Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச்சேர்ந்து தமிழினத்தை கொன்று குவிக்கும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்கை கண்டித்து சென்னை ஆவடியில் இடதுசாரி அமைப்புக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  2. வீரகேசரி இணையம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறும் 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பினை பகிஷ்கரித்து சபையைவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். ஜனாதிபதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல், போர் மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணம் ஒதுக்குவதைத் தமது கட்சி எதிர்ப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பில், தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்குள், அரசாங்கம் தொடர்ந்து விமானக் குண்டு வீச்சுக்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் மற…

  3. ஈழத் தமிழர்களுக்காக 2 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்கள்: செஞ்சிலுவைச் சங்கத்திடம் தமிழக முதல்வர் கையளிப்பு [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 07:41 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களுக்காக 2 ஆயிரம் தொன் நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று வியாழக்கிழமை கையளித்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி, இந்த நிவாரணப் பொருட்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதினம்

  4. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றமில்லை – ரொபர்ட் பிளேக் : www.globaltamilnews.com அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்திற்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக் வந்த போதிலும் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட…

  5. நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த ஈழப் போர் குறித்த மாநாட்டில், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையிலும், கண்ணப்பன் பொள்ளாச்சி அருகேயும் கைதானார்கள். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறைக் காவல் முடிவடைவதையொட்டி இருவரும் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரிடமும் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், சிறைக் காவவலை நீடிக்கத் தேவையில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்…

    • 4 replies
    • 1.2k views
  6. விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணியினர் உண்ணாநிலைப் போராட்டம் [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 07:35 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையைக் கண்டித்து தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். புதினம்

    • 0 replies
    • 577 views
  7. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அவர் தீவிரமாக ஆதரித்துப் பேசுவதற்கு எதிராக, காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடும் அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் நாம் திருமாவளவனைச் சந்தித்தோம்... விடுதலைப் புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி? ``கைது, சிறை ஆகியவற்றிற்கு அஞ்சி நியாயத்தைப் பேசத் தவறினால் மனிதனாக இருப்பதில் பொருள் இல்லை. கொடுமையைக் கண்டு கும…

    • 0 replies
    • 1.5k views
  8. யாலவில் புலிகள் - அதிரடிப்படையினர் மோதல்: மூவர் பலி [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 05:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: யால வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் 30 நிமிடம் வரை இடம்பெற்ற இம் மோதலில் சிறி…

  9. பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008 கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது: பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள். இதற்கு முன்பு பிரபாகரனே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும். ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதைப் போர் என்றுகூட நான் கூற மாட்டேன்…

    • 11 replies
    • 3.5k views
  10. நா‌ங்க‌‌ள் பே‌சுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் போரை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று ‌‌இயக்குநர் இமயம் பார‌திராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. ஜெயந்தன் படையணியின் மின்னல் வேக முறியடிப்புத் தாக்குதலில் 10 சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பலி [புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோப்பாவெளி பகுதியில் ஜெயந்தன் படையணி நடத்திய மின்னல் வேக முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமைடந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பதுளை வீதி கோப்பாவெளியில் முகாமிட்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அப்பகுதி ஊடாக ரோந்து சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியை இலக்கு வைத்து பதுங்கித் தாக்குதுவதற்கு திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்…

    • 6 replies
    • 1.9k views
  12. ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன் ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில், தன்னுடைய பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். . இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதியை என் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும் பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளை யில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம்…

  13. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பாரக் ஓபாமா, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது போல என்றாவது ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்டும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவா ரொபட் பிளேக் தெரிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டு அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதைப் போன்று என்றாவது ஒருநாள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் எது என வினாவிய போதே அவர் இவ்வாறு கூறினார். பராக் ஓபாமா உலகம் முழுவதிலும் பிரபல்யமிக்கவராக திகழ்கின்றார். அந்த வகையில் உலக சவால்களை எதிர்கொள்வதற்கு இல…

  14. வன்னியில் அரசபடை இரசாயன ஆயுதங்களை பாவிக்க ஆயத்தப்படுத்துகிறார்களா?

  15. மணலாறு தண்ணிமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 848 views
  16. வன்னியில் இடம்பெயர்ந்திருப்போர் பருவப் பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிப்பு : www.globaltamilnews.com வன்னியில் இடம்பெயர்ந்திருப்போர் பருவப் பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிப்பு : வன்னியில் இடம்பெயர்ந்திருப்பவர்கள் தற்பொழுது அங்கு பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு உடனடியாக 20,000 தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'வன்னியில் பெய்துவரும் பருவமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 20,000 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை இதனைவிடக் கூடுதலாக இருக்கலாம். உடனடியாக 20,000 தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் பிளாஸ்டிக் கூரை விரிப்பு…

  17. நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீரவுக்கு கொலை அச்சுறுத்தல் : நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீரவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை இணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு நிலவர கண்ணகாணிப்பை உடனடியாகக் கைவிடுமாறும் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தமாறும் அல்லாவிட்டால் அவர் கொலை செய்யப்படுவார் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தன்னிடமுள்ளதாகவும் தான் இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறையிட உள்ளதாகவும் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். பெரும்பாலான இலக்கங்கள் இராணுவ…

  18. இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத இறுதியில் புதுடில்லிக்கு பயணம் செய்வார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 648 views
  19. வெளியுலக வன்முறைகளுக்கு எதிராக தாம் போரில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறும் காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் வெளிநாட்டு படையினர் உள்ளனரா? அப்படி இல்லையெனில் அவர்கள் யார்?. இந்தியர்களா அல்லது சீனர்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர், இலக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வேற்றுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தமிழர்களை மாத்திரமே தாம் வடக்கில் காண்பதாகவும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். உலக ஒத்துழைப்புக்கான சங்கம் வார இறுதியில் கொழும்பில் நடத்திய யுத்தத்திற்கு எதிரான பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்…

  20. கடைசித்தமிழன் உள்ளவரை ஆயுதத்தை கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று த.தே.கூட்டமைப்பு பா.உ. க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கூறியுள்ளனர். திண்டுக்கல்லில் மாவாட்ட சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவாஜிலிங்கம் : தமிழ் நாட்டில் உள்ள இன உணர்வு கண்டு இலங்கை அரசு பயப்பட ஆரம்பித்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானை பிரித்தது போல் இலங்கையையும் பிரித்து கேட்டிருந்தால் தமிழர்களுக்கு இந் நிலை அங்கு ஏற்பபட்டிருக்காது. இதுவரை இலங்கை அரசு தமிழர்கள் மீது 6,000 தொன் வெடிகுண்டுகளை வீசிய…

  21. பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியாது: அமெரிக்கத் தூதுவர் மீண்டும் வலியுறுத்து பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாதென அமெரிக்கத் தூதுவர் றொபர்ட் பிளேக் மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார். ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்கா இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அவர் குற…

  22. தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல? 80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாக…

    • 10 replies
    • 2.7k views
  23. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் மாபெரும் பேரணி: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் அறிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 08:39 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.08) அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கண்ணீர்த்துளி வடிவத்தில் இலங்கை தீவு. தமிழ் மக்கள் அழுது கடலில் தேங்கிய வடிவம். அவர்களின் அழுகுரல் எட்டுத்திசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் உச்சநிலை அடைந்துள்ளத…

  24. இலங்கைத் தமிழருக்குத் தமிழ்நாட்டில் நிதி திரட்டுவதைப் பதிவர்கள் சிலர் இது என்ன பிச்சையா எனக் கேட்டுக் கோபமாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர். ஆனால் தற்போது நடிகர்கள் தாங்கள் அளித்துள்ள நிதியின் மூலம் தாங்கள் யார் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டனர். 01-11-2008 அன்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். மத்திய அரசின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து இங்கு வந்து இனி அப்பாவித் தமிழர்களின் மீது குண்டு வீசமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறிச் சென்ற பின்பும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு நல்ல மாற்றமும் நிகழ்வதற்கான அறிகுறிகள் எது…

  25. ஈழத்தமிழர்களின் உரிமைக்கு ஒபாமா நிச்சயம் குரல்கொடுப்பார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வீரகேசரி நாளேடு 11/5/2008 8:56:14 PM - அமெரிக்க ஜனாதிபதியாக சரித்திரத்தில் முதல் தடவையாக சிறுபான்மை கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருப்பது இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு நம்பிக்கையையும், உந்து சக்தியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டி இருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தததாவது, ஒருநாட்டின் சமூக பொருளாதார, அபிலாசைகளை முன்னெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.