா என்று நீ பொங்கி எழுந்தாயே. ஆனால் இங்கு நடப்பதே வேறு. உன்னை யார் மதித்தார்கள். உன் சொல்லை யார் கேட்டார்கள். விளைவு, 08.01.2009 இலும் தொடர்கிறது. இன அழிப்புச் சிறீலங்கா அரச பயங்கரவாதம். இந்தக் கழந்தைக்காக யாரும் இரக்கம் பாட்ட வேண்டாம். தேவையில்லை. ஏன் என்றால் இது தமிழ்க் குழந்தை தமிழ் பேசும் தாயின் வயிற்றில் உருவான குழந்தை. தட்டிக் கேட்க எந்த நாதியும் அற்ற, நாடும் அற்ற, சொந்த நாடற்றவனின் குழந்தை. நாயாய் பிறந்தாலும் பிறவுங்கள் ஆனால் நாடற்றவனாய் பிறவாதீர்கள். http://www.tamilseythi.com/literature/poem...2009-01-11.html - ஈழத்திலிருந்து....
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்', `கடாரம் வென்றான்' என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா? என தமிழகத்திலிருந்து வரும் வார இதழ் குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது.... அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு' விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா' போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள். இன…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு வீரகேசரி நாளேடு 1/11/2009 11:51:52 PM - முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற்ற முயற்சி தொடர்கின்றது. இதனால், முல்லைத்தீவு பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பு, விசுவமடு, தருமபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதேசங்களுக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் படையினர் அதனை முறியடித்துள்ளனர் என்றும் அவ…
-
- 0 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதல்களால் 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துமுள்ளன. முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயம் மற்றும் சேற்றுக் கண்டி மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களிலேயே 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேநேரம், இந்தப் பகுதியில் கடும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் முரசுமோட்டை ஆயுர்வேத மருத்துவமனை, நவஜீவனம் சிறுவர் இல்லம் பலத்த சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மக்கள் குடியிருப்புகள் மீது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் இடம்பெயர்ந்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 12 replies
- 3.7k views
-
-
தலைமை செயலகம் பேர்ண் 10.ஜனவரி .2008 "உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும்.. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது..." மேதகு வே . பிரபாகரன் அவர்கள் தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம் தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்! ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெற…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...29&cls=row4
-
- 8 replies
- 2.7k views
-
-
வன்னி நிலம் வளையாது எனில், கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி புலிகளுக்கு தோல்வியா? பிரபாகரன் படை வெல்லும் - அவன் பெரும் வெற்றிச் செய்தியை வரலாறு சொல்லும் மேற்சொன்ன வரிகள் உங்களை ஆறுதல் படுத்துவதற்காய் சொன்ன வரிகளல்ல மாறாக வரலாற்றுச் சேதி சொன்ன வரிகள் என்பதை உள்வாங்கிக் கொண்டு ….. அவலங்களைத் தந்த 2008 ஆம் ஆண்டு தொலைந்து போய், புதிய நம்பிக்கையோடு 2009 ஆம் ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக அமைந்தது. போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்தளவுக்குப் பாதித்ததோ தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இலங்கையின் பிறபாகங்களில் வாழும் தமிழ் மக்களை- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை- ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இது…
-
- 1 reply
- 2.6k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து வீரமணி, ராமதாஸ் சந்திப்பு அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை வீரகேசரி நாளேடு 1/11/2009 6:17:57 PM - சென்னை, இலங்கை பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார். இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 1 1/2 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இச்ச…
-
- 0 replies
- 821 views
-
-
இந்தியா-இலங்கை கூட்டணியும் புலிகள் மீதான தடையும் வீரகேசரி வாரவெளியீடு 1/11/2009 6:29:02 PM - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விவகாரம்தான் இத்தடை நகர்வு. எல்லாமே முடிந்துவிட்டது என்கிற அடிப்படையில், இத்தடை நிகழ்வும், தெற்கின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம். கிளிநொச்சியை கைப்பற்றி முல்லைத்தீவை நோக்கி நகரும் இராணுவம், ஆறு மாதகாலத்துள் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியுமென்கிற நம்பிக்கையில் யுத்தத்தில் ஈடுபடுகிறது. அரசியல் தீர்வை முன்வைக்குமாறு மென் அழுத்தங்களைச் சுமத்தும் சில சர்வதேச நாடுகள் குறித்து, அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெர…
-
- 0 replies
- 760 views
-
-
இடம்பெயரும் வன்னி மக்கள் மீது சிறிலங்கா முப்படையினரும் கூட்டுத்தாக்குதல்: பெண் பலி; 60 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 07:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதில் அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். வடமராட்சி கிழக்குப் பகுத…
-
- 2 replies
- 529 views
-
-
இதுவரை 'தமிழ்', 'தமிழன்;' என்று தமிழன் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும்பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி இந்தத் தள்ளாத வயதிலாவது தமது கடைசிக் காலத்திலாவது ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்திவிட்டது. ஆனால் பயன் தான் ஒன்றும் விளையவில்லை. இவ்விடயத்;தில் தமிழ…
-
- 17 replies
- 3k views
-
-
இலங்கையில் இருந்து இயங்கிய "லங்கா டிசென்ட்" இணையத்தளம் நேற்றுடன் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. பௌத்தநாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலரும் போது மீண்டும் தமது சேவைகள் தொடரும் என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை என்பவற்றை அடுத்தே இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக "லங்கா டிசென்ட்" இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது http://tamilwin.com/view.php?2aIWnJe0dHj06...d426QV3b02ZLu3e
-
- 0 replies
- 954 views
-
-
இலங்கை இனப் பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு இலங்கை இனப் பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதால் உடனடியாக தலையிட வேண்டும் என்று இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் மட்டுமே முடியும் என்றார். மற்ற நாடுகளால் இந்தியாவைப் போன்று உதவ முடியாது. இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தையும் அழைத்துப் பேசி, இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இலங்கையில் வாழும் 15 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும். கிளிநொச்சியை தொடர்ந்து யானையிறவையும் கைப்பற்றி விட்ட இந்நிலையில், இலங்கை இனப் பிரச்ச…
-
- 0 replies
- 879 views
-
-
கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்) [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 03:54.30 PM GMT +05:30 ] பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்। நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன। தாகம் தீர்க்க மழையில…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27981
-
- 2 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. …
-
- 10 replies
- 3.8k views
-
-
பாடலை கேட்க்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.imeem.com/people/KPM_djB/music/...i_kai_papommp3/
-
- 11 replies
- 3.5k views
- 1 follower
-