ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். முடங்கிப் போன பொருளா…
-
- 0 replies
- 322 views
-
-
கிழக்கு ஆளுநர் நியமனம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்கு தமிழ் ஆளுநர்களை நியமிக்குமாறு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றியமை வரவேற்கதக்கது. வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சி. அதுவும் இல…
-
- 0 replies
- 236 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலையின் 14வருட நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளைய தினம் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரவும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நி…
-
- 2 replies
- 461 views
-
-
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும்…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
17 MAY, 2023 | 10:10 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார். மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் எழு மாதங்களாக தே…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்…
-
- 14 replies
- 494 views
- 1 follower
-
-
வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும் இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்துவாா். அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிப்பதுடன், பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பாா்கள். வடபகுதியில் கறுவாச் செய்கைய…
-
- 0 replies
- 470 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம் ! 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். 2022 மேமாதம் இடம்பெற்ற பதிவான வன்முறை மற்றும்…
-
- 1 reply
- 257 views
-
-
இரு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை !! இம் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இம்மாதத்தில் மட்டும் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே அதிகம் என்றும் மொத்தமாக 9 ஆயிரத்து 323 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து 3,686 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 2,523 பேரும், ஜேர்மனியில் இருந்து 2,…
-
- 0 replies
- 482 views
-
-
Published By: RAJEEBAN 16 MAY, 2023 | 04:57 PM 2022 இல் இலங்கையில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என அமெரிக்கா மதசுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மதசிறுபான்மை குழுக்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகைளை தெரிவிப்பதற்காக தூதரக மற்று…
-
- 3 replies
- 354 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி சிவாஜிலிங்கம் மறறும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இங்கு மேலும் உரையாற்றிய எம் கே சிவாஜிலிங்கம் “இலங்கையின் அரச படைகளினாலும், சி…
-
- 0 replies
- 384 views
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 05:26 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கைது! யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https:/…
-
- 0 replies
- 227 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்: சரத் சூளுரை “போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் “வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வ…
-
- 8 replies
- 840 views
-
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை மு.தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர். வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன…
-
- 4 replies
- 618 views
-
-
வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும். புதிதாக அமைக்கப்படும் விகாரைகள் எனினும் மாறி மாறி வேலைகளை செய்யக்கூடாது. பழமையான கோயில்கள் இருந்தால் பரவாயில்லை. புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களேயே நான் கூறுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் நெடுந்தீவ…
-
- 7 replies
- 723 views
-
-
Published By: DIGITAL DESK 5 10 APR, 2023 | 12:09 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மே 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/152554
-
- 4 replies
- 712 views
- 1 follower
-
-
மனநோய்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார் . இது ஒரு தீவிர சமூக ஆபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். . தொடர்ந்து மனநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பது கடுமையான சமூக அவலமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். உடல் நோய்கள் மட்டுமின்றி மனநோய்களிலும் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். இவ்வாறான மருந்துகளுக்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்காததால் இநிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது அரசாங்கத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை எனவும…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 APR, 2023 | 10:12 AM யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினா…
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
உறவுகளை எந்த சந்தர்ப்பத்திலும் நினைவேந்தலாம்: ரணில் நினைவேந்தல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. மக்களின் உரிமைகள் ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை. அதேபோல் நினைவேந்தல் உரிமையையும் எவரும் தட்டிப் பறிக்க முடியாது. வடக்கிலுள்ளவர்கள் தெற்கிலுள்ளவர…
-
- 3 replies
- 379 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 05:07 PM மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்புரிமை அமைப்பான அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் மே 18 நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டம் கிராமத்தில் குறித்த நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் இதனை அகம் மனிதாபிமான வள நிலைய உத்திய…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 03:08 PM ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே குறித்த சம்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது இரு வாகனங்கள் தம்மை பின்தாெடர்ந்ததாகவும் அதில் க…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2023 | 12:25 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த எம்.ஜலீல் (வயது-25) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது குறி…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 13 MAY, 2023 | 10:49 PM வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் மற்றும் தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று (12) இந்த ஊர்தி பவனி ஆரம்பமானதை தொடர்ந்து, நேற்றிரவு வவுனியாவை ஊர்தி வந்தடைந்து, இன்று (13) காலை மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியது. அவ்வேளை, இந்த ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், குறித்த ஊர்திப் பவனி வவுனியா நகரை வலம் வந்ததுடன், மன்னார் நோக்கி பயணத்தை தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்…
-
- 2 replies
- 215 views
- 1 follower
-
-
நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் 06 மாவட்டங்களில் 1744 குடும்பங்களைச் சேர்ந்த 6564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 73 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது. அக்குரஸ்ஸ, பாவன்வெல்ல பகுதியில் வௌ்ளத்தினால் சேர்ந்த கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ள பஹல அத்துரலிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கிங் மற்ற…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-