ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய பெற்றோல் விலையை 100 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்கவில்லையாயின் கொழும்பை மையமாகக் கொண்டு மக்களை இணைத்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கூறினார். “உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக பெற்றோல் விலையைக் குறைக்குமாறு தீர்ப்பு வழங்கவில்லை. நீதியமைச்சின் செயலாளர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த விலை சூத்திரத்துக்கமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. நீதியமைச்சர் என்ற வகையில் பெற்றோலின் உண்ம…
-
- 4 replies
- 3k views
-
-
படைப் பற்றாக்குறையால் பெண் படைச் சிப்பாய்கள் வன்னிக் களமுனைக்கு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] களமுனைகளில் படையினர் பெரும் இழப்புக்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், பிடித்த நிலங்களையும் தக்க வைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் திண்டாடுகின்றது. தற்போது சிறுவர்களையும் களமுனைக்கு போரிட அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் உள்ள சோதனைச் சாவடிகளில் பெண்களை சோதனைக்குட்படுத்தி வந்த பெண் படைச் சிப்பாய்களில் 75 பேரை சிறிலங்காப் படைத்துறையினர் வலுக்கட்டாயமாக வன்னிக் களமுனைகளுக்கு அனுப்பியுள்ளனர். படையினருக்கு ஏற்பட்டுவரும் ஆளணி இழப்பை ஈடுசெய்யும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணம் வன்னிக் களமுனை…
-
- 1 reply
- 2.9k views
-
-
புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகப் வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்று இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. கொழும்பின் முக்கிய பகுதிகளில் அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கடத்தி அதன் மூலம் பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் நுழைந்து பாரிய தாக்குதல்களை நடத்தவும் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளமை குறித்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வெளிநாட்டுப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/colomb...2008-12-24.html -வாணான்
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 09:33 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். களுத்துறை, வெலிக்கடை, பூசா, மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200-க்கும் அதிகமான கைதிகளே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அரசியல்வாதிகளின் உறுதிமொழியினால் உண்ணாநிலை இருக்கும் முடிவை தாங்கள் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள கைதிகள், இம்முறை உறுதிமொழிகள் எதனையும் கேட்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்…
-
- 0 replies
- 554 views
-
-
முத்து ஐயன் கட்டுப் பகுதி மக்கள் இடம்பெயர்வு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப்படை அச்சுறுத்தல் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான முத்து ஐயன்கட்டு மற்றும் மன்னாகண்டல் பகுதிமக்களும் இடம்பெயர்ந்துவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பெரியப்பரப்பில் அமைந்துள்ள மேற்படி பகுதிகளின் மக்கள் தமது உடமைகளுடன் இடம்பெயர்ந்து செல்வதால் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி பெரும் நெருக்கடி நிறைந்ததாகக் காணப்படுகிறது. மேற்படி பகுதிகளில் நிரந்தர குடியிருப்பாளர்கள் தவிரபெருமளவான இடம்பெயர்ந்த மக்களும் தங்கியிருந்த நிலையில் அவர்களும் இடம்பெயர்ந்து செல்லும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். பெருமளவான வயல்நிலங்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நிகழ்வு இன்று விசுவமடு பிரதேசத்தில் பொதுஅமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.விச
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதல் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை "பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. நேற்றிரவு 10:15 …
-
- 0 replies
- 364 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங…
-
- 3 replies
- 1.9k views
-
-
Heavy fighting erupts in Kugnchup-paranthan [TamilNet, Wednesday, 24 December 2008, 08:14 GMT] The Liberation Tigers of Tamileelam (LTTE) fighting formations were engaged in a heavy fighting with the Sri Lanka Army (SLA) in Kugnchup-paranthan, where the SLA suffered a debacle a few weeks ago, according to initial reports from the area. Heavy fighting was reported from 4:00 a.m. in the village, which the SLA claimed it had occupied on Tuesday.
-
- 27 replies
- 5.8k views
- 1 follower
-
-
வவுனியாவிலும் மன்னாரிலும் அப்பாவி பொதுமக்கள் இருவரினது உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது இன்று நடத்தப்பட்ட கிளைமோ தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 32 replies
- 7.8k views
-
-
வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மன்னாரில் மீட்பு வீரகேசரி இணையம் 12/24/2008 11:36:23 AM - மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியின் கீரிப் பகுதியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாரினால் மன்னார் வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அடையாளம் காணப்பட்டது. வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இச்சடலம் இராமசாமி (வயது 52) எனும் குடும்பஸ்தருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதவான் எ.யூட்சன் பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
- 1 reply
- 748 views
-
-
போர் முகம் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [] அ.லோகீசன் "இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரி…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி திகதி: 24.12.2008 // தமிழீழம் // [சோழன்] விடுதலைச் சிறுத்தைகளின் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி மறுக்கும் உதவி காவல்துறை ஆணையாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவனியூவில் நாளை மறுதினம் (டிசம்பர் 26ம் திகதி) விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தப்பட இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அண்ணாநகர் உதவி காவல்துறை ஆணையாளர் டிசம்பர் 20ம் திகதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. செல்வம் மனுத் தாக்கல் செய்தார். …
-
- 2 replies
- 995 views
-
-
சிறீலங்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 43 பேர் ஒன்றிணைந்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர். பதவியுயர்வு வழங்கப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், மூப்பு மற்றும் சேவைத்திறமை என்பனவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் எழுந்தமானமாகவும், பாகுபாடாகவும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் தமது வழக்கில் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரதான எதிரியாகவும், அவருடன் படைத்தளபதிகள், காவல்துறைமா அதிபர் ஆகியோரையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர். சிறீலங்காவின் இரண்டாம் நிலைத் தரைப்படைத் தளபதியும் கிழக்கினை ஆக்கிரமிப்பதில் முன்னின்றவருமான பராக்கிரம பன்னிப்பட்டியவும் பதிவிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்கு: வலிந்த தாக்குதலைத் தொடங்க உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் பா. நடேசன் ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிப…
-
- 0 replies
- 888 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளார் – ஜயலத் ஜயவர்தன: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். மருத மடு தேவாலயத்தில் தமக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்து ஜயலத் ஜயவர்தன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மருத மடு தேவாலயத்தில் தங்குவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டதென்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்க மளிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 14 முதல் 16ம் திகதி வரையில் தேவாலயத்தில் தங்கியிருந்…
-
- 0 replies
- 780 views
-
-
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் புதிய பாட விதானத்தின் கீழான கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்குக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற கவ்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத் திட்டத்துக்கமைவாக கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு விடையளிப்பதில்; மாணவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆகவே, கணித பாடத்தின் இரண்டாம் பகுதியை மட்டும் மீண்டும் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து மூன்று வாரங்களுக்குள் கணித பாடத்தின் இரண்டாம் பிரிவு…
-
- 0 replies
- 457 views
-
-
இன அழிப்பின் உச்சத்தை மூடி மறைக்கும் எத்தனங்கள் [24 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:00 மு.ப இலங்கை] "இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர் எனக் கூறப்படுவதில் எந்தவித உண்மையுமில்லை." - இவ்வாறு மலேசியாவில் போய் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார் ஜே. வி. பியின் எம்.பியும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன். இலங்கையின் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் மேலாண்மைத் திமிரிலும் பௌத்த - சிங்களப் பேரினவாத மமதையிலும் மிதக்கும் ஒரு கட்சியின் முந்தானையில் தொங்கிக் கொண்டிருப்பவரிடம் - அவர் தம்மையும் ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட - இத்தகைய கருத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். பேரினவாதத்தி…
-
- 0 replies
- 578 views
-
-
புதிதாக குடியேறியவர்களின் விபரங்களை திரட்டும் படையினர் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வவுனியாப் பகுதியில் 2004ம் ஆண்டிற்கு பின்னர் புதிதாகக் குடியேறியவர்கள் பற்றிய விபரங்களை சிறிலங்காப் படையினர் கிராம அலுவலர்கள் ஊடாகத்திரட்டி வருகின்றனர். வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் படையினர் விபரங்களைத் திரட்டி வருவதானது அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 495 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய பொறிவெடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
இடம்பெயா்ந்து வரும் பொதுமக்களை தடுத்து வைப்பதை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-