ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
பூநகரியூடான யாழ்-கொழும்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்-அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க வீரகேசரி இணையம் 11/23/2008 1:09:37 PM - புலிகளிடமிருந்து அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தையும் தென்னிலங்கையையும் இணைக்கும் வீதியைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் அடுத்த கட்டமாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் இணைந்து, சோக கீதம் வாசித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் இணைந்துஇ இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சோக பாடல்களை இசைத்தபடி மிஷன் தெரு வரை சென்றனர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி புதுச்சேரி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நன்றி : ஒரு நியூஸ்
-
- 0 replies
- 1.7k views
-
-
இழந்த இறையாண்மையை மீட்டு முன்னெடுக்கப்படும் சமரில், விதைக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூரும் வாரமிது. சென்ற வருட மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய செய்தியொன்றை தற்போது மீட்டிப் பார்ப்பது, வருங்கால கள யதார்த்த மாற்றம் குறித்த எதிர்வு கூறலை தெளிவுபடுத்தும். ""சிங்களம் எப்போதும் எம்மைத் தவறாகவே புரிந்து கொள்கிறது. புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஜெயசிக்குறுச் சமரில் கற்றறிந்திருக்கலாம்'' என அவர் குறிப்பிடுகின்றார். வன்னி மேற்கினை முழுமையாக கைப்பற்றி யிருப்பதாக அரசு பரப்புரை செய்கிறது. பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி என்பன கைப்பற்றப்பட்டு,…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்' என்று, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொக்கரித்துவிட்டுச் சென்றார். இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழினத்துக்கு எதிரான சதி வேலைகளில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன. சிங்கள அரசு உண்மையில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறதா? என்கிற கேள்வியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தோம். அப்போது, மதுரையில் டிச. 26-ம் தேதி நடக்க இருந்த தமிழீழ அங்கீகார மாநாட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்து சேர்ந்தது. அதுபற்றி தன்…
-
- 0 replies
- 983 views
-
-
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர். கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்து…
-
- 10 replies
- 1.8k views
-
-
வன்னியில் பருவமழையினால் சிறிலங்கா படை நடவடிக்கை பாதிப்பு [ சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 04:52.36 PM GMT +05:30 ] வன்னியில் தற்போது பெய்து வரும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னியின் பல முனைகளிலும் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா படையினர் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மேற்கிலும், அதன் தென்மேற்குப் பகுதிகளிலும் படையினர் முன்நகரும் நிலப்பகுதிகள் தற்போது சேறும் சகதியுமாகியுள்ளதாலும், மழை வெள்ளம் பல பகுதிகளில் ஊடறுத்துப்பாய ஆரம்பித்துள்ள நிலையிலும் படையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்குச் சாதகமற்ற இந்நிலப்பரப்புக்களைக் கடந்து முன்நகர்வதற்கான எத்தனங்களை இப்பகுதிகளில் அவர…
-
- 1 reply
- 1.6k views
-
-
?இலங்கை இனப்படுகொலையை இந்தியத் தலைமை ஆதரிக்கிறது? [23 - November - 2008] * ராஜிவ்-ஜெயவர்தன உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியுமென்றால் கச்சதீவு உடன்படிக்கையை ஏன் ரத்துச் செய்ய முடியாது? ** தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம் தினக்குரலுக்குப் பேட்டி "ஈழத்தமிழின அழிவுக்கு எதிராக, இந்தியத் தலைநகர் நோக்கிய பிரமாண்ட பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் கதவடைப்புகள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் குரல் எழுப்பிவருவதுடன் உலகின் எட்டுக்கோடி தமிழர்களும் பொங்கி எழுந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்த இன எழுச்சி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியாமலிருக்க வாய்ப…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கருணா அணியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடையொன்றில் வேலை செய்பவரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவருக்கு வயது 22. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 910 views
-
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை அவசியமானதென்ற நிலையில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளிலிருந்து அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களின் விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களம் நிராகரித்துள்ளதையிட்டு இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்; க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையை மாணவர்களுக்கு பாடசாலை ஊடாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொடுப்பது வழமை. தற்போது தேசிய அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை ஊடாக கொழும்பிலிருந்து விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பத்தை ஆட்பதிவுத் திணைக்களம் …
-
- 0 replies
- 595 views
-
-
இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் - சிறீதரன் (சுகு): ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2489&cat=1 இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம்.
-
- 6 replies
- 1.4k views
-
-
கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா? கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 16 replies
- 3.5k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை காணாமல் போயுள்ளது - விஜித ஹேரத்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2478&cat= தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளில் 20 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போயிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்ததின் போது மாத்திரம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் அரைவாசிக்கும் குறைவான தொ…
-
- 1 reply
- 1.8k views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் மனிக்பாம் விசேட தடுப்பு முகாமில்? http://www.globaltamilnews.net/tamil_news....d=2484&cat= வன்னியில் இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வவுனியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வவுனியா அரச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நேற்று வவுனியா வடக்குப் பிரதேசத்தில் இருந்து 40 பொது மக்கள் வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் இராணுவத்தினரால் முழுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசாங்கம் வெளியேறச்சொன்னால் இரட்டிப்பான பலத்துடன் வெளியேறத் தயாராக இருப்பதாக கூறுகிறார் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2490&cat= மலையக மக்கள் முன்னணியின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்க முடியாது அரசாங்கம் தம்மை வெளியேற்றினால் தாம் வெளியேறுவதற்கு தயாராகவே உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார். கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய தேவை தனக்கு ஏற்படவில்லை. அதே வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் தற்போதைக்கு ஏற்பட வில்லை எனக் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 971 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங் [ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008, 01:02 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்ச…
-
- 0 replies
- 770 views
-
-
`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்…
-
- 1 reply
- 1.7k views
-
-
[url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1176:2008-11-22-18-11-10&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54"]டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 2.5k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயாளர் காவு வாகனத்தை திருப்பியனுப்புவது பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது என்று தருமபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் பிறைற்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 504 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது -வேல்சிலிருந்து அருஸ்- சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்க…
-
- 6 replies
- 2.1k views
-
-
அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe
-
- 3 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் இன்று ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர். பூநகரி மற்றும் ஏ-32 பாதையை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்காக அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் வாழ்த்துத் தெரிவித்தும், குடாக்கடலில் தம்மை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் மீனவர்கள் இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ். குருநகர் சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவாந்துறை வரை சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மஹிந்தவையும், இராணுவத்தினரையும் வாழ்த்திக் கோஷமெழுப்பினர். அம்மணமாய் மீன்பிடிக்க விட்டதை மறந்து விட்டார்கள் போல தெரியுது.
-
- 45 replies
- 5.5k views
-
-
மொனறாகலவில் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 07:33 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: புத்தள - கதிர்காமம் வீதியில் உள்ள 136 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் …
-
- 0 replies
- 625 views
-
-
புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…
-
- 0 replies
- 2.5k views
-