ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டமைக்காக சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமைக்கு அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் -அத தெரண.
-
- 32 replies
- 5.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களின் உழவூர்தி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம்-ஐக்கிய நாடுகள் சபை வியாழன், 08 ஜனவரி 2009, 13:33 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] இலங்கை அரச படையினர் இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்தாலும் நிரந்தர சமாதானத்தை அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிவிலியன்களுக்கு இடையறாத சேவையை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.அத்துடன் யுத்த நடவடிக்கைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து தமது அமைப்பு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து த…
-
- 0 replies
- 854 views
-
-
-
- 21 replies
- 5.1k views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=51
-
- 0 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மீடியாக்களிடம் பேசும்போது, `போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது'…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை நோயால் பாதிப்பு திகதி: 08.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] சிறிலங்காப் படையினர் பலர் பால்வினை (எயிட்ஸ்) நோய்க்கு உள்ளாகி உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து சிறிலங்காப் படையினர் அந்தந்த மாவட்டங்களில் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சங்கதி
-
- 4 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. - [தமிழ்நாதம்] டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார…
-
- 54 replies
- 8k views
-
-
கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி. ''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் …
-
- 10 replies
- 6k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் என்ற பெயரில் வடக்கில் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தையே அவமதித்து விட்டது. இதற்காக இன்றையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் ஏறி நிற்க வேண்டிய நிலை வரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என். ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார். கொடி என்பது எமக்கு பிரச்சினையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ தமிழ் பேசும் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான தீர்வுத்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? யுத்த வெறி தலைவிரித்தாடுகின்ற சிங்களக் கட்சிகளிடம் தமிழன் சுயாட்சிக்கான தீர்வுத்திட்டம் எதுவுமேயில்லை. தமிழ் மக்க…
-
- 0 replies
- 961 views
-
-
இலங்கையிலிருந்து ஜீவன் பிரியாத மதிவதனி... போர்முனையில் சார்லஸ்... தம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' --சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக் குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இது வரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களர் கையில். கடல் வழி உதவிகள் எ…
-
- 17 replies
- 4.3k views
-
-
ஐ.நா செயலா, தமிழக முதல்வர் ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை ஆக்கிரமித்து சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வான் தாக்குதல்கள் மூலம் மக்களை படுகொலை செய்து வருகின்றனர். சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் உச்சகட்டமாகவே எமது மாணவர் ஒன்றியம் இதனைப் பார்க்கிறது. எனவே சிங்கள அரசின் திட்டமிட்ட இவ் இனப் படுகொலையை உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிற்கும் தமிழக முதல்வரிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. சங்கதி
-
- 0 replies
- 794 views
-
-
தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை [07 - January - 2009] வ.திருநாவுக்கரசு தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை "கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கை…
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. கதவை உடைத்துக் கொண்டா போக முடியும். பேச்சுவார்த்தைக்கு இன்னும் இலங்கை தயாராகவில்லை என்று பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோபமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலு பதிலளிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி அங்கு சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைக்கு இலங்கை …
-
- 10 replies
- 1.9k views
-
-
இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.நல்லக்கண்ணு [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 02:26.29 PM GMT +05:30 ] இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதில் தாம் எந்த விதமான தியாகங்களையும் செ…
-
- 0 replies
- 893 views
-
-
அவசரகால சட்டம் என்னும் அரக்கன் 96வாக்குகளால் நேற்று சிங்கள பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்த 10 வாக்குகளும் யாருடயது என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பினுடயது. நேற்றைய வாக்கெடுப்பின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது தங்களின் சிங்கள விசுவாசத்தை காட்டிஉள்ளது. ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை அரசில் அங்கம்வகிக்கும் இ.தொ.காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருக்காமல் தங்கள் டமிழ் விசுவாசத்தையும் சிங்கள விசுவாசத்தையும் சேர்த்து காட்டியுள்ளனர்.
-
- 0 replies
- 842 views
-
-
கல்கிசை பகுதியில் சற்று முன் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.இதனால் புகயிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளனவாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
'நாமே வெல்வோம்" எனும் மாவீரர் நாள் உரை இந்த மண் எமது மண்: தமிழர்கள், அந்தப்ப+மியின் ப+ர்விகக் குடிகள்: அமெரிக்கப் ப+ர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல 'இதே ப+மி எங்களின் தாய். நாங்கள் இந்த ப+மியின் ஒரு அங்கம். அது எங்களில் ஓர் அங்கம். வாசமலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளி பறவையும் எங்கள் சகோதரர்கள், பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல: அது எங்கள் மூதாதையரின் இரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - அதுபோல 'இந்த மண்ணிலே தான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன.…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழர் விரோத 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் இன்று 07.01.2009 நாளை காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதோடு போரையும் இந்திய அரசுதான் நடத்தி வருகிறது. சிங்கள அரசோ தட…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு - கல்கிசையில் இரயில் பாதைக்கு அருகில் சிறிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. - அத தெரண.
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 3.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமத்தில் உள்ள பழைய கண்டி வீதி ஊடாக சிறிலங்கா படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 561 views
-
-
"கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை' [06 - January - 2009] கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சி…
-
- 7 replies
- 2k views
-