ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ அங்கிகார மானாட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதிதித்ததாக தமிழ் ஊடமொன்றினூடாக அறிந்தேன், தகவல் அறிந்தவர்கள் மேலதிக தகவல்களைத்தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஷ் அமைப்புக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. இந்த இரண்டு அமைப்புக்களின் ஒப்பந்தங்களும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த வருடத்துக்கான கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் பகுதிகளை பாதுகாப்புத் தரப்பினர் ஒதுக்கிக் கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. எனினும், 2009ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளைத் தீர்மானிக்கும் கூட்டம் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளபோதும், அதுவரை யாழ் குடாநாட்டில் தங்கியிருக்காது வெளியேறுவதற்கு டனிஸ் அமைப்பின் சர்வதேசப் பிரதிநிதிகள் இருவர் வெளியேறியிருப்பதாக யா…
-
- 0 replies
- 841 views
-
-
நாடாளுமன்றத்தை எதிர்வரும் தை மாதம் 6 ஆம் நாளுக்கு முன்னர் கூட்டுவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்குப் பகுதியில் கடந்த 11 மாதங்களில் 295 படுகொலைகளும் 176 ஆட்கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சிறிலங்கா படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 513 views
-
-
ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
விஷவாயு மழை பெய்தாலும் படையினரை பின்வாங்கச் செய்ய முடியாது: ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது விஷவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிப்படையாக தெரியும், மற்றும் தெரியாத எதிரிகளை படையினர் வெற்றிகரமாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோஷத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையொன்றை இராணுவத்த…
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா அரசு வன்னியில் இருந்து போர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களை தனிமைப்படுத்தி இராணுவம் நடத்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வன்னியில் போர் வலயத்துள் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் போய் சேர்வதை தடுக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்காவை காட்டமாக கேட்டிருக்கிறது. இதற்கிடையே வன்னியில் உள்ள மக்களை இவ்வாண்டு முடிவுக்குள் விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் இன்றேல் தடையை எதிர்நோக்குவதோடு அவர்களை உலக வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப் போவதாகவும் மகிந்த கொக்கரித்துள்ளார்...! End detentions and aid restrictions - HRW The Sri Lankan government should stop arbitrarily detain…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் உள்ள மாவிலி ஆற்று பகுதியில் சிறிலங்கா படையினரால் தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட…
-
- 28 replies
- 4.8k views
-
-
சிறிலங்காவுக்கு தமது நாட்டு குடிமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 721 views
-
-
தனது பரிந்துரையை ஏற்க மறுத்ததால் சிறிலங்காவின் துடுப்பாட்ட சபையை சிறிலங்கா அமைச்சர் காமினி லொக்குகே கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
தமிழக நோக்கு:- சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று: கோவை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தினரால் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த சீமான், மேட…
-
- 0 replies
- 1k views
-
-
வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாத நிலையில்... வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாக இராஜதந்திர சேவையில் கடமையாற்றும் அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவினால் வெளிவிவகார சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்களுக்கு இராஜந்திர அதிகாரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்த வெளிவிவகார அமைச்ச…
-
- 0 replies
- 697 views
-
-
இலங்கை தமிழர்களை சிறிலங்காவின் மகிந்த அரசு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 806 views
-
-
சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2k views
-
-
ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது. இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவ…
-
- 14 replies
- 2.5k views
-
-
மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-
-
கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு சென்ற குடும்பஸ்த்தர் வீடு திரும்பவில்லை. செவ்வாய், 23 டிசம்பர் 2008, 08:58 மணி தமிழீழம் [செய்தியலாளர் மயூரன் ] கொழும்பு வெள்ளைவத்தை பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இளம் குடும்பஸ்த்தர் வியாபாரம் விடயமாக சென்ற போது இதவரையில் வீடுதிரும்பவில்லை. என அவரின் மனைவில் காவல்துறையில் முறைப்பாடுக செய்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் ஒழுக்கையில் வசித்துவருபவருமான 26 அகவையுடைய சின்னக்கிளி நிமலாகரன் கடந்த 16ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் சம்பந்தமாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என வெள்ளைவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 11 ஆண்டு காலமாக வெள்ளவத…
-
- 0 replies
- 805 views
-
-
நிதி நிர்வாகம் சரியாக இருந்தால் நீதி நிர்வாகம் அதில் தலையிடாது [23 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:30 மு.ப இலங்கை] பெற்றோலின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு வழங்கியமை நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பொதுக்கட்டமைப்பை நிராகரித்தும் - சுமார் பத்தொன்பது ஆண்டுகள் நீடித்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை ரத்துச் செய்தும் - முன்னர் பிரதமராக இருந்த சமயம் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதி கையாள்கையில் மோசடியில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ விவகாரத்தில், ராஜபக்ஷ தவறிழை…
-
- 0 replies
- 771 views
-
-
உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான். நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும். ------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறைய…
-
- 28 replies
- 6.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-